மார்ச் மாதம் ஒரு பார்வை.
முக்கிய தினங்கள்
3 தேசிய பாதுகாப்பு தினம் .
8 உலக மகளிர் தினம்.
13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்.
15 உலக நுகர்வோர் தினம். உலக ஊனமுற்றோர் தினம்.
16 தடுப்பூசி தினம்.
18 தளவாடங்கள் தினம்.
21 உலக வன நாள்.
21 உலக நிறவெறி ஒழிப்பு தினம்.
முக்கிய நிகழ்வுகள்
மார்ச் 3, 1876 அமெரிக்காவில் அலெக்ஸôண்டர் கிரஹாம் பெல் தொலைபேசிக்குக் காப்புரிமை பெற்றார்.
3, 1918 பர்டோஸ் தீவிலிருந்து "யு எஸ் எஸ் சைக்கோப்ஸ்' என்ற பயணிக்
கப்பல் 309 பேருடன் பெர்முடா முக்கோணப் பகுதியில் தொலைந்து போனது.
3, 2010 உகாண்டா நிலச்சரிவில் 86 பேர் பலி.
4, 2012 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 290 கி.மீ. தூரம் சென்று
அதிவேகமாகத் தாக்கும்"பிரமோஸ்' ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
4, 2012 பீகாரில் கபடி உலக கோப்பை போட்டியில் இந்தியப் பெண் அணி தங்கப் பதக்கம் வென்றது.
5, 1931 காந்தி - இர்வின் ஒப்பந்தம்.
8, 2012 ஐக்கிய நாடுகள் சபை உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு
எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. இலங்கைப் போரில் தமிழர்களுக்கு
ஏற்பட்ட நஷ்டம், படுகொலை பற்றிய விசாரணை நடத்த வலியுறுத்தல்.
9, 2010 மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
12, 1930 ஆங்கில அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பம் .
மார்ச், 21 உலகின் அட்லாண்டில் ஆண்டுக்கோர் முறை சூரியோதயம் ஏற்படும் நாள் ஆகும்.
27, 2010 ஒரிசாவில் ஒரே நாளில் பிருத்வி-2, தனுஷ் ஏவுகணைகள் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
31, 1889 பிரான்ஸில் ஈஃபிள் டவர் கட்டி முடிக்கப்பட்டது.
பிறந்தவர்கள்
மார்ச் 3 1847 அலெக்சாண்டர் கிரஹாம் பெல். தொலைபேசி கண்டறிந்த அறிஞர்.
3, 1869 பாண்டித்துரை தேவர். மதுரை தமிழ்ச் சங்கம் நிறுவியவர்.
5, 1512 மெர்க்காடோ. பூகோளப் பட அமைப்பை உருவாக்கியவர்.
5, 1926 ஈ.வி.கே. சம்பத். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
9, 1934 யூரிகாகரின். முதன்முதலாக விண்வெளியில் ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்டவர்.
13, 1913 சக்தி கிருஷ்ணசாமி. சினிமா, நாடக வசனகர்த்தா.
14, 1965 அமீர்கான். இந்தி சினிமா நடிகர்.
21, 1921 பொள்ளாச்சி என். மகாலிங்கம். கல்வி, தொழில் அதிபர்.
23, 1921 டாக்டர் லட்சுமி. எழுத்தாளர். தமிழக அரசு பரிசு பெற்றவர்.
23, 1893 (ஜி.டி.நாயுடு) ஜி. தாமோதரசாமி நாயுடு. விஞ்ஞானி.
30, 1881 சர். அண்ணாமலை செட்டியார். கல்வியாளர்.
31, 1938 ஷீலா தீட்சித். தில்லியில் முதல்வராக உள்ளார்.
நினைவு தினங்கள்
9, 1911 ஜான் பென்னி குவிக். [முல்லைப் பெரியாறு அணை கட்டியவர் .]
6, 1967 ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்.
23, 1931 மாவீரன் பகத்சிங்.
27, 1968 யூரிகாகரின். ரஷ்ய விண்வெளி வீரர்.
31, 1727 ஐசக் நியூட்டன். விஞ்ஞானி.
-----------------------------------------------------------------------------------------------------------------
தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
=====================
-----------------------------------------------------------------------------------------------------------------
தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
=====================
இந்தியாவின் அறிவியல்துறையில் சாதனை செய்தவர்கள்.
*ஆர்யபட்டர் வானவியல் மற்றும் கணிதம்
* விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் நிறுவியர்
* ராமானுஜம் கணிதம்
* எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை
* எஸ்.என்.போஸ் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.
* சிவ அய்யாதுரை இமெயில் கண்டுபிடிப்பு
* சதீஸ் தவான் விண்வெளி திட்டங்கள்
* அப்துல்கலாம் ஏவுகணை மற்றும் அணு விஞ்ஞானி *பாபா அணுசக்தி ஆய்வு.
இவர்களின் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் அறிவியல் துறையை உலக அளவில் உயர்த்தியது.
அறிவியல் தினம்.
தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' கண்டுபிடித்த நாள்தான் இந்தியாவில் " தேசிய அறிவியல் தின"மாக கொண்டாடப்படுகிறது.
* விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் நிறுவியர்
* ராமானுஜம் கணிதம்
* எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை
* எஸ்.என்.போஸ் ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.
* சிவ அய்யாதுரை இமெயில் கண்டுபிடிப்பு
* சதீஸ் தவான் விண்வெளி திட்டங்கள்
* அப்துல்கலாம் ஏவுகணை மற்றும் அணு விஞ்ஞானி *பாபா அணுசக்தி ஆய்வு.
இவர்களின் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் அறிவியல் துறையை உலக அளவில் உயர்த்தியது.
அறிவியல் தினம்.
தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' கண்டுபிடித்த நாள்தான் இந்தியாவில் " தேசிய அறிவியல் தின"மாக கொண்டாடப்படுகிறது.
இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே
திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார்.
சி.வி.ராமன் |
இவரது பெற்றோர் சந்திரசேகர் -
பார்வதி அம்மாள். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல்
பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக
சேர்ந்தார்.
"இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்'
நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் அப்போது ஈடுபட்டார். ஒருமுறை இவர்
பிரிட்டனில் இருந்து இந்தியா கப்பலில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல
நிறமாக இருக்கிறது' என யோசித்தார்.அ தை அப்படியே விடாமல் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.அதன் பயனாக 1928, பிப்., 28ல்,
"ராமன் விளைவை' கண்டுபிடித்தார்.
"நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற
ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது.
அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது' என
கண்டுபிடித்தார்.
இந்த ராமன் விளைவு கண்டு பிடிப்புக் காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு
இவருக்கு வழங்கப்பட்டது.
படம்:ஸ்டாலின் சீனிவாசன் |