தாராபுரம் அம்பானி,
தமிழகத்தில் தாராபுரத்தில் ஒரு அம்பானி உதயமாகியுள்ளார்.
அம்பானி மட்டும் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து அவரின் மகன் இன்று உலகில் 18 வது பணக்காரராக உயர்ந்தால் அதை 'வெற்றிக்கதையாக"புத்தகம் போட்டு விற்கும் நாம்,தாராபுரம் அம்பானியாக ராமலிங்கம் உருவெடுத்தால் அதை வருமான வரித்துறை வைத்து விசாரிக்கிறோம்.அம்பானி கூட பல வகைகளில் குறுக்குசால் ஓட்டி த்தான் சாதனை படைத்தார்.இன்னமும் அவரின் வாரிசுகள் அடந்த திருப்பணியை செய்துத்தான் வருகிறார்கள்.அரசியும்,வருமான வரிகளையும் ஏமாற்றுவது தான் ஒருவனின் விரைவான முன்னேற்றத்துக்கு அடிப்படி என்பது அவர்களின் வெற்றிக்கதைகள் மூலம் நாம் அறிந்ததுதான்.
சரி.நம்மஊர் தாராபுரம் ராமலிங்கம் வெற்றிக்கதையை இன்னமும் ஒருவரும் எழுத ஆரம்பிக்கவில்லை .அந்த திருபணியை தொடங்கி வைக்கிறோம்.
சாதாரண கடலை வியாபாரி லட்சம்பேர்களுக்கு வேலை அளிக்க எண்ணை சுத்திகரிப்பு ஆளை உருவாக்க எண்ணிய கதை.
ராமலிங்கத்தின் பின்னணி குறித்து, அருகில் வசிப்பவர்கள் பெருமையுடன் பகிர்ந்து கொண்டது.:
ராமலிங்கம், 47, என்ற நிலக்கடலை வியாபாரியி டமிருந்துதான் 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரத்தை (யு.எஸ்.டிரஸ்ஸரி பாண்ட்) கைப்பற்றியிருக்கிறது, இந்திய வருமான வரித்துறை.
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ராமலிங்கத்துக்கு ஆங்கிலம் அரை குறை. தாய்மொழி தெலுங்கு . கன்னடம் புரியும்.
தமிழ் மட்டும்தான் எழுத-படிக்க . அதை வைத்தே உலக அளவில் நட்புவட்டத்தைப் பெருக்கியிருக்கிறார். ஏதோ ஒரு நட்பில்தான், இவரது கையில் அமெரிக்கக் கருவூல கடன் பத்திரம் வந்து சேர்ந்திருக்கிறது.
" ராமலிங்கம், முன்பு கடலை மில் நடத்தி வந்தார். ஆடம்பரம் இல்லாமல் அமைதியாகத்தான் இருப்பார். அ.தி.மு.க., வில் இருந்தார்.
சமீபத்தில் கார் வாங்கினார். சில நாட்களுக்குமுன், உறவுக்காரர் திருமணத்தில் அவரது மனைவி அதிகளவில் நகை அணிந்து வந்ததைப் பார்த்தோம். ஆனாலும் அவரது சொத்து விவரங்கள் குறித்து தெரியாது. அடிக்கடி, வெளியே சென்று விடுவார். பொள்ளாச்சிக்கு போயிருப்பதாக சொல்வார்கள். அவரிடம் கேட்டால், "ஆந்திரா, கர்நாடகா போயிருந்தேன்' என்பார். "தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஆக வேண்டும்' என்று அடிக்கடி வீட்டில் சொல்வாராம். சில காலமாக, 20 நாளைக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். பணம் தராமல் இவர் ஏமாற்றிய பலரும் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தனர்; மஞ்சள் கடிதாசி கொடுத்து சரிக்கட்டி விட்டார்.
ராமலிங்கம் முதலில் ஒரு டீக்கடை நடத்தி வந்தார். அவரது மனைவி சில நாட்களிலேயே, அவருடன் வாழ முடியாது என திரும்பி விட்டாள்.மூன்றாண்டுகளுக்குப்பின் 1998ல் 80 சென்ட் நிலத்தை வாங்கி தொழில் துவங்கி "செட்டில்' ஆன பின் அவளை அனுப்பி வைத்தோம்.
அந்த நிலத்தையும் மூன்று முறை கிரயம் செய்து விட்டார்; அடமானமும் வைத்து விட்டார். போலி கையெழுத்து போடுவதில் கில்லாடி.
