பிச்சைக்காரர்கள் நலச்சங்கம்'s photo.1,தேவ்யானி விவகாரம் 
 
விசா முறைகேடு விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே,விவகாரத்தில் அமெரிக்க அரசும் சரி ,இந்திய அரசும் சரி மிகவும் அதிகப்படியாகவே செயல்பட்டு வருகிறார்கள்.
suran
முதலில் வேலைக்குஅழைத்து சென்ற  பணிப்பெண்ணை கூறிய சம்பளத்தை விட கால் வாசியை கொடுத்ததுடன் அனைத்து வேலைகளையும் வாங்கி யது தேவயானியின் குற்றம்.மேலும் அமெரிக்க அரசின் விசா கட்டுப்பாடுகளை மீறி பொய்யான விசா எடுத்தது மிகப்பெரிய குற்றம்.
ஆனால் அதற்காக கைது செய்த அமெரிக்க அரசு ஆடைகளை களைந்தும் ,கை விலங்கிட்டும் அவமானப்படுத்தியது மாகா தவறு.
விசா மோசடி க்கு ஆடைகளை களைந்து சோதனையிட என்ன அவசியம்?போதைப்பொருள் கடத்தினாரா என்ன?
இந்துய அரசு அதற்காக தூதரக உறவுகளை யே முறிக்கும் அளவு சென்றது மிக அதிகப்படியான நடவடிக்கை.அப்துல் கலாம் மே லா டையை கழற்றி சோதனையிட்ட போது வராத ரோசம் இப்போது வரக்காரணம் என்ன .?
தேவ்யானி மீது அமேரிக்கா அவர்கள் நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்கான குற்றங்களை நம் நாட்டு துணை தூதர் செய்துள்ளார்.
ஆனால் கைது,ஆடை களைந்து விசாரணை அதிகப்படி அதற்குதான் நாம் தட்டி கேட்க வேண்டும் 
பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கும் தட்டை கேட்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு.தவறு செய்தவரை நாட்டுக்காக தியாகம் செய்தவர் அளவுக்கு கொண்டு செல்வதுதான் ஏன் என்று தெரியவில்லை.இந்தியா அதிகப்படியான உணர்ச்சி வசப்படல் எதற்கு.
இனி இந்தியா தியாகி அளவில் கொண்டு சென்றுள்ள தேவ்யானி முறைகேடுகள் செய்வது ஒன்றும் புதிதல்ல.இந்தியாவில் அவரம்,அவரின் இ.ஆ.ப., பணியில் இருந்த தந்தையாரும் செய்துள்ள முறைகேடுகள் 
 அரசு கோட்டாவில் பல சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆதர்ஷ் குடியிருப்பு பகுதியில் தேவ்யானிக்கு ஒரு பிளாட் உள்ளது. இந்த பிளாட் உள்ளிட்ட 11 அசையா சொத்துக்கள் தேவ்யானி பெயரில் உள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படு்தியது ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரம்.
இ ந்த ஆதர்ஷ் குடியிருப்பானது கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும். இந்த குடியிருப்பில் உள்ள பிளாட்டுக்களை 25 பேருக்கு அரசு ஒதுக்கியது. அந்த 25 பேரில், கார்கிலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத, தியாகிகள் குடியிருப்பில் சலுகை பெற தகுதியில்லாத தேவ்யானியும் ஒருவர். மகாராஷ்டிர அரசு விதிகளின்படி அரசு கோட்டாவில் பிளாட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு சொந்தமாக வேறு எந்த பிளாட்டும் இருக்கக் கூடாது என விண்ணப்ப பிரமானப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம். ஆனால் தேவ்யானிக்கு ஆதர்ஷ் குடியிருப்பில் மட்டுமின்றி வேறு பல இடங்களிலும் பிளாட்கள் உள்ளன. 

