------------------------
திருப்பூர் -தாராபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராமலிங்கம்.
சாதாரண கொப்பறை,கடலை வியாபாரி.இவரது வீட்டில் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில்
ரூ.27 ஆயிரம்
கோடி மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பத்திரங்களின் உண்மை தன்மை குறித்து வருமான
வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்துராமலிங்கம் கூறியது:
"வருமானவரித் துறையினர் என்னிடம் பல கோணங்களில் கேள்வி எழுப்பினர்.
அதற்கு உண்மையான பதிலை முழுமையாக அளித்துள்ளேன். வழக்கு விசாரணை முடிந்த
பிறகு
உண்மை வெளியாகும் [?]
ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை, பிரேசில் நாட்டைச்
சேர்ந்த நண்பர் டெனியலிடம் வாங்கினேன்.
2005ஆம் ஆண்டுவரை கடும் கடன்
பிரச்னையில் இருந்த நான், அறிவைப் [?]பயன்படுத்தி இந்த அளவு உண்மையாக முன்னேறி உள்ளேன்." என்றார்.
நம் அரசியல்வாதிகளுக்குத்தான் முதல் தேர்தலில் 10 லட்சமாக இருக்கும் சொத்து மதிப்பு அடுத்த தேர்தலில் அதுவரை அவர்கள் ஆற்றிய மக்கள் பணி மூலம் 10கோடிகளாக மாறியிருக்கும்.அது கடைசியில் லட்சம் கூடிகளாக உருக்கொள்ளும்.
ஆனால் இந்தியாவில் கடலை போட்ட ஒரு கொப்பரை வியாபாரி 7 ஆண்டுகளில் தனது அறிவை பயன்படுத்தி உண்மையாக முன்னேற இயலும். என்பது இப்போதுதான் நடந்துள்ளது.
இவரின் அறிவுக்கும் உண்மையான உழை ப்புக்கும் இவர் சிறையில் அடைக்கப்படுவதை விட இந்தியாவின் நிதி அமைச்சராக்கி பெருமைப்படுத்துவதுதான் சாலச்சிறந்தது.
அப்படியாவது பொருளாதார புலிகள் சிதம்பரம் -மன்மோகன் சிங்-அலுவாலியா போன்றோரிடமிருந்து இந்தியா முன்னேறுமா என்று பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
48ஆண்டுகளுக்குப்பின்னரும் அதே நிலை?
காங்கிரஸ் ஆட்சியில் கண்டறியாதனவெல் லாம் காணலாம். திடீரென கிளாஸ்கோ,
அமுல் புட்டி களுக்கு (குழந்தை உணவு) கால்கள் முளைத்து விடுகின்றன.
சர்க்கரை மூடைகளுக்கு இறக்கை கள் முளைத்துவிடுகின்றன. வெளிச்சத்தில் இவை
வராது.
இப்போது எரிபொருள் இருக்குமிடமும் இருட் டாக இருக்கிறது. சென்ற வாரத்தில்
2வது உலக யுத்தத்தில் நாஜிகள் தோற்கடிக்கப்பட்ட 20வது ஆண்டு விழாவைக்
கொண்டாடினோம். ஆனால் யுத்த காலத்திலிருந்த மண்ணெண்ணெய் பஞ்சம் இப்போதும்
தலைதூக்கியுள்ளது. இது செயற்கை பஞ்சம்தான் என்று மத்திய மந்திரி ஹுமாயூன்
கபீர் கூறுகிறார்.
இதன் கடுமையைப் பற்றி மதுரை - ராமனாத புரம் வர்த்தக சேம்பர் மந்திரிக்குத்
தந்தி அடித் துள்ளது. கோவையில் கலெக்டர் மண்ணெண் ணெய் வர்த்தகர்கள்
கூட்டத்தைக் கூட்டி உபதே சம் செய்துள்ளார்.
திருநெல்வேலியில் பாட்டிலுக்கு 3 பைசா கூடு தலாக விற்கப்படுவதாகவும்
திருச்சியில் 18 லிட்டர் கொண்ட டின் ரூ.10க்கு (நிர்ணய விலை ரூ. 6.65 தான்)
விற்கப்படுவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது பல ஊர்களில் கடைகளில்
மண்ணெண்ணெய் கிடையாது என்று கூறு கிறார்கள். தெருக்களில் மண்ணெண்ணெய் வண்டி
கள் வருவது நின்றுவிட்டன. டீசல் எண்ணெய் கிடைக்காமல், நாட்டின் பல
இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.