2013 -சில பர,பர செய்திகள்..
--------------------------------------------
ஆம் ஆத்மி பதவியேற்பு.
லட்சிய[மே ] திமுக.?
'தியேட்டரில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே, சந்தாதாரர்களின் டி.டி.ஹெச்-சில் படம் ஒளிபரப்பப்படும்!’ - 'விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்துக்கு கமல் திரி கிள்ள, திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, பணப் பஞ்சாயத்து என்று அதகளம் ஆரம்பம். இடையில் எதிர்பாராமல் புகுந்தது மதம். விசேஷத் திரையிடலில் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுக்க, 'விஸ்வரூபம்’ வெளியீட்டுக்கு விழுந்தது தற்காலிகத் தடை. 'என் படைப்புச் சுதந்திரத்துக்கு பங்கம் வந்தால், நாட்டை விட்டே வெளியேறுவேன்!’ என்று அந்த வினோதமான சூழலை கமல் வெகு கவனமாகக் கையாண்டார். 'விஸ்வரூபம் வெளியாகும் 524 திரையரங்குகளில் பாதுகாப்புக்கு என நியமிக்க 56,440 போலீஸ் நம்மிடம் இல்லை’ என்று 'விஸ்வரூபம்’ தொடர்பான நீண்ட விளக்கத்தில் குறிப்பிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
தேசியக் கவனத்தை ஈர்த்த விவகாரம், ஏகப்பட்ட பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'ஏழு காட்சிகள்’ நீக்கப்பட்டு வெளியானது. சர்ச்சை கொடுத்த ஓப்பனிங் ப்ளஸ் கமலின் ஆக்ஷன் அவதாரம் படத்துக்கு 'விஸ்வரூப’ வெற்றி கொடுத்தது!
'2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை ஏன் அரசிதழில் வெளியிடவில்லை?’ என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டிக்க, உடனடியாக அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட, 'என் 30 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் இதைத்தான் மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்’ என்று பூரித்தார் ஜெயலலிதா. காவிரிப் பாசன விவசாயச் சங்கங்கள், ஜெயலலிதாவுக்கு 'பொன்னியின் செல்வி’ விருது வழங்கின. தீர்ப்பு, அரசிதழில் இடம்பிடித்ததில் தி.மு.க-வின் பங்கு குறித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார் !
! 'கடந்த 10 ஆண்டுகளில், விவசாயத் தொழிலைக் கைவிட்டு நகரத்தை நோக்கி நகர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, சுமார் ஒன்பது லட்சம்’ என்றது தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. அன்று, ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கலாம். இன்று, டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ 5 ரூபாய். கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவு, ஆட்கள் பற்றாக்குறை... போன்ற பல காரணங்கள், விவசாயிகளை 'டவுன்’ பஸ் ஏறவைத்துவிட்டது! ஏர் உழைப்பாளர்களின் கோரிக்கைகள், 'பார்’ நடத்தும் அரசாங்கத்தின் செவிகளை எட்டுவதாக இல்லை!
ஆசிட் விற்பனை தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்த, வினோதினியின் உயிரைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று. தன் காதலை ஏற்றுக்கொள்ளாத வினோதினி மீது, 2012 நவம்பரில் ஆசிட் வீசினான் சுரேஷ்குமார். முகம் முழுக்க வெந்து, கண் பார்வையைப் பறிகொடுத்த வினோதினி, மூளை நரம்பு பாதிக்கப்பட்டு, நான்கு மாத சிகிச்சைக்குப் பின் பரிதாபமாக இறந்தார். சுரேஷ்குமாருக்கு, காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மகளின் மரணம் அளித்த நிம்மதியற்ற வாழ்க்கைச் சூழல் காரணமாக, வினோதினியின் தாய் சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்!
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவ முகாமின் மணல் மூட்டைகளுக்கு மத்தியில் பிஸ்கட் சாப்பிடும் படத்தையும், பிறகு அவன் கொல்லப்பட்டுக்கிடக்கும் காட்சிகளை யும் வெளியிட்டது சானல் 4. அந்தப் படங்கள் தமிழ கத்தைக் கொதிகலனாக்கின. குறிப்பாக, தமிழகக் கல்லூரி மாணவர்கள், ஐ.நா.சபையில் தாக்கல்செய்யப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்து அதை காங்கிரசு எற்க மறுத்ததால் தி.மு.க-மத்திய அமைச்சர்கள் அனைவரும் அமைச்சரவையில் இருந்து விலகினார்கள்!