 
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி 2012ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வரை தேவ்யானிக்கு ஆதர்ஷ் குடியிருப்பு பிளாட் மட்டுமின்றி மேலும் 10 சொத்துக்கள் உள்ளன. ஆதர்ஷ் குடியிருப்பு பிளாட்டின் மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும். மற்ற 7 சிறிய சொத்துக்களின் மதிப்பு ரூ.78 லட்சத்திற்கும் மேல். மேலும் 3 சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஒஷிவரா பகுதியில் மீரா ஒருங்கிணைந்த குடியிருப்பு பகுதியிலும் தேவ்யானிக்கு வீடு உள்ளது. 11 சொத்துக்களில் 5 சொத்துக்கள் மூலம் தேவ்யானிக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.26 லட்சம் வருமானம் வருகிறது. இவருக்கு மகாராஷ்டிராவில் 8 சொத்துக்களும், கேரளாவின் எர்ணாகுளத்தில் 2 சொத்துக்களும், உ.பி., மாநிலம் கவுதம புத்தா நகரில் ஒரு சொத்தும் உள்ளது. மகாராஷ்டிராவில் முறையே 25, 8, 2 ஏக்கர்களில் விவசாய நிலமும், 2 வீட்டடி மனைகளும், 4 பிளாட்களும் உள்ளன.Truly heartbreaking.

Loving girlfriend marries the father of her two children on his hospital bed.

23 year old Felix was recently diagnosed with incurable bowel cancer and has just weeks left to live.

http://dailym.ai/1gPlCcB இவை வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களாகும். 
தேவ்யானியின் தந்தை உத்தம் கோப்ரகடே. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவர் 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பில் அதிக விலை கொடுத்து கூடுதலாக ஒரு பகுதியை வாங்கி உள்ளார். பிரிகன்மும்பை மின் விநியோகத்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு சொந்தமான இந்த பகுதியை உத்தம் கோப்ரகடே வாங்கி உள்ளார். இந்த பிளாட்டை திருப்பித்தர கூறிய போது, தாங்கள் இந்த பிளாட்டை ஒதுக்கீட்டு கோட்டாவின் கீழ் வாங்கி இருப்பதாகவும், தான் அதற்கு விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும், எதற்காக திருப்பி அளிக்க வேண்டும் எனவும் உத்தம் கோப்ரகடே தெரிவித்துள்ளார். தாங்கள் செய்துள்ள முறைகேடுகளை அவர்கள் நியாய ப்படுத்தவே முனைகிறார்கள்.
@[453205841395290:274:Tamil News]
மறக்க கூடாது உத்ரகண்ட்டில் ராணுவ வீரர்களின் செயல்களை :

இந்திய ராணுவத்தை தவறாக பேசும் நாய்கள், தரக்குறைவாக நினைக்கும் முட்டாள்கள், 
ஏளனமாக பேசும் எச்சைகளுக்கு இந்த படம், 

காப்பாற்றியவர்கள் நாம்
ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த
அரசியல்வாதிகள் இல்லை,ஆயிரம்
பேர் வந்தாலும்
ஒரே ஆளா நிண்ணுசமாளிக்கிற
சினிமா ஹீரோக்கள்
இல்லை,கோடி கோடிய பணம்
சம்பாதிக்கிற நாம் தலையில்
தூக்கி வைத்து ஆடும்
கிரிக்கெட் வீரர்கள் இல்லை...

தன் நாட்டுக்காக தன் உயிரையும்
பொருட்படுத்தாமல்
வேலை செய்யும் இந்திய
ராணுவ வீரர்கள
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2,கங்குலி விவகாரம் .
 
நீதி யரசர்  என்று கொண்டாடப்படும் மனிதர்களும் மனித பலகீனங்களுக்கு உட்பட்டவர்கள்தான் .ஆனால் அவர்கள் தவறுகள் செய்யும் போது அதன் மீது நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் பாரபட்சம் ஏன் ?
பெண்ணிடம் பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை அவரகள் நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதி என்றால் மட்டும் இல்லாமல் போய்விடுவது தவறுதானே.சட்டம் என்பது குடியரசுத் தலைவர் முதல் சாதா குடிமகன் வரை ஒன்றாகத்தானே எழுதப் பட்டுள்ளது.
இதில் இவர்களுக்கெல்லாம் விதிவிலக்கு என்று அட்டவனையிடப்பட்டுள்ளதா என்ன?ஏ. கே. கங்குலி
 
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவையொட்டி பேட்டியளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், “நீதிபதி ஏ.கே.கங்குலி ஓய்வு பெற்றுவிட்டதால் அவர் சாதாரண குடிமகனாகிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத் தடை ஏதுமில்லை’’ என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கங்குலி பதவி விலகக் கோரி 24-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இரு தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவரை நியமிக்காமலும், இரண்டு வருடங்களாகப் பதவியை நிரப்பாமலும் உள்ள தமிழக அரசை அவர் ஏன் கண்டிக்கவில்லை என்பது தெரியவில்லை.
இதற்கிடையில் தேசிய பெண்கள் ஆணையம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் கோரியுள்ளார் கங்குலி. இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையே சிக்கியுள்ள கங்குலி மீது கூறப்பட்டுள்ள புகார் என்ன?
 
