புதன், 7 ஆகஸ்ட், 2013

"மண்"ணாதி "மண்"னுடன் மோதலாமா?


"மணல் ‌கொள்ளை என்பது தேசிய பிரச்னை , எனவே சுற்றுச்சூழல்துறை அனுமதியின்றி, மணல் அள்ளக்கூடாது"
என தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு நாடு முழுவதும் உள்ள மணல் குவாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் தூத்துக்குடியில் நடந்த மணல் கொள்ளை விவகாரத்தில் கலெக்டர் மேற்கொண்ட நடவடிக்கை‌யை தொடர்ந்து இன்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் வி.வி.மினரல்ஸ் மணல் ஏற்றுமதி நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பல இடங்களில் கடற்கரை பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் அனுமதியை மீறி மணல் அள்ளியதாக புகார் எழுந்தது. அப்போது நெல்லை மாவட்டத்தில் அதிகாரிகள் குழுவினர் பல இடங்களில் ஆய்வு நடத்தினர்.
suran

 தற்போது தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார், பெரியசாமிபுரம், வைப்பாறு, கலைஞானபுரம் ஆகிய இடங்களில் மணல் எடுக்க விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
suran
விவி மினரல்ஸ் நிறுவனத்தினர் அரசு ஒதுக்கிய இடங்களை தவிர மற்ற இடங்களிலும் மணல் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு நேற்று பயிற்சி கலெக்டர் சமீரன், பயிற்சி துணை கலெக்டர் மனுவேல்ராஜ் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவினரும், கோவில்பட்டி ஆர்டிஓ கதிரேசன் தலைமையில் இரண்டு குழுவினரும், கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அரசு விதிகளை மீறி அதிக ஆழத்தில் மணல் எடுத்து ஏற்றுமதி செய்துள்ளது தெரிய வந்தது.

 இந்த சோதனை நடக்கும் போது தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமாருக்கு ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, ‘இன்னும் 24 மணி நேரத்தில் நீங்கள் மாற்றப்படுவீர்கள்’ என எச்சரித்ததாக கூறப்படுகிறது.

 கடற்கரை பகுதியில் காலை 10 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 6 மணிக்கு முடிந்தது. அதற்கு பின்னர் கலெக்டர் ஆஷிஷ்குமார் அனுமதியை மீறி மணல் எடுத்தது தொடர்பாக பத்திரிகைகளுக்கு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் அரசு அனுமதியை மீறி மணல் எடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  நேற்றிரவு கலெக்டர் ஆஷிஷ்குமார், சமூக நலத் துறை துணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 இதுகுறித்து கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறுகையில், ‘அரசு அளிக்கும் எந்தப் பணியையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். புதிய பணியில் விரைவில் பொறுப்பேற்பேன்’ என்றார். மணல் மோசடியை தடுத்ததால் இந்த பணி மாறுதலா என கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

மணல் ஏற்றுமதி நிறுவனத்திற்கும் ஆளுங்கட்சியினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், இதனால்தான் கலெக்டர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டதாகவும் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையடுத்து கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ரெய்டு நடத்தினர். அது குறித்த அறிக்கை கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

புதிய கலெக்டராக அரியலூர் கலெக்டராக இருந்த ரவிக்குமார் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன.
suran
இந்த செய்தி வெளியான அடுத்த சில மணி நேரங்களில் , கலெக்டர் ஆஷிஷ்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

" தூத்துக்குடி மாவட்டம் படுக்கப்பத்து கிராமத்தில் நடந்த மணல் கொள்ளை புகாரின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டது.

 ரூ.2,40,000 மெட்ரிக் டன் தாது மணலை வி.வி.மினரல் நிறுவனமும், ரூ.2,80,744 மெட்ரிக் டன் தாது மணலை பி.எம்.சி நிறுவனமும் கொள்ளையடித்தனர்.

 தூத்துக்குடி அருகே வைப்பாறு, பெரியசாமி புரத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி பொதுச் சொத்தை அபகரித்ததாக வி.வி.மினரல் நிறுவனம் மீது வழக்கு அளிக்கப்பட்டது. மேலும், பி.எம்.சி நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தில் 8 குவாரிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் , தவிர வைப்பாறு, வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி 4,91,208 கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் அள்ளப்படுகிறது. நேற்று அதிகாரிகள் நடத்திய ஆய்வுக்கு பின் தெரிய வந்தது.

இதையடுத்து மணல் கொள்ளை தொடர்பாக வைப்பாறு வி.ஏ.ஓ, கொளத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது திருட்டுத்தனமாக மணல் அள்ளியது, பொதுச் சொத்தை அபகரித்தது உள்ளிட்ட 4-5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் . முன்பு சிவில் வழக்குகள் தான் பதியப்பட்டது.

 தற்போது கிரிமினல் வழக்காக பதியப்பட உள்ளது. இதே போன்று நெல்லையிலும் 27 குவாரிகள் செயல்பட்டு வருகிறது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதே,அதற்கு காரணம் என்ன என்று ‌நிருபர்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்றார் ஆஷிஷ்குமார்.

