மாட்டிறைச்சி-
மரணத்திற்கு காரணமா ?
மாட்டிறைச்சியை[ ரெட்மீட்]சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக
வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது.
மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக்
கருதப்படுகிறது.
மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு
வண்ணத்தை அளிக்கிறது.
பன்றியில்
கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின்(Myoglobin) அதிகமாக இருந்தாலும்
மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது
இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம்
மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ
அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
மனிதர்களின்
உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு
பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில்
சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது
கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது
தெரியவந்துள்ளது.
மாட்டிறைச்சி
சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம்.
அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும்
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினசரி
மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
நான்கு
ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே
இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.
இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ்,
கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும்.
இதுவே இதயநோய், புற்றுநோய்
பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல
ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில்
மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது.
அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர்
பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன்
இருந்தது தெரியவந்தது.
எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல்
ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------------------------
தெருவிளக்கு
பல்கலைக்கழகத்திற்கும் தேவை ஒரு படிப்பினை
அவர் ஒன்றும் இறைமறுப்பாளர் அல்ல. நபிகள் நாயகத்தையும் குரானையும் ஏற்றுக் கொண்டவர்தான். அதே வேளையில் சமயத் திற்குள் பெண்களுக்கான இடம், சுய மரி யாதை சம உரிமை ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கிறவர். தனது கருத்துகளுக்கு ஆதரவாக மறைநூலிலிருந்தே மேற்கோள் கள் காட்டுகிறவர்.எந்த மதத்திலும் இருக்கக்கூடிய பழ மைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனைகளைப் பொறுத்துக்கொள்கிற ஜனநாயக மனநிலை கிடையாது. அவர்களது எதிர்வினை என் பது. இத்தகைய மாற்றுச் சிந்தனைகள் எவ் வளவு தவறானவை என்று நிறுவுவதாகவோ, தங்களது சிந்தனைகள் எவ்வளவு சரி யானவை என்று வாதிடுவதாகவோ இருப்ப தில்லை. மாறாக, மாற்றுக் குரல்களை மற்ற வர்கள் கேட்க விடாமல் ஒடுக்குவதே அவர் களது வழிமுறை.அதே போன்ற எதிர்வினைதான் சென்னை பல்கலைக்கழக உரையரங்கம் தொடர்பாக வும் தலையெடுத்தது. இத்தனைக்கும் அந்த உரையரங்கத்தை ஏற்பாடு செய்ததே பல் கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையம்தான். ஆனால் திடீரென பல்கலைக் கழகத் துணைவேந்தர், அந்த உரையரங் கத்தை நடத்தவேண்டாம் என்று ஆணை யிட்டார். மாணவர்கள், ஆய்வாளர்கள், பேரா சிரியர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள பல அறிஞர்கள் இதனால் ஏமாற்ற மடைந்தார்கள்.
காவல்துறையிடமிருந்து வந்த ஒரு தகவல்தான் துணைவேந்தரின் இந்த நட வடிக்கைக்குக் காரணமாம். பல அமைப்பு கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாலும் போராட் டம் நடத்தப்படும் என்று எச்சரித்திருப்ப தாலும் நிகழ்ச்சியை நிறுத்துமாறு அந்தத் தகவலில் கூறப்பட்டிருந்ததாம். உரையரங்கத்திற்கு ஏற்பாடு செய்த மையத்தின் தலைவர் பேராசிரியர் அப்துல் ரஹிமான், “எதிர்க்க்கிறவர்கள் உரையரங் கில் கலந்துகொண்டு எதிர்க்கேள்வி கேட்டி ருக்க முடியும். இப்படி நிகழ்ச்சியையே நிறுத்தச் செய்ததன் மூலம் ஒரு ஆரோக்கிய மான விவாதம் நடைபெறுவதைக் கெடுத்து விட்டார்கள்,” என்று கூறியிருக்கிறார்.
நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள், மதச் சார்பற்ற ஜனநாயகத்திற்கான முஸ்லிம்கள் ஆகிய அமைப்புகள், “குஜராத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக மற்றவர்களோடு இணைந்து போராடுகிற நாங்கள், சில முஸ்லிம் குழுக்களின் இந்த சகிப்பின்மை கண்டு ஏமாற்றமடைகிறோம், நாணுகிறோம்,” என்று தமது கூட்டறிக்கை யில் கூறியுள்ளன. “வதூத்தின் சில விளக் கங்கள் தவறானவையாக இருக்கலாம். ஒரு வரது எல்லாக் கருத்துகளையும் ஏற்க வேண்டும் என்பதில்லை, ஆனால் எதிர் வாதம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாதங்களும் எதிர்வாதங்களும் தொடர்ச்சி யாக நடந்துவந்திருக்கிற நீண்ட பாரம்பரியம் இஸ்லாமிய கோட்பாட்டிற்கு உண்டு,” என்கிறார் நிதான சிந்தனைகள் மேம்பாட் டுக்கான இஸ்லாமிய அமைப்பின் தலை மைச் செயலாளர் ஃபய்சூர் ரஹ்மான். மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா ஹிருல்லா எம்எல்ஏ, “குரான் தொடர்பான வதூத்தின் விளக்கங்களை பல முஸ்லிம் பிரிவுகள் ஏற்கவில்லை. ஆனால் நாங்கள் யாரும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு எவ் வித மிரட்டலும் விடுக்கவில்லை,” என்று கூறியிருக்கிறார். அமினா வதூத் உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட்டால் வளாகத்தின் முன் போராட்டம் நடத்தப்படும் என்று காவல் துறையின் உளவுத்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறும் இந்திய ஜவ்ஹீத் ஜமாத் செயலாளர் சையத் இக்பால், “முற் போக்கான கருத்துகள் என்ற பெயரில் இஸ் லாமிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதி ராகப் பேசி வருகிறார்,” என்று கூறியிருக் கிறார். ஆக பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளின் கருத்தைக் கேட்காமலே இந்த முடிவுக்கு காவல்துறை வந்திருக் கிறது என்பது தெளிவாகிறது.
“சென்னை பல்கலைக்கழகம் எப் போதுமே சுதந்திரமான கருத்து வெளிப் பாடுகளுக்கு வாய்ப்பளித்து வந்திருக்கிறது. சட்டம் - ஒழுங்கு அமைப்புகளிடமிருந்து வந்த ஆணைக்கிணங்க நிர்வாக அடிப் படையில் எடுக்கப்பட்ட முடிவு இது,” என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி யுள்ள துணைவேந்தர் தாண்டவன் கூறி யிருக்கிறார். காவல்துறையுடன் பல்கலைக் கழகம் வாதாடியதா, கல்விக் களத்தில் மாறு பட்ட ஆய்வுகள் பகிர்ந்துகொள்ளப்படு வதைத் தடுக்கக்கூடாது விளக்கம் அளித் ததா என்ற கேள்விகள் எழுகின்றன. காவல் துறையின் பூட்ஸ் கால்கள் இப்படிப்பட்ட அறிவுத்தள விவாதங்கள் பாதுகாப்புடன் நடக்க உதவியாக நிற்பதற்கு மாறாக, அரங்கக் கதவை மூடுவதற்காக ஓங்கப்பட்டது எவ் வளவு பெரிய வன்மம்!
இதே பல்கலைக்கழகத்தில் இருக்கிற பொருளாதார ஆய்வு மையம் நாளை முத லாளித்துவப் பொருளாதாரக் கொள்கை களின் தாக்குதல்கள் பற்றியோ, அம்பேத்கர் ஆய்வு மையம் சாதியத்தின் கொடூரங்கள் பற்றியோ, வரலாற்று ஆய்வு மையம் இந்தி யாவின் உண்மையான பல பின்னணிகள் பற்றியோ உரையரங்குகள் நடத்தினால்? தாங்கள் நிறுவ முயல்கிற பொய்மைகளுக்கு இடைஞ்சல் என்று அஞ்சக்கூடிய சிலர் காவல்துறைக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பினால்? வருமுன் காக்க வேண்டிய கடமை முற்போக்கு, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது.
