வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பிரிட்டிஷ் வீழ்ச்சியின் முகவுரை...


suran

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று கூறப்படும் “சிப்பாய்கள் கலகம் “பற்றி சமுக புரட்சியாளர் காரல் மார்க்ஸ் எழுதிய கட்டுரை.

1857 ஜூன் 30ம் தேதி லண்டனிலிருந்து காரல் மார்க்சால் எழுதப்பட்டு, 1857 ஜூலை 15ம் தேதி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் ஏட்டில் தலைப்புச்செய்தியாக வெளியிட்ட செய்தி:
பிரிட்டிஷ் வீழ்ச்சியின் முகவுரை...
                                                                                                                                    - கார்ல் மார்க்ஸ்
ரோமானிய சீசர் பின்பற்றிய பிரித்தாளும் சூழ்ச்சியே மகாபிரிட்டனின் மாபெரும் ஆட்சி யாக கடந்த 150 ஆண்டு காலமாக நடந்து வரு கிறது;
 தனது இந்தியப் பேரரசை முழுவதுமாக காலடியின் கீழ் கொண்டுவர அந்த ஆட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது. பல்வேறு இனங்கள், பழங்குடிகள், சாதிகள், பெருமிதங் கள் மற்றும் சமூகங்களின் மாண்புகள் இவை யனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புவியியல் ஒருங்கிணைப்புதான் நாம் இந்தியா என்று அழைக்கும் நாடு. இத்தனை பெரிய நாடுதான் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயிரோட்டமிக்க காலனியாகத் தொடர்கிறது. எனினும், இந்த ராஜ் ஜியத்தின் நிலைமைகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
சிந்து மற்றும் பஞ்சாப் ஆகிய பிரதேசங் களை கைப்பற்றியதன் மூலமாக ஆங்கிலோ-இந்தியப் பேரரசு தனது வரம்புகள் அனைத்தை யும் மீறியிருப்பது மட்டுமல்ல, சுயேட்சையான இந்திய மாகாணங்களை நசுக்கவும் துவங்கி விட்டது.
போர்க்குணம் கொண்ட அனைத்து பழங்குடி மக்களையும் தனது அடிமைகளாக்க பிரிட்டிஷ் ராஜ்ஜியம் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
கடுமையான உள்நாட்டு மோதல்களில் தலையிட்டு அதைத் தனக்கு சாதகமாக முடித்துக்கொள்கிறது.
suran
கடைசியாக எஞ்சியிருந்த அவாத் பிரதேசத்தையும் கைப் பற்றிவிட்டது.
 (1856ல் நடைமுறையில் இருந்த உடன்பாடுகளை யெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு அவாத் பிரதேச மன்னரை படைபலத்தால் விரட்டிவிட்டு, அதை தனது காலனியாக மாற்றிக்கொண்டது கிழக்கிந்திய கம்பெனி.)
இந்தச்சூழலில் கிழக்கிந்திய கம்பெனியின் நிலைமையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள் ளது. கிழக்கிந்திய கம்பெனி இனிமேலும் இந் தியாவின் ஒரு பகுதியின் உதவியோடு மற் றொரு பகுதியை தாக்க வேண்டியது இல்லை; ஏனென்றால், தானே தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டுவிட்டது; ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது காலடியின் கீழ் கொண்டு வந்துவிட்டது. எனவே இனிமேலும் போர்புரிய வேண்டியதில்லை; ஏனென்றால் தானே ஒரு மாபெரும் பேரரசனாகிவிட்டது.
