விலைவாசிகள் உயர....

 விலைவாசிகள் உயர மத்திய அரசு அடுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
2013 - 14ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில் சரக்கு கட்டணம் உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலை உயர்வால், ரயில்வே நிர்வாகத்திற்கு, கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. டீசல் விலையை உயர்த்தியதும் யார் மத்திய அரசுதானே?
இதை ஈடு செய்யும் வகையில், சரக்கு கட்டணம் உயர்த்தப்படலாம் என, தெரிகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களான, உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உப்பு, சர்க்கரை, வெல்லம், வெங்காயம், உருளைக்கிழங்கு, வனஸ்பதி, கால்நடை தீவனங்கள் போன்ற சரக்குகளுக்கான கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை.

அதேசமயம், சிமென்ட், நிலக்கரி, இரும்புத் தாது உள்ளிட்ட இதர பொருட் களுக்கான சரக்கு கட்டணம் உயரும் என, தெரிகிறது.கடந்த ஆண்டு மார்ச் மாதம், சரக்கு கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், வரும் ரயில்வே பட்ஜெட்டில், சரக்குகளுக்கான கட்டண உயர்வு, சாலைப் போக்குவரத்து கட்ட ணத்தை எதிர் கொள்ளும் வகையில் இருக்கும் என, சரக்கு போக்குவரத்து துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

நடப்பு 2012 - 13ம் நிதியாண்டில், இந்திய ரயில்வே, சரக்கு கட்டணங்கள் வாயிலாக, 89,339 கோடி ரூபாய் பெற, இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், சரக்கு கட்டணங்கள் வாயிலான வருவாய், 70,067 கோடி ரூபாய் அளவிற்கே உள்ளது. எனவே, இந்த இலக்கு எட்டப்படுமா என்பது சந்தேகமே.
இதே போன்று, நடப்பு நிதிஆண்டில், 102.50 கோடி டன் சரக்குகையாள, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின், முதல் 10 மாத காலத்தில், 92.79 கோடி டன் என்ற அளவிற்கே சரக்கு கையாளப் பட்டுள்ளது.நடப்பு முழு நிதியாண்டில், 101 கோடி டன் அளவிற்கே, சரக்குகள் கையாளப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.நடப்பு நிதியாண்டின் ஜனவரி வரையிலுமான காலத்தில், பயணிகள் வாயிலான வருவாய், 25,924 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு முழு நிதிஆண்டில், பயணிகள் வாயிலாக, 36 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட, ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துஇருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார சுணக்க நிலையால், பயணிகள் வாயிலான வருவாய் மற்றும் சரக்கு கட்டண வருவாயில், மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில்வேக்கு சொந்தமான, உபரி நிலப்பகுதிகளில், வணிக வளாகங்கள் அமைத்தல், விளம்பரங்களுக்கு அனுமதி அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், கூடுதல் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார சுணக்கம்,பொருளாதார வளர்ச்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுவதும் மத்திய அரசுதான்.
தானே பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்திக்கொண்டு தாக்கு பிடிக்க முடிய வில்லை என்று விலைகள்,கடடணத்தை உயர்த்துவதும் அதே மத்திய அரசுதான்.இது உண்மையிலேயே நடு"வண் "அரசுதான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வருத்தம் ,

உலகளவில் தமிழர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவரும்  தமிழ் ஆர்வலருமான இரா. ஜனார்த்தனம் 20.2.13 அன்று தனது 75 வது வயதில் சென்னையில்  காலமானர்.

அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

தமிழுக்காக பல்வேறு பணியாற்றி வந்தார்.
1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கு பெற்றவர். அண்ணாதுரையின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி இவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது அதை தடுக்க வந்த காவல்துறைக்கும்  தமிழ் மக்களுக்கும் மோதல் ஏற்பட அது கலவரமாகி  நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 தமிழர்கள்  கொல்லப்பட்டனர்.
 இலங்கை தமிழர் போராட்ட வாலாற்றில் அச்சம்பவம் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலரை தமிழகத்துக்கு முதல் முறையாக அழைத்து வந்தவர் ஜனார்த்தனம் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
------------------------------------------------------------------------------------------------------------------------


























இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?