--
அ. குமரேசன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வரலாறு படைத்த [தலை]வர்
-------------------------------------------------------------
-பிரகாஷ் காரத்அவர்தம் வாழ்நாள் முழுவதும் ஒரு கம்யூனிஸ்ட்டாக தன்னை தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் இணைத்துக்கொண்டிருந்தார். அவர் பிரிட் டனிலிருந்து வந்தபின்னர், கம்யூனிஸ்ட் கட்சி யில் சேர்ந்து, நேரடியாகவே ரயில்வே தொழி லாளர்கள் தொழிற்சங்கத்தில் வேலை செய்யத் தொடங்கிவிட்டார். அவரின் இறுதிக் காலம் வரையிலும், சிஐடியு-வின் தலைவராக அவர் நீடித்தார். மேற்கு வங்கத்தில் 1967-70களில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் நிலப் போராட்டங் களைக் கட்டவிழ்த்துவிட்டதைப் பயன்படுத் திக் கொண்டு, அவர் விவசாய இயக்கத்தின் அடையாளமாக மாறினார். பின்னர் அவர் இடது முன்னணி அரசாங்கத்தின் முதல்வரானதும் மிகத் தீவிரமாக நிலச்சீர்திருத்த நடவடிக்கை களை மேற்கொண்டார். எனவே, அவரது அர சியல் நடவடிக்கைகள் என்பவை தொழிலா ளர் மற்றும் விவசாயிகள் இயக்கங்கள் அனைத்திலும் பின்னிப்பிணைந்திருந்தன. தோழர் ஜோதிபாசு, சட்டமன்றப் பணி களை, வெளியே நடைபெற்ற மக்கள் இயக்கங் களுடனும், தொழிலாளர் போராட்டங்களு டனும் மிகவும் சரியாகப் பொருத்தியது என்பது அவருடைய மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பங்களிப்புகளில் ஒன்றாகும். தோழர் ஜோதிபாசு சுதந்திரத்திற்கு முன்பே 1946இல் ரயில்வே தொகுதியிலிருந்து வங்க சட்டமன் றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அதி லிருந்தே அவர், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய சட்டமன்ற செயல்பாடு களை, கட்சியின் செல்வாக்கையும், வெளியில் நடைபெற்ற இயக்கங்களை வலுப்படுத்து வதற்கும் வளர்ப்பதற்கும் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தினார். விவசாயிகளின் தேபாகா இயக்கம் 1947ல் துவங்கிய சமயத்தில், ஜோதி பாசு இயக்கம் நடைபெற்ற மாவட்டங்கள் அனைத்திற்கும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இயக்கம் சம்பந்தமான விவரங் களை சட்டமன்றத்தில் மிகவும் வலுவாக எழுப்பினார். 1953இல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாகாணக் கமிட்டியின் செயலாளராக மாறினார். 1961 வரை அந்தப் பொறுப்பில் அவர் தொடர்ந்தார். இவர் செயலாளராக இருந்த இந்த எட்டு ஆண்டுகளில் மாபெரும் இயக்கங்கள் நடைபெற்றன.
1959இல் நடைபெற்ற உணவு இயக்கத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டு 80 பேர் கொல்லப்பட்டார்கள். ஜோதிபாசு, கட்சியின் செயலாளர் என்ற முறை யில், போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். சட்டமன்றத்திற்கு உள்ளேயும் உணவுக்கான மக்கள் கோரிக்கையை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார். முன்னதாக, 1954 பிப்ரவரியில் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் துவங்கிய போது, கட்சி மற்றும் ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். ஜோதிபாசுவைக் கைது செய்வதற்கும் பிடி யாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டிருந்தது. சட்டமன்றம் துவங்கும் நாளன்று சட்டமன் றத்திற்கு வெளியே காவல்துறையினர் அவ ரைக் கைது செய்வதற்காக மிகவும் விழிப்பு டன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் கண்களில் படாமல் சட்டமன்றத் திற்குள் நுழைந்து சுமார் ஒரு வார காலம் சட்ட மன்ற வளாகத்திற்குள்ளேயே அவர் இருந்தார். காவல்துறையினரால் உள்ளே நுழைய முடிய வில்லை. அவர் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் சம்பந்தமாக சட்டமன்றத்தில் பிரச்ச னை எழுப்பி, பின்னர் வெளியில் நடைபெற்ற ஆசிரியர் பேரணியில் கலந்துகொண்டபோது தான், கைது செய்யப்பட்டார். இவ்வாறு, உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாக தோழர் ஜோதிபாசு செயல்பட்டார். தோழர் ஜோதிபாசு தனிப்பட்ட முறை யிலும் மிகவும் தைரியமிக்கவராவார். 1969 ஜூலையில் அவர் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், ஒரு மோதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டதை அடுத்து, கட்டுப்பாடிழந்த போலீஸ் கும்பல் ஒன்று சட்டமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தது. அவர்கள் சட்டமன்ற அலுவலகத்திற்குள் ளிருந்த நாற்காலி, மேசைகளை யெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். பின்னர் ஜோதி பாசுவின் அறைக்குள்ளும் நுழைந்தார்கள். ஜோதிபாசு, சீற்றத்துடன் இருந்த போலீசாரி டம் மிகவும் அமைதியான முறையில் இவ் வாறு நடந்துகொள்வதை நிறுத்துங்கள் என்று உறுதியுடன் கூறினார்.
