கொஞ்சம் ஆரோக்கியம்
என்றும் பதினாறு.
அதற்கு சிலர் ரகசியமாக பல வழிகளைக் கையாண்டு வருகிறார்கள்.வாலிப வயோதிக் அன்பர்களே வியாபாரிகளுக்கு பணம் இவர்களால் தான் கொட்டுகிறதூ.
இதோ இவைகளும் சில வழிகள்.
பச்சை இலை காய்கறிகள்
இவற்றில் வைட்டமின்களான சி, இ மற்றும் பி12 போன்றவை மட்டும் இல்லை, உடலை
ஆரோக்கியமாக வைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் பொருளும் அதிகம் உள்ளன.
இவற்றை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடைவதோடு, சருமத்தில்
பழுதடைந்திருக்கும் செல்களை விரைவில் சரிசெய்யும். எனவே பசலைக் கீரை,
ப்ராக்கோலி, பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை சாப்பிடுவதால் தக்க வைக்கலாம்.
ஆனால் இன்று ரசாயன உரங்கள்,பூச்சி மருந்துக்கள் பாதிப்பு இல்லாத பயிர் வகைகளே இல்லை.நீங்கள் இயற்கை முறை வளர்ப்பு இல்லை,தளைகளையெ சாப்பிட முயற்சியுங்கள்.
மீன்
மீனில் உடலுக்குத் தேவையான எண்ணெய்கள் உள்ளன. இதனால் அவை சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை புதுபிக்கும்.
அதுமட்டுமின்றி மீனில் ஒமேகா-3 அதிக அளவில் நிறைந்துள்ளன. ஆகவே அடிக்கடி
மீனை அதிக அளவில் உடலில் சேர்த்து வந்தால், சருமம் பொலிவோடு இருப்பதோடு,
கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
கோதுமை
கோதுமைப் பொருட்களில் நார்ச்சத்துக்கள் மட்டும் அதிகமான அளவில் இல்லை,
புரோட்டீன், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
இதில் உள்ள சத்துக்களால் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சீராக இயங்குவதோடு, இறுதியில் சருமத்திற்கும் ஒரு நல்ல பலனை அளிக்கும்.
கிரீன் டீ
பொதுவாக கிரீன் டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நன்கு
தெரியும். ஆனால் அதே கிரீன் டீயை குடித்தால், அதிலுள்ள
ஆன்டி-ஆக்ஸிடன்ட்களால், சருமத்தில் விரைவில் ஏற்படும் சுருக்கங்கள்
தடுக்கப்படும்.
ஆகவே இந்த கிரீன் டீயை தினமும் 2 கப் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு
சக்தி அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராகவும், சருமம் பொலிவோடும்
காணப்படும்.
கேப்பை உணவு வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடிக்கடி பெட்ரோல் வாகனங்களில் சென்று சுற்றுப்புறத்தையும் உங்கள் உடலையும் கெடுத்துக்கொள்ளாமல்.கால்நடையாக மாறி விடுங்கள்.ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கேல்லாம் நடையை பயன்படுத்துங்கள்.கொழுப்பாவது குறையும்.தனியே உடற்பயிற்சி தேவைப்படாது.
காலை சிறு அளவில் உடலை கொடுமைப்படுத்தாத உடற்பயிற்சிகள் தவறாமல் செய்யுங்கள்.
இளமை என்பது மனதில்தான் .
உடல் தனது ஆண்டுக்கணக்கை எப்படியும் காட்டிக்கொள்ளும்.அதற்காக வேதனைப்படாமல் இருக்கும்வரை இளைமைத்துள்ளளுடன் காட்டிக்கொள்ள இளமையானா -மகிழ்வான மனநிலையை வைத்துக்கொள்ளுங்கள்.
தேவையே இல்லாமல் கோபம்,விரக்தி,மனச்சோர்வு அடையாதீர்கள்.
நீங்கள் வருந்திக்கொண்டிருப்பதால் மட்டும் வாழ்வில் பிரச்னைகள் கரைந்து போய்விடுவதில்லை என்பதை நினைவில் கொண்டு மகிழ்வுடன் பிரச்னைகளை எதிர் கொண்டு தீர்த்துவிடுங்கள்.
இப்போதைக்கு இது போதும்.?
--------------------------------------------------------------------------------------------------------------
சிறுநீரகத் தொற்று:
சிறு குடலிலிருந்து பாக்டீரியா, சிறுநீர்ப்
பாதையை அடைந்து, அதில் பாதிப்பு உண்டாக்குவதே சிறு நீர் தொற்று.
சரியாகப்
பதப்படுத்தப்படாத, முழுதும் வேக வைக்கப்படாத உணவு வகைகளைச் சாப்பிடும்போது,
அவற்றில் உயிருடன் உ ள்ள பாக்டீரியா, சிறுநீர்ப் பாதையில் தொற்றை ஏற்படுத்தி உங்களை சங்கடத்தில் விட்டு விடும்.
__________________________________________________________________________________
நுரையீரலை ஆரோக்கியம் ,
உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக மாக வைத்துக் கொள்ள, நல்ல சத்தான உணவு, தினமும்
உடற்பயிற்சி அவசியம்.
புகைபிடித்தல், மது, நொறுக்கு தீனிகளை தவிர்த்தல்
வேண்டும்.
அதிக
தண்ணீர் அருந்த வேண்டம்.மாசுள்ள சுற்றுச் சூழல் தவிர்க்க- தடுக்க
முயற்சிக்க வெண்டும். இதனால் நுரையீரல் பல்லாண்டுகள் ஆரோக்கியமாக
இருக்கும். இது பொன்ற செயல்களை நீங்கள் மட்டும் இன்றி,
குழந்தைகளுக்கும்கூறி
உடற்பயிற்சியின் அவசியத்தை உணரச்செய்யுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------
ஓட்ஸ் உணவு
ஓட்ஸ் வகைகளில்எளிதில் கரையும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
இதனால், உடலுக்கு பல நன்மைகள் உள்ளன. இதில், "Tocotrienols' என்ற
ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இதனால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது.
ஓட்ஸ் சாப்பிடுவதால், உணவுப் பாதையில் இருந்து கொழுப்பு சத்து, உடலில்
சேர்வது குறையும். இதனால், கெட்ட கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது.
அதேநேரம், நல்ல கொழுப்பின் அளவை குறைப்பது இல்லை.
தினமும் ஒரு கப், ஓட்ஸ் உணவை தொடர்ந்து எடுத்தால்,உடலின் கொழுப்பு அளவு, 2 சதவீதம் குறையும் என தெரிகிற து. சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறந்த உணவாக பரிந்துரைக்கப் படுகிறது.
தினமும் ஒரு கப், ஓட்ஸ் உணவை தொடர்ந்து எடுத்தால்,உடலின் கொழுப்பு அளவு, 2 சதவீதம் குறையும் என தெரிகிற து. சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறந்த உணவாக பரிந்துரைக்கப் படுகிறது.
இதே சத்துக்களும் பயன்களும் நம்முடைய கேழ்வரகில் உள்ளது.அதை சாப்பிடக்கூறினால்
பலர்
சங்கடப்படுகிறார்கள்.அந்நிய மோகம் மத்திய அரசுக்கு மட்டுமல்ல.மக்களுக்கும்
அதிகம் உள்ளது.நமது பழைய உணவு தானியங்கள் சாப்பாட்டில் நம் முன்னோர்கள்
பல்லாண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்ததை எண்ணிப்பார்க்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------