2012 அக்டோபரில், சென்னையில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலில் இருந்து தப்பும்போது மரணமடைந்தார் மெரைன் இன்ஜினீயர் நிரஞ்சன். ஒரே மகனை இழந்து பரிதவித்து நின்ற நிரஞ்சனின் பெற்றோர் கோதண்டபாணி-பாரதி தம்பதியை, மகனின் படிப்புக்கு வாங்கிய கடன் சுமையும் அழுத்தியது. துயரம் தாளாமல் தங்களின் 28-வது திருமண நாளில் தற்கொலை செய்துகொண்டார்கள். பிரதீபா காவேரிக் கப்பல் நிர்வாகம் வழங்கிய இடைக்கால நஷ்டஈட்டுத் தொகையை நீதிமன்றம் சட்டபூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், பணி அலட்சியத்தால் நஷ்டஈடு உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்காததால், இரண்டு உயிர்கள் பறிபோயின!
துயரப் பெருங்கடலில் மிதக்கிறார்கள் தமிழகத் தில் வசிக்கும் 'இந்திய’ மீனவர்கள்! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது, வலை-படகுகள் பறிமுதல்... என அட்டூழியத்தின் உச்சத்துக்குச் சென்றன சிங்களக் கடற்படையின் வரம்புமீறல்கள். '1974-ல் கச்சத்தீவைத் தாரைவார்த்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் செல்லாது’ என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய, 'அந்த ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை கிடையாது’ என தன் பங்குக்கு அதிர்ச்சி அளித்தது மத்திய அரசு!
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம், இரண்டு முழு ஆண்டுகளைப் பூர்த்திசெய்தது. இடிந்தகரை போராட்டப் பந்தலில் உறுதியுடன் அமர்ந்திருந்த மக்களின் உறுதியைக் குலைக்க, மணல் ஆலை அதிபர்கள் மீனவர்களைப் பிளவுபடுத்தும் காரியங்களை மேற்கொள்ள, சமீபமாக இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 8 பேர் பலியானார்கள்.
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சட்டப் போராட்டம் 15 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. மார்ச் மாதம், அந்த ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேற, உடனடியாக ஆலையை மூடச் சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டதோடு, ஆலையின் மின்சார இணைப்பையும் துண்டித்தது. ஆனால், பின்னர் உச்ச நீதிமன்றம், 'ஆலை இயங்கலாம்’ என்று இறுதித் தீர்ப்பு அளித்தது. அசுர பலமிக்க பன்னாட்டு ஆலையைக் கட்டுப்படுத்தும் சக்தி, மக்களின் போராட்டங்களுக்கோ, மாநில அரசுகளுக்கோகூட இல்லை பன்னாட்டு நிறுவனங்கள் கொட்டும் கோடிக்கணக்கான .பணத்துக்கு மட்டுமே உள்ளது என்பதை மீண்டும் உணர்த்தியது நாசகார ஸ்டெர்லைட்!
தந்திச் சேவை, தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. 160 ஆண்டுகளாக கடைக்கோடி இந்தியனிடமும் தகவலைக் கொண்டுசேர்த்த தந்தி சேவைக்கு, சமீபமாக மக்களிடையே வரவேற்பு குறைந்தது. வருடத்துக்கு 75 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் தந்தி சேவைக்கு, 100 கோடி ரூபாய் செலவழித்து வந்தது பி.எஸ்.என்.எல். நிறுவனம். தந்திக்கு 'தந்தி’யடித்த ஜூலை 15-ம் தேதி அன்று, தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட் டோர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு 'இறுதித் தந்தி’ அனுப்பி வரலாற்றுப் பெருமை ஈட்டும் காகிதத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்!
