விஸ்வருபம் தடையாணை பின்னணி
விஸ்வருபத்தில் இசுலாமியர்கள் தடை கோரி மனு கொடுத்ததற்கும் அந்த மனு மீது உடனே தமிழக அரசு தடையாணை பிறப்பித்ததற்கும் பின்னால் உள்ள மர்மங்கள் என்னாவாயிருக்கும் என்பது பற்றி சென்ற பதிவில் வினா எழுப்பியிருந்தோம்.
இதோ ;
"நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமுமாக, கே.பி.சுனிலின் தாண்டவங்கள் அரங்கேறி வந்தபோதுதான்,
விஸ்வரூபத்தின் ஒளிபரப்பு உரிமை குறித்து பேசப்படுகிறது. இந்த உரிமை
குறித்த பேச்சு, முதன் முதலாக, கமல்ஹாசன் ஜெயலலிதாவை சந்தித்தபோது
நடைபெறுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று
கமல்ஹாசன் சொன்னபோது, ஜெயலலிதா கேஷுவலாக படத்தின் ஒளிபரப்பு உரிமையை நம்ம
சேனலுக்கே கொடுத்திடுங்களேன்.. இது சம்பந்தமா சுனில் கிட்ட பேசுங்க என்று
சொன்னதாக தெரிகிறது.
இது குறித்து
கமலிடம் பேசிய சுனில், வழக்கம் போல அடிமாட்டு விலைக்கு படத்தைக் கேட்டதாகத்
தெரிகிறது. நாசூக்காக அதைத் தவிர்த்த கமல், விஜய் டிவிக்கு அப்படத்தின்
உரிமையை உரிய விலைக்கு விற்றிருக்கிறார். இதையடுத்து, தன்னிடம் முதல்வர்
ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் எங்கே கோபமாகிவிடப் போகிறாரோ என்று
நினைத்த சுனில், எவ்வளவு தொகை கொடுக்கிறேன் என்றாலும், கமல் விஸ்வரூபத்தை
விற்க மறுத்து விட்டார் என்று கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதா கடுமையான
கோபமடைந்திருந்த நேரத்தில்தான், ப.சிதம்பரத்தைப் பற்றிய புத்தக வெளியீட்டு
விழா நடைபெறுகிறது. ஒரு விழாவில் பேசுகிறோம் என்ற அடிப்படையில், உயர்வு
நவிற்சியில், கமல்ஹாசன் “வேட்டி கட்டிய தமிழராக டெல்லியில் வலம் வரும்
சிதம்பரம் விரைவில் பிரதமராக வேண்டும்” என்று பேசுகிறார். கமல்ஹாசன்
இப்படிப் பேசியதோடு போயிருந்தால் விஷயம் முடிந்திருக்கும். அடுத்து
மைக்கைப் பிடித்த தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன், “ வேட்டி கட்டிய தமிழன்
ஒருவன் பிரதமராக வரவேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர்.
அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை
அளித்துள்ளீர்கள்!'' என்று பேசினார்.“அம்மாதான் இந்தியாவுக்கே வழிகாட்டி… அம்மாவின் ஆளுகையில் ஒட்டு மொத்த இந்தியாவும் வரும் நாள் தொலைவில் இல்லை. அம்மா சென்றால் டெல்லியே நடுங்கும், அம்மா டெர்ரர்,” என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து பேசி வருவதை அப்படியே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு எப்படி இருக்கும்…. “அதுவும் என்னா ஒரு நக்கலு…. சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் விடை அளித்துள்ளீர்கள்” இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதாவுக்கு எப்படி இருக்கும்…."
-- இது சவுக்கு தளம் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பு ;
மேலும் படிக்க :
"சவுக்கு"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------