ராஜபக்சேக்கு தண்டனை?
குவாத்தமாலாவின் உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டு மக்களை கொன்று குவிப்பதற்கு தலைமை தாங்கிய ஜெனரல் 'எஃப்ரைன் றியோஸ் மொண்ட் 'க்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1980களின் முற்பகுதிகளில்,அவர து ஆட்சிக்காலத்தின் போது, லிக்ஸ்ஸின் மாயா
பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்த 1800 பேரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் றியோஸ்
மொண்ட் க்கு அந்நாட்டின் நீதிமன்றம் எண்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை வழங்கியுள்ளது.
அவரது தலைமையின் கீழ் இருந்த இராணுவம், பழங்குடியின மக்கள் இடதுசாரி க்களுக்கு உதவியதாக கூறி பழங்குடி இன மக்கள் 1800 பேர்களை கொன்று குவித்தது.மேலும் , பாலியல் வல்லுறவுகள், பட்டினி போடுதல்,அவ்வப்போது வன்முறை என மிகக்கொடுமைபடுத்தியது.
இக்கொடுமைகளுக்காவே இத்தண்டனை தீர்ப்பை வழங்கியதாக
நீதிபதி தீர்ப்பில் கூஉறியுள்ளார்.
தனது சொந்த நாட்டிலேயே இனப்படுகொலையைச் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட உலகில் முதலாவது முன்னாள் ஆட்சியாளர் இவர்.1800 பேர்களை கொன்றதற்கு 80 ஆண்டுகள் என்றால் ஈழப்போரில் அப்பாவி ஈழம்மக்களை
லட்சக்கணக்கில் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் ராஜ பக் சே வுக்கு தண்டனை எத்தனை ஆண்டுகள் வழங்க வேண்டியிருக்கும்?
நன்றி; முக நூலில் தமிழச்சி