 வெல்லப்பட்ட ராணுவங்கள், இனியும் அதி காரம் கொண்டவையாக இருக்க முடியாது; பிரிட்டிஷ் நலன்களை பாதுகாக்கும் வேலை யைச் செய்தால் போதும் என்ற நிலை உருவாகி யுள்ளது. இந்த ராணுவங்களின் வீரர்கள் காவல் துறையினராக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
20 கோடி மக்களைக் கட்டுப்படுத்த 2 லட்சம் உள்நாட்டினரைக் கொண்ட ராணுவமாக இது மாறியுள்ளது. இந்த ராணுவ வீரர்களை ஆங்கி லேய அதிகாரிகள் கட்டுப்படுத்துகிறார்கள். ஆங்கிலேய வீரர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.
 இந்திய மக்கள், ராணுவ வீரர்களாக உள்ள உள்நாட்டினர் மீது நம்பிக்கை வைத்தார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வியக் கும் விதமாக, இந்த ராணுவ வீரர்களே விடு தலை உணர்வைப் பிரதிபலிக்கும் முதல் மைய மாக மாறினார்கள். சமீபத்தில் ஏற்பட்டுள்ள ராணுவக் கலகங்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
பாரசீகத்துடனான போரைத் தொடர்ந்து வங்காள ராஜதானியில் அங்கு ஐரோப்பிய வீரர்கள் இல் லாத சூழலில் கலகம் வெடித்தது.
suran
 (இந்தியாவை அடிமைப்படுத்திய கையோடு, பாரசீகத்தையும், ஆப்கானிஸ்தானத் தையும் கைப்பற்றும் நோக்கில் 1856-57ல் வங் கத்தில் இருந்து ஆங்கிலேய வீரர்களை, பார சீகத்தின் தலைநகர் ஹீரட் மீது படையெடுக்க அனுப்பியது கிழக்கிந்திய கம்பெனி.)
இதற்கு முன்னரும் கூட இந்திய ராணுவத்திற்குள் கலகங்கள் வெடித்துள்ளன. ஆனால் தற்போது வெடித்துள்ள கலகம் குணாம்ச ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் முற்றிலும் வேறு பட்டது. முதல் முறையாக சிப்பாய் படைப்பிரிவு களைச் சேர்ந்த வீரர்கள் தங்களது ஐரோப்பிய அதிகாரிகளைக் கொலை செய்தனர்; முகமதி யர்களும் இந்துக்களும் தங்களது முரண்பாடு களைக் கைவிட்டு ஒன்றிணைந்தார்கள்.
தங் களது பொது எதிரிக்கு எதிராக கரம் கோர்த் தார்கள்; “ராணுவத்திற்குள் இருந்த இந்துக் களால் துவக்கப்பட்ட கலகம், தில்லியில் ஒரு முகமதியப் பேரரசரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதன் மூலம் முடிவுக்கு வந்தது” என்று சொல்லலாம். அந்தப் பேரரசரின் பெயர் இரண் டாம் பகதூர்ஷா.
இந்த எழுச்சி சில குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளோடு நின்றுபோய்விடவில்லை; ஆங்கிலோ-இந்திய ராணுவத்திற்குள் ஏற்பட்ட இந்த எழுச்சி, ஆசியாவின் இதர பெரிய நாடு களில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிராக எழுந்துள்ள கடும் அதிருப்தியோடு தொடர் புடையது; வங்காள ராணுவத்திற்குள் ஏற்பட் டுள்ள எழுச்சியோடு தொடர்புடையது; பாரசீக மற்றும் சீனப் போர்களோடு (1856-58ல் சீனா மீது பிரிட்டன் நடத்திய இரண்டாம் ஓபியம் போர்) நெருங்கிய தொடர்புடையது.
 நான்கு மாதங்களுக்கு முன்பு வங்காள ராணுவத்திற்குள்தான் முதல் முறையாக மோதல் வெடித்தது.

