67 ஆண்டுகள் வந்து விட்டோம்.?

suran
பகத் சிங்




நாட்டின் 67வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
28 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
இவைதான் ஒன்றுபட்ட இந்தியா.

சுதந்திர போராட்டத்தில் "வெள்ளையனே வெளியேறு' போராட்டம்முக்கிய பங்கு வகித்தது. இது எப்படி உருவானது?
 இரண்டாம் உலகப்போர், 1939ல் பிரிட்டன், ஜெர்மனி இடையேமூண்டது. 1942ல் பிரிட்டன் அரசு, கிரிப்ஸ் என்பவர் தலைமையில் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. இவர்கள் காங்., தலைவர்களைசந்தித்து, உலகப் போரில்பிரிட்டனுக்கு ஆதரவளித்தால், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.
தேசத்தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாமல், நடுநிலை வகித்தனர்.இந்நிகழ்வு "கிரிப்ஸ் மிஷன்' என அழைக்கப்பட்டது. 1942 ஜூலை 14ல் காங்கிரஸ், "இந்தியாவுக்கு முழு சுதந்திரம் தேவை' என தீர்மானம் நிறைவேற்றியது. இதை ஆங்கிலேயர் ஏற்கவில்லையெனில், "கீழ்படியாமை' போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.
இதற்கு ராஜாஜி உள்ளிட்ட சிலதலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 1942 ஆக.9ல்"வெள்ளையனே வெளியேறு' போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்த 67 ஆண்டுகளில் நம்நாடு, சாதனை, சோதனை,ஏற்றம், இறக்கம் என பல தருணங்களை வரலாற்று பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
ஆனால் இந்த இந்திய விடுதலை லட்சக்கணக்கான மனிதர்களின் ரத்தத்தில் பெறப்பட்ட போதும்.
இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தவர் காந்தி என்று ஏதோ கடையில் தனது காசில் அவர் வாங்கி தந்தது போல் பாடங்கள் படிக்கப்படுகின்றன.
வெள்ளைக்காரன் காந்தியை பார்த்துபயந்துதரவில்லை.அவர் ராட்டையில் நூல் நூற்றத ற்காகவோ -உண்ணா நிலைக்கோ பயம் கொள்ளவில்லை.
பகத் சிங்,வாஞ்சிநாதன்,சுபாஷ் சந்திரபோஸ்,வ.உ.சி.,திலகர் போன்றோர்  வழியில் ஒட்டு மொத்த இந்தியா வும் திரும்பும் அபாயம் அவனுக்கு உரைத்ததால் காந்தியை தனது கையாளாக எடுத்துக்கொண்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப்போ ரை
நகர்த்தி சென்றான்.
suran
ஆயுதப்போராட்டமும்,கம்யு ணிசம் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே காந்தியை கையில் எடுத்து தலைப்பாய் கட்டிவிட்டு சென்றான்.மொத்தத்தில் காந்தி பகத் சிங் தூக்கிற்கும்,சுபாஷ் தலைமறைவுக்கும் முக்கிய காரணம்.இதுதான் இந்திய விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை நிலைகள்.