கொல்கத்தாவிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவி ஒருவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு இழைத்த பாலியல் கொடுமைகளை ‘லீகலி இந்தியா’ என்ற இணைய இதழில் கடந்த நவம்பர் 11-ம் தேதி பட்டியலிட்டிருந்தார்.
அந்த மாணவி தனது சட்டப்படிப்பை முடித்தவுடன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரிடம் பயிற்சி மாணவியாக சேர்ந்ததாகவும் தன்னிடம் பலவிதத்தில் அவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் 2012-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி டெல்லி நட்சத்திர விடுதிக்குத் தன்னை அழைத்ததாகவும் அங்கு தன்னிடம் அத்துமீறியதாகவும் இணைய இதழில் எழுதியிருந்தார்.
 
இணைய இதழில் கூறப்பட்ட விவரங்களை ஊடகங்கள் வெளியிட்ட பிறகு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதியிடம் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கோரினார். அட்டர்னி ஜெனரல் குலாம் வானாவதி வழக்கு தொடுத்தார். உண்மை அறியும்படி மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்த தலைமை நீதிபதியை ஊடகங்கள் பாராட்டின.
நீதிபதி குழு, பயிற்சி மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தையும் கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தது. சட்ட தினத்தன்று உரையாற்றிய தலைமை நீதிபதி, பயிற்சி மாணவிக்கு கட்டாயம் நீதி கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தார். சம்பந்தப்பட்ட நீதிபதியின் பெயர் ஊடகங்களில் கசிந்ததோடு, அறிக்கையின் சாராம்சத்தையும் இந்திரா ஜெய்சிங் பகிரங்கமாக்கினார்.
புகாரில் முதல்தோற்றச் சான்று உள்ளதாக அறிவிக்கப்பட்ட பின் அடுத்த நடவடிக்கை ஏதுமின்றி, உச்ச நீதிமன்றம் அப்பிரச்சினையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. பயிற்சி மாணவி உச்ச நீதிமன்ற ஊழியர் அல்ல. மேலும், நீதிபதி கங்குலி ஓய்வு பெற்றுவிட்டதாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் கூறிய தலைமை நீதிபதி அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி எதிர்காலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க மாட்டோம் என்றும் அறிவித்துவிட்டார். டெல்லி காவல்துறை அறிவிப்பு கொடுத்தும் மீண்டும் ஒரு எழுத்து மூலமான புகார் அளிக்க அந்த மாணவி மறுத்துவிட்டார்.
தலைமை நீதிபதியைக் கண்டித்து சட்ட அமைச்சர் கபில் சிபல் விடுத்த கடுமையான அறிக்கை ஒன்றில், “நீதிமன்றம் இப்பிரச்சினையைக் கைகழுவியது தகாத செயல்” என்று குறிப்பிட்டார். நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றால் நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டு, கங்குலியிடம் விளக்கம் ஏன் கோரப்பட்டது என்று புரியவில்லை. மேல்நடவடிக்கை எடுக்க மறுத்த பின்னர் இப்போது பிரச்சினை முச்சந்திக்கு வந்துவிட்டது. மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரி கட்சியினர் கோருகின்றனர். புகார் நிரூபிக்கப்படும் முன்னரே பதவி விலகக் கோருவது நியாயமற்றது என்று முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார். பார் கவுன்சில் உதவித் தலைவர் பிரபாகரன் தலைமையில் சென்னை வழக்கறிஞர்கள் சிலர் சட்டப் பயிற்சி மாணவியைக் கண்டித்து ஊர்வலம் ஒன்றை நடத்தினர். “எதிர்காலத்தில் எந்த பெண்ணும் தன் மீது பொய்ப் புகார் கூறுவதைத் தடுக்க அலுவலகத்தில் ரகசிய கேமராக்களை நிறுவியுள்ளேன்” என்கிறார் கொல்கத்தாவின் மூத்த வக்கீல் மிலான் முகர்ஜி.
இந்தப் புகாருக்குப் பிறகு, ஆண் வழக்கறிஞர்களோ, நீதிபதிகளோ பெண் பயிற்சியாளர்களை வைத்துக்கொள்ள முன்வர மாட்டார்கள் என்று கூறி பிரச்சினையை சிலர் திசைதிருப்ப முயல்கின்றனர். பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நீதிபதி கங்குலியும் மறுத்துவிட்டார்.
 
