சனி, 11 மே, 2013

"சொத்து விவரம் " ஆய்வு

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் சொத்து விவரம் பற்றி  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிடைத்த புள்ளிவிவரங்கள்  அரசியல் இப்போது பணம் படைத்தவர் கையில்தான் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 218 பவர்களில் 203 பேர்களின் சொத்து மதிப்பு கோடீஸ்வரர்கள் என்று தெரிந்துள்ளது.மற்றவர்கள் லட்சாதிபதிகள்.
 2008ல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களுடன் ஒப்பிடும் போது, 2013ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க் களின் சராசரி சொத்து மதிப்பு, 135 சதவீதம் உயர்ந்துள்ளது. 2008ல், எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து மதிப்பு, 10.02 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இப்போது, 23.54 கோடி ரூபாயாக உள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 218 எம்.எல்.ஏ.,க்களில், 203 பேர், அதாவது, 93 சதவீத, எம்.எல்.ஏ.,க்கள், கோடீஸ்வரர்கள்.
2008ல், 63 சதவீதம் பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்தனர்.நடந்து முடிந்த தேர்தலில், 92 பேர் மீண்டும், எம்.எல்.ஏ.,க்களாகி உள்ளனர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு, 72 சதவீதம் உயர்ந்து, 30.15 கோடி ரூபாயாக உள்ளது; இது, 2008ல், 17.53 கோடி ரூபாயாக இருந்தது.
 2008ல் இருந்து, 2013 வரை, எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்களில், பல மடங்கு சொத்து மதிப்பு உயர்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவகுமாரின் சொத்து, 75.5 கோடி ரூபாயிலிருந்து, 251 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர், பிரியகிருஷ்ணனின் சொத்து மதிப்பு, 767 கோடி ரூபாயிலிருந்து, 910 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கர்நாடக எம்.எல்.ஏ.,க்களில், இவர் தான், மிகப் பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தராமையா 
கடத்தல், கொள்ளைகுற்றப் பின்னணி உடைய, எம்.எல்.ஏ.,க்களில்ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 218 பேரில 74 பேரகள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.
 கொலை, கடத்தல், கொள்ளை, பெண்கள் மீது தாக்குதல் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.காவல்துறைகளில் வழக்குகளும் உள்ளது.
இவர்களில்  ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் கொலை வழக்கிலும், 11 பேர்கள்  ஊழல் வழக்குகளிலும் சிக்கியிருப்பவர்கள்.
இவர்கள் சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு குறிப்பாக அடிமட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும்  என்பது சந்தேகம்தானே?
இவர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளை காணாமல் போக்கும் நடவடிக்கைகளிலும் ,கோடிகளை பன்மடங்கு பெருக்கவும் தானே செய்ய முனைவார்கள் ?
வாக்களித்தவர்கள் அடுத்த தேர்தலிலாவது கொஞ்சம் தங்கள் மேல் அக்கறை உள்ளவர்களை தேர்ந்தெடுக்க முயற்சிப்பார்களா.கட்சி பார்த்து வாக்களிப்பதை கை விட்டு வேட்பாளரை பார்த்து வாக்களிக்க வே ண்டும்.
சிறுபான்மை அரசு ,யாருக்கும் பெரும்பான்மை இல்லா கூட்டணி அரசு அமைந்தால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒபமா பிணமாகத் தேவை?
----------------------------------------
-
ஆங்கில இணைய தள பத்திரிக்கை ஒன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபமா பிணமாகத் தேவை என்ற தலைப்பிட்டு அறிவிப்பு ஒரு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் ஒபமாவின் படம் அச்சிடப்பட்டு அதில் 'மக்களை கொன்ற கொலைகாரன் பராக் ஒபாமா. பிணமாக மட்டும் தேவை.' என்ற வாசகங்கள் உள்ளன.
இந்த 80 பக்க பத்திரிக்கையில், உலகில் உள்ள இஸ்லாமியர்கள், அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களை தடுக்க முன்வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பத்திரிக்கையின் பெயர் 'ஆசான் - கால் டு ஜிகாத்' என்று உள்ளது. இதில் 'தலிபான் இன் குஹ்ரசன்' என்ற வார்த்தையும் அனைத்து பக்கங்களிலும் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள குஹ்ரசன் என்ற வார்த்தை ஆப்கனிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பகுதிகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுபவை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இந்த பத்திரிக்கையை நடத்துகிறார்கள் என்று கருதப்படுகிறது.