பிரிட்டிஷ் அரசு தங்களு டைய மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக உள்ளூர் ராணுவ வீரர்களிடையே அதிருப்தி எழுந்ததன் மூலமே இந்த மோதல் துவங் கியதாக கூறப்படுகிறது.

suran
 இந்த வீரர்களுக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளில் சுற்றப் பட்டிருந்த காகிதங்களில் மாடுகள் மற்றும் பன்றிகளின் கொழுப்பால் தயாரான உயவு எண்ணெய் தடவப்பட்டிருந்ததாகவும், இதை வீரர்கள் தங்களது பற்களால் கட்டாயமாக கடித்தே எடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக் கப்பட்டதாகவும், இது தங்களது மத உணர்வு களை புண்படுத்துவதாக உள்ளூர் வீரர்கள் கருதியதால் ஆங்காங்க மோதல்கள் வெடிக்க காரணமானது என்றும் கூறப்படுகிறது. 
ன வரி 22ம் தேதி கல்கத்தாவுக்கு அருகே அமைந் துள்ள ராணுவ கண்டோன்மெண்டுகளில் (ராணுவ முகாம்களில்) முதல் முறையாக துப் பாக்கிச்சூடு வெடித்தது
 பிப்ரவரி 25ம் தேதி பெர் காம்பூரிலுள்ள 19வது இந்திய வீரர்கள் படைப் பிரிவில் கலகம் வெடித்தது. அங்குள்ள வீரர்கள் மேற்கண்ட துப்பாக்கி ரவைகளை நிராகரித்தார்கள்.மார்ச் 31ம் தேதி இந்தப்படைபிரிவு கலைக் கப்பட்டது.
அதே நாளில் பாரக்பூரில் முகா மிட்டிருந்த 34வது சிப்பாய்ப்படைப்பிரிவு திடீரென கலகத்தில் ஈடுகட்டது. மைதானத் தில் அணிவகுப்பு பயிற்சி நடந்துகொண்டி ருந்த போது அனைத்து வீரர்களும் திடீர் தாக் குதலில் ஈடுபட்டார்கள்.
 படைப்பிரிவின் தலை மைபொறுப்பிலிருந்த ராணுவ அதிகாரி மற்றும் துணை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார்கள். இதனால் ஆங் கிலேயே வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் வெடித்தது. இந்திய வீரர்கள் தங்களது அதிகாரிகளை தாக் கினார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந் தப்படைப்பிரிவும் கலைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முழுவதும்பல்வேறு மோதல் சம்பவங்கள் நடந்தன. வங்காள ராணுவத்தில் அலகாபாத், ஆக்ரா, அம்பாலா போன்ற கண்டோன்மெண்டுகளில் அடுத்த டுத்து துப்பாக்கிச்சூடுகளும் மோதல்களும் நடந்தன.இதைத்தொடர்ந்து மீரட்டிலுள்ள குதிரைப் படையின் மூன்றாவது பிரிவில் பெரும்கலகம் வெடித்தது.
மெட்ராஸ் மற்றும் பம்பாய் ராணுவங்களிலும் இதேபோன்று மோதல்கள் வெடித்தன. மே மாதம் துவங்கியது.
அவாத் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இந்திய வீரர்கள் மோதலுக்கு திட்டமிட்டார்கள். எனினும் அந்தப்படைப்பிரிவின் தலைவன் சர்.எச்.லாரன்ஸ் அதைத்தடுத்து நிறுத்தினான்.
மே 9ம் தேதி மீரட்டில் மீண்டும் பெரும் கலகம் வெடித்தது. குதிரைப்படையின் மூன்றாவது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ஆயுதங்களோடு சிறைக்கதவுகளை உடைதெறிந்தார்கள். அன் றைய தினம் இரவு மீரட்டிலுள்ள 11வது மற்றும் 20வது படைப்பிரிவுகளும் இவர்களோடு சேர்ந்து கொண்டன. மூன்று படை வீரர்களும் மைதானத்தில் கூடினார்கள்.
அவர்களை சமாதானப்படுத்த வந்த அதிகாரிகளை சுட் டுக்கொன்றார்கள். கன்டோன்ட்மென்ட் அலு வலகங்களைத் தீவைத்துக் கொளுத்தினார்கள். அப்படியே புறப்பட்ட அவர்கள் எதிரில் தங்கள் கையில் கிடைத்த ஆங்கிலேய அதிகாரிகள், ஆங்கிலேயே வீரர்கள் அனைவரையும் கொன் றார்கள்.
பிரிட்டிஷ் வீரர்களை மட்டுமே கொண்ட இரண்டு படைப்பிரிவுகளை துவம்சம் செய்தார்கள். அத்துடன் பீரங்கிப்படையையும் காலாட்படையையும் கைப்பற்றினார்கள். இந்த மோதல்களில் இந்திய வீரர்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
எனினும், தில்லியை நோக்கி புறப்பட்டார்கள். மீரட்டிலிருந்து 40 மைல் தொலைவிலேயே தில்லி அமைந்திருக்கிறது. தில்லியை அடை ந்த இந்த வீரர்கள் அங்குள்ள உள்நாட்டு வீரர் களைக் கொண்ட அரணோடு இணைந்தார்கள்.
