சவால் விடும் ஆசிய இணையச்சேவைகள்.
உலகளாவிய ரீதியில் பெரிதும் பிரபலமான இணையச் சேவைகளாகக் காணப்படுகின்ற Facebook, Google போன்ற சேவைகளுக்குச் சவால் விடுக்கும் வண்ணம் சில ஆசியத் தயாரிப்புகள்
இணைய உலகில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
இவ்வளர்ச்சியினைக் கண்டு அஞ்ச
வேண்டிய நிலையும் தற்போதைய இணைய ஜாம்பவான்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கையடக்கத் தொலைபேசியுகமானது தற்போது வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில், கையடக்கத் தொலைபேசிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சீனாவின் Tencent நிறுவனத்தின் தயாரிப்புகளான KakaoTalk, Line, WeChat ஆகிய இணையச்சேவைகள் தற்போது அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றன.
கையடக்கத்
தொலைபேசியின் இணைய இணைப்பினை அடிப்படையாகக் கொண்டு இலவசமாக
குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் குறித்த சேவைகள்
வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின்
இலகுவான பாவனை மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்கள் ஆகியவை மூலம் குறித்த
சேவைகள் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து வருகின்றன.
குறித்த
சேவைகள் தற்போது வரையிலும் 600 மில்லியன் வரையிலான பாவனையாளர்களை எட்டியுள்ளமை விசேடமான அம்சமாகும்.
தென்கிழக்காசிய
நாடுகளில் அதிகரித்துள்ள கையடக்கத் தொலைபேசிப் பாவனையானது குறித்த
வளர்ச்சிக்கு பெரிதும் பங்கு வகிப்பதாக உள்ளது.
ஒப்பீட்டளவில் அதிகரித்துக்
காணப்படுகின்ற வருமான மட்டம் மற்றும் குறைந்த விலைகளிலான கையடக்கத்
தொலைபேசிகளின் அறிமுகம் ஆகியன குறித்த சேவைகளின பரம்பலுக்குப் பெரிதும்
துணை புரிவதாக உள்ளன. எது எப்படியாயினும்,குறித்த சேவைகள் தொடர்பில் ஸ்பெயினில் 10 மில்லியன் பாவனையாளர்கள் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றுள் 2010 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த KakaoTalk, சேவையானது வெறும் இரண்டே வருடங்களில் 200 மில்லியன் பாவனையாளர்களைப் பெற்றிருந்தது. குறித்த தொகைப் பாவனையாளர்களை எட்டுவதற்கு Facebook மற்றும் Twitter ஆகிய
சேவைகளுக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அளவிலான காலம்
தேவைப்பட்டிருந்தது. இவ்வாறான வெளிப்படுத்தல்களானது
முன்னணி அமெரிக்க
இணையச் சேவைகளுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக மாறிக் கொண்டு வருவதையே
குறித்துக்காட்டுகின்றன என சில தொழிநுட்ப ஆய்வு நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக, இலவச செய்தி பரிமாற்றச் சேவையினூடாக ஆசியாவில் பிரபலம் பெற்றிருந்த BlackBerry சேவைகள் தற்போது அனேகமாக அருகிப் போயுள்ளதனைக் குறிப்பிடலாம்.
இவற்றுள் Line சேவையயானது 2013 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டுக்கான வருமானமாக 58.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. மேலும், KakaoTalk சேவையானது கடந்த வருடத்தில் அதன் வருமானமாக 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியிருந்ததுடன் இவ்வருமானத்தின் மூலமான தேறிய இலாபமாக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டிருந்தது.
இலவசமாகப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பாவிக்கக் கூடிய குறித்த சேவைகள், அவற்றில் காணப்படும் விசேட செயற்பாடுகள் தொடர்பில் கட்டணங்கள் அறவிடுவதன் மூலம் வருமானத்தினை ஈட்டி வருகின்றன.
நன்றி :brit-tamil
------------------------------------------------------------------------------------------------------------------------------------
'2 ஆப்பிள்கள்'நவீன ரக ஆப்பிள் போன்கள் என்று நினைத்து 'ஆன் லைன்' மூலம் ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த இளம் பெண்ணை பற்றிய சுவாரஸ்ய செய்திகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் தனக்கு 2 ஆப்பிள் ரக நவீன கைபேசிகள் தேவை என 'ஆன் லைன்' மூலம் விளம்பரம் செய்தார்.
சில நாட்களில் அவரை ஆன் லைன் மூலம் தொடர்பு கொண்ட மற்றொரு பெண் தன்னிடம் புத்தம் புதிதாக '2 ஆப்பிள்கள்' இருப்பதாகவும் குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு நாளில் இருவரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர்.
விளம்பரம் செய்த பெண்ணிடம் ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.73 ஆயிரம்) பெற்றுக் கொண்டு 2 புதிய கைபேசி பெட்டிகளை அளித்தார்.
மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த அந்த இளம்பெண் பெட்டிகளை திறந்து பார்த்தபோது ஒவ்வொரு பெட்டியிலும் செக்கச்சிவந்த 2 ஆப்பிள் பழங்கள் இருப்பதை கண்டு திகைப்படைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பிரிஸ்பேன் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஆன் லைனில் பொருட்களை வாங்குபவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று குற்ற தடுப்பு காவலர் ஜெஸ் ஹாப்கின் என்பவர் எச்சரித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராட்கிளிஃப் கோடு
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடு.
இது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17, ஏற்படுத்தப்பட்டது.
சிரில் ராட்கிளிஃப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 1,75,000 சதுர மைல்கள் பரப்பளவு நிலத்தை இந்த எல்லைக்கோடு கொண்டு பிரித்தது.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்
• 1969 - மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
• 1979 - இரண்டு சோவியத் ஏரோபுளொட் வானூர்திகள் உக்ரைன் வான்வெளியில் மோதியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
• 1982 - முதலாவது சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
• 1999 - துருக்கியில் இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------