பான்மசாலா குவிக்கும் லாபம்.
இந்த குட்கா,பாண் மசாலா தடையினால் ஒரே நன்மை !
இதன் வியாபார முக வர்களுக்கு
லாபம் முன்பை விட பன்மடங்கு கூடியதுதான்.
மற்றபடி எல்லா கடைகளிலும்
விற்பனையாகிக் கொண்டுதான் உள்ளது.
அதிகாரிகளுக்கு தெரிந்தும்-தெரியாமலும்.
ஜெயா அரசு முன்பு விதித்த குட்கா தடை போல்தான் இப்போதும்.ஒரு வேளை அரசே மது பானம் போல் குட்கா விற்பனையையும் கையில் எடுக்க போகிறதோ?என்னவோ?
அரசு தடைகள் எல்லாமே தடை விதித்த அடுத்த மாதத்திலேயே காற்றில் பறக்கும்
என்பதை குட்காவும் நிரூபித்துள்ளது.
கடந்த மே மாதம் தமிழகத்தில் குட்கா,
உண்ணக்கூடிய புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து,
சென்னை முழுவதும் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். பெட்டிக்கடை முதல்
மொத்த வியாபாரிகள் வரை சோதனை நடத்தி புகையிலை பொருட்கள், குட்கா
விற்றவர்களுக்கு அபராதம் விதித்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆரம்பத்தில் அதிகாரிகள் கெடுபிடியாக இருந்ததால் புகையிலை பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்தது. ஆனால், நாளாக நாளாக கள்ள சந்தையில் விற்பனைக்கு வந்தன. ரூ.2க்கு விற்கப்பட்ட குட்கா ரூ.20க்கு விற்கப்பட்டது.
ஆரம்பத்தில் அதிகாரிகள் கெடுபிடியாக இருந்ததால் புகையிலை பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்தது. ஆனால், நாளாக நாளாக கள்ள சந்தையில் விற்பனைக்கு வந்தன. ரூ.2க்கு விற்கப்பட்ட குட்கா ரூ.20க்கு விற்கப்பட்டது.
ரகத்திற்கு ஏற்றார் போல்
விலையும் ஏற்றினார்கள். யாரும் புகையிலை பொருட்களை உபயோகிக்கக்கூடாது,
அதனால் வாய் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது, புகையிலையை மென்று துப்பும்
எச்சிலால் மற்றவர்களுக்கும் பாதிப்பு உண்டு என்பதற்காகத்தான் அரசு தடையை
கொண்டு வந்தது.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தடை பொதுமக்கள் யாருக்குமே பயனில்லாமல் போனது. மாறாக, குட்காவின் விலையை ஏற்றி மொத்த வியாபாரிகளும், சிறு கடைக்காரர்களும்தான் நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள்.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தடை பொதுமக்கள் யாருக்குமே பயனில்லாமல் போனது. மாறாக, குட்காவின் விலையை ஏற்றி மொத்த வியாபாரிகளும், சிறு கடைக்காரர்களும்தான் நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள்.
தடைக்கு முன், ஒரு பாக்கெட், 2 பாக்கெட் என வாங்கிய பாமர
மக்கள், தடை காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டதால் 20, 30 பாக்கெட் என மொத்தமாக
வாங்கி அதிகளவில் பயன்படுத்தும் அவலமும் நடந்து வருகிறது.
தற்போது, பெட்டிக்கடைகள், சாலையோர பான் மசாலா கடைகளில் சர்வ சாதாரணமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. இது குறித்து, கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலையில் பெட்டிக்கடை நடத்துபவர் கூறுகையில், ‘குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் எல்லா கடையிலும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தடை காரணமாக மொத்த வியாபாரிகள் விலையை அதிகப்படுத்தியுள்ளனர்.

முன்பு
ரூ.100க்கு வாங்கும் ஒரு மூட்டை இப்ப ரூ.400க்கு வாங்க வேண்டியிருக்கிறது.
அதனால், ரகத்துக்கு ஏற்றமாதிரி நாங்களும் அதிக விலைக்கு விற்கிறோம்.
தினமும் இந்த விலை வேறுபடும்‘ என்கிறார்.
