இந்தியாவில் ஊழலுக்கு மரண தண்டனை.?



இந்தியாவில் ஊழலுக்கு மரணதண்டனை என்றால் 112க்கு போகும் கோடிகள் கணக்கு 100 கோடிகளாகி விடும் அபாயம் உள்ளது.
இந்த 12 கோடிகளில் அரசியல்வாதிகள் -அதிகாரிகள் வட்டங்கள்,மாவட்டங்கள் அமைச்சர்கள் போன்றோர் அடங்கி விடுவார்கள்.
கோடிகளில்வருவது மக்கள் தொகைதான் என்று அறிந்திருப்பீர்கள்.
பின் வருவது இந்தியர்களுக்கு ஏக்கத்தை தரும் சீன நிகழ்வு.

2011–ம் ஆண்டில் வென்ஷு நகரில் அதிவேக ரெயில் விபத்துக்குள்ளானது.
அதில் 40 பேர் பலியாகினர்.
அதை தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதை தொடர்ந்து ரெயில்வே துறையில் உயர் தணிக்கை (ஆடிட்டிங்) நடைபெற்றது. அதில் சுமார் ரூ.300 கோடி அளவில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரெயில் பாதை அமைத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு காண்டிராக்ட் விட்டதில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது.

இந்த ஊழலில் மந்திரி ஆக இருந்த லியூஷிஜுனுக்கு நேரடி தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர் மீது பெய்ஜிங் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவர் கடந்த 2003–ம் ஆண்டு முதல் அங்கு ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்தார். இவரது காலத்தில்தான் அங்கு ரெயில்வே பல மடங்கு விரிவுபடுத்தப்பட்டது. அதிவேக ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தற்போது இந்த மரண தண்டனை 2 ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளது. அவரது அரசியல் உரிமைகள் பறிக்கவும், அவரது சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகத்திற்காக மேலும் 10 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சீனாவில் இதுபோன்று மரண தண்டனை நிறுத்தி வைக்கும் பட்சத்தில் அது பின்னர் ஆயுள் தண்டனையாக மாற வாய்ப்பு ஏற்படும்.
இதுபோன்ற நிலை இவருக்கும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் ஒரு காலத்தில் அதிகாரமிக்க துறையாக இருந்த ரயில்வே துறை, இதுபோன்ற ஊழல் புகார்களுக்காக பொதுமக்களால் பெருமளவில் விமர்சிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் தணிக்கை குழுக்கள் இத்தகைய ஊழல்களை வெளிக்கொண்டு வந்தவுடன் கடந்த மார்ச் மாதம் சீனாவில் ரயில்வே துறை முற்றிலும் கலைக்கப்பட்டது.
இந்தியாவை இந்த நேரம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.இங்கு லட்சம் கோடிகளில் முறைகேடுகளை செய்தாலும் கண்டு கொள்வார் இல்லை.அதில் திமுக வினர்,இடதுசாரிகள் யாராவது மாட்டிக்கொண்டால்தான் பத்திரிகைகளிலும் அதகளப்படும்.2-ஜி  விவகாரத்தில் பலிகடா திமுகதான்.சிதம்பரம்,மன்மோகன் சிங் போன்றோரை விசாரிக்க கூட  நீதித்துறை -அரசு -சிபிஐ  தயாராக இல்லை.மொத்த பலனும் திமுகவுக்குத்தான்.
இங்கேயும் ரெயில்வே அமைச்சர் பன்சால் வைத்து பயங்கர முறைகேடுகள் நடந்து முடிந்து வெளிச்சத்திற்கு வந்தது.சில நாட்கள் மட்டுமே .
இப்போது பத்திரிக்கைகளும் அதை மூடி விட்டன.மக்களை மறக்கடித்து விட்டன. காங்கிரசோ பன்சால் ரொம்ப நல்லவரு என்று சான்று வழங்கி வருகிறது.
ஆனால் 2-ஜியில் ஒன்றுமே விவரம் தெரியாத தயாளு கருணாநிதியை கண்டிப்பாக விசாரித்தே தீர வேண்டும் என்கிறது.சிபிஐ.நீதிமன்றம்.கண்டிப்பாக நேரில் வர வெண்டு என்கிறது.
அதற்கும் தயாளு ஒப்புக்கு சப்பாணியாகத்தான் கலைஞர் தொலைக்காட்சியில் உள்ளார்.அவருக்கு அது பற்றியும் -பணம் வரவு செலவு பற்றியும் தெரியாது என்பதும்,அவரை விசாரிப்பது 'வடிவேலு பாணியில் 'என்ன கையை பிடிச்சு இழுத்தியா? என்றுதான் இருக்கும்.
மேலும் இப்போது அவர் உடல்நிலையில் பாதிப்புடன் இருக்கிறார் என்பதும் ஊரறிந்த ரகசியம்.
அவரை கண்டிப்பாக விசாரிக்கும் பறக்கும் சிபிஐ நீதிமன்றம் அதன் மூலாதாரமான ப.சி,மன்மோகன்,அம்பானி,சோனியா கூட்டத்தை பலர் கூறியும் ,குற்றவாளியாக உள்ள ஆ.ராசா சொல்லியும்
அதை கண்டுகொள்ளாமல் இருப்பது இந்த விசாரனைய சந்தேகத்துடன் ,ஒரு கண்துடைப்பாகத்தான் பார்க்க வெண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.
இதில் சீனா போல் தூக்கை எதிர்பார்ப்பது ரொம்ப அதிகம்தான்.ஒன்றுக்கும் உதவாத லோக்பாலை கொண்டுவரவே  மறுப்பவர்கள் இப்படி எல்லாம் சட்டத்தை தூக்கி விடுவார்களா?