பெருந்துறை, மன்னார்குடி பகுதி கடலை வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் பணத்தை, கொடுத்து விட்டதாக போலி ஆவணம் தயார் செய்தார். இதனால் பெரிய ரகளை ஆனது. எப்படி தப்பு பண்ணுவது, எப்படி தப்புவது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.உறவினறு டைய காசோலையை திருடி 2 லட்ச ரூபாய் மோசடி செய்தார். குடும்பத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல மாட்டார். சொந்த மாமனார் இறந்தபோது கூட போ க வில்லை.
அவர் ஒரு மோசடி பேர்வழி என்பது தெளிவாகத் தெரிந்தபின், 14 ஆண்டுகளாக குடும்பத்தினர் அனைவரும் அவரை ஒதுக்கி ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
மன்னார்குடி வியாபாரிகளுக்கு பல லட்ச ரூபாய் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக அவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்;
இதுவரை கொடுத்ததாக தெரியவில்லை. அவர்கள் அடிக்கடி வந்து சண்டை போட்டுப் போவார்கள். மூன்று லட்சம் ரூபாய்க்கு இவருக்கு கடலை விற்ற ஒரு இளைஞர், பணம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இவரது மோசடிகளுக்கு என்றாவது உள்ளே போவார் என்றாவது பிடிபடுவார் என்று நினைக்க ; இப்போது நடந்து விட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாதாரண வீட்டில்தான் குடியிருந்தனர்.
பெருந்துறை கடலை வியாபாரிகளுக்கு பணம் கொடுக்க முடியாமல் ஒருமுறை வீட்டை பூட்டி விட்டு, தாராபுரம் டவுனில் சிறிது காலம் குடியிருந்தனர். இப்போது வீட்டை சீர் செய்து அலங்கரித்துள்ளார்.குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத புத்தம் புதிய "இன்னோவா' கார் வீட்டின் முன் நிற்கிறது. வீட்டில் எல்லாமே வெளிநாட்டு பொருட்கள்தான்.
இனி இப்போதைய நிலை பற்றிய விபரங்கள்:
உலக நாடுகளில், 50 பில்லியனுக்கு அதிகமான அளவில் அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரங்களை வாங்கியுள்ள நாடுகளின் பட்டியலை கடந்த நவம்பரில் அமெரிக்க கருவூல பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1153.6 பில்லியன் டாலர்களை வாங்கி முதலிடத்தில் சீனா உள்ளது. சீன அரசு மற்றும் தனி நபர்களிடம் உள்ள பத்திரங்கள் அனைத்தும் இதில் அடக்கம். 51.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி, இந்தியா கடைசியிடத்தில்(21வது இடம்) உள்ளது. இவற்றில், ராமலிங்கத்திடம் மட்டுமே 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணம், உண்மையாக இருக்கும்பட்சத்தில், நாட்டிலுள்ள அமெரிக்கக் கருவூலப் பத்திரத்தில் பத்து சதவீதத்தை (5 பில்லியன்) வைத்திருந்த "சாதனையாளராக' ராமலிங்கம் பெயர் பெறுவார். இதற்கு அவரால் கணக்குக் காட்டவே முடியாது.
அமெரிக்க அரசின் கருவூல பாதுகாப்புத்துறை, பணத்துக்குப் பதிலாக யு.எஸ்.டிரஸ்ஸரி பாண்ட், யு.எஸ். முனிசிபல் பாண்ட் என இரு வகையான கடன் பத்திரங்களைத் தருகிறது. இதற்கான முதிர்ச்சிக்காலம் 22லிருந்து 30 வருடமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குப் பொருட்கள் தரப்படுவதற்கு ஈடாகவும், இந்த கடன் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2001, பிப்ரவரியிலிருந்து 2006 ஜனவரி வரை, இவற்றை வழங்குவதை அமெரிக்க அரசு நிறுத்தி விட்டது.
அதன்பின், சில மாற்றங்களுடன் இதனை மறுஅறிமுகம் செய்து, இதனை வெளியிட்டு வருகிறது. அமெரிக்காவின் நெருக்கடி நிலை, பொருளாதார ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து, இதன் மதிப்பு உயரும் அல்லது குறையும். "செகன்டரி மார்க்கெட்' எனப்படும் இரண்டாம் நிலைச் சந்தைகளில், முக்கிய பரிவர்த்தனைப் பொருளாக இந்த பத்திரங்கள் அதிகம் பயன் படுத்தப்படுகின்றன. தரப்படும் பொருட்களுக்கு பணத்துக்குப் பதிலாக இவை மாற்றாக வழங்கப்படுகின்றன.