 * 1947 ஆக., 15ல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாசுதந்திர நாடானாது. பிரதமராக நேரு பொறுப்பேற்றார்.
* 1948: ஐதராபாத் சமஸ்தானம், காஷ்மீர் ஆகியவை இ
ந்தியாவுடன் இணைப்பு; ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பதவிகளில் பெண்கள் பங்கேற்பதற்கு அனுமதி
* 1950 ஜன., 26: இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் இந்தியா குடியரசு நாடானது. முதல் ஜனாதிபதியாக ராஜேந்திரபிரசாத் பதவியேற்றார்.
* 1952 : முதல் லோக்சபா தேர்தல்நடந்தது; முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
* 1953: மொழி அடிப்படையில் முதல் மாநிலமாக ஆந்திரா உருவானது.
* 1954 : பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியில் இருந்து, இந்தியாவுடன் புதுச்சேரி இணைப்பு.
* 1955 : "தீண்டாமை ஒரு குற்றம்' என்ற மசோதா நிறைவேற்றம்; இந்துதிருமணச்சட்டம் நிறைவேற்றம்.
* 1956: இந்தியாவின் முதல் அணுஉலை, மகாராஷ்டிராவின் தாராப்பூரில்துவக்கம்; மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு.
* தசம முறையிலான ரூபாய் (காயின்கள்) அறிமுகம்.
* 1959 : ரூர்கேலா இரும்பு ஆலை துவக்கம்
* 1961 : போர்ச்சுகீசியர்கள் ஆட்சி புரிந்த கோவா, இந்தியாவுடன் இணைப்பு.
* 1963: நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக "இந்தி' தேர்வு; குடும்ப கட்டுபாட்டு பிரிவு தொடக்கம்
* 1966 : பஞ்சாப், அரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம் உருவாக்கம்.
* 1969 : 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
* 1971 : போரில் பாகிஸ்தான் சரணடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடுஉருவானது.
* 1974: பொக்ரானில் முதன்முறையாக அணுகுண்டு சோதனை.
* 1975 : இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் "ஆர்யபட்டா' ஏவப்பட்டது.
* 1977: சுதந்திரத்துக்குப்பின், காங்., அல்லாத கட்சி சார்பில், மொராஜி தேசாய் பிரதமர் ஆனார்.
suran
* 1981 : நாட்டின் முதல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் "ஆப்பிள்', விண்ணில் ஏவப்பட்டது.
* 1982: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, அண்டார்டிகாவில் கால் பதித்தது.
* 1983: உலககோப்பை கிரிக்கெட்போட்டியில், இந்தியா சாம்பியன்.
* 1984: இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா, முதன்முறையாக விண்வெளிக்குபயணம்.
* 1988: ஓட்டுரிமை வயது 21ல் இருந்து, 18 ஆக குறைப்பு.
* 1990: தரையிலிருந்து, விண்வெளிக்கு சென்று தாக்கும் "ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றி.
* 1996: அட்லாண்டிக் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் லியான்டர் பயஸ் வெண்கலம் வென்றார்.
* 1999: பொக்ரானில் மீண்டும் அணுகுண்டு சோதனை. இதன்மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. காஷ்மீரின் கார்கில்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல். இதையடுத்து ஏற்பட்ட போரில் இந்தியா வெற்றி.
* 2000: இந்திய மக்கள்தொகை 100 கோடியை தொட்டது.
* 2000: பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனம் துவக்கம்; உத்தரகண்ட், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாகின.
* 2002: அணுஆயுதங்களை தாங்கிசெல்லும் "அக்னி' ஏவுகணை வெற்றிகர சோதனை.
* 2005 : "தகவல் அறியும் உரிமை' சட்டம் அமல்.
* 2007: நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பொறுப்பேற்பு.
* 2008: இந்தியா முதன்முறையாக "சந்திராயன்-1' என்ற விண்கலத்தைநிலவுக்கு அனுப்பியது. இது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்தது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா, தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா இச்சாதனையை நிகழ்த்தினார்.
suran
சுதந்திரமாக கொடியேற்ற சுதந்திரம் கிடைப்பதெப்பொ ?

* 2011 : உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா 2வது முறைசாம்பியன்; இந்திய மக்கள்தொகை 121 கோடியாக உயர்வு.
* 2012: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 100வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை.
* 2013: ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு அனுமதி.

