பேச்சை குறைக்க.....,
உலக அளவில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் குறைவாக உள்ளன.
ஆ.ராசா அமைச்சராக இருந்த போது எடுத்த சில நடவடிக்கைகளாலும்,பிஎஸ் என்எல் நிறுவனத்தின் சேவையாலும் நிலவிய கடும் போட்டியாலும் 2009ஆம் ஆண்டு முதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் நிறவனங்கள் லாபத்தில்தான் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்போது மத்திய அரசு செல்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்து விட்டன.
அதைத்தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி செல்போன் நிறுவனங்கள் அழைப்பு கட்டணங்களை சுமார் 2 மடங்கு உயர்த்தி உள்ளன.
செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கையில்தற்பொது முதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனம் வர்த்தக மேம்பாட்டுக்காக செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச நிமிடங்களை 25 சதவீதம் வரை குறைத்துள்ளதாகக் கூறியுள்ளது.
பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான சிறப்புக் கட்டண கூப்பன் (பூஸ்டர்/ரேட் கட்டர்) விலையை ரூ.5 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்தக் கட்டண உயர்வு நாட்டில் உள்ள அதன் அனைத்து 22 தொலைத் தொடர்பு வட்டங்களிலும் விரைவில் அமலுக்கு வரும் .
அதேநேரம், ஒரு சில தொலைத் தொடர்பு வட்டங்களில் மட்டும் செல்போன் கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக ஐடியா செல்போன் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது வர்த்தக மேம்பாட்டுக்காக செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் நீக்கப்பட்டூள்ளன.ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 4ஆவது இடத்தில் உள்ளது.
வோடோபோன் நிறுவனம் அடக்கமாக வெளியெ தெரியாமல் தனது கட்டணங்களை உயர்த்தி விட்டது.
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள், சமீபத்தில் இன்டர்நெட் பயன்பாட்டுக்கான 2ஜி டேட்டா கட்டணங்களை 30 சதவீதம் உயர்த்தியுள்ளன.. ரிலையன்ஸ், ஏர்செல், டாடா ஆகிய செல்போன் நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தும் முடிவில் உள்ளன.
மொத்தத்தில் செல்பேசி சேவை[?]அவை இந்திய மக்களை நன்கு புரிந்து
வைத்துள்ளது.அந் நிறுவனங்கள் லாபத்தில் கொழிக்கப்போவது உறுதி.
செல்பேசிக்கு பணம் எற்றுபவர்களுக்குத்தான் அவதி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா -66
சுவிட்சர்லாந்தில் பிறப்பவர்கள் மகிழ்ச்சிகரமானவர்களாக காணப்படுவதுடன் தரமான உடல் ஆரோக்கிய நிலையானது அவர்களது ஆயுளை தீர்மானிப்பதாகவும் சுகாதார மற்றும் பொ
அதேபோல் ஸ்கெண்டிநேவியா நாடுகளான நோர்வே, சுவிடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளதாக அவ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹாங் காங் ஆகிய நாடுகள் 2013 இல் சிறப்பாக வாழக்கூடிய முதல் 10 நாடுகளாகும்.
அமெரிக்கா 16 ஆவது இடத்திலும் பிரிட்டன் 20 ஆவது இடத்திலும் ,சீனா 49 ஆவது இடத்திலும் உள்ளன.
அதற்கும் பின்னாள் நமது இந்தியா 66 ஆவது இடத்தில் உள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------