நிலுவைகள்.,

இன்றைய நிலையில் இந்தியாவில் நாடு முழுக்க  விரைவு நீதிமன்றங்கள் உட்பட 18 ஆயிரம் நீதிமன்றங்கள்  ,  19 ஆயிரம் நீதிபதிகள்  இருந்து  வருகின்றனர். 
ஆனால் இன்றைய கணக்குப்படி 3 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இப்படியே போனால் வரும்  30 ஆண்டுகளில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதேசமயம் நீதிபதிகளின் எண்ணிக்கை 4 மடங்கு மட்டுமே அதிகரித்து 75 ஆயிரம் ஆக அதிகரிக்க கூடும் எனவும் அரசின் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
 
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 30 ஆண்டுகளில்  நீதித்துறையில் நீதிபதிகளின் எண்ணிக்கை ஆறு மடங்கு மட்டும்  அதிகரித்துள்ளதாம் . ஆனால் வழக்குகளின் எண்ணிக்கையோ  12 மடங்காக அதிகரித்துள்ளதாம் . 
நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும் நிலுவையில் இருக்கும் வழக்குளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம்  அதிகரித் து கொண்டே போகிறதாம்.
 இதனால்தான்  வழக்குகளில் எளிதில் தீர்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வழக்குளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரிக்கும் நிலையில் விகிதத்தில்  நீதிபதிகளின் எண்ணிக்கை நான்கு மடங்காக மட்டுமே அதிகரிக்கும் மில்லை உள்ளது . இதனால் நீதிபதிகளின் பணிச்சுமை அதிகரிக்‌கும் வாய்ப்பு உள்ளது.
 வரும் ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 1.5 பில்லியன் ஆக அதிகரிப்பதாக கணக்கு வைத்துக் கொண்டால் 15 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கும். அதே நேரத்தில் ஒரு பில்லியன் மக்‌கள் தொகைக்கு 50 நீதிபதிகள் என கணக்கில் கொண்டாலும் குறைந்த பட்சம் 75 ஆயிரம் நீதிபதிகள் தேவைப்படும் என ஆய்வு கூறியுள்ளது .
 வாய்தா மேல் வாய்தா வழங்காமல் வழக்கை ஆறப்போடாமல் சூட்டுடன் சூடாக விசாரித்தால் இந்த நிலுவை குறையாதா?
கசாப்,பேர்பாக்ஸ்,2ஜி, ஜெ 'சொத்துக்குவிப்பு பொன்று பல வழக்குகளை விக்கிரமாதித்தன் அல்லது ஆயிரத்தொரு அராபிய கதைகள் போல் இழுத்துக்கொண்டே போனால் இந்த நிலைதான் இருக்கும்.இது மாற வாய்ப்பில்லை.
மேலும் வெள்ளைக்காரன் கோடை கொடுமையில் இருந்தது தப்பிக்க வைத்த நீதிமன்ற கோடை விடுமுறையை இன்னமும் கட்டிக்கொண்டு விடாமல் கடை பிடித்தால் என்ன செய்ய? 
வாச்சாத்தி  கொடுமைக்கு வலுவான சாட்சிகள் இருந்து விசாரணை நடத்தி நீதிமன்ற தீர்ப்பு வர எத்தனை ஆண்டுகள்,எத்தனை வாய்தாக்கள்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஊழல் புகழ்.

நியூயார்க்கில் நடந்த ஏசியா சொசைட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரிடம், பாகிஸ்தானில் நிலவும் ஊழல் குறித்து நிருபர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரப்பானி," ஊழல் என்பது பாகிஸ்தானில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவில் கூட அதன் பிரதமர் மன்மோகன் சிங் மீது பெரிய பெரிய ஊழல் புகார்கள் உள்ளன "என தங்கள் பாக்  பிரதமருக்கு பரிந்து பேசியுள்ளார்.
suran
தங்கள் நாட்டு ஊழலை பேசி விட்டு போகாமல் வாய்க்கொழுப்பில் அடுத்த நாட்டு அமைச்சர் பேசுவது உலக அளவில் இந்தியாவை அசிங்கப்படுத்துவது.
மன்மோகன் மீது  ஊழல் புகார் இருப்பது உண்மைதான் ஆனாலும் அடுத்த நாட்டு பிரதமரி இழிவு செய்யும் உரிமை பாக் ஹினா வுக்கு கிடையாது.தங்கள் முதுகில் உள்ள அழுக்கை முதலில்  பார்த்து நீக்கட்டும்.
 இந்திய வீரர் தலை வாங்கிய விவகாரத்திலும் இவர் பேச்சு முறையானதாக இல்லை.
இந்திய ஊழல் புகார்களா இந்திய நாட்டின் உள் விவகாரம்.இங்கு நாங்கள் அடித்துக்கொள்வொம்-சேர்ந்து கொள்வோம் அது மக்கள் ஆட்சியின் உரிமை.ஆனால் அதேபோல் பாகிஸ்தானில் முடியுமா?
தீவிரவாதத்தை வளர்த்துக்கொண்டே அதை எதிர்ப்பதாக பேசும் முகமூடி அரசியலை ஹினா பாகிஸ்தானிலேயே வைத்துக்கொள்ளட்டும்.
இவரைப்போன்று உள்ளஅடுத்தநாட்டு  சின்னஞ் சிறுவர்கள் கூட பேசுமளவு இந்தியாவில் ஊழலை வளர்க்கும் காங்கிரசு இந்த ரோசத்திலாவது திருந்தட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suranjpg


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?