ரெயில்வே வரவு-செலவு

2013-14ஆம் ஆண்டிற்கான இந்திய ரெயில்வே  வரவு-செலவு திட்டத்தில்  தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள்,புதிய ரெயில்கள் பற்றி
பார்ப்போம்.புதிய திட்டம் என்றவுடன் புதிய ரெயில் வழித்தடம் என்று கொள்ளகூடாது.
இதில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட தடங்கள் மீண்டும் கொஞ்சம் நாட்களுக்கு வாரம் ஒருமுறை வருகிறது.
காரைக்கால் - பேரளம் மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையே புதிய திட்டங்கள் துவங்கப்படுகின்றன.சென்ற வரவு-செலவு திட்டத்தில் கூறப்பட்டவைகள எதுவுமே இதுவரை துவக்கப் படவில்லை.இது என்றைக்கோ?

சென்னை சென்ட்ரல் - பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6வது லைன்கள் அமைக்கப் படுகின்றன.

திருப்பதி - காட்பாடி இடையேயும் இரட் டைப் பாதை அமைக்கப்படுகின்றது.

ஆலூர் - நாகர்கோவில் - செட்டிகுளம், கனி யூர் - கோட்டிகுளம், திருநெல்வேலி - சங்கரன் கோவில் (வழி: பேட்டை, புதூர், சேந்தமரம், வீரசிங்கமணி) இடையே புதிதாக சர்வே மேற் கொள்ளப்படும். தஞ்சாவூர் - அரியலூர் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த சர்வே மேம்படுத்தப்படும்.

புதிய ரயில்கள்- எக்ஸ்பிரஸ் ரயில்கள்
1. சென்னை - காரைக்குடி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு நாள்)

2. சென்னை - பழனி எக்ஸ்பிரஸ் (வழி: ஜோ லார்பேட்டை, சேலம், கரூர், நாமக்கல்)

(நாள்தோறும்)

3. சென்னை - தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் (வழி: விழுப்புரம், மயிலாடுதுறை) (நாள்தோறும்)

4. சென்னை - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர்) (நாள்தோறும்)

5. சென்னை - நகல்சால் (வழி: ரேணிகுண்டா) வாரம் ஒரு நாள்

6. கோயம்புத்தூர் - மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (வழி: திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம்) (நாள்தோறும்)

7. கோயம்புத்தூர் - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு நாள்)

8. ஹவுரா - சென்னை - ஏசி எக்ஸ்பிரஸ் (வாரம் இரு நாட்கள்)

9. நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வழி: மதுரை, திருச்சி) (நாள்தோறும்)

10. புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வழி: விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி) (வாரம் ஒரு நாள்)

11. புதுச்சேரி - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு நாள்)

சாதா ரயில்கள்

1. பழனி - திருச்செந்தூர்

எம்இஎம்யு சர்வீசஸ்

சென்னை - திருப்பதி

  நீட்டிக்கப்பட்ட ரயில்கள்

1. சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை - மதுரை போர்ஷன் தூத்துக்குடி வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது.

2. சென்னை - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் (12605/12606) காரைக்குடி வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது.

3. பெங்களூரு - நாகூர் பாசஞ்சர் காரைக்கால் வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது.

4. மதுரை - கொல்லம் பாசஞ்சர் புனலூர் வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது.

5. மதுரை - திண்டுக்கல் பாசஞ்சர் பழனி வரைக் கும் நீட்டிக்கப்படுகிறது.

6. கொல்லம் - நாகர்கோவில் எம்இஎம்யு கன்னி யாகுமரி வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது.

7. காரைக்குடி - மானாமதுரை டிஎம்இயு அகல ரயில்பாதை பணிகள் முடிந்தபின் விருதுநகர் வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது.

சேவை அதிகப்படுத்தப்பட்ட ரயில்கள்

கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் 3லிருந்து 4 நாட்களாக அதிகப்படுத்தப்படுகிறது.

மதுரை - டேராடூன்-சண்டிகர் எக்ஸ்பிரஸ் 1லிருந்து 2 நாட்களுக்கு அதிகப்படுத்தப்படு கிறது.

கன்னியாகுமரி - திருநெல்வேலி பாசஞ்சர் 6லிருந்து 7 நாட்களுக்கு அதிகப்படுத்தப்படு கிறது.

நாகர்கோவில் - கன்னியாகுமரி பாசஞ்சர் 6லிருந்து 7 நாட்களுக்கு அதிகப்படுத்தப்படு கிறது.
திருநெல்வேலி - நாகர்கோவில் பாசஞ்சர் 6லிருந்து 7 நாட்களுக்கு அதிகப்படுத்தப்படு கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------
புகைப்படங்களை அழகு படுத்த...
படம்:ஸ்டாலின் சீனிவாசன்.
முன்பு புகைப்படம் எடுக்க கொஞ்சம் கஷ்டப்படவேண்டும். அதை விட அப்படத்தை அழகா எடுக்க கொஞ்சம் திறமை வெண்டும்-தொழில் நுணுக்கமும் தேவைப்படும்.காமிரா அதைவிட முக்கியம்.
ஆனால் இன்று சிறுவர்கள் கூட தங்களிடம் உள்ள அலைபேசி காமிரா மூலம் படங்களை சுட்டுத்தள்ளுகிறார்கள்.
அதை நுணுக்கப்படுத்தவும்-அழகு படுத்தவும் இணையத்தில் பல தளங்களும் இருக்கின்றன.அதில்  ஒன்று பற்றி.
இது போன்று எடுக்கப்பட்ட படங்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல  புரோகிராம் கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக் கின்றன. அவற்றில் ஒன்று  போட்டோ மிக்ஸ் (FotoMix) .
இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.diphso.no/FotoMix.html. 2.8 எம்.பி. அளவில் கிடைக்கும்.
விண்டோஸ் இயக்கத்தில் இந்த புரோகிராம் இயங்குகிறது.
 இதனை நாம்ஏ ற்றம் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் செய்து  முடித் து விடலாம்.
அதன்பின் அது  இயக்கத் தயாராகி விடும் . இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம்- நீக்கலாம். 
பல போட்டோக்களை வெட்டி ஒட்டி கொலாஜ் எனப்படும் ஓவிய போட்டோக்களை அமைக்கலாம். வால் பேப்பர்கள், சிடி, டிவிடி கவர்களை உருவாக் கலாம். இறுதியில் கிடைக்கும் போட்டோ இவ்வாறு மாற்றப்பட்டது என அறிந்து கொள்ளாத அளவிற்கு இயற்கையாக எடுக்கப் பட்ட போட்டோ போல காட்சி அளிக்கும். 
அனைத்தும் முடிக்கப்பட்ட போட்டோக்களை பிரிண்ட் எடுக்கலாம். 
மின் அஞ்சல் மூலம் வேண்டியவர்களுக்கு  அனுப்பலாம்.
 பனியன்  டீ கப்,ஆகியவற்றில் பிரிண்ட் செய்திடக் கொடுக்கலாம். 
படம்:ஸ்டாலின் சீனிவாசன் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?