மூன்று கண்டனம் .........,
ஜானகி |
கீழ் வரும் மூன்றும் கண்டனம் கூறக்கூடிய செயல்கள்தான்.
முதலாவது விஸ்வரூபத்துக்கு தமிழக அரசு விதித்த ஒரு சார்பான கண்மூடித்தனமான தடை.அதற்கு ஆளுங்கட்சியின் உள்ளடி வேலைதான் காரணம்.இசுலாமியர் போராட்டம் ஒரு காரணமாக கையாளப்பட்டதுதான் ,அது மட்டும் காரணம் என்றால் துப்பாக்கிக்கு தடையா விதித்தார்கள்.?
பின்னணி பாடகி ஜானகி தனக்கு மத்திய அரசு பெரிய மனசு செய்து தந்த விருதை வாங்க மறுத்தது.
இதன் பின்னாலும் அரசியல்தான்.மத்திய அரசின் விருதுகள்.திரை உலகம் சார்ந்தது என்றாலும் சரி.மற்ற பத்ம,பதினொருமா விருதுகளானாலும் சரி.அதில் வடக்கு-தெற்கு வித்தியாசம் பார்ப்பது நெடுங்கால வழக்கமாக அல்லது மரபாகவே போய் விட்டது. வடக்கில் அதிலும் இந்தியில் யாரும் கிடைக்காவிட்டாலே அது மற்ற மொழிக்காரர்களுக்கும்,தென்பகுதிக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.அதை பாடகி ஜானகி நனறாகவே புறிந்து வைத்துள்ளார்.அவர் பின்னணியில் தூள்பரத்திக்கொண்டிருந்த காலங்களில் அவர் இது பொன்ற விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படாதது என்?
இப்போது மட்டும் அவர் ஏதாவது சாதனை செய்து விட்டாரா?சாதித்த காலங்களில் மத்திய அரசின் கண்களில் அவர் படாதது ஏன்?
மற்றொரு விடயம் பத்ம விபூஷன் விருதுக்கு கமல்ஹாசன் பெயரை எழுதி வைத்திருந்தார்களாம்.ஆனால் அவர் விஸ்வரூபத்தில் சிக்கலில் மாட்டிக்கொண்டதால் பெயரை அழிரப்பரால் அழித்து விட்டார்களாம்.
இது பு துக்கதையாக இருக்கிறது.
ஒருவரின் சாதனைக்காகத்தானே-சாதித்ததற்காகத்தானே இது போன்ற விருதுகள் தரப்படுகின்றன.
அதில் அவர் இப்போது படம் தடை பெற்று விட்டதால் தகுதியற்றவராகி விடுவாரா?
அப்படி என்றாலும் கூட அவர் படத்துக்கு தடை விதித்தது தவறு என்று மத்திய அரசே கருத்து தெரிவித்துள்ளதே?
பின் எதற்கு பெயரை அழிக்க வேண்டும் ?
அதாவது கமல்ஹாசனின் பெயர் சேர்க்கப் படவே இல்லை.
சேர்த்ததாக கூறப்படுவது சும்மா. ஒரு பேச்சுக்காக.அதுதான் உண்மை.
அடுத்த கண்டனம்.இலங்க்கைப்பெண்மனி அதிலும் சிறுமி.அரபு நாட்டில் குற்றம் விளைவித்ததற்காக மிகக்கொடுரமாக தலை வெட்டிக்கொள்ளப்பட்டி ருக்கிறார்.
தான் வேலைப்பார்த்த வீட்டில் உள்ள குழந்தை இறந்ததற்கு அவள்தான் காரணம் என்பதுதான் அவர் செய்த குற்றம்.
ஆனால் தனக்கு ஒன்றும் தெரியாது.பால் குறித்த குழந்தை தூங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் நான் நினைத்து வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன் என்பது சிறுமியின் வாதம் .
ஆனால் அரபு நாட்டு விசாரணை முடிந்து கொடுர தண்டனையான தலை வாங்கல் அப்பெண்ணுக்கு விதிக்கப் பட்டுள்ளது.
ரிசானா நபீக் |
எத்தனையோ பேர்கள்.நாடுகள் கேட்டுக்கொண்டும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில்தான் பாராளுமன்றத்தையே தாக்கி கொலைகள் செய்தவனையும்,பாகிஸ்தானில் இருந்து கடல் மூலம் இந்தியாவில் ஊடுருவி 110பேர்களை சுட்டுக்கொன்றவனையும் ஆண்டுக்கணக்கில் பிரியாணி போட்டு விசாரித்து வருவோம்.அப்படியே அவர்களை தப்பித்தவறி தூக்கில் போட்டு விட்டாலும் அதற்கு மதத்தை கூறி துக்கம் இந்தியாவிலேயே கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு 110 பேர்கள் உயிர்கள் முக்கியம் இல்லை.அவர்களின் குடும்பம் படும் துயரம் முக்கியம் இல்லை.மதம்தான் அவர்களுக்கு பிடித்துள்ளது.
இப்போது அது முக்கியமானது அல்ல.
மனுஷ்யபுத்திரன் |
இலங்கை சிறுமி "ரீசானா நபீக் "கின் தலையை வாங்கி கொன்ற கொடுரத்தைக் கண்டித்து மனுஷ்யபுத்திரன் நக்கீரனில் எதிர் குரல் என்ற தனது பத்தியில் எழுதி விட்டாராம்.அதற்காக
தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த பி.ஜெயினுலாபிதீன் மிகவும் கீழ்த்தரமாக -அசிங்கமாக தனது
பீ.ஜே, தளத்தில் எழுதியுள்ளார்.மனுஷ்யபுத்திரனின் உடல் ஊனத்தையும் பயங்கரமாக கிண்டலடித்துள்ளார்.மொத்தத்தில் கண்ணியமிக்க இசுலாமியனாக இல்லாமல் கடைந்தெடுத்த கயவனாக அரபு நாட்டு படுகொலைக்கு வக்காலத்து வாங்கி தனது நெஞ்சில் ஈரம் என்பதே கிடையாது என்று நிருபித்துள்ளார்.
இதே நபர் கசாப் தூக்கை தவறு என்றும் விமர்சித்திருந்தார்.
இவருக்கு தான் தாக்கி எழுதுவது ஒரு சக இசுலாமியனைத்தான் என்பதும் ,படுகொலை செய்யப்பட்டதும் இசுலாமிய சிறுமிதான் என்பதும் ஏன் தெரியாமல் போயிற்று ?
பீ .ஜெயினுலாபிதீன் |
“டேய் இடுப்புக்கு கீழே கால் இல்லாத மிருகபுத்திரா உன் குழந்தையை இப்படி கொன்றால் மன்னிப்பாயா?”