 மதுரை கலெக்டராக இருந்த சகாயம், கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.


 தற்போது தூத்துக்குடிகடற்கரை பகுதிகளில் கனிம மணல் குவாரிகளில் முறைகேடு குறித்து கலெக்டர் ஆஷிஷ்குமார் நடவடிக்கை எடுத்தார்.

மே மாத ஆய்வில் முறைகேடாக எடுக்கப்பட்ட மணலுக்கு மட்டுமே ரூ. 3.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 இதில் உள்ள கனிமங்களை மதிப்பிட்டு அபராதம் விதித்தால் இது போல் 20 மடங்குக்கு மேல் வரும் என தெரிகிறது.
ஜூலை மாதம் ஆய்வு நடத்தி முடித்த பின் மதிப்பீடு செய்யவில்லை. அதற்குள் கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 கலெக்டராக அரியலூர் கலெக்டராக இருந்த ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழு குவாரிகள் உள்ளன .

திருநெல்வேலி மாவட்டத்தில் 26 குவாரிகள், கன்னியாகுமரி மாவட்டத்திலும் குவாரிகள் உள்ளன.
முழுமையாக அரசு ஆய்வு நடத்தினால் பல நூறு கோடிகள் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியிருப்பது வெளி வரும்.

 மதுரையில் நடந்த கிரானைட் பூதம் போய், இப்போது தூத்துக்குடியில் மணல் குவாரி பூதம் கிளம்பியுள்ளது.

அரசு முறையாக நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலையில் தூத்துக்குடி கலெக்டராக பொறுப்பேற்றார் ஆஷிஷ்குமார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பணிகளை திறம்பட செய்தார்.
 தற்போது கனிம மணல் விவகாரம் வெளிச்சத்து வந்தது."வி.வி. மினரல்ஸ்  பற்றி தெரியாதவர்களுக்கு.வைகுண்டராஜன் என்ற மணல் மாபியாவின் நிறுவனம் தான் அது.
பி.எம்.சி.எனப்படும் பீச் மினரல்ஸ் அவரின் தம்பி சுகுமாரின் நிறுவனம்.ஏற்கனவே நெல்லை மாவட்டம் ,குமரி மாவட்டம் கடலோர கார்மணல் எனப்படும் கதிரியக்கம் உள்ள கனிமங்களை அரசை ஏமாற்றி எடுத்து வைக்க இடமில்லாத அளவு பணமலையை குவித்து விட்டாலும்,அரசையும் மக்களையும் ஓரங்கட்டி பணத்தை குவிக்கும் பணவெறி மணல் மாபியா வைகுண்டராஜன்.
இவரை எதிர்ப்பவர்கள் நெல்லை பகுதிகளில் இல்லை. இருக்க விட்டால்தானே.

suran
ஜெயா டிவி இவரின் பணத்தில் உருவானதுதான் என்பது உலகறிந்த ரகசியம்.
டாடா நிறுவனம் இவரின் பகுதியில் டைடானியம் தொழிற்சாலை உருவாக்க முன் வந்த போது இவரின் தொழிற்போட்டி எதிர்ப்பால் கால் பதிக்க முடியாமல் போனது.
 அப்போதைய முதல்வர் கருணாநிதி டாடா வுக்கு ஆதரவாக இருந்த போதும் வைகுண்டராஜன் பண,அரசியல்,சாதி ஒத்துழைப்புடன்  முறியடித்தார்.

இப்போது கூட மாவட்ட ஆட்சியர் ஆசிஸ்குமார் மாறுதல் ஆணையை அவரின் சமுகம் சார்ந்த மாலை பத்திரிக்கை :
மாலை முரசு "
"ஆசிஸ்குமார்  மாறுதலுக்கு அவர் மீது குற்ற சாட்டுகள்தான் காரணம்.அதனால் வேறு பணியிடம் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார் "என்று செய்தியை திரித்து வெளியிட்டுள்ளது.

முன்பு இவர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தது கூட இவர் மீது மேலிடம் கோபம் கொள்ள காரணமாக அமைந்தது.
அது வைகுண்டராமன் மீதே கை வைத்ததும் தீப்பிடித்துக்கொண்டது.
அழகிரியை குடும்பத்தோடு உள்ளே வைக்க ஆசை பட்டதால்தான் சகாயத்துக்கு கல் கோரி திட்டம் கொடுக்கப்பட்டது.ஆனால் சகாயமும்,அன்சுல் மிஸ்ராவும் எடுத்த நேர்மையான நடவடிக்கையால் பி.ஆர்.பி.மாட்டிக்கொண்டார்.
அதன் பின் அன்சுல் மிஸ்ரா .சகாயம் இருவருக்கும் எற்பட்ட நிலையையும்-வைகுண்டராஜனின்  அம்மா செல்வாக்கையும் ஆசிஸ்குமார் கணக்கில் எடுக்காமல் செயல்பட்டதே இன்றைய பதவி மாற்றம்.
ஆனால் "இதெல்லாம் அம்மா ஆட்சியில் சகஜமப்பா.என்று ஆசிஸ் குமார் எடுத்துக்கொள்ளவேண்டும்.  
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Click Here
suran