ஆன் லைனில் படிப்புகள்.
ஆன்லைன் படிப்புகளுக்கான ஒரு பெரிய தளத்தை அமைக்கும் செயல்பாட்டில் NPTEL ஈடுபட்டுள்ளது.
இதனுடன் கூகுளும் இணைந்து செயல்படவுள்ளது. இதற்காக, கூகுள், ஒரு தனிக்குழுவையே ஏற்படுத்தியுள்ளது.
என்.பி.டி.இ.எல்., எனப்படும், அதிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கற்றலுக்கான தேசிய ப்ரோகிராம், தற்போது, தனது செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. வீடியோ விரிவுரைகளுக்கான ஒரு சேமிப்பு அமைப்பாக தனது பயணத்தை தொடங்கிய என்.பி.டி.இ.எல்., தற்போது, புதிய முயற்சிகளை கைகொண்டுள்ளது.
NPTEL -ன் கோர்ஸ் வீடியோக்கள் தற்போது YouTube -ல் கிடைக்கின்றன மற்றும் அதன் சேனல் 1.5 லட்சம் சந்தாதாரர்களையும், 8.7 கோடி View -களையும் கொண்டுள்ளது. Coursebuilder என்ற நிலைக்கு NPTEL வருவதால், அதிகளவிலான மாணவர்களுக்கு, அவர்களின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில், தனிப்படுத்தப்பட்ட பக்கங்களுடன், முழு படிப்பு அனுபவத்தையும் தர முடியும்.
Coursera மற்றும் edX போன்ற சர்வதேச தளங்கள், ஆன்லைன் வழியான தேர்வின் மூலமாக மட்டுமான கவுரவ சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகையில், NPTEL, மேற்பார்வை செய்யப்படும் தேர்வு முறைகளின் மூலமான சான்றிதழை வழங்குகிறது.
இத்தேர்வுகள், நாடு முழுவதும், வார இறுதி நாட்களில் நடத்தப்படுகின்றன. இந்த சான்றிதழ் தேர்வை, GRE மற்றும் GMAT தேர்வுகளைப் போன்று எந்த நேரத்திலும் எழுதலாம்.
NPTEL -ன் தொழில்துறை பங்குதாரர்களான TCS and Cognizant போன்ற நிறுவனங்கள், பாட உள்ளடக்கத்திற்கு பல அம்சங்களைத் தருவதோடு, மாணவர் குழுக்களுக்கு ஆலோசனைகளையும் வழங்குகின்றன. அந்த ஆலோசகர்கள், மேற்கூறிய நிறுவனங்களின் சீனியர் ப்ரோகிராமர்களாக இருப்பார்கள். மேலும், இறுதி சான்றிதழ் தேர்வுகளுக்காக, தங்களிடமிருக்கும் வசதிகளை, இந்நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் இதற்கு, NPTEL கட்டணம் வழங்குகிறது.
படிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு, தொழில் நிறுவனங்கள், பணி வாய்ப்புகளை அளிக்கின்றன.
படிப்பு இலவசம் என்றாலும், சான்றிதழுக்கான டோக்கன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சர்டிபிகே
ஷன் முன்முயற்சியைத் தவிர, சிறப்பு விரிவுரைகளை வழங்கவும், NPTEL திட்டமிடுகிறது. பல பிரபல கல்வியாளர்களும், தொழில்துறை வல்லுநர்களும், கணிதம் தொடங்கி, ஆயுர்வேதம் வரையிலான பல்வேறு பரந்துபட்ட துறைகள் தொடர்பாக, விரிவுரைகளை தயார் செய்வார்கள்.
நன்றி;தினமலர் '