மயிலாப்பூரை சேர்ந்த கடைக்காரர் கூறுகையில், ‘என்னோட கடையில குட்கா வாங்கத்தான் 90 சதவீதம் பேர் வருவாங்க. இதுதான் என்னோட கடையோட முக்கியமான வருமானம். அதனாலத்தான் தடைக்கு பிறகும் வித்துகிட்டு இருக்கேன்.
மயிலாப்பூரை சேர்ந்த கடைக்காரர் கூறுகையில், ‘என்னோட கடையில குட்கா வாங்கத்தான் 90 சதவீதம் பேர் வருவாங்க. இதுதான் என்னோட கடையோட முக்கியமான வருமானம். அதனாலத்தான் தடைக்கு பிறகும் வித்துகிட்டு இருக்கேன்.
அதிகாரிகள் ரெய்டு பண்ணா அபராதம்
கட்டவும் தயாரா இருக்கேன்’ என்கிறார்.
புகையிலையை ரெகுலராக பயன்படுத்தும் ஒருவர் கூறுகையில், ‘27 வருடமாக புகையிலை பழக்கம் எனக்கிருக்கு. அதோட மணமும், சுவையும் பிடிச்சிருக்கிறதால விட முடியல. இப்ப எல்லா கடையிலும் கிடைச்சிட்டுதான் இருக்கு. தடை விதித்ததுக்கான அறிகுறியே இல்ல. காசு மட்டும்தான் அதிகம்.

24 மணி நேரமும் குட்கா கிடைக்கிற கடைகள்
கூட இருக்கு’ என்கிறார்.
பொதுமக்கள் கூறுகையில், ‘புகையிலை பொருட்களை தடை செய்யணும்னா சாதாரண பெட்டிக்கடையில மட்டும் ரெய்டு நடத்தினா போதாது.
பொதுமக்கள் கூறுகையில், ‘புகையிலை பொருட்களை தடை செய்யணும்னா சாதாரண பெட்டிக்கடையில மட்டும் ரெய்டு நடத்தினா போதாது.
குட்காக்கு பேர் போன வால்டாக்ஸ் ரோடு, சவுகார்பேட்டை, பாரிமுனை
உள்ளிட்ட பகுதியில மொத்த வியாபாரிங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கதான்
ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமா
இறக்குமதி செஞ்சு சென்னையில கடைக்காரங்களுக்கு விக்கிறாங்க. முதல்ல அவங்கள
கண்டுபிடிச்சு மொத்த வியாபார கடைகளுக்கு சீல் வைச்சா தான் முழுசா தடுக்க
முடியும்‘ என்கின்றனர்.
2003ல தமிழக அரசு லாட்டரி டிக்கெட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை கடுமையாக்கினதால, லாட்டரி மோகத்துக்கு அடிமையான பலரோட குடும்பங்கள் தப்பிச்சது என்றே கூறலாம்.
2003ல தமிழக அரசு லாட்டரி டிக்கெட்டுக்கு தடை விதித்தது. அந்த தடையை கடுமையாக்கினதால, லாட்டரி மோகத்துக்கு அடிமையான பலரோட குடும்பங்கள் தப்பிச்சது என்றே கூறலாம்.
ஆனா
அதுக்கு பிறகு கொண்டு வரப்பட்ட எந்த தடையும் முழுசா பலன் அளிக்கல. பொது
இடத்தில சிகரெட் பிடிக்க தடை கொண்டு வந்தாங்க.
ஆனா இப்ப பள்ளி, மருத்துவமனை
அருகில் கூட சிகரெட் விற்பனை அமோகமா நடக்குது. பொது இடத்தில் சிகரெட்
பிடிக்கிற யாரையும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதும் இல்ல.
குட்காவும் அதே
மாதிரிதான் மாறிட்டு வருது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------ஜிமெயில்
கூகுள் தரும் ஜிமெயில் தளம் அதன் பலவகை வசதிகளுக்குப்
பெயர் பெற்றது. பெரும்பாலானவர்கள், இவற்றில் சிலவற்றைக் கூட முழுமையாகப்
பயன்படுத்த மாட்டார்கள். அடிப்படையில், தங்களுக்கு வரும் மெயில்களைப்
பார்ப்பது, இணைப்புகளை டவுண்லோட் செய்வது, பதில் அஞ்சலை, தேவை எனில்
இணைப்புகளுடன் அனுப்புவது என்ற அளவிலேயே செயல்படுவார்கள்.