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரை உருவாக்கிய அண்ணாமலை அரசர், 1928-ம் ஆண்டு கல்வி நிலையங்களையும், 20 லட்ச ரூபா யையும் ஊராட்சி அமைப்பிடம் கொடுத்துவிட்டு, தன் வாரிசுகளை இணைவேந்தர்களாக நியமிக்கும் அதிகாரத்தையும் விட்டுச் சென்றார். ஆனால், அவருடைய வாரிசுகள் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு எனக் கடும் நடவடிக்கைகள் எடுக்க, கடந்த ஓர் ஆண்டாக ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சிறப்புச் சட்டம் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியது !
நள்ளிரவில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று, எழும்பூர் சாலையோரத்தில் தூங்கிய 13 வயது முனிராஜைக் கொன்று, 10 வயது சிறுமி சுபாவைப் படுகாயப்படுத்தினார் ஷாஜி. மோகன் பிரீவரீஸ் நிறுவன உரிமையாளர் புருஷோத்தமனின் மகனான ஷாஜி, 20 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு, ரகசியமாக வந்து ஜாமீன் பெற்றுவிடலாம் என்று பாங்காக்கில் இருந்து கொச்சிக்கு வர, அங்கேயே அவரைக் கைது செய்தது போலீஸ்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழகம் உள்பட தென்னிந்தியாவின் பெருமளவு மின்தேவையைப் பூர்த்திசெய்கிறது. இதன் 6.44 சதவிகிதப் பங்குகள் ஏற்கெனவே விற்கப்பட்ட நிலையில் மேலும் இதன் 5 சதவிகிதப் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று 460 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசுக்கு, செபி பரிந்துரைத்தது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாகச் செயல்பட்ட கிரானைட் குவாரிகளை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பூட்டி சீல் வைத்தார். பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து அன்சுல் மிஸ்ரா திடீரென மாற்றப்பட்டார். கிரானைட் மோசடி தொடர்பாக பதிவான 74 வழக்குகளில், 44, பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது பாய்ந்தன. தங்கள் நிறுவனத்தைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பி.ஆர்.பி., உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது!
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரிலும் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும் மற்றும் சில இந்து அமைப்புகளின் பிரமுகர்களும் கொடூரமாகக் கொல்லப்பட, 'அரசும் போலீஸாரும், இந்து அமைப்பினரின் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக’ பா.ஜ.க. குற்றம்சாட்டியது. ஆடிட்டர் ரமேஷைக் கொலைசெய்தது 'போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுக்கர் சித்திக் ஆகிய தீவிரவாதிகள்தான் என்று போலீஸ் அறிவித்தது. அந்த நால்வரில் அபுபக்கர் தவிர மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்!
'தலைமை தாங்கும் நேரம் வந்து விட்டதாக சுவரொட்டியில் போடப்பட்டதால் நடிகர் விஜய் ’ தலைவா ’ படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டலால், திரையரங்க உரிமையாளர்கள் மிரள, 'தலைவா’ தமிழகத்தில் வெளியாகவில்லை. அரசும் திரையரங்கினரை மிரட்டியதால் கமல் விசுவரூபத்தில் எதிர்த்து போராடியது போல் விஜய்செய்யாமல் , கொடநாட்டுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்திக்கக் காத்திருந்தும்,அடிமைத்தனமான அறிக்கைகள் விட்டும் ஜெயலலிதா பாராமுகம்தான். இதற்கிடையில் படத்தின் திருட்டு டி.வி.டி. அமோகமாக விற்க, படத்தயாரிப்பாளர் அழுது மாரடைப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்பட , ஒருவழியாக, படத் தலைப்பில் 'Time to lead’ என்ற வாசகம் நீக்கப்பட்டு, வெளியானது. விஜயின் தைரியமற்ற செயல்பாடுகளால் வெறுப்புற்ற ரசிகர்களும் மக்களும் படத்தை கணடுகொள்ளாமல் போக படம் சுருண்டுவிட்டது.கடைசி வரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆட்களைக்காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை.!
கழிவு நீர் குடி நீரில் கலப்பது இன்று சர்வசாதாரணம். ஆனால், இந்த வருடம் கச்சா எண்ணெய் கலந்தது திகீர் களேபரம். வட சென்னை தண்டையார்பேட்டை பகுதி நிலத்தடி நீரில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கலந்தது. 'பாதிக்கப்பட்ட வீடுகளில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்ற வேண்டும். அதுவரை பாதுகாக்கப்பட்ட குடிநீரை அவர்களுக்கு எண்ணெய் நிறுவனமே வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனாலும் தரமான குடிநீர் கிடைக்காமல் அவதியில் இருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்!
