நறும [சா] ணம்
பசுஞ்சாணம் ஒரு கிருமிநாசினி .
இதை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
அதனால்தான் தினந்தோறும் வீட்டு வாசல் களைப் பசுஞ்சாணம் கரைசல் கொண்டு சுத்தப்படுத்திவந்தனர்.
வீட்டின் உட்புறத்திலும் பசுஞ்சாணக் கரைசலைக் கொண்டு மெழுகி வந்தனர்.அதை இப்போது நாம் பத்தாம் பசலித்தனம் என்று ஓரங்கட்டி விட்டோம்.
ஆனால் இப்போதைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாக பசுஞ்சாணம் அணுக்கதிர்வீச்சைக்கூட எதிர்க்கும் தன்மையுடையது என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள இரு பள்ளி மாணவிகளான' த்வி நைலுல் இஸ்ஸா' மற்றும் 'ரின்ட்யா அபிரான்டிமிகி' என்பவர்கள் தங்களது பள்ளியில் நடக்கும் அறிவியல் ஒலிம்பியட் நிகழ்ச்சிக்காகப் பசுஞ்சாணத்திலிருந்து, காற்றைச் சுத்திகரிக்கும் ஒரு நறுமணம் வீசும் வாசனைப்பொருளைத் தயார் செய்திருக்கிறார்கள்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு செயற்கை வாசனைப் பொருள்களால் விளையும் பக்கவிளைவுகள் இல்லாதது.
இந்தக் கண்டுபிடிப்பிற்காக இவர்கள் பள்ளி அறிவியல் விழாவில் முதல் பரிசு பெற்றுள்ளனர்.
கிழக்கு ஜாவாவிலிருந்து ஒரு பசுமாட்டுப் பண்ணையிலிருந்து இவர்கள் பசுஞ்சாணத்தைப் பெற்று, அதை நீரில் கரைத்து மூன்று நாட்கள் அக்கலவையைப் புளிக்கவைத்தார்கள். பின்னர் இந்தக் கரைசலை வடிகட்டி அதனுடன் இளநீரையும் கலந்தார்கள்.
இந்தக் கலவையை அடுப்பில் வைத்து ஆவியாக்கி, அந்த ஆவியைக் குளிர வைத்ததால் கிடைத்த திரவம் வாசனை பொருந்திய திரவமாக மணம் பரப்பியுள்ளது.அதன் மணம் நல்ல மனங் கவர் மூலிகை நறுமணமாக இருந்தது.
இதைக் கொண்டு நாம் நமது இல்லங்களில் துர்நாற்றமின்றி இருக்க ஓடோனில் போன்ற அறை நறு மணமாக்கிகளை போல் உபயோகப்படுத்துவது போல பயன்படுத்தலாம்.
இது உடலுக்கு ஊறுவிளைவிக்காதது .இந்த மணத்தை நுகர்வதால் ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகளும் இல்லாதது அதை விட முக்கியம் மலிவான விலையில் இருக்கும்.
மிக எளிதான சாண வாசனைப்பொருளை தயாரிக்கலாம்.ஆனால் சாணங் கிடைப்பதுதான் இப்போது அரிது.