 சுதந்திரம் அடைந்தபோது நாடு, 565 சமஸ்தானங்களாக சிதறுண்டு கிடந்தன.
இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர்.அனைத்து சமஸ்தானங்களும், இந்தியாவுடன் இணைய வேண்டும் என அரசு அறிவித்தது. அதன்படி பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலியவை உடனடியாக இணைந்தன. மற்றவற்றை இணைக்கும் பொறுப்பு, அப்போதைய உள்துறை அமைச்சர், "இரும்பு மனிதர்' என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.
 அவரின் முயற்சியால், 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948 மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவிதாங்கூர், ஜூனாகத் போன்றவை இணைய மறுத்தன. பின் ராணுவ நடவடிக்கை மூலம் இவை இணைக்கப்பட்டன.
1956ல் மொழிவாரி அடிப்படையில், மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன்பின், பெரிய நிலப்பரப்பை கொண்ட மாநிலங்கள், தனிமாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

 நாட்டில் தற்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
சமீபத்தில் ஆந்திராவை பிரித்து "தெலுங்கானா' தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அமைதியாக இருந்த மகாராஷ்டிரா (விதர்பா), குஜராத் (சவுராஷ்டிரா), உ.பி., (பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், அவாத் பிரதேசம், பச்சிம் பிரதேசம்), மேற்கு வங்கம் (கூர்க்காலேண்ட்), அசாம் (போடோலேண்ட்), மணிப்பூர் (குகிலேண்ட்), மேகாலயா( கரோலேண்ட்) என தனி மாநிலபிரிவினை கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அருணாசலப் பிரதேசம், அரியானா, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேம், பீகார், சட்டீஸ்கர், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்தி, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.
ஆனால் தற்போது ஒரே மொழி பேசும் மாநிலங்களில் கூட, பிரிவினை கோரிக்கை எழுப்பப்படுகிறது.
தற்போது எழுப்பப்படும் தனிமாநில கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு அனுமதித்தால், இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 50யை தொட்டு விடும்.
 இந்தியாவில் பெரிய நிலப்பகுதியை கொண்ட, வளர்ச்சியடைந்த மாநிலங்களும் இருக்கின்றன. சிறிய பரப்பளவு கொண்ட வளர்ச்சி பெறாத மாநிலங்களும் இருக்கின்றன. வளர்ச்சி என்பது அம்மாநிலமக்களின் கல்வியறிவு, கலாசாரம், பொருளாதாரம், அங்கு ஆட்சி செய்யும் அரசு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.
 எனவே, மாநில பிரிவினை இந்தியாவுக்கு எந்தளவுக்கு பயன்தரும் ?
suran

ஐ.என்.எஸ் சிந்து ரக்ஷக்==============================
மும்பையில் நேற்று முன்தினம் இரவு வெடிவிபத்தில் சிக்கிய நீர்மூழ்கியின் விபரம்:
கட்டுமான நிறுவனம்: அட்மிரால்டி ஷிப்யார்டு(ரஷ்யா)
கட்டும்பணி தொடக்கம்: 16.2.1995.
கடலில் இறக்கம்: 26.6.1997.
கடற்படையில் சேர்ப்பு: 24.12.1997.
வகை:
ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி.
எடை: 2325 டன்.
நீளம்: 238 அடி.
அகலம்: 32 அடி.
பயணத்துக்கு தேவையான ஆழம்: 22 அடி.
என்ஜின்: 2ஙீ3650 எச்.பி டீசல்,எலக்ட்ரிக் மோட்டார்.
* 1,5900 எச்.பி மோட்டார்.
* 1,204 எச்.பி. துணை மோட்டார்கள்.
* 1,130 எச்.பி ஸ்பீடு மோட்டார்.
வேகம்:
கடலுக்கு மேல்: மணிக்கு 19 கி.மீ
கடலுக்குள்: மணிக்கு 31 கி.மீ.
செல்லும் தூரம்:
கடல் மேல் பயணம்: மணிக்கு 13 கி.மீ வேகத்தில் 9,700 கி.மீ தூரம்.
மூழ்கிய நிலையில்: மணிக்கு 5.6 கி.மீ வேகத்தில் 640 கி.மீ தூரம்.
திறன்: தண்ணீருக்குள் 45 நாள்.
மூழ்கும் திறன்: 980 அடி ஆழம்.
ஆயுதங்கள்:
* 9எம்36 ஸ்டெரலா,3 ஏவுகணை.
* 3எம்,54 கிளப்,எஸ் ஏவுகணை.
* தண்ணீருக்குள் பாயும் டைப் 53,65 டார்பிடோ குண்டு
* டெஸ்ட் 71/76 டார்பிடோ.
* 24 டிஎம்,1 கடல் கண்ணிவெடி.


