புதிய வகை கிருமிகள்!


suran


விலங்கினங்களிடையே நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக  ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.
மனிதர்களைப் பாதிக்கவல்ல பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தவைதான். 
பல்வேறு நோய்க் கிருமிகளை சுமக்கக்கூடிய ஒரு விலங்காக நாம் அறிந்துள்ள வௌவால் இனமொன்றை அமெரிக்க மற்று வங்கதேச விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
 நோய்க் கிருமிகளை சுமக்கவல்ல மற்ற விலங்கினங்களிலும் இப்படி புதிய வகை நோய்க்கிருமிகள் இருப்பதாகக் கணக்கிட்டால், இதுவரை அறிந்திராத மூன்று லட்சத்து இருபதாயிரம் வகை நோய்க் கிருமிகள் விலங்கினங்களிடையே இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த நோய்க் கிருமிகளை நாம் அடையாளம் காணுவதென்பது எதிர்காலத்தில் தொற்று நோய்கள் மனிதரிகளிடையே பரவுவதைத் தடுக்க உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இத்தனைக் கிருமிகளையும் கண்டறிய அறுநூறு கோடி டாலர்கள் செலவாகும் என ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது.
ஆனால் ஒரு தொற்றுநோய் மனிதர்களிடையே பெரிய அளவில் பரவிட்டாலே அதனைக் கட்டுப்படுத்த இதனைவிட பல மடங்கு அதிகமான தொகை செலவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் எம் பயோ வெளியிட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரெடிக்ட் என்ற அமெரிக்க ஆய்வுத் திட்டம் ஒன்று, உலகில் மனிதர்களும் விலங்குகளும் நெருங்கி வாழும் இடங்களில் இருந்து 240 புதிய வகை கிருமிகளை இதுவரை கண்டுபிடித்து அடையாளப்படுத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
suran


-------------------------------------------------------------------------------------------------------------------------------------

நோக்கியாவை

  வாங்குகிறது 

மைக்ரோசாஃப்ட்!


நோக்கியா நிறுவனத்தின் 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்த தொலைபேசி வர்த்தகத்தை அமெரிக்கா தொழில்நுட்ப பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
உலகளவில் மொபைல் தொலைபேசிகள் தயாரிப்பில் ஒரு காலத்தில் நோக்கியாவே முன்னணியில் இருந்தது.
ஆனால் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் வந்த பிறகு, சந்தையில் நோக்கியாவின் பங்கு வேகமாக குறைந்தது.
எனினும் நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கும் திட்டத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் முன்னணியிலுள்ள ஆப்பிள் மற்றும் சாம்சங் தொலைபேசிகள்.
ஆப்பிள் மற்றும் கூகள் நிறுவனங்களின் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் பின்தங்கியுள்ள மைக்ரோ சாஃப்ட், அச்சந்தையில் போட்டியிட நோக்கியாவின் வர்த்தகத்தை கையகப்படுத்துவது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் மென்பொருள் வர்த்தகத்தை மட்டுமே மையப்படுத்தி வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், நோக்கியாவின் தொலைபேசிப் பிரிவை விலைக்கு வாங்குவதன் மூலம் உபகரணங்கள் தயாரிப்பிலும் இறங்குகிறது.
இதையடுத்து கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் விளையாடப் பயன்படும் கருவிகள், டாப்லெட் கணினிகள், மொபைல் தொலைபேசிகள் ஆகிய அனைத்தையும் தயாரிக்கும் நிறுவனமாக மைக்ரோசாஃட் மாறும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?