ஆன்ட்ராய்ட்
இப்போது கணினிகளில் நாம் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும் மொபைல்களிலும் வந்துவிட்டன. மொபைல் சந்தையில் கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் (ANDROID) இயங்குதளம் மூலம் களமிறங்கியுள்ள து.
ஆன்ட்ராய்ட் என்பது" மொபைல் " மற்றும் "டேப்லேட்" களுக்கான
(Operating system) இயங்குதளமாகும்.
லினக்ஸ் கெர்நெல்
(Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில்
சில மாற்றங்களை கூகுள் செய்து வெளியிட்டுள்ளது . சிற்சில மாற்றங்களுக்கு
உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக இப்போது ஆண்ட்ராய்ட் உள்ளது.. ஆன்ட்ராய்ட்
இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும்
போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் நீக்கப்பட்டு புதிய வசதிகள்
அறிமுகப்படுத்தப்படுகிறது .
ஆன்ட்ராய்ட் இயங்குதளம் இதுவரை எட்டுக்கும்
மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்து விட்டது.
சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய
பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும்
மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான்
நீங்கள் பெற முடியும்.
ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே மேலை நாட்டு பிரபல இனிப்பு உணவு வகைகளான cupcake,
Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame, Sandwich,
போன்ற பெயர்களை வைத்துள்ளனர்.
ஆன்ராய்ட் சிறப்புகள்:-
---------------------------------
- நீங்கள் வி ரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி – Customize Home Screen.
- வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில்
இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய
அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி.
அதற்கு Threaded SMS என்று பெயர்.
- ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
- YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.
- கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.
- குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.
- ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.
இன்னமும் பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லா இணைய இணைப்பு
(Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும்.
ஏனெனில்ஆண்ட்ராய்ட் பல வசதிகளை நாம் இணைய இணைப்பில் தான் பயன் படுத்த முடியும்.
ஆன்ட்ராய்ட் எப்படி பயன்படுத்துவது:-
------------------------------------------------------
- நீங்கள் புதிதாக Tablet pc அல்லது ஆண்ட்ராய்ட் வசதி மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிளை தரவேற்ற வெண்டும்.
- அப்படி கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைத்தால்தான் அதில் உள்ள Android Application வசதிகள் அனைத்தையும் பயன்படுத்த இயலும்.
- தேவையான அப்ளி கே ஷன்களை தரவிறக்கிப்பயன்படுத்தவும் முடியும்.
- இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து வாங்க முடியும். இலவசமாகவும் சில கிடைக்கின்றது .
- இதில் ஒரு வசதி நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------
ஒரு வழியாக பெப்-2.
-----------------------------
கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துபரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை
தியேட்டர்களில் வெளிவரும் முன்பே டி.டி.எச்.சில் ஒளிபரப்ப கமல் முடிவு
செய்தார்.
இதற்குசில திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகர்கஸ்தர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர். இதையும் மீறி கமல் ‘விஸ்வரூபம்’ படத்தை
டி.டி.எச்.சில் ஒளிபரப்பியே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படி
கடந்த 10-ந் தேதி இப்படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்படும் எனவும், 11-ந் தேதி
திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கமலிடம் நேரிடையாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், தியேட்டர்களுக்கு வரும் முன்பே டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிடும் முடிவை கமல் ஒத்திவைத்தார். ஆனாலும் தனது கனவுத்திட்டம் டி.டி.எச். சிலும் இப்படம் ஒளிபரப்பபடும் என அறிவித்தார்.
கமல், வருகிற 25-ந் தேதி விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் மட்டும் திரையிடப்படுகிறது என அறிவித்தார். டி.டி.எச்.சில் ஒளிபரப்பும் தேதியை குறிப்பிடவில்லை.

இந்நிலையில், இப்படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படுமா? என்ற கேள்வி அனைவர்
மனதிலும் இருந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் பிப்ரவரி 2-ந் தேதி ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப கமல் முடிவு செய்துள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் அறிவித்தார்.
மேலும் இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில்:-
" டி.டி.எச்.கிளி ல் மூன்று வித கால அட்டவணை அறிவித்துள்ளனர். இதை வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தகுந்தவாறு நேரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் நாங்கள் முடிவெடுத்துள்ளோம். முன்பே பணம் செலுத்திய டி.டி.எச். வாடிக்கையாளர்கள் அவர்கள் பணத்தை திரும்ப பெறவும் அல்லது 2-ம் தேதி மாற்றிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."
கூறப்பட்டுள்ளது.
கமல், ஏற்கெனவே, ஏர்டேல், டாடா ஸ்கை, டிஷ்டிவி, சன், ரிலையன்ஸ், வீடியோகன் ஆகியவற்றில் படத் தை ஒலிபரப்பப் போவதாக கூறியிருந்தார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------