இமயம் முதல் .. குமரி வரை....,
இன்று காலை முதல் லஞ்சத் தகவல்கள்தான்.
....,
ராணுவ தளவாடம் மற்றும் போர் விமான தயாரிப்பு நிறுவனமான
ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இந்திய பாதுகாப்புத்
துறையுடன் கடந்த 2010ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம்,
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கான 12
ஹெலிகாப்டர்களை (ஏ.டபிள்யூ 101 ரகம்) இந்தியாவுக்கு வழங்க வகை செய்கிறது.
3 ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மீதம் உள்ள 9ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு மத்தியில் சப்ளை செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவில்
உள்ளவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக ஓராண்டுக்கு முன்பு புகார் எழுந்தது.
இதுதொடர்பாக 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரூ.3,600 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தைப் பெற 10 சதவீதம் (ரூ.360 கோடி)
லஞ்சம் வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து
முழுமையாக அறிய,வழமை போல் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுடனான ஹெலிகாப்டர் பேரம் தொடர்பாக ரூ.360 கோடி லஞ்சம் வழங்கியதாக
இத்தாலி அரசு நிறுவனத் தலைவர் கியூசெப் ஒர்சியை அந்நாட்டு காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் தலைவர் புருனோ
ஸ்பக்னொலினி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பின்மெகானிகாவின் 30 சதவீதப் பங்குகளை இத்தாலி அரசுதான் வைத்துள்ளதுலஞ்ச கைதுகளுக்குப் பின்னர் பின்மெக்கானிகாவின் பங்குகளின் மதிப்பு 9 சதவீதம் வீழ்ந்துள்ளது.
இங்கே இந்தியாவில் ரூ 360 கோடிகளை வாங்கிய உத்தமர்கள் யார்?
முதலில் இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை எதிர்த்த் நிதியமைச்சகம் பின்னர் தனது முடிவை மாற்றியதுடன் உடனே ஹெலிகாபடர்களை வாங்க அனுமதி அளித்தது ஏ ன்? என்று உங்களுக்கு சந்தேகம் வருகிறது அல்லவா?
அதே சந்தேகம்தான் இங்கேயும்.!
இத்தாலியில் உடனே கைது.சிறை.இந்தியாவில் வழக்கம் போல் சிபிஐ விசாரித்துக்கொண்டே இருக்கும்.அவர்கள் காலம் முடியும் வரைக்கும்.
குமரி வரை....,
அடுத்து நாம் காணவிருப்பது சென்னை அருகேயான ஊழல்.
சென்னை தரமணி சி.எஸ். ஐ.ஆர்., சாலையில் இந்திய தர நிர்ணய
நிறுவனம் உள்ளது.இங்குதான் "வாட்டர் பிளான்ட்' துவங்க உரிமம் வழங்கப்படுகிறது.ஆனால் இங்கு புதிதாக
விண்ணப்பிப்போர்களிடமும்-, புதுப்பிப்போரிடமும் சில அலுவலர்கள் அன்பளிப்பை கண்டிப்பாக வழங்கக் கோரி அன்பில்லாமல் கேட்பதாக குற்ற சாட்டுகள் வந்தன.
இதனால் இந்நிறுவனத்தில்,
சி. பி.ஐ., அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது, நீரியல் விஞ்ஞானிகள் வெங்கட் நாராயணன், முரளி ஆகியோர், வேளச்சேரி பகுதியை சேர்ந்த, எக்ஸெல் வாட்டர் பிளான்ட் உரிமையாளர் விநாயகமூர்த்தியிடம், அன்பளிப்பு வாங்கிக்கொண்டிருக்கும் போது அன்பளிப்பும் அதை வைத்திருந்த கையுமாக பிடிபட்டனர்.
அப்போது, நீரியல் விஞ்ஞானிகள் வெங்கட் நாராயணன், முரளி ஆகியோர், வேளச்சேரி பகுதியை சேர்ந்த, எக்ஸெல் வாட்டர் பிளான்ட் உரிமையாளர் விநாயகமூர்த்தியிடம், அன்பளிப்பு வாங்கிக்கொண்டிருக்கும் போது அன்பளிப்பும் அதை வைத்திருந்த கையுமாக பிடிபட்டனர்.
அந்த இருவர் களிடம் இருந்தும் கணக்கில் வராத,
ரூ 16,000 பிடி பட்டது.
அ டுத்து, வளசரவாக்கத்தில்
உள்ள வெங்கட்நாராயணன் வீட்டில் சோதனையிட்டபோது, கணக்கில் வராத, 15 லட்ச
ரூபாய் பணம், 2,000 அமெரிக்க டாலர்கள், 60 யூரோ நோட்டுகள் மற்றும் 28
வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், அம்பத்தூரில் உள்ள முரளியின்
வீட்டிலும், சோதனை நடைபெற்றது. இதில், முக்கிய ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆக ஒரே நாளில் இந்தியாவின் வடகடைசியிலும்-தென் கடைசியிலும் ஊழல் நீக்கமற நிறைந்திருப்பது தெரிகிறது.
உண்மையிலேயே ஊழல் ஒரு தேசிய வியாதியாகி விட்டது.இனி இது போன்ற அரசு அலுவலர்கள் -அமைச்ச பெருமக்களுக்கு அரசு ஊதியம் வழங்காமல் இப்படி பொறுக்கி பிழைத்துக்கொள்ளட்டும் என்று கூறி விடலாம்.லஞ்சத்தை ஒழிக்க இப்போதைக்கு இதை விட வே று வழி இருந்தால் சொல்லுங்கள்.
" 1997 பிப் ரவரி 12ல் தான் போபர்ஸ் ஊழல் பட்டியலும் வெளியானது .இந்த நாளின் சிறப்பை என்னவென்று சொல்லுவது?
பேசாமல் இந்த பிப்ரவரி 12 ஐ ஊழல் தினம் என்று அறிவித்து கொண்டாடி விடலாம்."
இந்த ஊழல் புகாரின் காரணமாகவே 1989 ல் ராஜீவ் காந்தி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார்.பின்பு
சி பி ஐ வசம் சென்ற இந்த வழக்கில் கடந்த 2004 ம் ஆண்டு ராஜீவ் காந்தியை
விடுவித்தது தள்ளி உயர்நீதிமன்றம்....இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
இந்துஜா சகோதரர்களும் விடுவிக்கப்பட்டனர்.2009 ம் ஆண்டு போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை முடித்து கற்பூரம் காட்டி புதைத்து விட்டது சி பி ஐ .
வாழ்க இந்தியா.வளர்க அதன் ஊழல் தலைவர்கள் புகழ்,
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த அதிரடி.
-------------------------
இந்நிலையில் பேரி ஆஸ்பன் தயாரிப்பில் கமல் இயக்க இருக்கும் படத்திற்கு ஆல் ஆர் கின் என்று பெயர் வைத்துள்ளனர். "ஆல் ஆர் கின்" என்றால் "யாவரும் கேளீர்" என்று அர்த்தமாம். இந்திய கலாச்சாரத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்வரூபம்-2 முடிந்த பிறகு உடனே ஆர் ஆர் கின் படத்தை தொடங்க இருக்கிறார் கமல்.