இவற்றில் சில
செட்டிங்ஸ் மேற்கொண்டால், சில அஞ்சல் செயல்பாடுகள், கூடுதல் பயன்
தருபவையாகவும், விரைவில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமையும். அவற்றை இங்கு
காணலாம்.
இன்பாக்ஸ்,
இன்பாக்ஸ்,
கூகுள் நிறுவனம் தன்
ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் ஒரு புதிய வசதியை அளிப்பது வழக்கம்.
இந்த வசதிகளே, அதன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அதன் பக்கம்
வைத்துள்ளது. புதிய அறிமுகங்கள் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை என்றால்,
அவற்றை எடுத்துவிடவும் அல்லது மற்றவற்றுடன் இணைக்கவும், கூகுள் தயங்காது.
கூகுள் தந்துள்ள புதிய வசதி ஒன்று குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது கூகுள் ஜிமெயில் இன்பாக்ஸில் புதிய பிரிவுகளை வடிவமைத்து அளித்துள்ளது. அவை primary, social, promotions, updates and forums ஆகும். இதில் ஏதேனும் உங்களுக்குத் தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், அதனை நீக்கிவிடலாம். இந்த வகை இன்பாக்ஸ் தோற்றத்தை நீங்கள் விரும்பிய வகையிலும் அமைக்கலாம்.

இதற்கு
முதலில், மெயில் தளத்தின் திரையில் வலது மேல் மூலையில் உள்ள, செட்டிங்ஸ்
(Settings) பட்டனை அழுத்தவும். அடுத்து “Configure inbox” என்பதனைத்
தேர்ந்தெடுக்கவும். இங்கு பாப் அப் ஆகி வரும் பட்டியலில், தேவையற்ற
பாக்ஸ்களுக்கான டேப்களுக்கான டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின் சேவ்
செய்திடவும்.
காலண்டரில் நிகழ்வுகள் ,
காலண்டரில் நிகழ்வுகள் ,
நீங்கள்
ஜிமெயில் பயன்படுத்தி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையினை
மேற்கொள்பவராக இருந்தால், அவற்றை கூகுள் காலண்டரில் இணைப்பது மிக எளிதான
ஒன்றாக இப்போது அமைக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்களில் உள்ள தேதி மற்றும்
நேரம் தற்போது அடிக்கோடிடப்படுகின்றன. உங்கள் திட்டமிடலை முன் கூட்டியே
பார்க்க விரும்பினால், இதில் ஏதாவது ஒன்றின் மேல் கர்சரைக் கொண்டு
செல்லவும். நீங்கள் விரும்பினால், தேதி மற்றும் நேரத்தினை மாற்றலாம்.
பின்னர், “Add to Calendar” என்பதில் கிளிக் செய்து உங்கள் திட்டமிடலில்
அதனை இணைக்கலாம். உங்கள் காலண்டரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பதிவில்,
உங்கள் பழைய மூல அஞ்சலுக்கு ஒரு லிங்க் ஏற்படுத்தப்படும்.
இதனால்,
இந்நிகழ்வு சார்ந்த அனைத்தையும் எளிதாகப் பார்வையிட முடியும்.
முடக்கிவிடலாம்,
முடக்கிவிடலாம்,
குறிப்பிட்ட மின் அஞ்சல் சார்ந்து பலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு
செய்திடுகையில், அவை தொடர்ந்து நீண்டு கொண்டே போகும்.
ஒரு கட்டத்தில்,
தொடக்க நிலையில் எழுதப்பட்ட கருத்துக்குச் சம்பந்தமில்லாத கருத்துகள் பதிவு
செய்யப்படலாம். உங்களுக்கு அதில் விருப்பமில்லாமல் இருக்கலாம்.