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட சரத்குமார் தலைமையிலான அணி ஓர் ஒப்பந்தம் போட்டுவிட, விஷால் தலைமையிலான இளம் நடிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதல் பின்ன ணியுடன் அரங்கேறிய சங்கத்தின் 60-வது பொதுக் குழுவில், நீலநிற ஜீன்ஸ், வெள்ளைச் சட்டை அணிந்துவந்த விஷால், ஆர்யா, ஜீவா, 'ஜெயம்’ ரவி... உள்ளிட்ட அதிருப்தி கோஷ்டியினர், காரசாரமாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 'சங்கத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும்’ என்று பூசி மெழுகினார் சரத்குமார்!
கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கொலைவாளினை எடுத்த மூன்று கல்லூரி மாணவர்களால் அதிர்ந்தது தமிழகம். தூத்துக்குடி மாவட்டம் இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமாரை, அதே கல்லூரி மாணவர்கள் டேனிஸ், பிச்சைக்கண்ணு, பிரபாகரன் ஆகியோர் துள்ளத்துடிக்க வெட்டிக் கொன்றனர். சக மாணவிகளைக் கிண்டலடித்த அந்த மூவரையும் முதல்வர் சுரேஷ்குமார் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அந்தக் கோபமே, கொலை செய்யத் தூண்டியது என்கிறது காவல் துறைக் குறிப்பு!
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் கலந்துகொண்ட 6.6 லட்சம் பேரில் 27,092 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 'தேர்வு வாரியத்தின் அணுகுமுறை எதேச்சதிகாரமாக இருக்கிறது. கடந்த ஜூலையில் நடந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு வினாத்தாளில் கணியன் பூங்குன்றனாரை 'கனியன்பூதுகுன்றனார்’ என்றும், இளங்கோவடிகளை 'இளதுகோவடிகள்’ என்றும் குறிப்பிட்டது உள்ளிட்ட 47 அச்சுப்பிழைகள். ஆகவே, அந்தத் தேர்வு முடிவை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, 'இதுபோன்ற எழுத்துப்பிழைகளுக்கு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்’ எனக் கடுமையாகக் கண்டித்தார்!
1913-ல் 'ராஜா ஹரிச்சந்திரா’வை, தாதா சாஹேப் பால்கே வெளியிட்டதில் தொடங்கும் இந்திய சினிமாவின் வரலாறுக்கு இது 100-வது ஆண்டு. 'சினிமா-100’ கொண்டாட்டத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து அரங்கேற்றியது தமிழக அரசு. ஆனால், முன்னாள் முதல்வரும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையுமான கருணாநிதியின் படைப்புகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டது .முதல் கமல் ஹாசன் ,ரஜினி போன்றவர்களு க்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது வரை ஏகப்பட்ட முறைகேடுகள் . மக்களின் வரிப்பணம் 10 கோடி செலவில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் நிகழ்ச்சியாகவே முடிந்தது 'சினிமா-100’ விழா!
தென்தமிழகக் கடற்கரையோர செந்நிற மணலில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், 'சட்டவிரோதமாகச் செயல்பட்டு, 96,120 கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளத்தைக் கொள்ளையடித்திருக்கிறது’ என்று புகார் கிளம்ப, மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார், வைகுண்டராஜனின் நிறுவனங்களைச் சோதனையிட உத்தரவிட்டார். ஆனால், சோதனை நடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஆஷிஸ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்! வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சோதனைக்குப் பிறகு மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது!
'அரசு வேலைவாய்ப்புகளில் அதிக இடஒதுக்கீடு’ உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைளை வலியுறுத்தி விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சென்னையில் போராடினார்கள். கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து திடீர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டவர்களை மொத்தமாகப் பிடித்துச் சென்று புறநகர்ப் பகுதிகளிலும் சுடுகாடுகளிலும் இறக்கிவிட்டு வந்தது போலீஸ். திசை புரியாமல் பசியில் சுருண்டு விழுந்தவர்கள் முன்னிலும் தீவிரமாகப் போராடினார்கள். காவல் துறையின் அராஜகத்தை உயர் நீதிமன்றம், 'மனித உரிமை மீறல்’ எனக் கண்டித்தது.!
'அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று ஒழித்தது இலங்கை. அங்கு நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டால் அதற்கான விளைவை மத்திய அரசு சந்திக்க வேண்டிவரும்!’ என்று கருணாநிதி எச்சரித்தார். 'இந்தியாவில் இருந்து யாருமே கலந்துகொள்ளக் கூடாது’ என்று தமிழகச் சட்ட சபையும் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள, 'அரசியல் நெருக்கடியால் மன்மோகன் சிங் வரவில்லை!’ என்பது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கிண்டல்!
மதுரையில் அத்வானியின் பயண வழியில் பைப் வெடிகுண்டு வெடிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 'போலீஸ்’ பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகியோர் இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் கொலைகளில் சேர்க்கப்பட்டார்கள். முதலில் 'போலீஸ்’ பக்ருதீன் பிடிபட, ஆந்திராவின் புத்தூரில் பதுங்கியிருந்த மற்ற தீவிரவாதிகளைப் பிடிக்கச் சென்றபோது இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தீவிரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பதிலடியாகத் தாக்கிய போலீஸார், அவர்களைக் கைது செய்ததோடு 17 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றினர்!
தமிழக சட்டமன்றத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றிக்கொண்டே, ஈழத் தமிழர்களின் தியாகங்களைப் போற்ற தஞ்சையில் நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்தது தமிழக அரசு. முற்றத்துக்கு முன் இருக்கும் பூங்காவும் சுற்றுச்சுவரும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. !கருணாநிதியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நெடுமாறன்,சீமான் போன்றோர் இந்த இடிப்புக்கு காரணமான ஜெயலலிதாவை கண்டு கொள்ளாமல் நெடுஞ்சாலைத் துறையையும்,மத்திய அரசையும் மட்டுமே கண்டித்து அறிக்கைகள் விட்டது இந்த ஆண்டின் சிறந்த சிரிப்பு.
நன்றி:விகடன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் அபாயச் சங்கு!
-----------------------------------------------------------
"அரசு செலவுகள் அதிகரித்து வருகின்றன.
அதனை குறைத்திட தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியத்திற்காக ஒதுக்கப்படும் 2.6 சதவிகித நிதியை 1 .4 சதவிகிதமாக குறைக்க வேண்டும். அதாவது ஒட்டுமொத்த மானியத்தில் 1.2 சதவிகிதத்தை குறைக்க வேண்டும் "
என்று மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா அபாய சங்கை ஊதியிருக்கிறார்.
2013-14 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ஏற்பட்ட பற்றாக்குறை 5லட்சத்து 20 ஆயிரத்து 925 கோடி. ஆனால் அதே ஆண்டில் கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகள் அரசிற்கு செலுத்த வேண்டிய தொகையில் வசூலிக்காமல் விட்ட தொகை மட்டும் 5 லட்சத்து 73 ஆயிரத்து 630 கோடி ஆகும். இதனை ஒழுங்காக வசூலித்திருந் தாலே பற்றாக்குறை பட்ஜெட்டை தவிர்த்திருக்க லாம். அதனை செய்வதற்கு மாறாக கல்வி, சுகாதாரம், பொதுவினியோகம், போக்குவரத் திற்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட அரசின் அத்தியாவசியக் கடமைகளில் இருந்து மத்தியஅரசு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விலக்கிக் கொண்டு வருகிறது. மறுபுறம் அரசு தனியார் கூட்டு அல்லது முற்றிலும் தனியார் என கார்ப்பரேட்களின் நிரந்தரக் கொள்ளைக்கு இத்துறைகளில் வழிவகை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கி களில் பெருமுதலாளிகள் ரூ 5லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர் என சிபிஐ தெரிவித்திருக்கிறது. ஆனால் அவர்களை விரட்டி வசூலிக்கவோ, அவர்களின் பெயரை வெளியிடவோ ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பாஜகவும் தயாராக இல்லை. ஆனால் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும் மானியத்தை வெட்டுவதில் மட்டும் அலுவாலியா துவங்கி பாஜகவின் பொருளாதாரப் புலிகள் வரை ஒரே குறியாக இருந்து வருகின்றனர்.ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு, உணவு, உரம் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தின் அளவை பாதியாக வெட்டிச் சுருக்கியிருக்கிறது. மேலும் டீசல், பெட்ரோல், எரிவாயு உருளை ஆகியவற்றிற்கு தற்போது வழங்கி வரும் மானியத்தையும் முழுமையாகக் கைவிடும் திட்டமும் துவங்கி விட்டது.இந்நிலையில்தான் மானியங்கள் கொடுப்பதால் இந்தியா வளர்ச்சிப் பாதையை எட்ட முடிய வில்லை என அலுவாலியா வகையறாக்கள் கூறி வருகின்றனர்.
