தொடரும் இளமை ,

இளமை உங்ககளுடன் எப்போதும் இருக்க சிறிய அளவிலான யோகாவும் ,சின்ன உடற்பயிற்சிகளும்,சில உணவு பழக்கங்களும் இருந்தால் போதும்.
முடிந்தால் ஒரு சின்ன தியானம்.
 எல்லாமே சின்னதாக இருக்க காரணம் இன்றைய அவசர உலகில், நீங்கள் பார்க்கும் அலுவலுக்கு ஏற்பத்தான் இந்த சின்ன,சின்ன ஏற்பாடுகள்.
காலையில் அலுவலகம் அல்லது தொழிலுக்குப் புறப்படும் நீங்கள்  இவைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கமுடியாது.
கிடைக்கும் சிறிய இடைவெளியில் மொத்தம் அரை மணி நேரத்தில் இவைகள் முடிந்து விட வேண்டும்.அதுதான் உங்களுக்கு வசதி.அப்படி இருந்தால்தான் நீங்களும் இடைவிடாமல் செய்ய இயலும்.வெளியூர் பயணங்களிலும் கிடைத்த நேரங்களை இவற்றை சோம்பல் முறிப்பது போன்றே செய்து விடலாம்.
 யோக பயிற்சி என்றவுடன் முறைப்படி குரு  வைத்து செய்ய இயலாது.அதற்கு கால் அவகாசமும் ஒதுக்க இயலாது.எளிய சில ஆசனங்கள் நாமே செய்யலாம்.அதற்கு 5 முதல் 10 நிமிடங்களை ஒதுக்க உங்களால் முடியும்தானே?
 காலை எழுந்து உங்களில் கழி ப்பறை சமாச்சாரங்களை முடித்துக்கொள்ளுங்கள்.
வெறும் வயிறுதான் இது போன்ற உடற்பயிற்சி,யோகா,தியானம் பொன்றவற்றை செய்திட சிறந்தது.
வீட்டிலேயே உங்களுக்கு கொஞ்சம் இடையூறு இல்லாத அமைதியான அதாவது உங்கள் கவனத்தை திசை திருப்பமுடியாத இடத்தை தேர்வு செய்து அமர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யப்போவது பற்றி உங்கள் துணையிடம் அது திருமணமானவர் என்றால் மனைவி அல்லது அறை தோழமை போன்றவர்களிடம் சொல்லி விடுங்கள்.அவர்கள்நாம் செய்யும் வேளைகளில்  நம்மை பார்க்கும் பார்வையில்,கொஞ்சம் கேலி இருப்பதை தவிர்க்கத்தான் இந்த எற்பாடு .

-சரி. எனக்கு வேறு வேலை வந்து விட்டது பின்னால் பார்ப்போம்.

அதுவரை நீங்கள் உடல் நலம் காக்கும் பணியில் 

இறங்கப்போ வதை சகாவிடம் சொல்லிவையுங்கள்.


[இளமை தொடரும்.] 
 _______________________________________________________________________

நிறங்கள் 

இது கவிஞர் இன்குலாபின் கவிதை வரிகள் மனித உடல் நிறத்தை மட்டும் அவர் சுட்டிக்காட்டியதாக தெரியவில்லை.மனதின் நிறம் மாறலையும் தன மொழியி ல் காட்டியுள்ளார். 
 
"இலையின் நிறத்தில் 

suran
பூப்பதில்லை.

பூவின் நிறத்தில் 

காய்ப்பதில்லை.

காயின் நிறத்தில் 

கணிவதில்லை .

எப்படி இருப்பேன் 

இளமை நிறத்தில்?"

--"இனிய உதயம்"'மாத இதழில் வெளியான கவிதை வரிகள்.
-----------------------------------------------------------------------------------
வாழ்த்துகிறோம்.
அகில இந்திய காங்கிரசுக்கு ராஜீவ் காந்தி வாரிசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தேர்ந்து என்ன திணிக்கப்பட்டுள்ளார்.வழமையான காங்கிரசின் கொத்தடிமைகளுக்கு புதிய கட்டுக்குத்தைகதார் நேரு குடும்பத்தில் இருந்து பதவியெற்றுள்ளார் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
suran
42 வயதாகும் அவரை இன்னமும் இளைஞர்  என்று சொல்லிக்கொண்டிருக்கும் காங்கிரசார் முதலில் அவர் தாயார் சோனியாவிடம் கூறி ஒரு திருமணத்தை செய்து வைக்கலாம்.
அவர் தலைமையில்தான் 2014 -ம் ஆண்டில் வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கிறார்களாம்.
இது அவர்கள் கட்சி விவகாரம்.அவர்கள் பிரியங்கா மகன் தலைமையில் கூட தேர்தலை சந்திக்கட்டும்.ஆனால் இவர்கள எல்லாம் இன்றைய இந்திய தலை விதியை முடிவு செய்யும் கொள்கை முடிவுகளை அரை வேக்காடுத்தனமாக -அந்நிய ஆட்சியினருக்கு ஆதரவாக இந்திய மக்களுக்கு எதிராக எடுப்பதுதான் சகிக்க முடியவில்லை.
2014 ல் மக்களவைத்தேர்தல் முடிவுகள் ராகுல் கடைசியாக பொறுப்பேற்று நடத்திய உத்திர பிரதேச தேர்தல் முடிவுகள் போல் அமைய வாழ்த்துகிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?