முதுகு வலி! கழுத்து வலி !!


suran

பொதுவாக நாற்பது வயதிற்கு மேல்  முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும்.
 இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள்.
 நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான்.
 உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும். கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும்.
 இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவை ஏற்படுத்துவதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும். இந்நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கலாம். ஆயினும் இத்தகைய நோயை தடுக்க பல வழிகள் உள்ளன.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் எலும்புப்புரை நோய் வரக்கூடும். ஆயினும் இது பெண்களுக்கு தான் அதிக அளவில் வருகிறது. குறிப்பாக இறுதி மாதவிடாய் நிலையை அடைந்த பெண்களிடையே அதிகளவில் காணப்படுகிறது. அமெரிக்காவில் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்நோய் தாக்கம் இருக்கிறது. எனவே இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியமான ஒன்று. ஏனெனில் இந்நோய் இருப்பதாக உணரும் முன்னரே பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விடும்.
 இப்போது அந்த எலும்புப்புரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதைப் பின்பற்றி, எலும்புப்புரை நோயிலிருந்து விடுபடலாம்.
உடற்பயிற்சி - எலும்புப்புரை நோயை தடுக்க உதவும் செயல்களில் உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டால், வாரத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் வாரம் இரண்டு மூன்று முறையாவது உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.
 வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது நோயின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும். ஒரு மணி நேரம் நடைப்பயற்சி செய்வது மிக முக்கியம். நடைப்பயற்சி ன் போது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றைத் தவிர்க்கலாம். மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
உப்பு உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் - உப்பை அதிகம்
உட்கொள்ளும் போது, அது சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிலும் ஏற்கனவே கால்சியம் குறைபாடு இருந்தால், அது மிகவும் ஆபத்தாய் முடியும். மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குச் சிறுநீரில் கால்சியம் அதிகளவில் வெளியேறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

suran
கஃபைன் உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் - உடலில் கால்சியம் உறிஞ்சுதலை, கஃபைன் தலையிட்டு கெடுத்துவிடும். ஆகவே கஃபைன் இருக்கும் சோடா, காபி மற்றும் சாக்லெட் போன்றவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.
புகைப்பிடித்தல் கூடாது - புகைப்பிடித்தல் எலும்பு முறிவுகள் குணமடைவதை தடை செய்கின்றது மற்றும் உடலில் மீண்டும் புதிய எலும்பு வளர செய்யும் திறனையும் குலைக்கின்றது. ஆகவே புகைப்பிடித்தலை நிறுத்தினால், எலும்புகள் வலுவடைவதோடு, முறிவிலிருந்தும் விரைவில் குணமடையலாம்.
கால்சியம் அதிகம் உட்கொள்ளுதல் - தேசிய சுகாதார நிறுவனங்கள் பரிந்துரையின் படி, பெரியவர்களுக்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 1கிராம் வரை கால்சியம் உடலில் சேர வேண்டும். இந்த பரிந்துரை 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், 70 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும், 1.2 கிராம் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது. கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம்.
இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
 பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை உண்ண வேண்டும். சோயாவில் கால்சியம் மிக அதிகம் உள்ளதால் இதையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள், தினம்தோறும் உணவில் மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
வைட்டமின் டி அதிகப்படுத்துதல் - வைட்டமின் டி உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
குறிப்பாக இத்தகைய வைட்டமின் டி சத்தை சூரிய வெளிச்சமானது அதிகம் உற்பத்தி செய்கிறது.
மேலும் பால், ஆரஞ்சு மற்றும் காலை உணவு தானியங்களில் கால்சியம் மட்டுமல்லாது, வைட்டமின் டி சத்தும் செறிந்துள்ளது.
suran
சோடா உட்கொள்ளுதலை கவனித்தல் - 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சோடா, கோலா ஆகியவை எலும்புகளை உருக்குவது தெரிய வந்துள்ளது.
இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சோடா எலும்பை வலுவிழக்க செய்கிறது மற்றும் சோடாவை அதிகம் அருந்துபவர்கள் கால்சியம் நிறைந்துள்ள பாலை அவ்வளவாக உட்கொள்ள மாட்டார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
உட்கொள்ளும் மருந்துகளில் கவனம் - சில மருந்துகள் எலும்புப்புரை வருவதற்கான வாய்ப்புகளை அதிகபடுத்துகின்றன.
 அதில் அழற்சி எதிர்ப்பு கார்ட்டிகோஸ்டீராய்டுகள் (Anti - Inflammatory corticosteroids) எனப்படும் ப்ரிட்னிசோன் (Prednisone) முக்கியமான காரணி ஆகும்.
மது உட்கொள்ளுதலை கட்டுப்படுத்தல் - ஒரு நாளைக்கு சிறிதளவு என்று அளவு வைத்து மது அருந்துதல் உண்மையில் எலும்பு முறிவுகளை தடுக்கும்.
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் வகையில், அளவுக்கு மீறி மது அருந்தினால் கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து, உடலில் கால்சியம் அளவுகளை சீர்குலைத்து, எலும்பை வலுப்படுத்தும் ஹார்மோன்களைக் குறைக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேயை விரட்­டு­வ­தற்­காக மந்­தி­ரங்­களை ஜெபித்த நிலையில் குழி ஒன்­றுக்குள் இறங்கி தன்னை மண்ணால் மூடிக் கொண்ட நபர் சட­ல­மாக மீட்­கப்­பட்ட சம்­பவம் ஒன்று.
ஹோமா­கம பிர­தே­சத்தில் இன்று காலை இடம்­பெற்­றுள்­ளது. இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வர் உள­வியல் விஞ்­ஞான ஆலோ­சகரும் ஆங்­கில ஆசி­ரிய­ரு­மாவார்.

