மர்ம யோகி

கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட தால்  திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டமாக நடத்திப் பேசினார் நாம் தமிழர்கட்சி  சீமான்.
பத்து மணிக்குள் பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் வலியுறுத்தியிருந்தனர். அதற்கு முன்னமே 9 மணி துவங்கி, 9.30 வரை இரு முறை கூட்டத்தை முடிக்கச் சொல்லி போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் 9.40 வரை நிர்வாகிகளே பேசிக்கொண்டிருந்தனர்.
9.45க்குப் பின்னர் சீமான் பேசினார். அப்போது மணி 10ஐக் கடந்துவிட்டது. எனவே போலீஸார் 10 மணிக்கும் 10.10க்கும் 10.15க்கும் என மூன்று முறை மண்டபத்துக்குள் நுழையமுயன்றனர்.
10.20 க்கு மேல்  போலீஸார் ஒட்டுமொத்தமாக மண்டபத்துக்குள் நுழைந்து மேடைப் பக்கம் சென்றனர்.
அப்போதுவரை வீரமுழக்கம் செய்து கொண்டிருந்த  சீமான் போலீஸார் கண்ணில் பட்டவுடனேயே  வீர முழக்கத்தை நடுவில்  நிறுத்திவிட்டு  பக்கவாட்டுக் கதவு வழியே  வேகமாக காரில் ஏறி மறைந்து விட்டார். தொண்டர்களும் போலீஸாரும் திடீர் என சீமானை காணாமல் தேடினர்.
பின் காவல்துறையினரிடம் சீமானை கைது செய்வீர்களா?என்ற போது அப்படி ஒன்றும் மேலிருந்து வரவில்லை என்றனர்.
மூன்று ஆண்டுகள்,பத்து ஆண்டுகள் முன்பு பேசிய தற்கெல்லாம்  வழக்கு போட்டு உள்ளெ தள்ளி அழகு பார்க்கும் அம்மையார் தனது சிங்கி சீமானை தப்ப விட்டதில் ஆச்சரியமில்லை.
காவல்துறைனர கைது செய்யவரும் வரை வீரத்தமிழனாக இருக்கும் சீமான் அவர்கள் கைது செய்ய வரும்போது மர்மயோகியாக மாறிவிடுவது என்ன காரணம்.அவரின் வீரத்தை காட்ட வேண்டிய இடமே அதுதானே.முந்தைய புழல் சிறை பயம்தான் காரணமா?
இப்போது அம்மா நீங்கள் என்ன பேசினாலும் விட்டு விடும்.ஆனால் அவருக்கு உங்களை புளித்துப்போய் விட்டது என்றால் வைகோ,ராமதாஸ் போன்று இப்போது பேசிய பிரிவினைவாத பேச்சுக்கெல்லாம் புழலில் தனி அறைதான் உங்களுக்கு வழங்கப்படும் சீமான்.அங்கு பாம்புகள்,பல்லி கள் இல்லாததால் நீங்கள் 'பாம்புகள் ,பல்லிகள் நடுவினிலே "பாட்டு எல்லாம் கூட பாடமுடியாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக  சட்டப் பேர வாழ்த்த வை 
                ------------------------------------                     ---------------
  நடந்து முடிந்த சடடமன்ற வரவு-செலவு கூட்டத்தொடர் ஒரு பார்வை.

