மிருக வெறி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச்மாவட்டத்தில்
பாகிஸ்தான் ராணுவத்தினர் வழமைபோல் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி தாக்குதலில்
ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்கள் ஹெம்ராஜ், சுதாகர்சிங்ஆகிய 2 பேர் மரணமடைந்தனர்.
போரில் இறந்தவர்கள் உடல்களை மரியாதையாக ஒப்படைப்பது போல் ஒப்படைக்காமல் பாகிஸ்தான்
ராணுவத்தினர் வெறித்தனமாகவும் மிருகத்தனமாகவும் அந்த இரண்டு வீரர்களின்
தலைகளை துண்டித்துள்ளனர்.
அதோடுமட்டுமல்லாது அந்த இரண்டு பேர்
தலைகளில் ஒருவரின் தலையை காட்டுமிராண்டிகள் போல் கொஞ்சம் கூட மனிதத் தன்மையின்றி பாகிஸ்தான் படை வீரர்கள் கைகளில் எடுத்துச்சென்றுவிட்டனர்.
தலை எதற்காக கையில் எடுத்து சென்றார்கள்.தங்கள் தளபதியிடம் காட்டவா?
இதனால் '
பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால்
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும்
எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஹைகமிஷனர்
சல்மான் பசீரை அழைத்து இந்த கண்டனத்தையும் எச்சரிக்கையும்
தெரிவிக்கப்பட்டது.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தர் பகுதியில் பாகிஸ்தான்
ராணுவம் அத்துமீறி நடந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடந்துள்ளது. துப்பாக்கி
சண்டையில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களின் உடல்கள்
சின்னாபின்னமாக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல் என்று ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் மனிதர்களால் அமைக்கப்பட்டுள்ளதா?அல்லது மிருக மனம் கொண்ட காட்டுமிராண்டிகளால் நிரம்பியதா?
போர் காலம் இல்லாமல் இருக்கும் போதும் கூட இந்திய எல்லையில் அவ்வப்போது துப்பாக்கியால் சுடுவது,குண்டுகளை குடியிருப்புகள் அருகே வீசி வெடிக்க செய்வது என்று இருப்பது அவர்கள் வேலையாக போய்விட்டது.
அவ்வப்போது தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப இது போன்ற திசை திருப்பல் நடப்பது வழக்கம் .ஆனால் இது போன்ற தலைவாங்கும் பழக்கம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் பாகிஸ்தான் காட்டுமிராண்டி படை வீரர்கள் இன்னும் பல கொடுரங்களை எல்லையில் நிறைவேற்றுவார்கள்.ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிகளாகி விடுவார்கள்.
நம் இந்திய வீரர்களுக்கும் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.இந்தியாவை பாதுகாக்க தங்கள் உயிரையே பணயம் வைத்த தங்களுக்கே பாதுகாப்பின்மையும் ,மதிப்பின்மையும் இருப்பதாக அவர்கள் மனதில் ஒரு உருவாக்கம் உண்டாகி விடக்கூடாது.
எல்லாவற்றுக்கும் மேல் பாகிஸ்தான் படையினரின் காட்டுமிராண்டித்தனம்-மனிதாபிமானமற்ற செயல்கள் அவர்களை அச்சத்தில் தள்ளிவிடக்கூடாது.
வழக்கமான அசமந்தத்தை இந்திய அரசும் படை த் தலைவர்களும் காட்டாமல்.ஐ.நா..என்ற ஆண்டிமடத்தில் போய் குற்றசாட்டுகளை பதிந்து விட்டு தனது கடமை முடிந்தது என்று இந்தியா உட்கார்ந்து விட்டால் பின்னர் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் இன்னமும் கொடுரமாக அமைந்து விடும்.இந்தியா ஒரு சொரணை கெ ட்ட நாடு என்று ஆகிவிடும்.
பின்னர் நமது ராணுவத்தின் வலிமையே கேள்விக்குறியாகிவிடும்.
"சிங்கம் இளைத்தால் எலி மச்சான் உறவு கொள்ள ஆரம்பித்துவிடும்" என்ற தமிழ் வழமை சொல்லை மன்மோகன் சிங் அரசு கொஞ்சம் கவனத்தில் கொள்ள வெண்டும்.
வெறும் வார்த்தைகளால் உருவாக்கிய கண்டனம் கதைக்குதவாது.
இந்திய மக்களின் பாதுகாப்பே பாகிஸ்தான் மிருக வெறி படையினரிடம் கேள்விக்குரியதாகி விடும்.
___________________________________________________________________________________