 நீர்மூழ்கி கப்பல்
 நீர்மூழ்கி கப்பல் 19ம் நூற்றாண்டில் முழு வடிவம் பெற்றது.
முதல் உலகப் போரில்(1914,18) ஒரு சில நாடுகளிடம் மட்டுமே நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் இருந்தன. தற்போது பல நாட்டு கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் இடம் பெற்றுள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும், நீளத்தில், அகலத்தில், எடையில் வேறுபட்டவை. அமெரிக்க கடற்படையில் 2 விதமான நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. விரைந்து சென்று தாக்குதல் நடத்தும் யு.எஸ்.எஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் வகை நீர்மூழ்கி கப்பல்கள் 363 அடி நீளமும், 33 அடி அகலமும், 6.900 டன் எடையும் உள்ளது.  யு.எஸ்.எஸ் ஓகியோ வகை நீர்மூழ்கி கப்பல்கள் பல வகை ஏவுகணைகளை வீசக்கூடியது. இது 560 அடி நீளமும், 42 அடி அகலமும் 17 ஆயிரம் டன் எடையுள்ளது.
* ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்கள் 70 முதல் 74 மீட்டர் நீளம் உள்ளது. இதன் அகலம் 9.9 மீட்டர். மும்பையில் தற்போது விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ் சிந்து ரக்ஷாக் நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவின் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்தான். இதில் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் என்ஜின்கள் உள்ளன. கடலுக்கு மேலே பயணிக்கும்போது, டீசலில் நீர்மூழ்கி இயங்கும். கடலுக்கு அடியில் பயணிக்கும் போது பேட்டரி மின்சக்தியில் கப்பல் இயங்கும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் அணுஉலையில் ஆரம்பத்தில் நிரப்பப்படும் எரிபொருள், கப்பலின் ஆயுள் 33 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருளை சப்ளை செய்யும். அதனால் அது நீண்ட நாட்கள் கடலுக்குள் இருக்க முடியும்.
* அமெரிக்க தயாரிப்பு நீர்மூழ்கி கப்பல்களில் 35 பேர் வரை தங்கி பயணம் செய்யலாம். ரஷ்ய தயாரிப்பு நீர்மூழ்கி கப்பல்களில் 25 பேர் வரை தங்கி பயணம் செய்யலாம்.
* நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கும் போது, அதன் மேல்பரப்பில் உள்ள தண்ணீர் தொட்டியின் வால்வுகள் திறக்கப்பட்டு கடல் நீர் நிரப்பப்படும். இதன் மூலம் நீர்மூழ்கியின் எடை அதிகரித்து கடலில் மூழ்கும். நீர்மூழ்கியை கடலின் மேல் பரப்புக்கு கொண்டு வர, அதிக அழுத்தம் உள்ள காற்று தண்ணீர் தொட்டிக்குள் செலுத்தப்பட்டு நீர் வெளியேற்றப்படும். அப்போது நீர்மூழ்கியின் எடை குறைந்து மேலே எழும்பும்.
* நீர்மூழ்கி கப்பல் 800 அடி முதல் 900 அடி ஆழம் வரை மூழ்கும். கடலுக்கு மேலே பயணிக்கும் போது மணிக்கு 20 முதல் 24 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலுக்கு அடியில் பயணிக்கும்போது மணிக்கு 50 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் நீர்மூழ்கி செல்லும்.
* நீரில் மூழ்கி பயணிக்கும்போது, வீரர்கள் சுவாசிக்க இயந்திரங்கள் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படும். காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்களும் நீர்மூழ்கியில் உள்ளன.
* டீசல் மற்றும் பேட்டரி சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் 45 நாள் வரையும், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் நீண்ட நாட்களுக்கும் நீரில் மூழ்கியிருக்கும் திறன் படைத்தவை.
* வீரர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நீர்மூழ்கியின் ஸ்டோர் ரூம்கள், ரெப்ரிஜிரேட்டர்களில் சேமித்து வைத்திருக்க முடியும். சேமித்து வைத்து தயார் செய்யக்கூடிய அனைத்து வகை உணவுகளும் நீர்மூழ்கியில் பணியாற்றுபவர்களுக்கு நான்கு வேளை வழங்கப்படுகிறது. பிரட், சப்பாத்தி, கேக், பிட்சா முட்டை, பால், பருப்பு, காய்கறிகள், பழங்கள், சிக்கன், மட்டன், மீன் என அனைத்து வகை உணவுகளும் வழங்கப்படுகிறது.  24 மணிநேரமும் நீர்மூழ்கி செயல்பட வேண்டும் என்பதால், மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். 6 மணி நேரம் ஷிப்ட் முறையில் அவர்கள் பணியாற்றுவார்கள். 12 மணி நேரம் அவர்கள் ஓய்வெடுப்பர்.
* கேப்டன் உட்பட 2 உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே நீர்மூழ்கியில் தனி அறை இருக்கும். மற்றவர்களுக்கு ரயிலில் உள்ள பெர்த் அளவுக்குத்தான் படுக்க இடம் இருக்கும். இதன் காரணமாகவே நீர்மூழ்கி கப்பல்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவதில்லை.
* விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அட்மிரல்டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 1997ம் ஆண்டு இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டது.
suran
* இக்கப்பலில் இதற்கு முன்பும் ஒருமுறை தீவிபத்து ஏற்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் பணியில் இருந்த போது இக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீரர் பலியானார். இந்த விபத்து காரணமாக கப்பலில் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து கப்பலை புதுப்பிக்க ரஷ்யாவை சேர்ந்த ஸ்வெஸ்டோக்கா கப்பல் கட்டும் தளத்துடன் ரூ.450 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த புதுப்பிக்கும் பணிக்கு பிறகு மீண்டும் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் இப்போது பெரும் விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளது.

"தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து தீர விசாரிக்க வேண்டியிருக்கிறது. கப்பலில்  ஓட்டை விழுந்து தண்ணீர்  உள்ளே புகுந்து விட்டது. 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தோம். சதி வேலை காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்."
-என கடற்படை அட்மிரல் டிகே ஜோஷி தெரிவித்துள்ளார் .

67 ஆண்டுகளாகியும் இந்தியா தனது பாதுகாப்பில் இருக்கும் ஓட்டையை இதுவரை அடைக்கவில்லை.

தீவிரவாதிகள் இங்கு வந்து குண்டுகளை வைத்து செல்லும் சுற்றுலாத் தளமாகத்தான் உள்ளது.
பாகிஸ்தான் படையினர் நமது வீரர்கள் தலையை கொய்து கால்பந்து விளையாடும் நிலையிலும்,
சீனா அவ்வப்போது நமது நாட்டில் வந்து நமக்கு செலவு வைக்காமல்.
சாலைகளை போடவும்,கட்டிடங்கள் கட்டி தங்கி செல்லும் வகையில்தான் பாதுகாப்பு உத்திரவாதம் உள்ளது.
அதற்கு காரணம் நமது ராணுவம் அல்ல.
காங்கிரசு ஆட்சியினர்தான் என்பதும் வெட்ககேடான உண்மையாகவும் உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?