சாதாரண மக்கள் பயன்பெற்றால் அதற்கு பெயர் மானியம்.
அ தை பெருமுதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகள் வரி விளக்கு மானியங்கள் பெற்றால் அது பொருளாதார , ஊக்குவிப்புத் திட்டம், மீட்புத்திட்டமாம். இதுதான் மாண்டேக் சிங் அலுவாலியாவின் பொன்மொழி.
மக்களுக்கான மானியங்களை வெட்டுவதிலும் ,மக்களை சிக்கனமாக வாழவும் கூறிவரும் அலுவாலியா பெரும் பணமுதலைகளுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகை அளிக்கவும் கூறுகிறார்.
அம்பானி 2000 கோடியில் பிரமாண்டமான மாளிகை கட்டியதை இவர கண்டிக்க வில்லை.அதைவிட கொடுமை தனது அலுவலக கழிப்பறையை 23 லட்சத்தில் மராமத்துப்பண்னியவர் தான் இந்த சிக்கனம் பேசும் வாலியா.
இந்த மாண்டேக் சிங் அலுவாலியா,மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் கூட்டணியின் பொருளாதார சீர்திருத்தம் தான் இந்தியாவை பின்னோக்கி தள்ளியுள்ளது.பொருளாதார சீரழிவுக்கு கொண்டு சென்றுள்ளது.ரூபாயின் மதிப்பை டாலருக்கு எதிராக 63 ரூபாயாக்கியுள்ளது .
இப்படி சாமானியர்களின் நலனை புறக்கணித்து கார்ப் பரேட்களுக்கு காவடி தூக்குவதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே உறுதியாக இருந்து வருகின்றன.2013 ம் ஆண்டு ஐ.நாவின் கணக்குப்படி உலக அளவில் உள்ள 187 நாடுகளில், இந்தியா மனித மேம்பாட்டுக் குறியீட்டில் 136வது இடத் தில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, எடைக்குறைவான குழந்தைகள் உள்ள நாடுகளின் பட்டியலிலும் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. இதில் இந்தியா வளர்ச்சி பெற வேண்டும் என்றால் இருக்கும் மானியத்தையும் பறிக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்தியாவின் வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்பது தான் இங்கு கேள்வி ? கார்ப்பரேட் மற்றும் பெரும் முதலாளிகளின் வளர்ச்சி மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி என ரொம்ப நாள் மக்களை ஏமாற்ற முடியாது.
=========================================================================

செய்தியாளர் :- தி.மு.க. தலைமையிட மான அண்ணா அறிவாலயம் இருக்கும் இடத்தில் சென்னை மாநகராட்சிக்கு தர வேண்டிய இடத்தைத் தரவில்லை சென்னை மாநகராட்சி யில் இன்றும் பேசப்பட்டு, தி.மு. கழக உறுப் பினர்கள் வெளி நடப்பு செய்திருக்கிறார்களே?
பதில் :- இந்தப் பிரச்சினை பல முறை பேசப்பட்டு விரிவான விளக்கம் தரப்பட்டாகி விட்டது. வேண்டுமென்றால் மீண்டும் ஒரு முறை மாநகராட்சி அங்கே வந்து அளந்து பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் ஒன்றும் தவறான முறையில் தி.மு.க. சார்பாக அந்த இடத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இது என்ன கொடநாடா? கொடநாடு அல்ல இது; அண்ணா அறிவாலயம்.