தலிவா......,
கமல்ஹாசன் படம் தடைக்கு உண்டானது போல் ஒரு பரபரப்பு விஜய் படம் தலைவா தடை[?]க்கு தமிழ்நாட்டில் உண்டாகவில்லை.
காரணம் என்ன ?இதுதான் சில ரசிகர்கள் மண்டையை குழப்பும் இப்போதைய பிரச்னை.
அதற்கு நடிகர் விஜய் அறிக்கையே பதிலாக அமையும்.
அறி க்கையில் விஜய்
“திருட்டி சி.டி தயாரிப்பது விற்பதும் சட்டப்படிக் குற்றமாகும். அன்பு
ரசிகர்களே 'தலைவா' திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை.
அதற்குள் திருட்டு சி.டியை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு
தெரியப்படுத்துங்கள்.
நமது முதல்வர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள்
தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார்கள். என்.எல்.சி
பிரச்சினை, காவேரி நீர் பிரச்சினை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி
உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல
திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில்
தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து
வருகிறார். அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு
எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர்
அவர்கள் 'தலைவா' பிரச்சினையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகமெங்கும்
'தலைவா' வெளிவர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதுவரை என் ரசிகர்கள் ஒவ்வொருக்கும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் " என்று .
இப்படி ஒரு சிங்கி அறிக்கை வெளியிடும் விஜயை நம்பி அரசியை பகைத்துக்கொள்ள யார் தயாராக இருப்பார்கள்.
கமல்ஹாசன் அரசுக்கும்,தடைக்கும் எதிராக முதுகெ ழும்புடன் பேசினார்-போராடினார்.மதவாதத்தையும் எதிர் கொண்டார்.
நடிகர் சங்க்கத்தலைவர்கள் சரத் குமார்,ராதாரவியைத் தவிர மற்ற நடிகர்கள் எல்லாம் அவர்ருக் கு பின்னால் அணி வகுத்தார்கள்.
இளம் நடிகர் விஷால் குரல் கொடுத்து அம்மா ஆதரவு நடிகர் சங்கத்தை விட்டே விளக்கி விடுவதாக மிரட்டல் வரை எதிர் கொண்டார்.
ஆனால் அப்போது இந்த நடிகர்கள் விஜயும்,அஜித்தும் வாயில் என்னவைத்திருந்தார்கள்.?
சொல்லப்போனால் விஷாலை விட அதிக அளவு ரசிகர்களை கொண்டவர்கள் இருவரும்.
அப்போது எதையாவது செய்திருந்தால் இன்று இவர்கள் நிலைக்கும் பயன் பட்டிருக்கும்.
சன்
டிவி காரர்கள் திரையரங்கை தனது படம் போட விட்டுக்கொடுக்கவில்லை என்ற
தனிப்பட்ட காரணத்துக்காக அப்போதைய முதல்வர் கருணாநிதியை அப்பாவும்-மகனும்
கண்டித்தார்கள்.எதிர்த்தார்கள். இன்றைய முதல்வரை அடிக்கடி
நினைத்தபோதெல்லாம் சந்தித்து பூச்செண்டு கொடுத்தார்கள்.
இன்று கொடைநாடு போய் தெருவில் காத்துக்கிடந்தும் கூட விரட்டப்பட்டு கேவலப்பட்டு வந்துள்ளார்கள்.
அதானால்தான்
ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எல்லாம் விஜய்க்கு பிடித்துள்ளது.ஆனால்
முன்னாள் முதல்வரோ இவருக்கு அதரவாக அறிக்கை விடுகிறார்.
படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசுபவர்கள் எல்லாம் வெளியில் எப்படி சிங்கி அறிக்கை திலகங்களாக இருக்கிறார்கள்.
படத்தின் தலைப்புகளில் மட்டுமே இவர்களுக்கு வீரம் கொப்பளிக்கிறது.
பெரிய மனது கொண்டவர்களை -நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று தெரிபவர்களை மட்டும் எதிர்த்து அறிக்கை விடுவார்கள்.
அவதூறு வழக்கு போட்டு அலைக்கழிப்பவர்களை கண்டால் தொடைகள் இரண்டும் டிஸ்கோ ஆடி விடுகிறது.பாவம்.
“விஸ்வரூபம் “பல முனைகளில் அடி வாங்கியது.
1.திரையரங்கினர்.
2.விநி யோகிகள் .
3.மத அடிப்படைவாதிகள்.
4.கட்சிக்காரர்கள்.
5.இவர்களை எல்லாம் விட பெரிய தலையின் எதிர்ப்பு.
அவைகளை
எல்லாம் கடந்து கமல்ஹாசன் வெளிவந்துள்ளார்.காரணம்.அவரின் போராட்ட
குணம்.மற்ற நடிகர்கள்,திரையுலகினர்,ரசிகர்கள்,பொதுமக்கள்,ஊடகங்கள் ஆதரவு.
அவர் விஜயை போல் சிங்கி அறிக்கை விடவில்லை.அம்மாதான் எல்லாம் பாணி அறிக்கை விடவில்லை.ஜே,யை காண காத்துக்கிடந்து விரட்டப்படவில்லை.
படம்
வெளிவரா மூலக்காரணம் அம்மாதான் என்று தெரிந்து காயை நகற்றினார்.படம்
வந்தது.அதுவரை எதிர்த்த மத எதிர்ப்பு உட்பட எல்லாம் எங்கோ மறைந்து
விட்டது.படம் தடை மூலம் யார் என்பது வெட்ட வெளிச்சமாகியது.
இன்று விஜய க்கும் அதுதான.படத்தை தடுக்கிறது
.அவரும் அதற்காத்தான் ஒரு சிங்கியை தட்டியுள்ளார்.ஆனால் அது வவரின் முதுகெழும்பை சந்தேகப்பட வைத்து விட்டது.
அவரின் வீரமும்-வசனமும் காமிரா முன்தான் என்பதை காட்டியும் விட்டது.பாவம் அவர் என்ன செய்வார் .
விஜயகாந்த் படும் அவதிகள் தனக்கும் வந்து விடக்கூடாது என்று அவருக்கு மட்டும் எண்ணமிருக்காதா ?
இப்படி சிங்கி தலிவாக்களை நம்பி வாக்கை விட்டு விட்டு பின்னாள் அலைய மற்றவர்கள் மட்டும் ஏன்ன மறை கழண்டவர்களா ?
அம்மா
மனம் இறங்கி விட்டால் சரத்குமார்,ராதாரவி அறிக்கைகள்
வெளிவரும்.அப்போதுதான் படமும் வெளிவரும்.அதுவரை ட்ரைலர் அல்லது திருட்டு விசிடி மட்டும் பார்த்து விசிலடித்துக்கொள்ள வேண்டியதுதான்.