தொல் காப்பியர் எங்கள் சாதி.!

ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்) தஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
suran
அதற்கு பின்புஇதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.
பல்வேறு சாதிய அமைப்பினர் தங்கள் சாதியத் தலைவர்களுடன் வாணவெடி, தப்புத்தாரையுடன் கோசமிட்டபடி ஊர்வலமாக வந்து ராஜராஜசோழன் சிலைக்குமாலை அணிவித்தனர். முக்குலத் தோர் பாதுகாப்பு பேரவை, முக்கு லத்தோர் பாசறை, தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என தனித்தனியாக வந்து தங்கள் சாதியின் பெயரைச் சொல்லி கோசமிட்டு தங்கள் சாதியுடன் ராஜ ராஜன் பெயரையும் சேர்த்து மகிழ்ந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வரவில்லை. தனித்தனியாக ராஜராஜன் எனது சாதியைச் சேர்ந்தவன் என்பதை பறைசாற்றி கோஷமிட்டனர்.
தஞ்சை நகரில் பேனர்கள், போஸ்டர்கள், டிஜிட் டல், தட்டிகளில் ராஜராஜனை தங்கள் சாதியைச் சேர்ந்தவன் என வெளிப்படுத்துவதில் அனைத்து சாதியினரும் முயற்சி செய்தனர்.ராஜராஜன் எங்கள் சாதியைத் தான் சேர்ந்தவன் என்று கூறி மக்கள் தமிழக முன்னேற்றக்கழகம் புரட்சி கவிதாசன் தலைமையில் திரண்டு வந்து மாலை அணிவித்தனர். மள்ளர் இனத்தைச் சேர்ந்தவன் மாமன்னன் ராஜராஜன் எங்கள் இனமே எனக்கூறி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மாலைஅணிவித்தனர். சோழநாடு மள் ளர் மீட்புக் கழகம், தமிழ்நாடு தேவேந்திரப் பேரவை ஆகி யோரும் சாதியைச் சொல்லி மாலை அணிவித்தனர். 
suran
மேலும் உடையார் சமூகத்தைச் சேர்ந் தவர்கள் ராஜராஜன் எங்கள் சாதி என்று கூறி போஸ்டர் அடித்து மகிழ்ந்தனர். ஏராளமான சாதிய சங்கத்தினர் ராஜராஜசோழனை தங்கள் சாதி எனக்கூறுவதில் ஆனந்தம் அடைந்ததை பார்க்கும் போது தமிழகம் எதை நோக்கிப் போகிறது என கவலை ஏற்பட்டது. ராஜராஜசோழன் கி.பி.985ல் அரசனாக பதவியேற்றான். கி.பி.1012 வரை அரியணையில் இருந்தான். 1014ல் மறைந்தான். மலையோ, கருங்கல்லோ இல்லாத தஞ்சையில் புதுக்கோட்டை பகுதியிலிருந்து 2 லட்சம் டன் கருங்கற் களை கொண்டு வந்து 216 அடி உயரகற்றளியை உருவாக்கியது சாத னையே. இது பொறியியல் துறையின் அதிசயம்.
இதைக் கட்டி முடிக்க 6 ஆண்டுகள் ஆனதாகச் சொல்லப்படுகிறது. தஞ்சையைச் சுற்றியுள்ள 200 கிராமங் களிலிருந்து 1000க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் உழைத்துள்ளனர். கோவில் கல்வெட்டு களில் பல விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் கட்டும் போது எத்தனை தொழிலாளர்கள் பலியானர்கள் எவ்வளவு பேர் ஊனமுற்றோர்கள் என்ற விவரம் மட்டும் இல்லை.ராஜராஜன் காலத்தில் பிராமணியம் உச்சத்தில் இருந்து கோலோச்சியது. ராஜராஜனை பின்னிருந்து இயக்கியவர் படைத் தலைவர் கிருஷ்ணன் ராமன் என்கிற மும்முடிச் சோழர் பிரம்மாதிராயன் என்கிற பிராமணர் ஆவார். பிராமணர்கள் வேதம் பயில பள்ளிகள் இருந்துள் ளன. பிராமணர்களுக்கு நூற்றுக் கணக்கான கிராமங்கள் தான மாக வழங்கப்பட்டுள்ளன. பிரம்ம தேயங்கள், சதுர்வேதிமங்களம் என இக்கிராமங்கள் அழைக்கப் பட்டுள்ளன. இவர்களுக்கு மட்டும் வரி கிடையாது. உயர் சாதி மக்களுக்கு வரி குறைவாகவும் தாழ்ந்த சாதி மக்க ளுக்கு வரி அதிகமாகவும் இருந் துள்ளது. பெரியகோவில் கல் வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்தப் பகுதிகளை குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராஜராஜசோழன் காலத் தில்தான் தேவதாசி முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிமை முறையும் இருந்துள்ளது. பெண்கள் அடிமைகளாகவிற்கப்பட்டுள்ளனர். கோவிலில் பணி செய்ய பெண் கள் குடும்பத்துடன் விற்கப் பட்டுள்ளனர்.
பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந் துள்ளது. ராஜராஜசோழன் தந்தை சுந்தரசோழன் இறந்ததும் மனைவி வானவன்மாதேவி உடன்கட்டை ஏறியுள்ளார். பிராமணரும், வேளாளரும் தனிச் சிறப்புப் பெற்றிருந்தனர். கொலைக்குற்றமே ஆனாலும் இவர்களுக்கு மரண தண்டனை கிடையாது. பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்க் கக்கூடாது. எதிர்ப்போருக்கு தண்டனை எனச்சட்டம் இருந் துள்ளது.ராஜராஜன் ஆட்சியில் சாதிய அடுக்கில் மேலே இருந்தவர்கள் அனைத்து சுகங்களையும் அனு பவித்துள்ளனர். மற்ற உழைக்கும் பிரிவினர் துன்பப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ இவர்கள் சுகதுக்கங்களை இழந்துள்ளனர். ராஜராஜசோழன் ஆட்சி என் பது பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை. விவசாயிகள், தொழி லாளர்கள், பெண்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தே வாழ்ந்துள்ளனர்.
வரலாறு இப்படி யிருக்க இன்றைய சாதிய தலை வர்கள் புறப்பட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து சாதிய மோதலுக்கு அடிகோலுகிறார்கள்.தமிழகத்தில்தேசியத் தலை வர்கள் சமாதியில் அஞ்சலி என்கிற பெயரில் தேசிய தலைவர் களையே தேசத்திற்காக உழைத்த வர்களையே சாதிய வட்டத்தில் அடைக்கும் போக்கு அதில் இளைஞர்களை சாதி வெறியூட்ட மோதலை உருவாக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது.இது நல்லதல்ல.
suran
தமிழக அரசு இது போன்ற சாதி சங்கங்களை அடக்கி வைக்க வேண்டும் .விடுதலைப்போராட்ட தலைவர்களை எல்லாம் சாதி கூண்டுக்குள் அடித்ததால் இன்று அவர்கள் சிலைகள் -நினைவு சின்னங்கள் அனைத்தும் இரும்பு கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட வெண்டிய நிலை தமிழகத்தில்.
கட்ட பொம்மன்,பெரும்பிடுகு,மருது பாண்டியர்,சங்கரலிங்கம் அழகு முத்து,முத்துராமலிங்கம் என்று பலர் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடுவதற்கு பதில் மற்ற சாதிக்கார வெறியர்கள் இவர்களின் நினைவு சின்னங்களை அவமானப்படுத்தும் நிலை ஏற்பட சாதி சங்கங்கள்தான் காரணம்.
இதை தடுக்க வேண்டிய அரசோ அந்தந்த சாதி தலைவர்கள் நினைவு,பிறந்த நாள் என்று கொண்டாட அனுமதித்ததுடன் அமைச்சர்களும் ,அரசியல் கட்சிக்காரகளும் மாலைகளை தூக்கிக்கொண்டு போய் மரியாதை என்ற பெயரில் சாதி வாக்குகளை கணக்கிட்டதும்தான் நடக்கிறது.
கடைசியாக இந்த சாதி கூட்டத்தால் அவமனப்பட்டுள்ள மக்கள் தலைவர்கள் காமராஜரும் ,வ.உ.சி யும்.
இதில் சந்தடி சாக்கில் அந்தந்த சாதியை சார்ந்த மக்கள் விரோத ,சமுக விரோத ரவுடிகளும் சாதிய மாவீரர்களாக ஆக்கப்பட்டு அவர்களுக்கும் குரு பூசை,நினைவு நாள் என்று வெறியுடன் சுவர் முழுக்க எழுதி கலவரங்களை உண்டாக்கும் அவலம் தமிழகத்தில் உண்டாகியுள்ளது.
suran
சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ்வாடி,என்று கட்சிகளும் இங்கு உருவாக அக்கட்சிகளின் கொள்கை பிடிப்பா காரணம் .சாதிய அடிப்படைதானே.?