அவரது அமைதியான ஆனால் உறுதியான நிலையினைப் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்த அவர்கள் அவ ரது அறையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட் டார்கள்.கம்யூனிஸ்ட்டுகள் மாநில அரசில் பங் கேற்பதன்மூலம் ஜனநாயக இயக்கத்தை எவ் வாறு வலுப்படுத்தலாம் என்பதை ஜோதிபாசு மெய்ப்பித்துக் காட்டினார். 1967-1970க் கிடையே இருந்த ஐக்கிய முன்னணி அரசாங் கத்தின் இரு ஆட்சிக் காலத்தின்போதும், உள் துறை அமைச்சராக இருந்தபோது அவர் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களின்போது தலையிட காவல் துறையினரை அனுமதிக்க வில்லை. மேற்கு வங்கத்தில் வீறுகொண்டு நிலப்போராட்டங் கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், விவசாயிகள் பினாமி நிலங்களை அடை யாளம் கண்டு அவற்றை எடுத்துக்கொண் டால் அதில் அரசாங்கம் தலையிடாது என் றும், அவர்களைத் தடுத்து நிறுத்தாது என்றும் ஜோதிபாசு பிரகடனம்செய்தார். இத்தகைய அவரது அனுபவம்தான் மாநில அரசுகளில் செயலாற்றும்போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறை மற்றும் உத்திகளை வடிவ மைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவியது. ஜோதிபாசுவின் மாபெரும் பங்களிப்பு என்பது 1977இல் அவரது தலைமையில் இடதுமுன்னணி அரசாங்கத்தை அவர் அமைத்ததாகும். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இடது முன்னணி அரசாங் கம் கோலோச்சிய வரலாறு மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இதில் இடைவெளியில்லாது 23 ஆண்டுகள் தொடர்ந்து அவர் முதல்வராக இருந்தார். அவர் முதல்வராக இருந்த காலத் தில்தான், நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள் வதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு, அமல் படுத்தப் பட்டது. இவற்றின் காரணமாகத்தான் 1.1 மில்லியன் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டு, 2.5 மில்லியன் நிலமற்ற மற்றும் சிறிய விவசாயிகளுக்கும், 1.53 மில்லியன் குத்தகை விவசாயிகளுக்கும் பிரித்துக்கொடுக்கப் பட்டது. அவ்வாறு குத்தகை விவசாயி களுக்குக் கொடுக்கும்போது அவர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. இவ்வாறு நிலச்சீர்திருத்தங்கள் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே சமயத்திலேயே, மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்கும் புத் துயிரூட்டி, அதிகாரப் பரவலைத் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக மத்தியில் அரசிய லமைப்புச் சட்டத்தில் 73 மற்றும் 74ஆவது திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன்பே, மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளை ஜனநாயகப்படுத்தி மேற்கு வங்கம் நாட்டிற்கே வழிகாட்டியது.எல்லாவற்றையும்விட இன்றையதினம் அனைவராலும் போற்றிப் பாராட்டப்படக் கூடிய ஒரு சாதனை என்னவெனில், அம்மாநிலத்தில் மதச்சார்பற்ற சூழ்நிலையை உருவாக்கி, நிலைநிறுத்தி இருப்பதாகும். சுதந்திரத்திற்கு முன்பு, வங்கத்தில் மதவெறி அரசியல் தலைதூக்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது. வங்க மாநிலம் இரண்டாகப் பிரிந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் மதவெறி வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றன. ஆயி னும், இடதுசாரி இயக்கம் முன்னேறிக் கொண்டிருந்ததும், இடது முன்னணி அரசாங் கம் அமையப் பெற்றதும் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வந்தன.
மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே மதச்சார்பின்மையை உறுதியானமுறையில் பின்பற்றுவதற்கு அடையாளமாக தோழர் ஜோதிபாசு விளங்கினார். மாநிலத்தில் உள்ள அனைத்துச் சிறுபான்மையினரும் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்ற உணர் வினைப் பெற்றார்கள். மதவெறியர்களின் தாக்கு தல்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்ந்தார்கள். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் மேற்குவங்கத்தில் வாழ்ந்து வந்த சீக்கிய சிறுபான்மையினர் மீது எவ்விதத் தாக்குதலும் ஏற்படாதவாறு தடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாக்கப்பட உறுதி யான நிலை எடுத்த ஜோதிபாசுவை ஒட்டு மொத்த நாடே பாராட்டியது. 1970களில் அரைப்பாசிச அடக்குமுறை மேற்குவங்கத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது.
1200க்கும் மேற்பட்ட தோழர்கள் இக்கால கட்டத்தில் கொல்லப்பட்டார்கள். ஆயிரக் கணக்கானோர் தங்கள் இல்லங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். வர்க்க எதிரிகளால் ஏவப்படும் அடக்குமுறை களை கம்யூனிஸ்ட் இயக்கம் அவ்வப்போது எதிர்கொண்டுதான் வந்திருக்கிறது. இத்த கைய அடக்குமுறைகளும், வன்முறைகளும் எப்படி வெற்றிகரமாக எதிர்கொண்டு முறிய டிக்கப்பட்டது என்பதே இயக்கத்தின் எதிர் கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.
ஜோதிபாசு மற்றும் பிரமோத் தாஸ் குப்தா ஆகியோர் தலைமையின் கீழ் கட்சி இத்தகைய கடும் தாக்குதலை எதிர்த்து நின்றது. மக்களிட மிருந்து அது தனிமைப்படவில்லை. இன்றைய தினம், மேற்குவங்கத்தில் கட்சியும் இடதுமுன்னணியும் அத்தகைய அடக்கு முறையை மீண்டும் எதிர்கொண்டிருக் கின்றன. இத்தகைய நிலைமைகளில் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதற்கு ஜோதி பாசுவின் அனுபவங்கள் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழும். எழுபதாண்டுகள், தோழர் ஜோதிபாசு, ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவர். ஆனாலும், மார்க் சிசத்தின்பால் அவருக்கிருந்த உறுதியில் சிறிதளவும் தடுமாற்றம் இல்லை. அவர் இறக்கும் வரையிலும், மனிதகுல விடுத லைக்குத் தீர்வு என்பது சோசலிசத்தால் மட்டுமே சாத்தியம் என்று நம்பினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியிலும், நடைமுறையிலும் தோழர் ஜோதிபாசு பல அம்சங்களில் கேந்திரமான பாத்திரத்தை வகித்திருக்கிறார். சட்டமன்றங் களிலும், நாடாளுமன்றத்திலும் கம்யூ னிஸ்ட்டுகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும், நிலச்சீர்திருத்தங் களை அமல்படுத்துவது தொடர்பாகவும், உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் அதிகாரங் களைப் பரவலாக்குவது தொடர்பாகவும், மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தைப் பாது காப்பது தொடர்பாகவும் அவர் நமக்கு மிகச் சிறப்பாகக் கற்றுத்தந்திருக்கிறார்.
உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற கொள்கை யையும் ஆழமான முறையில் முன்னெடுத்துச் சென்றிடவும் தோழர் ஜோதிபாசு அளவிற்குச் செயல்பட்ட தலைவர்கள் ஒருசிலர்தான்.
ஆண்டு முழுவதும் நடத்தப்படவுள்ள பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஜோதி பாசுவின் இத்தகைய புகழ்மிக்க வாழ்க்கையும் பணியும் வெகு சிறப்புடன் மக்களிடம் கொண்டு செல்லப்படும்.
-தமிழில்: ச.வீரமணி