"டி.டி.எச்." திருப்பங்கள்.
விஸ்வரூபம் வெளியிட்டு நாள் நெருங்கியதும் பல திருப்பங்கள்.
கமல்ஹாசனுடன் பேசியாகி விட்டது.அவர் படத்தை திரையரங்குகளில் மட்டும் முதலில்வெளியிட ஒப்புக்கொண்டார்.
டிஷ் இல் இல்லை .என்று பரபரப்பாக செய்திகளை வெளியிட்டார்கள்.
ஆனால் அதை வெளியிட்டது திரையரங்கு சங்கத்தினர்தான்.
கமலின் பிடிவாதம் என்னாச்சு?
என்ன நடந்தது என்பது பற்றிய கமல்ஹாசன் அறிக்கை வெளியுட்டுள்ளார்.
அவர் தனது நிலையில் இதுவரை உறுதியாகத்தான் இருப்பதாக தெரிகிறது.:
"விஸ்வரூபம்' படம் குறித்து, ராஜ்கமல் அலுவலகத்திலிருந்து வெளியிடும் தகவல்களே ஊர்ஜிதமானது. அலுவலக கதவுக்கு வெளியே, யாரோ எதையோ சொல்லிக் கொண்டிருந்தால், அதை பற்றி கண்டுகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை.
எனக்கு மிரட்டல் விடுத்துள்ள, 13 பேருக்கு, அட்வகேட் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது, வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறேன். என் திரையுலக நண்பர்கள் கேட்டுக் கொண்டதால், "விஸ்வரூபம்' படம், டி.டி.எச்., வசதியிலும், தியேட்டரிலும் திரையிடப்படுவது, தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போது, தியேட்டரில் வெளியிடப்படும், எப்போது, டி.டி.எச்., முறையில் வெளியிடப்படும் என, பின்னர் நானே அறிவிப்பேன். தியேட்டரிலும், டி.டி.எச்.,சிலும், ஒரே நேரத்தில் வெளியிடலாம் என, நண்பர்கள் சொல்கின்றனர்.
சிலர், இரண்டு, மூன்று தடவைகள், டி.டி.எச்..சில் வெளியிடலாம் எனவும் கூறுகின்றனர். நான் எல்லாவற்றையும் யோசித்து, முடிவு செய்ய உள்ளேன். என் பட வியாபார தொடர்புகளை, நானே பேசி முடித்துக் கொள்ள, எனக்கு தெரியும்.
சினிமா நடிகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், என் முயற்சியை, தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கின்றனர். டி.டி.எச். , வழியாக படத்தை வெளியிடுவது, இப்போது தனி வழியாக தெரியும்; காலப்போக்கில், இது பொது வழியாகும். என் ரசிகர்கள், அமைதியாக இருக்கின்றனர்; தேவைப்பட்டால் கேடயமாக மாறுவர்."
என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்தியா முழுக்க உள்ள திரையரங்குகளை முடிவு செய்வதிலும்,ஒரே நேரத்தில் படத்தை வெளியிட இருப்பதிலும்தான் இந்த தாமதம் என்பது கமலின் செய்தி.
இந்த புதிய வழியில் கமல்படும் சவால்கள் எதிர் கொள்ளல் மிக அதிகம்தான்.
ஆனால் இதில் அவருக்கு பக்கத்துணையாக நடிகர்கள் சங்கம் இல்லாதது அவரை கொஞ்சம் பாதித்துள்ளது.அவர்கள் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.இம்முறை வெற்றியாகிவிட்டால் ஓடிவந்து வெட்கமில்லாமல் தொடர்வார்கள் என்பதுதான் இன்றைய நடிகர்சங்க நிலை.பாடுபடுவது கமலாக இருக்கட்டும்.அதனால் துன்பப்பட்டு சீரழிவதும் அவராகவே இருக்கட்டும் பலன் கிடைத்தால் மட்டும் அறுவடைக்கு போகலாம் என்பதே இன்றைய நடிகர் சங்க நோக்கம்.
கமல்ஹாசனுக்கு ஆதரவாக திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் போன்றோர் கூட்டம் போட்டு ஆதரவு தெரிவித்த வேளை நடிகர் சங்கமும் கூடப் போவதாக அறிவித்தனர்.கூடவும் செய்தனர்.ஆனால் முடிவெடுத்ததுதான் வேறு .அதுதான் சேவை வரிக்கு எதிர்த்து உண்ணாவிரதம் என்று கதையை மாற்றி விட்டார்கள்.உண்ணா விரதத்தில் பரபரப்பாக கலந்து கொண்டதும் அதை பாலச்சந்தருடன் சேர்ந்து முடித்துவைத்ததும் தீவிர கமல்ஹாசனின் டிடிஎச் எதிர்ப்பாளரும்,திரையரங்கு சங்ககத்தலைவருமான பன்னிர்செல்வம்தான்.
நடிகர்கள் பயம் அவர்களுக்குத்தான் புரியும்.அதானால்தான் அதுகள் நடத்திய காமெடி விரத போராட்டத்தில்[?]கமல் கலந்து கொள்ளவும் இல்லை.
நடிகர் சங்கம் செயல்பாடுகள் வடிவேலு விஜயகாந்திற்கு எதிராக பிரசாரம் செய்யக்கிளம்பிய போது அவரை அவமானம் செய்து பேசியதும்,அவரை வைத்து படம்தயாரிக்க கூடாது என்று முடிவேடுத்தபோதுமே கேலிக்குரியதாக-கேள்விக்குரியதாக மாறி விட்டது.
திமுக ஆதரவு என்பதினால்தான் அம்முடிவு.
சரத்குமாரும்,ராதாரவியும் மாறிய கட்சிகளை எண்ண கைவிரல்கள் பத்தாது.
ஆளே இல்லாமல் ஒட்டு அதிமுக கட்சியைத்தான் நடத்திவருகிறார் ஒருவர்.இவர்கள் வடிவேலுவை புறந்தள்ளியது அவர்களின் அப்பட்டமான சுய நலம் .சங்க கட்டிடத்தை சொந்த சொத்துப்போல் அனுபவிப்பதில் இருந்தே இவர்களின் பொதுநலத்தொண்டு பகிரங்கமாகி விட்டது.
______________________________________________________________________________________________