முதலிடம் நோக்கி தமிழகம் முன்னேறி வருவதாக
ஆட்சியாளர்கள் அடிக் கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது உண்டு. எந்த
விஷயத்தில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறுகிறதோ என்னவோ ஒரு
விஷயத்தில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
குடிப்பழக்கம் எனும் விடயத் தில் பிற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி
தமிழகம் முன்னேறுவதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமி
ழகம் முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
நாள்தோறும் 50 கோடி
ரூபாய் அளவு க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை யாகின்றது.
பல
திட்டங்களை இந்த டாஸ்மாக் வருமானத்தில் இருந்து திட்டமிட்டு அதன்
வருமானத்தில் திட்டங்களுக்கு செலவிடும் போக்கு தமிழக அரசிடம்
வந்துள்ளது.இது கண்களை விற்று ஓவியங்களை வாங்கி வீட்டில் மாட்டி அழகு
செய்வது போல்.மக்களை குடி கெடுக்கும் குடி பழக்கத்திற்கு ஆளாக்கி விட்டு
அந்த வருமானத்தில் நலத்திட்டங்கள் என்பது எந்தவிதத்தில் பார்த்தாலும்
அசிங்கம்தான்.
கடந்த 2011 - 12 மார்ச் மாதம் வரை 23 ஆயி ரத்து 505 கோடியே 50 லட்சம்
ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளதாகவும் இதன் மூலம் அரசுக்கு 18
ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும்
தகவல்கள் கூறுகின்றன. 2013ம் ஆண்டு மார்ச் நிதியாண்டின் முடிவில் 28 ஆயிரம்
கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை இருக்குமென் றும் இதன்மூலம்
அரசுக்கு 20 ஆயிரம் கோடி வரு வாய் கிடைக்கும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புள்ளிவிபரம் குறித்து தமிழக அரசு பெருமிதப்பட்டுக் கொள்ளமுடியாது.
மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் உயர்கிறது என்றால், கோடிக்கணக்கான
குடும்பங்களில் வருமானம் சிதைகிறது. அந்த குடும்பங்கள் வீதிக்கு வருகிறது
என்றே பொருள். உதாரணத் திற்கு மதுரை மாவட்டத்தில் மகளிர் காவல்
நிலையங்களுக்கு 2000 குடும்ப தகராறு வழக்கு கள் வந்துள்ளன. இவற்றில் 75
சதவீதத் தகராறு காரணம் கணவர்களின் மதுப்பழக்கமாக இருந் துள்ளது.
அண்மையில் நடந்த கொடூரமான பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட கயவர்கள்
மதுபான மயக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் பல்வேறு கொலை, கொள்ளை
வழக்குகளில் கைது செய்யப்படுவோரும், மதுபோதையில் இருந்துள்ளது
நிருபணமாகியுள்ளது. சமூக குற் றங்களுக்கு மதுப்பழக்கம் என்பது அடிப்படை யாக
உள்ளது என்பது தெளிவு.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகில் உள்ள மதுக்கடைகள் இடமாற்றம்
செய் யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல கல்வி நிலையங்கள்
அருகிலுள்ள கடைகளும் அகற்றப்படவேண்டும்.
அண்மைக்காலமாக பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி
வருவ தாகவும், மது அருந்திவிட்டு பள்ளி வகுப்ப றைக்கு வரும் மாணவர்கள் கூட
இருக்கிறார்கள் என்பதும் திகைப்பை எற்படுத்தும் அதிர்ச்சியாகும்.ஒரு
பள்ளியில் மாணவன் பையில் மதுப்பாட்டில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதை
விட அதிர்ச்சி அதை கண்டு பிடித்து அறிவுரை வழங்கிய ஆசிரியருக்கு
அம்மாணவன் கொலை மிரட்டல் விடுத்தது.
விசேச நாட்களில் இவ்வளவு மது விற்றாக வேண்டும் என்று அரசே இலக்கு
தீர்மானிப்பதும் அதற்கேற்ப மதுபானக்கடைகளை அலங்கரிக்க உத்தரவிடுவதும்
வெட்ககேடானதாகும்.
பள்ளி
-குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடைகள் இருக்க கூடாது என்பது அரசின்
விதி.ஆனால் சட்டமிட்ட அரசே அதை மீறி கடைகளை திறந்து வருகிறது.அதை மூடக்கூறி
போ ராடுபவர்களையும் காவல்துறையின் மூலம் தாக்கி விரட்டுகிறது.
மதுப்பாட்டிலில்
மட்டும் குடிகெடுக்கும் வாசகங்கள் இடம் பெற்றால் போதாது.
அரசு மனதிலும் அது இருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும்
நிலத்தடி தண்ணீர் மட்டம் குறைந்துகொண்டே செல்வதும் மறுபுறத்தில் இந்த [மதுபான
]தண்ணீர் விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்வதும் நாட்டுக்கும்- மக்களுக்கும் நல்ல த ல்ல.அதை செய்யும் கொடியச்செயல் அரசுக்கு அழகல்ல.
மது வியாபாரியாக அரசே மாறியதால் அரசு கைக்குள் இருக்க வேண்டிய சட்டம் -ஒழுங்கு இன்று ஒழுங்கில்லாமல் இருக்கிறது.பாலியல் வன்முறைகளும் ,களவு-கொலைகளும் அதிகரித்து வருகிறது.
அண்மையில் நடந்த சாதிக்கலவரத்தில் கூட போதையில் வந்தவர்களால்தான் வன்முறையே ஆரம்பமாகியுள்ளது.
_____________________________________________________________________________
|