குற்றம் சொல்லியே பெயர் வாங்கும்



"பாட்டெழுதி பெயர்  வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.   
குற்றம் சொல்லியே பெயர்  வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
அதில் நீ என்ன ரகம் என்பதை ............,"

திடீரென இந்த திரு விளையாடல் வசனம் கவனத்திற்கு வந்தது .
விஸ்வரூபம் தொடர்பான கருத்துக்களில்  சிலர் பதிவுகளா ல்தான்.
பதிவு என்றால் பதிவர்களின் பதிவுகள் அல்ல.
சில பாமர அரசியல் விமர்சகர்களின் கருத்துப்பதிவுகளில்தான்.
"புதிய தலைமுறை"தொலைக்காட்சியினர் விஸ்வரூபம் தடை பற்றி  சில பிரபலங்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நமக்கும் காலத்தைப் போக்கும் பிடி இல்லாததால் பார்த்தேன்.
சரியான கருத்துக்களை அது சரியோ,தப்போ தெளிவாக இளங்கோவன் வைத்தார்.
இசுலாமிய பிரமுகர் நாசர் என்பவரும் அப்படியே.
பிரண்ட்லைன் ஆசியர் குழு தோழர் பேச்சு இப்போது நடக்கும் விஸ்வரூபம் தடை பற்றி பேசாமல் தனக்கு தெரிந்த உலகளாவிய அறிவை பறை சாற்றி சம்பந்தமே இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.அதனால் அவரை தொகுப்பாளர் அவ்வளவாக வாதத்தில் தொட்டுக்கொள்ளவில்லை.
அவரைப் போலவே மற்றொரு உலக ஞானி பாமரன் கருத்துக்களும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவரின் பதில்களுக்கும் தனியே' கோனார் விளக்கவுரை "தான் போடவேண்டும்.
"தடை மூலம்.கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக கருதுகிறீர்களா?"
    சிறிது நேரம் அமைதி.
சிந்திக்கிறாராம்.
"குரு திப்புனல் போன்ற படங்களை எடுத்த கமல்ஹாசன் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது
 சிரிப்பாக இருக்கிறது"
எனக்கும் சிரிப்பாகவே வந்தது.
கமலை நினைத்தல்ல.
பாமரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும்-அவர் சொன்ன பதிலுக்கும்,
இவரை  கலந்துரையாட சொன்னவர்களையும் நினைத்துதான்.
கருத்து சுதந்திரத்துக்கும் கமல் எடுத்த குருதி புனலுக்கும் என்ன சம்பந்தம்?
கருத்து சுதந்திரம் பறிபோனதாக இப்போது கமல் எங்கும் பேசியதாகவும் தெர்யவில்லையே.
கலாச்சார தீவிரவாதம் என்றுதான் சொன்னதாக தெரிகிறது.
அதுவும் போக இந்த கருத்து சுதந்திரம் பற்றிய கேள்வியை எழுப்பியவர் நிகழ்ச்சி நடத்துபவர்.அதற்கு கமலின் குருதிப்புனல் எதற்கு வருகிறது.
அதில் யார் கருத்து பறிக்கப்பட்டது.அதன் மேல் பாமரனுக்கு என்ன கோபம்.
அதில் தீவிரவாதம் எப்படி எல்லாம் இளையவர்கள் மனதுக்குள்  வருகிறது என்பதை கடைசியில் சிறுவன் தன தந்தையை கொன்றவரின் மகன் மீது வன்மத்துடன் கல்லெறிவது காட்சி மூலம் எளிய முறையில் காட்டி பாமரர்க்கும் புரியதானே வைத்துள்ளார்.
தீவிரவாதிகள் பேச்சின் மூலம் அவர்களின் கொள்கைகளையும் வெளிச்சம் போட்டு
காட்டி முடிவை மக்களிடமே விட்டு விடத்தானே செய்கிறார்?
ஆக பாமரன் போன்ற கமல்ஹாசன் மீது ஏற்கனவே தனிப்பட்ட வெறுப்பை வளர்த்துக்கொண்டிருப்பவரை இது போன்ற நிகழ்ச்சிக்கு அழைத்தால் பதில் கள் இவ்வாறுதான் இருக்கும் .
எதை யார் செய்தாலும் அதில் ஓட்டையை கண்டு பிடித்து  அதற்கு உலகலாயவிய தீர்வை சொல்லுபவர் பாமரன்.
இதில் அவர் பேசியவை அனைத்தும் அவர் எழுதிவரும் கட்டுரைகளுக்கு முற்றிலும் எதிரானவைகள்.மற்றவர்கள் சொல்லுவதற்கு மறுப்பாக எதை சொல்லலாம் என்று சம்பந்தமே சம்பந தமில்லாமல் பதில்களை கூறிக்கொண்டிருந்தார்.கொஞ்ச நேரம் கழித்து தொகுப்பாளரே பாமரன் பக்கம் கேட்பதை குறைத்து விட்டார்.
அ தேபோல் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்.அவருக்கு ஆலோசனைகள் கூறுமளவு இருப்பவரின் கருத்துக்களும் எப்படி இருக்கும்?
அதற்கு உதாரணம் "சோ".தனது துக்ளக்கில்
அயோத்தி இடிப்பையும் ,கரசெவையை ஆதரித்து எழுதியவர்.அதே கரசேவையை ஜெயலலிதாவும்  நியாயப்படுத்திவந்தது  எழுதிவந்தது உலகம் முழுக்க தெரியும்.
சோ பாஜக ஆதரவாளர்.கட்சியின் உறுப்பினரும் கூட.
இவர் "இசுலாமிய மக்கள் தங்கள் மனது புண்படும் என்று சொல்லும் போது ஜெயலலிதா கமலின் விஸ்வரூபத்தை தடை செய்ததுசரிதான் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
கரசேவையின் போது இசுலாமிய மக்களின் மனது புண்படாமல் இன்பத்திலா திளைத்திருந்தது.?
இப்போது கருணாநிதி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் "சோ "வின் கருத்து துக்ளக்கில் எப்படி இருந்திருக்கும்?
"படத்தை பார்க்காமலே ஒரு முதலமைச்சர் தடை போடுவது கருணாநிதி கூறிவரும்  பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. அவர்களின் குடும்ப தொலைக்காட்சிக்கு படத்தை தரவில்லை என்ற வியாபார போட்டிதான் கருணாநிதியை இப்படி நடுநிலைத்தவறி தடையை போட வைத்துள்ளது.இது கடுமையாக எதிர் க்கவே ண்டிய செயல்"என்று பக்கம் பக்கமாய் அழுது புலம்பியிருப்பார்.
இப்போது ஆட்சி செய்து தடையை போட்டவர் தனது சிஷ்யை ஜெயலலிதா.அவரின் செயல்களுக்கு  இந்த ராஜ குரு சோ வக்காலத்து வாங்க வே ண்டிய காலத்தின் கட்டாயம் இருக்கிறதே.
suran
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்டிபயாடிக் மருந்து சாப்பிட்டால் வைரஸ் கிருமிகள் சாகும் என்ற ஒரு நம்பிக்கை நம்மில் பலரிடையே இருக்கிறது. 
சளிக்கும் இருமலுக்கும் மருத்துவரிடம் செல்லாமல் பெட்டிக்கடைகளிலேயே கிடைக்கும்  ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்ளும் ஒரு வழக்கத்தை நம்மில் அநேகருக்கு இருக்கிறது.2 ரூபாய் ஆண்டிபயாடிக் மாத்திரை  போட்ட  உடனேயே குணமாகும் போது மருத்துவருக்கு பார்க்க  மட்டும் 100 தண்டம் கொடுக்கனுமா என்ற சிக்கனமான் எண்ணமே பலருக்கு.
உண்மையில் ஆண்டிபயாடிக் மருந்துகள் வைரஸ்களைக் கொல்லுமா?
 பாக்டீரியா என்று சொல்லப்படுகின்ற நுண்ணுயிரிகளைத்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொல்லுமே ஒழிய வைரஸ்களைக் கொல்லாது.
  ஏனென்றால் வைரஸ்கள் என்பவற்றை ஒரு வகையில் பார்த்தால் உயிருள்ள வஸ்துக்கள் என்றே சொல்ல இயலாது. எனவே சளி இருமல் எல்லாம் வந்தால், ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டு அவற்றை குணப்படுத்த முடியாது. 
வைரஸ் தொற்றுக்கு ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் பல சந்தர்ப்பங்களில் பிரச்சினை மோசமாகத்தான் செய்யும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துபோகும்.
தவிர்க்க இயலாத நிலையில் ம ருத்துவர்கள் எழுதித்தரும் போது போது மட்டுமே ஆண்டிபயாடிக் சாப்பிடுங்கள்.
இல்லையெனில் தலைவலி போய் திருகு வலி வந்தது போலாகி விடும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையே இல்லாமலாக்கி விடும்.மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே வேலைகள் செய்ய முடியும் என்ற நிலையாகி விடும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
தப்பி பிழைத்த சாம்சங்.