தமிழகத்தின் 2013-14ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் 41 நாட்கள் நடந்தது. 
204 மணிகள்  10 நிமிடங்கள் இத்தொடர் நடத்துள்ளது. 
வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக கெள்வி கேட்கவோ,வாதங்கள் செய்யவோ முடியாத  110வது விதியின் கீழ்  43 அறிக்கைகளில பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இரண்டாண்டு  ஆட்சியில் இதுவரை  110 விதிகளின் கீழ் 104 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவை மீட்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுக்கக் கோரி, தனி நபர் மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை அரசு ஏற்கும் சட்டம், மாநில சொத்து வரி வாரியம் அமைக்கும் சட்டம் ஆகிய முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ஆறு மாதங்களுக்கு தற்காலிக நீக்கம்  செய்யப்பட்டனர். 
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ஸ்டாலின், புஷ்ப லீலா ஆல்பன், கே.சி.பழனிசாமி ஆகியோரைத் தவிர 19 பேர் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும்தற்காலிக நீக்கம்  செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளுக்கு பேச போதிய காலம் ஒதுக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 
ஆளும் கட்சிக்கு தோழமையாக இருக்கும்,ஜெயலலிதாவை வாழ்த்தியே பேசும் இரு  கம்யூனிஸ்ட்கள் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட தங்கள் தொகுதி,மக்கள் நலன் பற்றி கூட பேச இயலவில்லை என  குற்றச்சாட்டை வைக்கின்றன.
துறை வாரியான மானியக் கோரிக்கை மீது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போதும் கூட  அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிட்டு சம்பந்தமில்லாமல் திமுக ஆட்சியையும்,கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் பேசி மேலும் பேசவிடாமல் ஆக்கிவிடுகின்றனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அளித்தோம். 
 பெயருக்கு சில கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பெரும்பாலான கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆலோசனையில் உள்ளன என கூறியே, அவற்றை விவாதத்துக்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வதில்லை.
கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் சட்டசபை விதி 110ன் கீழ், அறிக்கைகளைப் படிக்கத் துவங்கி விடுவார். முதல்வர் அறிக்கை வாசித்து முடித்ததும், அதற்கு, கட்சி வாரியாக எம்.எல்.ஏ.,க்களும் எந்த துறையில் முதல்வர் அறிக்கை வாசித்தாரோ, அத்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர், முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிப்பர்.

இதற்காக, சபை நேரத்தில் 1:30 மணி நேரம் முதல் 2:00 மணி நேரம் வரை போய்விடும். அதன்பின், துறைகளின் மானியக் கோரிக்கை மீது, விவாதம் துவங்கிவிடும். "ஜீரோ நேரம்' என்பதே   ஜெயலலிதாவின்  சட்டசபையில்  இல்லை.
 இதனால் முக்கியப் பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.ஜெயலலிதாவை பாராட்டி பேசினால் மட்டுமே எவ்வளவு நேரமும் பேச சபாநாயகர் அனுமதிப்பார்.முதல்வரும் அமைச்சர்களும் அப்போது இடை மறித்து பேசுவதும் இல்லை."இவ்வாறு  கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ க்கள்  கூறுகின்றனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின், கடைசி இரு நாட்களை தே.மு.தி.க.,புறக்கணித்தது. "அரசுக்கும், முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும்- நடக்கும் சட்டசபைக்கு வருவதால்  என்ன பயன் ? "அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கேட்கின்றனர்.

தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர்மட்டும்  எதிர்கட்சி  எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத குறையைப் போக்க இருந்து ஆனால்  முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். "எதிர்க்கட்சிகளை சபையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் "
இது  அ.தி.மு.க.,வின் தோழமை கட்சியான புதிய தமிழகம் விடுத்த கோரிக்கை .
" பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்த, 204 மணி நேரம், 10 நிமிடத்தில், முதல்வர் மற்றும் அரசை வாழ்த்த மட்டும் 180 மணிகளுக்கு மேல்  பெரும்பகுதி நேரம் செலவிடப்பட்டதாகவும் இதில் திமுகஆட்சி ,அதன்  தலைவர் கருணாநிதியை கேலி செய்ததும் ,முதல்வர் ஜெயலலிதா பேசியதும் அடங்கும்."என்று கடைசிவரை சட்டமன்றம் சென்ற  எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ""தி.மு.க., அரசால் ஏற்பட்ட சீரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்க, கடந்த இரு ஆண்டுகளாக அரசு செயல்பட்டுள்ளது. அதற்கு, வாழ்த்துகின்றனர். இதை, ஏற்க எதிர்க்கட்சிகளுக்கு மனசு வரவில்லை'' என ஆளும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அப்படி வாழ்த்துவது நாட்டில் மக்களிடமிருந்தல்லவா,அதுவும் மனதின் ஆழத்தில் இருந்து  வர வேண்டும் .தங்களை ,தாங்களே வாழ்த்துவது என்பதற்கு வேறு  பெயர் .ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?