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசுத் துறைகள் :இணையதள முகவரி

அரசுத் துறைகள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு இணையம் மூலம் வழங்கி வருகின்றன. இந்த இணைய சேவைகள் அனைத்தும் இப்போது அந்தந்தத் துறைகளின் வலைத் தளங்களின் மூலம் அளிக்கப்படுகின்றன.
இணையதள சேவை, இணையதள முகவரி, சேவை தொடர்பான இணைப்புகள், சேவையின் நிலை குறித்த தகவல் இடம்பெறும். இதன் மூலம் பொதுமக்கள் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை குறைக்கும் வகையில் அரசு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே இணையதளங்களை வெளியிட்டிருக்கிறது.
இதோ அந்த இணையதளங்களின் முகவரிகள் உங்களுக்காக...
 பட்டா / சிட்டா அடங்கல் சான்றிதழ்கள் பெற
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
* E-டிக்கெட் முன் பதிவு:
ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
* E-Payments (Online):
BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
* கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
* பொது சேவைகள் (Online)
தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
* அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html
* அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
மேற்கண்ட இணையதளங்களை இருந்த இடங்களிலிருந்து பயன்படுத்தி அரசின் திட்டங்கள், அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை குறைத்து பயன் பெறலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்த கயா.......,
புத்த கயாவில் குண்டு வெடிப்பு தெரியும்.பலருக்கு புத்தகயா தெரியாது.இக்குண்டு வெடிப்புக்கு தாயில் நடக்கும் புத்த-இசுலாமிய மதம் பிடித்தவர்களின் மோதல் ஆணி வேர் என்று அறியப்படுகிறது.அன்பை போதித்த புத்தர் வாரிசுகள் இலங்கையிலும்,தாய்லாந்திலும் நடந்து கொள்ளுவது சரியானதல்ல.இசுலாமியர்களை பற்றி சொல்ல வேண்டாம் .
மற்றவர்களுக்கு வாழ்வில் மதம் ஒரு அங்கம் என்றால் அ வர்களுக்கு  மதத்தில்தான் வாழ்வே."புத்தமதம்' இந்தியாவில் இருந்து தோன்றியதாகும்.
புத்தமதத்துக்குரிய நான்கு புண்ணியத் தலங்களில் மூன்று இந்தியாவில் உள்ளன.\ மற்றொன்று நேபாளத்தில் உள்ளது.
கபிலவஸ்து நகருக்கு அருகில் உள்ள லும்பினி அவருடைய பிறந்த இடம். புத்த கயா அவர் ஞானம் பெற்ற இடம். சாரநாத் அவருடைய முதல் பிரசங்கம் நடந்த இடம். குஷிநகர் அவர் இறந்தபின் மகாபரிநிர்வாணம் அடைந்த இடம். இவற்றில் லும்பினி மட்டும் நேபாளத்தில் உள்ளது. இந்த நான்கு இடங்களில் புத்த கயா மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. பாட்னாவில் இருந்து 112 கிலோ மீட்டர் தொலைவில் புத்த கயா உள்ளது.
 இந்துக்களின் புனித தலம் என்று கூறப்படும் கயாவில் இருந்து 13 கி.மீ தொலைவில் புத்த கயா உள்ளது. இரண்டையும் வேறுபடுத்தி கூறுவதற்காக இதை புத்தகயா என்று கூறுவார்கள். கபிலவஸ்து அரசரின் மகனாக வளர்ந்த சித்தார்த்த கௌதமர் மனித வாழ்வின் அவலங்களை தெரிந்து கொண்ட பின் அவற்றுக்கான காரணங்களை அறிய அரண்மனையில் இருந்து வெளியேறினார். அவர் இன்றைய பீகாரில் உள்ள புத்த கயாவில் உள்ள ஒரு அரசமரத்தின் அடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது.
போதி மரத்தை நமது பகுதிகளில் அரசமரம் என்று அழைப்பார்கள்.
ஞானம் பெறுவதற்கு முன் இவர் வீடுகளில் பிச்சையெடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். அவரை அடையாளம் கண்டு கொண்ட மகத பேரரசர் பிம்பிசாரர் தன்னுடைய அரியணையை அவருக்கு தருவதாக கூறியதாகவும், கௌதமர் அதை மறுத்து விட்டு கயா நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