தென்கொரியாவில்  உள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்டு  உலகின் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றான உயர்ந்துள்ள  சாம்சங் நிறுவனத்தின் தற்பொதைய தலைவர் லீ குன் ஹீக்கும் அவரது உடன்பிறந்தோருக்கும் இடையிலே பல நூறு கோடி டாலர்கள் பெறுமதி கொண்ட சாம்சங் குழுமத்தின் பங்குகள் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக நடந்துவந்த வழக்கில் லீ குன் ஹீ வெற்றிபெற்றுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தை தோற்றுவித்தவரான தனது தந்தையிடம் இருந்து லீ நிறுவனப் பங்குகளை வாங்கி  பதுக்கி வைத்திருந் தார் என அவரது குடும்பத்தவர்கள் குற்றம்சாட்டியுள்ள னர்.

இந்தத் தீர்ப்பு தென்கொரியாவின் உட்சபட்ச செல்வந்தரான லீக்கு எதிராக சென்றிருந்தால், சாம்சங் நிறுவனம் சரிவை சந்தித்திருக்கும்  என்று வணிக இதழ்களின் செய்தியாளர்கள் கருதுகின்றனர் .

கைத்தொலைபேசிகள் மற்றும் கணினி சில்லுகள் தயாரிப்பில்தற்பொது  உலகின் மிகப் பெரிய நிறுவனம்  சாம்சங்தான்.

இந்த தீர்ப்பு வெளியானவுடன்  பங்கு சந்தைகளில் சாம்சங் பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பார்க்கும் போதே நமக்கு கண்ணைக்கட்டுதே .இவர்கள் சாதனை என்று என்னவெல்லாம் செய்கிறார்கள்.









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?