அடுத்த காமெடி தர்பார் ?
நித்தியானந்தா எல்லா பக்கமும் விரட்டப்பட்டு கதி யற்று திரியும் நேரம் எதிர்பாரா பக்கத்தில் இருந்து அவருக்கு ஆதரவு குரல் எழுந்துள்ளது.
இந்த ஆதரவு குரலை எழுப்பியவர் கொலை வழக்கில் சிக்கி ஆசிரமத்தின் அருமை -பெருமைகளை குழி தோண்டி புதைத்த காஞ்சி ஜெயேந்திரர்.
அடுத்த காமெடி தர்பார் ஆரம்பம்? |
ஜெயேந்திரர் "பல ஊர்களில், ஆசிரமங்கள் அமைத்து, நித்யானந்தா
தியான பீடம் தொண்டாற்றி வருகிறார்.
நித்யானந்தாவிற்கும், காஞ்சிபுரம்
மடத்திற்கும் பல ஆண்டுகளாகத் தொடர்பு இருக்கிறது.[என்ன தொடர்பு என்றுதான் தெரியவில்லை.]
அவர் ஸ்தோத்திரங்கள், தியானங்கள் போன்ற பல பணிகளை
செய்து வருகிறார். நித்யானந்த சுவாமியும், அவர் தியான பீடமும் நன்கு
மேன்மேலும் வளரவேண்டும் என, ஆசீர்வதிக்கிறோம்."
என் று கூறியுள்ளார்.
மதுரை ஆதினம் பட்டபாட்டை ஜெயேந்திரர் மறந்து விட்டார் போலும்.எப்படியோ நித்தியை காஞ்சியின் அடுத்த வாரிசாக அறிவிக்க இயலாது என்பது கொஞ்சம் நிம்மதியை அந்த மடத்துக்காரர்களுக்கு தந்துள்ளது.
ஆனால் நித்தி தனது சிறப்பு ஞானப்பாலை மதுரைக்கு கொடுத்து மயக்கியது போல் காஞ்சிக்கும் கொடுத்து விடக்கூடாது .
இந்த இரு சாமிகளின் சந்திப்பையும், நான்கு நிமிட காணொளியாக நித்யானந்தா தரப்பு,
"யூ டியூப்'பில் வெளியிட்டு உள்ளது.
இன்னும் கொஞ்ச காலம் நித்தியானந்தா காமெடி திருவிழா களை கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------திடீர் விலகல்?
காஞ்சியும்-பிடதியும் தோளில் கையை போட்டுக்கொண்டு அலையும் போது வாடிகனில் போப் திடீரென தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
வத்திக்கானில் நடந்த கூட்டம் ஒன்றின் போது 85 வயதான போப் பெனடிக் இந்த அறிவிப்பை லத்தீன் மொழியில் வெளியிட்டார்.
போப் பெனடிக் . |
பிப்ரவரி மாதம் 28 -யுடன் அவர் பதவி விலகுவார்.
அவருக்கு அடுத்ததாக மற்றொருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்த பதவி காலியாகத்தான் இருக்கும்.
முடிந்தவரை வெகுவிரைவில் புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று வத்திக்கான் கூறியுள்ளது.
1415 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு போப்பாண்டவர் பதவிவிலகுவது இதுதான் முதற்தடவையாகும்.
செலெஸ்டைன் 5 எனும் போப்தான் இதற்கு முன் தன் ஆயுள் முடியும் முன்னரே பதவி விலகியவர்.
மற்றபடி தேர்ந்தெடுக்கப்படும் போப்கள் அவர்களது ஆயுள் முடியம் வரை அந்த பதவியில் இருப்பார்கள்.
_______________________________________________________________________________________________
"செல் பேசி" -அதிகரிக்கும் "வைரஸ்" அபாயம்.
----------------------------------------------------------------------------------------
மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட்
மைக்ரோ நிறுவனம், நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள் அதிக
அளவில் பரவத் தொடங்கும் என எச்சரித்துள்ளது.
ஆண்ட்டி வைரஸ்
குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகே ஷன் புரோகிராம்களை உலக அளவில்
விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும் நார்டன்
நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ இயங்குகிறது.
இந்நிறுவனம்
அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக ஆண்ட்ராய்ட்
இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த விஷயத்தில்,
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன.
எனவே இவற்றில்
பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது
ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர்
மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு
பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே 30,000 என்ற
எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை
மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன.
தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2014 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு இறுதியில்
ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2013ல்
இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி
விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில் இடம்
பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம்
பிடிக்கும். எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள்
இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2014 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.
மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம்
வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில்
அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகே ஷன்களை இந்த வகையில் ஸ்கேன் செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது. தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகே ஷன்களை இந்த வகையில் ஸ்கேன் செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது. தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது.
ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர்
வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே,
நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என
ட்ரெண்ட் மைக்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.
நன்றி:தினமலர்.
-----------------------------------------------------------------------------------