மௌரிய வம்ச பேரரசர் அசோகர் புத்தர் ஞானம் பெற்ற மரத்தைச் சுற்றி ஒரு கோவிலை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார். புத்தர் குஷிநகரில் மகாபரிநிர்வாணம் அடைந்து கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் கழித்து இந்த கோவில் கட்டப்பட்டது. கி.மு.566 முதல் 486 வரையிலானஆண்டுகளை புத்தரின் காலம் என்று வரலாறு கூறுகிறது.
பின்னர் அந்த கோவில் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. தற்போதைய கட்டிடம் குப்தர்கள் காலத்தில் (கி.பி.6ம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. ஐந்து மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த பாஹியன், யுவான் சுவாங் ஆகிய சீன பயணிகள் போதி மரம் பற்றியும் அதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த் வேலி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். 13ம் நூற்றாண்டு வரை வழிபாடு நடத்தப்பட்ட வந்த கோயில் பின்னர் பயன்படுத்தப்படாமல் இருந்துவிட்டது. அக்கால கட்டத்தில் புத்த மதம் தனது செல்வாக்கை இழந்து விட்டது. 19ம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதன் மீது கவனம் செலுத்தினார்கள். 1861ம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் மகாபோதி வளாகத்தில் ஆய்வுகளை நடத்தி மீண்டும் கோயிலுக்கு உயிர் கொடுத்தனர். 55 மீ உயரமுள்ள இந்த கோயில் இந்தியாவில் உள்ள செங்கற்களால் ஆன மிகப்பழமையான புத்த ஆலயமாகும். கோயில் மட்டும் 5.5 ஏக்கரில் அமைந்துள்ளது. போதி மரம் உள்ளிட்ட ஆறு புண்ணியத் தலங்கள், கோயில் ஆகியவை பன்னிரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் உள்ளன. பரந்துபட்ட இந்த இடத்துக்கும், அதில் உள்ள கட்டிடங்கள் அனைத்துக்கும் ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு 2002ம் ஆண்டில் உலக பாரம்பரிய அந்தஸ்து அளித்துள்ளது. இந்த கோயிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் வளாகம் பீகார் அரசுக்கு சொந்தமானது. 1949ம் ஆண்டில் பீகார் அரசு புத்த கயா கோயில் சட்டத்தை நிறைவேற்றியது. நாட்டில் இருக்கும் பிறமதங்களின் சிறப்பு மிக்க இடங்களுக்கு உரிமை கொண்டாடுவதை வழக்கமாக கொண்ட இந்து மத அடிப்படைவாதிகள் இந்த வளாகத்துக்குள்ளும் ஒரு சிவன் கோவிலை கட்டிவிட்டு அதை நிர்வகிக்கும் உரிமையையும் கேட்டு சச்சரவை எழுப்பினர். அதையடுத்து இச்சட்டத்தை பயன்படுத்தி மாநில அரசு 1953ம் ஆண்டில் ஐந்து இந்துக்களையும், நான்கு புத்தமதத்தவரையும் கொண்ட ஒரு குழுவை அமைத்து கோவிலை பரிபாலித்து வருகிறது.
 இதன் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார்.
சிறுபான்மையினர் தேசிய ஆணையம் இக்கோவில் உள்ளிட்ட வளாகத்தின் நிர்வாக உரிமைகளை புத்தமதத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இப்பரிந்துரைகளை நிறைவேற்ற அரசுகள் மறுத்து வருகின்றன.இந்த கோவில் வளாகத்தில் உள்ள போதிமரம் புத்தர் ஞானம் பெற்ற மரத்தின் சந்ததிதான். கி.மு.2ம் நூற்றாண்டில் அரசர் புஷ்யமித்ரா சுங்காவும், கி.பி. 600ம் ஆண்டில் அரசர் சசாங்காவும் மரத்தை வெட்டி விட்டு அதன் கிளையை அங்கு ஊன்றி புதிய மரத்தை உருவாக்கியுள்ளனர். தான் ஞானம் அடைந்த மரத்தின் முன் நின்று கண்கொட்டாமல் புத்தர் ஒரு வாரம் தியானம் செய்துள்ளார்.
 அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. 1881ம் ஆண்டில் அங்கிருந்த மரம் பட்டுவிட்டதால், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர் பட்டமரத்தை அகற்றி விட்டு புதிய மரத்தை நட்டுள்ளார்.
இந்த மரத்தின் கீழ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளனர். வெடிவிபத்தால் மரத்துக்கு சேதமில்லை என்று செய்திகள் கூறுகின்றன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வர,வர,   இப்படியானாலும்  ஒன்றும் சொல்வதிற்கில்லை.
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?