செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஹிரோஷிமா நினைவு தினம்,

1945, ஆக., 6ம் தேதி,

இரண்டாம் உலகப்போர் .

    ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது.

suran

பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வேண்டியும், ஆண்டுதோறும் ஆக., 6ம் தேதி, ஹிரோஷிமா நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதல்.

உலக வரலாற்றில் அமெரிக்கா, முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. “லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த "பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது.
இது அப்பகுதியில் 11 கி.மீ., சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது.
அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர். ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர். கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர் (இதன் பாதிப்பு இன்னும் தொடர்கிறது). குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார்.
அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதை செய்தது.
 இதன் பிறகே ஹிரோஷிமாவில் வீசப்பட்டது அணுகுண்டு எனஉலக நாடுகளுக்கு தெரியவந்தது.

மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது.
 இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன.
 கதிர்வீச்சு காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதனையடுத்து 6 நாட்கள் கழித்து, சரணடைவதாக ஆக., 15ம் தேதி ஜப்பான் ஒப்புக்கொண்டது.
அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த 2 நகரங்களும், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்தது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அணுகுண்டு சோதனை நடத்தி, தங்களை அணு ஆயுத நாடுகளாக காட்டியுள்ளன.
 இதைத்தவிர இஸ்ரேல் மற்றும் ஈரானும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. வேறு சில நாடுகளும் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஜப்பான் அழிவிற்கு பின், அணுகுண்டு தாக்குதல் உலகில் நிகழவில்லை என்பது வரவேற்கத்தக்க விஷயம்.
 இது தொடர வேண்டும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

எந்த எண்ணெய் -

நல்ல எண்ணெய்?


எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? என்கிற தேடல் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  
தினம் ஒன்றாக சந்தைக்கு வரும் ஒவ்வொரு  புது எண்ணெயுமேஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்என விளம்பரப்படுத்திக் கொள்ள, மக்களின் குழப்பம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம். 
இந்தக்  குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், எண்ணெய் நல்லதா, கெட்டதா, அது ஏன் அவசியம் என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்பதற்கு, உள் உறுப்புகளைப்

புரதத்திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள்  என்றால் அதே அளவு கொழுப்பிலோ 9 கலோரிகள் 
கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரியாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய்வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள்  போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு. இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என  கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம்.
 இந்த வகைகொழுப்பு உடல்நலத்துக்கு  நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச்சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம்.  
ரத்தக்குழாய்களில் கொழுப்பு  படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை  அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 வனஸ்பதி மட்டுமல்ல... அறை வெப்ப நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

பெயர்                    கொழுப்பின் 
(100 கிராமில்)        அளவு                                 ஆற்றல்                                      மினரல்ஸ்
வெண்ணெய், நெய்    81 கிராம்    729 கிலோ கலோரிகள்              2.5 கிராம்
பாமாயில்                  100 கிராம்    900 கிலோ கலோரிகள்        800 ணுரீ அல்லது னீநீரீ பீட்டா கேரட்டின் (வைட்டமின் )
வனஸ்பதி
மற்றும்
இதர
சமையல்
எண்ணெய்கள்    100 கிராம்               900 கிலோ கலோரிகள்                                   இல்லை


பாமாயில்

1 கிராம் பாமாயிலில், 800 ணுரீ அல்லது னீநீரீ  பீட்டா கேரட்டின் (வைட்டமின் ) உள்ளது. ஆனாலும், அந்த எண்ணெயில் உள்ளது சாச்சுரேட்டட்  கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.

சூரியகாந்தி எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.
கடலை எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில்  அளவுக்குக் கெடுதலானது அல்ல.
தவிட்டு எண்ணெய்

ரைஸ் பிரான் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோமே... அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.

நல்லெண்ணெய்

இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை  கொண்டது.

ஆலிவ் ஆயில்

இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

கடுகு எண்ணெய்

ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லதுகடுமையான வாசம் காரணமாக, நம்மூர்  மக்களுக்கு இந்த எண்ணெய் பிடிப்பதில்லை. வட இந்திய மக்கள், கடுகு எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும்  அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும்  நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய்வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.

பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால்,  ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால்கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம்.

  பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக்  கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!

நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லதுமாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை.
suran
உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால்  எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு
மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.
தோசை  ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டால எண்ணெய் அதிகம் தேவைப்படாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-

"Made in  U.S.A.?"

suran

Click Here