காலாட்படையின் 38வது, 54வது மற்றும் 74வது பிரிவுகளும் இவர்களோடு சேர்ந்து கொண்டன. முழுக்க முழுக்க ஆயுதமேந்திய இந்திய வீரர் கள் இவர்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் அனை வரும் தாக்கப்பட்டனர். கையில் கிடைத்த அனைத்து ஆங்கிலேயே வீரர்களும் கொல்லப் பட்டனர்.
 அதைத்தொடர்ந்து வீரர்கள், பேரரசர் இரண்டாம் பகதுர்ஷாவைச் சந்தித்தார்கள். மீண்டும் தில்லிப் பேரரசராக மொகலாயச் சக்க ரவர்த்தி இரண்டாம் பகதுர்ஷா நியமிக்கப் பட்டார். இந்தியாவின் மன்னராக அவர் அறி விக்கப்பட்டார்.இந்நிலையில் மீரட்டை மீட்பதற்காக ஆங் கிலேயப் படைகள் அனுப்பப்பட்டிருந்தன.
 மே 15ம் தேதி அங்கு மீண்டும் பயங்கர மோதல் வெடித்தது. எஞ்சியிருந்த இந்திய வீரர்கள் தங்களது உயரதிகாரிகளை கொன்றார்கள். இருதரப்புக்கும் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 50, 60 பேர் சுட்டுக் கொல்லப்பட் டார்கள். எஞ்சியிருந்த அனைவரும் ஆயு தங்களோடு தில்லிக்கு தப்பினார்கள்.
இதனி டையே, பஞ்சாப் மாகாணத்தில் பெரோஸ்பூரில் 57வது மற்றும் 45வது காலாட் படைப்பிரிவுகள் கலகத்தில் ஈடுபட்டன. எனினும் இந்தக் கலகம் ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்டது. லாகூரிலும் ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் கலகத்தில் ஈடுபட்டனர். மே 19ம் தேதி கல் கத்தாவில் புனித வில்லியம் கோட்டையில் பாதுகாப்புப் பணியிலிருந்த சிப்பாய்கள் கல கத்தில் ஈடுபட்டனர்.
suran
ஆனால் அது உடன டியாக ஒடுக்கப்பட்டது.
தொடர்ந்து கலகம் வெடிக்காமல் இருப்பதற்காக பம்பாயிலிருந்து கல்கத்தாவிற்கு ஆங்கிலேய வீரர்களைக் கொண்ட மூன்று படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டன.
இந்த சம்பவங்களையெல்லாம் பரிசீலிக் கிற போது, மீரட்டில் இருந்த பிரிட்டிஷ் அதி காரி ஜெனரல் ஹெவிட்டின் மந்தமான செயல் பாடே ராணுவக்கலகத்தை தீவிரமாக்க கார ணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தில்லி மாநகரம் யமுனை நதியின் வலதுகரை யில் அமைந்துள்ளது; மீரட் யமுனையின் இடது கரையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கரைகளும் ஒரேயொரு பாலத்தால் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன.
மீரட்டிலிருந்து வீரர்கள் செல்வதை, அந்தப்பாலத்தைத் தகர் த்து தடுத்துநிறுத்த பிரிட்டிஷ் அதிகாரி மேற் கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.
இதனிடையே, கலகம் நடந்த அனைத்து மாவட்டங்களிலும் ராணுவச் சட்டம் பிறப் பிக்கப்பட்டது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என அனைத்து திசைகளிலிருந்தும் தில்லியை நோக்கி உள்நாட்டு வீரர்கள் ஒன்று திரண்டிருந்தார்கள்;
 இதனால் இந்தியாவுக்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள ஆங்கிலேய தளபதிகளுக்கு ஓலை அனுப்பப்பட்டது.
 சிலோ னிலிருந்து சீனாவுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த பிரிட்டிஷ் படைகள் நிறுத்தப்பட்டன;
 லண்டனில் இருந்து 14 ஆயிரம் பிரிட்டிஷ் துருப்புக்கள் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
 15 நாட்களுக்குள் அவர்கள் இந்தியா சென்று சேர்வார்கள்.

தில்லியில் இந்திய வீரர்கள் உருவாக்கிய அந்த ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காமல் போகலாம்.
 இன்னும் பயங்கரமான துயரத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் "வீழ்ச்சிக் கான முகவுரை" எழுதப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

                                                                                                              தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
suran


suran

suran