இருப்பினும், அந்த அஞ்சல் சங்கிலித் தொடராக உங்கள் பெட்டியில் வந்து கொண்டே
இருக்கும். இதனை உங்கள் மெயில் பாக்ஸில் வராமல் இருக்க, கூகுள் ஒரு
வசதியினைத் தந்துள்ளது.
“Mute conversations” என்னும் அந்த வசதியினை இயக்கி
விட்டால், தொடர் அஞ்சல்கள் வராது.
ஒரு அஞ்சல் தொடரினை முடக்க நினைத்தால், அதன் அருகே உள்ள சிறிய சதுரப் பெட்டியில் கிளிக் செய்து, முதலில் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “More” என்பதில் உள்ள கீழ் விரி மெனுவினை விரிக்கவும்.
ஒரு அஞ்சல் தொடரினை முடக்க நினைத்தால், அதன் அருகே உள்ள சிறிய சதுரப் பெட்டியில் கிளிக் செய்து, முதலில் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “More” என்பதில் உள்ள கீழ் விரி மெனுவினை விரிக்கவும்.
இதில் காணப்படும் “Mute” என்ற ஆப்ஷனைத்
தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், இந்த தகவல் சார்ந்த அனைத்து
மெயில்களும் நீக்கப்பட்டு, ஆர்க்கிவ் எனப்படும் கிடங்கில் வைக்கப்படும்.
எனவே “All Mail” என்ற லேபிள் மீது கிளிக் செய்தால், இவற்றை எப்போதும்
நீங்கள் காணலாம்.
இதில் மட்டும் புதியதாக “Muted” என்ற லேபிள்
காணப்படும். பின் ஒரு நாளில், இதனைத் தொடர்ந்து நீங்கள் பெற விரும்பினால்,
மீண்டும் இதனைத் தேர்ந்தெடுத்து, “Move to Inbox” என்பதில் கிளிக்
செய்திடவும்.
பெரிய பைல்களுக்கு ,
பெரிய பைல்களுக்கு ,
ஜிமெயில், அஞ்சலுடன் இணைக்கும் பைல்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அளவிற்கு
மேல், அந்த பைல் அல்லது, இணைக்கப்படும் மொத்த பைல்களின் அளவு இருந்தால்,
எந்த பைல் அளவினை மீறுகிறதோ, அதனை ஏற்றுக் கொள்ளாது.
நமக்குக் கட்டாயம்
பைலை அனுப்பியாக வேண்டிய சூழ்நிலையில் இருப்போம். இது போன்ற வேளைகளில்
கூகுள் ட்ரைவ் பயன்படுத்தி அனுப்பலாம். இதனைப் பயன்படுத்தி, 10 ஜிபி
அளவிலான பைலை அனுப்ப முடியும்.
இது வழக்கமான பைல் அளவினைக் காட்டிலும் 400
மடங்கு அதிகமாகும்.
மிகப் பெரிய பைலை அனுப்பு முன்னர், அதனை ஜி ட்ரைவில் அப்லோட் செய்திட வேண்டும்.
மிகப் பெரிய பைலை அனுப்பு முன்னர், அதனை ஜி ட்ரைவில் அப்லோட் செய்திட வேண்டும்.
அதன் பின்னர், ஜிமெயில் தளத்தில்,
Compose விண்டோவில் Drive ஐகான் மீது கிளிக் செய்திட வேண்டும்.
பின்னர்,
நாம் அனுப்ப விரும்பி, கூகுள் ட்ரைவிற்கு ஏற்கனவே அனுப்பிய பைலைக் கிளிக்
செய்திட வேண்டும்.
நீங்கள் அனுப்பிய பைலுக்கு, அதனைப் பெறுபவராக நீங்கள்
தேர்ந்தெடுத்தவர் அணுக முடியுமா எனப் பார்க்கும்.
இல்லையேல் சில
செட்டிங்ஸ் மாற்ற கூகுள் உங்களைக் கேட்டுக் கொள்ளும்.
இவற்றை மாற்றி
அமைத்த பின்னர், உங்கள் பைல் அவருக்குச் செல்லும்.
அவர் அஞ்சலைப்
பார்க்கையில், கூகுள் ட்ரைவிலிருந்து, குறிப்பிட்ட பைல் அவர்
கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும்.