"அம்மா"னா.... "சும்மா" இல்லைங்க...,

நாம் சொல்லவருவது தமிழ் நாட்டு அம்மாவை இல்லை.இவர் மேற்கு வங்க அம்மா ..
அரசு சார்பில் பனாகர் பகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற பூமி விழாவில், மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது, அவரைப் புகைப்படம் எடுக்க பத்திரிகை போட்டோகிராபர்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தனர்.
அதைக் கண்டு வழக்கம் போல் கோபமடைந்த மம்தா பானர்ஜி
""நாகரிகமற்றவர்களே ஏன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கு சமையல் நடப்பது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? என் முன்னே வந்து நில்லுங்கள்; ஓங்கி அறைந்து விடுவேன்'' 
என்று அன்பாக மிரட்டினார்.
இச் சம்பவம்  நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் , புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று விட்டுத் திரும்பும் போது, கார் வருவதற்குத் தாமதமானதால், தனது பாதுகாவலரை,
"உங்களை எல்லாம் சாட்டையால் அடித்தால்தான் திருந்துவீர்களா?' என்று கேள்வி எழுப்பியது செய்தியாக வெளிவந்தது.
இவர் எல்லாம் பொறுப்பான முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு எப்படி காலம் தள்ளப் போகிறார்.?
பல்வெறு பிரச்னைகள் -பல குணம்  படைத்தவர்களை தினம் சந்தித்து செயலாற்ற வேண்டுமே?
முந்தைய  கம்யூனிஸ்ட் அரசுக்கு இவர் கொடுத்த குடைச்சல் இப்போது அறவே இல்லாத நிலையிலேயே இப்படி இருக்கிறார்.கம்யூனிஸ்டுகள் முன்பு இவர் செய்ததை கையில் எடுத்தால் ?மேற்கு வங்க நிலையை  நினைத்து பார் க்கவே முடியவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 காரணம் புரியலை?
-“இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று தீர்மானம் போட்ட அதே முதல்வர் ஜெயலலிதாதான் தற்போது இலங்கைத் தமிழர்கள் மீது தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்” கருணாநிதி.

சீமான்களும் ,நெடுமாறன்களும் முன்பு கருணாநிதி இலங்கைத்தமிழர்களுக்கு செய்த துரோகங்களுக்காக"?" இன்றைக்கு வரைக்கும் மேடைதோறும் தாக்கி வருகிறார்கள்.'
ஆனால் பிரபாகரனை கைதுசெய்து கொண்டுவரசச்சொன்ன ஜெயலலிதாவை ஈழத்தாய் என்கும் அளவு பாராட்டிக்கொண்டே இருக்கிறார்களே?
துரோகத்தில் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளதா?
_______________________________________________________________________________________________
 
உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி கொண்டிருந்த நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒரே  நடைமேடையில் பல்லாயிரக்கணக்கானோர் ஏறியதால் அம்மேடை பாரம் தாளாமல்  இடிந்து விழுந்தது. 
இதனையடுத்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 25 பேர் பலியாயினர். பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்ப்பட்டுள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எண்ணப்படுகிறது.
இது போன்ற விழாக்களில் வரிசையாக அனுப்ப வேண்டாமா?
இது போன்று பல விபத்துக்கள் நடந்தும் நம் அரசு முழித்துக்கொண்டதாக தெரியவில்லையே?
---------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?