தமிழக அரசு கொஞ்சம் சாத்திய மைப்புகள் தலைவர்களின் குரூ  பூசைகள் ஆடம்பரத்தை,பரபரப்பை அடக்கி வைக்க வேண்டும் .இப்போது செய்துவரும் தடை உத்திரவு கிட்டத்தட்ட சரிதான் .
ஆனால் ஒவ்வொரு நிகழ்வு வரும் போது தடை போடுவதை விட இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வேன்கள் ,கார்களில் சாதி கட்சிக்கொடிகளை கட்டி தெரு எங்கும் கோசம் என்ற பெயரில் அலறிக்கொண்டு போவதையும் மற்ற சாதி அவமதிப்பு கோசங்களையும் போடுவதை தடை நிரந்தரமாக தடை செய்திட வேண்டும் .
அமைச்சர்கள்,சில ஐ.ஏ .எஸ் .அலுவலர்கள் தங்கள் சாதி விழா -மத விழாக்கள்.கருத்தரங்குகளில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் .தா ங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தங்கள் சாதி தலைவர்கள் படம்,சிலை கள் அமைப்பதை தடுக்க வேண்டும் .அவர்கள் மக்கள் தலைவர்களாக இல்லாமல் குறிப்பிட்ட சாதி தலைவர்களாக ஆக்கப்பட்ட பின்னர் அவர்கள்  நினைவை பொது இடங்களில் எப்படி வைக்கலாம்.வேண்டுமானால் அவர்கள் வீடுகள்,சொந்த இடங்களில் வைத்துக்கொள்ளட்டும்.இதன் மூலம் அவமானப்படுத்தும் நிகழ்வுகளும் குறையும்.பொது இடத்தில் வைத்து சேதமானது அவமானமானது என்றால் சாலை மறியல் செய்தால் அவர்களின் வாக்கு எண்ணிக்கையை கண்டு கொள்ளாமல் அரசு அவர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் .சிறையில் கூட அடைக்கலாம் .அந்த இடத்தில் வேறு சின்னம் வைத்து தரவோ ,அவர்கள் அமைக்க அனுமதித்தோ சம்மதிக்க கூடாது.

இன்று ராஜ ராஜ சோழன் நாளை தலையாங்கானத்து சேரூ  வென்ற பாண்டியன் என்று இவர்கள் சாதி வளர்ச்சி அடைந்து விடும் அபாயத்தை தடுக்கும் அதிகாரம் அரசு கையில்தான் உள்ளது.
suran





மாலையை தூக்கிக்கொண்டு வரும் சாதி கட்சிகளை முதலிலேயே ஓட ,ஓட விரட்டி அடித்தால் மட்டுமே சாதி கலவரங்களை தடுக்க இயலும்.


பள்ளிகளை பிள்ளைகளை சேர்க்கவே சாதியை கட்டாயமாக கேட்கும் அரசு ,அரசு வேலைகளிலேயே சாதி அடிப்படையில் இடம் ஒதுக்கும் அரசு ,வேலை விண்ணப்பம் வழங்குவதிலேயே 500  - 100 என்று வித்தியாசம் காட்டும் அரசு இதை எல்லாம் செய்யுமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?