ராமலிங்கத்தை அவரது வீட்டில் வைத்தும், சென்னைக்கு வரவழைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, எந்த உருப்படியான தகவலும் கிடைத்ததாகத் தெரியவில்லை; பிரேசிலைச் சேர்ந்த டேனியல் என்பவரிடம் அமெரிக்கக் கருவூல கடன் பத்திரங்களை வாங்கியதாக திரும்பத் திரும்பக் கூறியதாகவும் தெரிகிறது. அந்த ஆவணத்தைப்
பற்றிய எந்த விபரமும் தெரியாமலே, அதை அவர் வாங்கியிருப்பதாகவே வருமான வரித்துறையினர் கருதுகின்றனர்.
பத்திரங்களில் உள்ள விபரங்களைப் படித்து புரிந்து கொள்ளவோ, சரளமாக ஆங்கிலத்தில் உரையாடி, இதுபற்றிய விபரங்களைத் தெரிவிக்கவோ முடியாத ராமலிங்கத்திடம், வெளி நாட்டு நபர் ஒருவர் இதனை எப்படி ஒப்படைத்திருப்பார் என்பதே இவர்களின் சந்தேகம். ஆவணம் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதைக்கொடுத்தவர் யார், வாங்கிக் கொடுத்த இடைத்தரகர்கள் அல்லது நிதி ஆலோசகர்கள் யார் என்றெல்லாம் விசாரணைசெய்யப்படுகிறது.
போலி ஆவணத்தைக் காட்டி, தொழில் அதிபர்கள் பலரிடமும் அவர் கடன் வாங்கியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில், இந்த கடன் பத்திரத்தை வங்கியில் சமர்ப்பித்து, பணமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளோ, வாய்ப்போ இங்கில்லை. அதனால், ராமலிங்கத்தை நம்பி யாரோ கொடுத்து வைத்திருந்த அமெரிக்கக் கருவூல கடன் பத்தி ரத்தை, விபரம் தெரியாமல் பணமாக மாற்ற அவர் முயற்சித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. வருமானவரித்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், "குறுக்கு வழியில் சம்பாதிக்க முயலும் சாதாரண நபர் ராமலிங்கம்' என்பது தெளிவாகத் தெரிகிறது.
சைனா கோல்டு பாண்டைக் கொடுத்து, பிரேசிலில் இந்த அமெரிக்கக் கருவூல கடன் பத்திரத்தை வாங்கியிருப்பதாகவும் ஒரு தரப்பு தகவல் கூறுகிறது. இது அமெரிக்கக் கருவூல கடன் பத்திரமே இல்லை; வேறு விதமான கடன் பத்திரம் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது. ஒட்டு மொத்தமாக, இந்த ஆவணம் பற்றி திட்டவட்டமான எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் வருமான வரித்துறையினரும் உள்ளனர்.
அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரங்களை வைத்திருப்பவர் யாராக இருந்தாலும், அமெரிக்க வங்கிகளில் நேரடியாகக் கொடுத்து, டாலராக மாற்றிக் கொள்ள முடியும் என்ற தகவலை வருமான வரித்துறையின் உயரதிகாரி ஒருவர் மறுத்தார்.
இந்த பத்திரங்களை அமெரிக்க வங்கிகளில், அதற்குரிய முகவர்களின் உதவியுடன் அடமானம் வைத்து, அதன் மூலமாகக் கடன் பெற்று, வர்த்தகம் செய்து அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.அதில் கிடைக்கும் லாபத்தொகையைக் கொண்டு, பத்திரத்துக்கு உரியவர்களுக்கு ஒரு சதவீதத் தொகை கமிச னாக கொடுக் கப்படும்.
அதற்காகவே, இந்த முயற்சி நடந்திருக்கலாம்; ஆனால், இதை எல்லாம் செய்யுமளவுக்கு விபரமானவராக ராமலிங்கம் தெரியவில்லை; அவருக்குப் பின் வேறு முக்கிய நபர் இருக்கலாம்.இந்த சந்தேகத்துடன்தான் விசாரணை நகர்ந்து வருகிறது.அந்த முக்கியத்துவர் தெரியவந்தால் அவரின் முக்கியதத்துவ படி இவ்வழக்கு ஊத்தி மூடப்படும்.
______________________________________________________________________________________________