ஹோமா­கம, கிரி­வத்­து­டுவே பிர­தே­சத்தில் உள்ள வீடொன்றில் பேய் குடி கொண்­டுள்­ள­தாக நம்­பிய இவர்கள் இந்த முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
suran
இருப்­பினும் குறித்த வீட்டில் வைத்தே பேயை விரட்­டினால் வீட்­டி­னரோ அல்­லது பேயை ஓட்­டு­ப­வர்­களோ இறந்து விடலாம் என்ற இவர்­களின் ஐதீகம் கார­ண­மாக வேறொரு வீட்டின் காணியில் வைத்தே பேயை விரட்டும் முயற்­சியில் இறங்­கி­யி­ருந்­தனர்.

இவர் நீண்ட நேர­மாக மந்­தி­ரங்­களை உச்­ச­ரித்து விட்டுப் பின்னர் அங்கு தோண்­டப்­பட்­டி­ருந்த குழியில் இறங்கி தன்னை முழு­மை­யாக மூடச் செய்­துள்­ளார் . அதன் போது அவர் ஒரு மணித்­தி­யா­லத்தின் பின்னர் குழி­யி­லி­ருந்து ஊசி போன்ற ஒரு பொருள் வெளி­வரும் வரும் என்றும் அப்­போதே குழியைத் தோண்ட வேண்­டு­மென்றும் கூறி­யுள்­ளார்.

இருப்­பினும் ஒரு மணித்­தி­யாலம் கடந்த நிலை­யிலும் குழி­யி­லி­ருந்து எதுவும் வெளிப்­ப­டாத நிலையில் அங்­கி­ருந்­த­வர்கள் குழியைத் தோண்டி பார்த்த போது இவர் மர­ணித்த நிலையில் காணப்­பட்டார்.

சம்­பவம் இடம்­பெற்ற இடத்­துக்கு விரைந்த பொலிஸார் இவரின் சட­லத்தை ஹோமா­கம வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­த­துடன் அங்­கி­ருந்து து பூஜைப் பொருட்களையும் பூனை ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
 இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்'
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ' வங்காள மனைவி' சுட்டுக் கொலை

தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
suran
ஆப்கானில் தனது வாழக்கை குறித்து காபூலிவாலாவின் வங்காள மனைவி என்ற பெயரில் இவர் எழுதிய புத்தகத்தில் அவர் தனது ஆப்கன் கணவர் ஜான்பாஸ் கானுடன் வாழ்ந்த வாழ்க்கையை வர்ணித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஆப்கானில் இருந்து தான் தப்பி வந்தது குறித்து சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய அந்தப் புத்தகம் 2003 ஆம் ஆண்டு இந்தியில் திரைப் படமாக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மிகவும் விற்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.
சமீபத்தில்தான் பேனர்ஜி தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஆப்கானுக்கு மீண்டும் போயுள்ளார். அங்கே சையத் கமாலா என்ற பெயரில் அறியப்படும் இவர் சுகாதார சேவைப் பணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அங்குள்ள பெண்களின் வாழக்கை குறித்த வீடியோ பதிவுகளையும் தனது பணி நிமித்தம் இவர் செய்துள்ளார்.
மாகாண தலைநகரான கரானவில் உள்ள இவரது வீட்டுக்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள் இவரின் கணவரையும் வீட்டில் உள்ள மற்றவர்களையும் கட்டுப் போட்டுவிட்டு இவரை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பேனர்ஜியின் உடலை அருகேயிருக்கும் மதப் பள்ளிக் கூடத்தின் அருகே அவர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
அதே நேரம் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று தாலிபான்கள் மறுத்துள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?