விஸ்வரூபம் திரையிடப்பட்டால்தான், மற்றைய படங்களுக்கு அனுமதி
"கேரளாவில் விஸ்வரூபம் படம் தொடர்ந்து திரையிடப்படும் என Kerala
Film Exhibitors Association (KFEA)தலைவர் வி.மோகனன் அறிவித்துள்ளார்.
மத்திய தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை இடையூறு இன்றி திரையிடுவதற்கு போதிய பாதுகாப்பு வழங்க கேரள போலீஸ் முடிவு செய்திருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
படம் திரையிடப்பட்ட பின், கேரளாவின் சில பாகங்களில் தியேட்டர்களுக்கு வெளியே சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர் .
எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டதை அடுத்து, காட்சிகள் ரத்தாகின. இந்த நிலையில், பாலக்காட்டில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு இளைஞர் அமைப்பு கள் SFI,DIFY ஒன்று சேர்ந்து அதிரடியான காரியம் ஒன்றை செய்தது.
பாலக்காட்டில், ஒரு தியேட்டரில் விஸ்வரூபம் படம் ஆர்ப்பாட்டம் காரணமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பு, “விஸ்வரூபம் படத்தை நிறுத்தினால், அனைத்து படங்களையும் நிறுத்துவோம்” என அதிரடியில் இறங்கியது. பாலக்காட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும், அனைத்து படங்களையும் நிறுத்த சொன்னது.
இதையடுத்து அனைத்து படங்களும் நிறுத்தப்பட்டன. “விஸ்வரூபம் திரையிடப்பட்டால்தான், மற்றைய படங்களுக்கு அனுமதி” என்றது இந்த இளைஞர் அமைப்பு.
அதையடுத்து பாலக்காட்டில், மீண்டும் விஸ்வரூபம் திரையிடப்பட்டது.
[அந்த அளவுக்கு தமிழக ரசிகர்கள் போகவில்லை.]
மாக்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினரயி விஜயன், “படம் சரியா, தவறா என்பதை அதை பார்க்கும் ரசிகர்களே தீர்மானிக்கட்டும். அதை விடுத்துசிலர் கேட்பதற்கெல்லாம் தடை செய்ய அனுமதிக்க முடியாது” என அறிவித்துள்ளார்.
கேரளாவில், சுமார் 25 சதவீத மக்கள், இஸ்லாமியர்கள்.ஆனால் அங்கு விஸ்வரூபம் அமைதியான முறையில் ஓட ஆரம்பித்துள்ளது.
விஸ்வரூபம் படம் கேரளாவில், KFEA, மற்றும் கேரள அரசுக்கு சொந்தமான Kerala State Film Development Corporation மூலம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் கைராளி தியேட்டரில் ஒவ்வொரு காட்சிக்கும் கமல் ரசிகர்கள் சூடம் ஏற்றி பூஜை செய்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கைரளி திரையரங்கில் சூடம் காண்பிக்கும் ரசிகர்கள் |

பெங்களூருவில் உள்ள ஊர்வசி தியேட்டரில்
விஸ்வரூபத்தை உடனடியாக திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ரத்ததான
போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
பெங்களூர் லால்பாக் ரோட்டில் உள்ள ஊர்வசி தியேட்டரில் நேற்று காலை விஸ்வரூபம் திரையிடப்பட்டது. காலை காட்சி ஓடிக் கொண்டிருக்கையிலேயே மதியக் காட்சிக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது.
ஆனால் மதியம் 1 மணி அளவில் போலீசார் படத்தை ரத்து செய்யுமாறு கூறியதுடன் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து படம் ரத்து செய்யப்பட்டது.
டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று கூறியும் பலர் படத்தை பார்த்தே தீருவோம் என்று கூறி அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். படம் இன்று திரையிடப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு, விஸ்வரூபம் நாளை திங்கட்கிழமைதான் திரையிடப்படும் என்று தியேட்டர் நிர்வாகம் கூறியது. இதையடுத்து, விஸ்வரூபத்தை உடனே திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ஊர்வசி தியேட்டர் முன்பு ரத்த தானம் அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பழைய மைசூர் ஏரியாவுக்காக விஸ்வரூபம் விநியோகஸ்தர் ஷக்தி என்டர்பிரைசஸ் எச்.டி.கங்காராஜிடம் விசாரித்தபோது, ஊர்வசி தியேட்டர் நிர்வாகத்துடன், ஏற்பட்ட தவறான தகவல்தொடர்புதான் இதற்கு காரணம் என்று தெரிவித்தார். சனிக்கிழமை படம் கிடையாது என்று கூறப்பட்டது, வார இறுதியில் (சனி, ஞாயிறு) படம் கிடையாது என தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்ட தாம்!

பெங்களூரு ரசிகர்கள் |

நன்றி:விறுவிறுப்பு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------