2012-ல் இயற்றப்பட்ட ‘வேலையிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளை (தடுக்க, தடை செய்ய மற்றும் நிவாரணம் வழங்கும்) சட்டத்தின்’ கீழ் ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி 10 உறுப்பினர் கொண்ட புகார் விசாரணைக்குழு ஒன்றை 2013-ம் ஆண்டு நவம்பரில்தான் உச்ச நீதிமன்றம் அமைத்தது. 1997-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் விசாகா வழக்கில் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்கும் விசேஷக் குழுக்களை அமைக்க உத்தரவிட்டும் ஏன் 25 வருடங்களாக நீதிமன்றங்களே அந்த உத்தரவை அமல்படுத்தத் தவறின?
Photo: Row over India condom price ceiling.
http://www.bbc.co.uk/news/world-asia-india-25460341

Condoms have been included in a list of "essential medicines and a  government-imposed ceiling has come into effect in India. 

The maximum price of a condom has been set at 6.56 rupees (11 cents; 6 pence).

But manufacturers of more expensive "luxury" condom brands have criticised the move. They say it will have a negative impact on population-control measures.

It is estimated that 1.8 billion luxury condoms are sold every year in India for up to 150 rupees ($2.50/£1.50).

At the lower end of the price scale they are sold for about 25 rupees (40 cents/24 pence).

What do you think of the move? Let us know

(Photo courtesy of AFP)
விசாகா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்.
அவரும் அரசுசாரா நிறுவனங்கள் சிலவும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ராஜஸ்தானில் சமூக சேவகர் ஒருவரைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேலையிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் தொடுத்த அந்தப் பொதுநல வழக்கை அன்றைய தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா விசாரித்தார்.
 
 ‘‘வேலைக்குச் செல்லும் இடத்தில் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாதது மட்டுமின்றி அவர்கள் மீது கிரிமினல் குற்றங்கள் இழைக்கப்பட்டால் மட்டுமே காவல்துறை உதவியை நாட முடியும். பெண்கள் மேலதிகாரிகள்/ சக ஊழியர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஒழுங்கு விதிகள் இயற்றப்படவில்லை. பாலியல் தொந்தரவு என்பதற்கு சரியான வியாக்கியானமும் சட்டத்தில் இல்லை’’ என்று கூறினார்.
 
வேலை செய்யும் இடத்தில் பாலியல் சீண்டல்களைத் தவிர்க்கும் விதத்தில் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றும் வரை அத்தீர்ப்பே சட்டமாகச் செயல்படும் என்றும், அரசு, பொதுத் துறைகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.
பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமான உரிமையைச் சட்டம் வழங்கியுள்ளது. சர்வதேசப் பிரகடனங்களும் பெண்களுக்கு எதிராக எவ்விதப் பாரபட்சமும் காட்டக் கூடாது என்றே கூறியுள்ளன என்று தெரிவித்த நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள அடிப்படைக் கடமைகளின்படி பெண்களுக்கு எதிரான கேவலமான நடைமுறைகளை ஒவ்வொரு குடிமகனும் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
‘‘முறையற்ற பாலியல் அணுகுமுறை, பெண்களைத் தொட்டுப் பேசுவது, பாலியல் இச்சையை பூர்த்தி செய்ய மறைமுகமாகவோ, நேரடியாகவோ கோருவது, பாலியல்சார் விமர்சனங்கள், உடல், மொழி, செய்கைகளால் வரவேற்கத் தகாத செயல்களில் ஈடுபடுவது ஆகியவையே பாலியல் தொல்லைகள்’’ என்ற விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.
வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவதாக ஒரு பெண் புகார் கூறினால் அதை விசாரிக்க ‘புகார் அமைப்பை’ நிர்வாகங்கள் உருவாக்க வேண்டும். அக்குழுவில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருக்க வேண்டும். அரசுசாரா அமைப்பு ஒன்றிலிருந்து பெண் பிரதிநிதி ஒருவரை அக்குழுவில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அக்குழுவின் அறிக்கைப்படி, சம்பந்தப்பட்ட ஆண்கள் மீது நிர்வாகங்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் பயிற்சி மாணவி பிரச்சினையில் ஒரு வருடத்திற்குப் பின் இணைய இதழில் பதிவு செய்தது ஏன் என்று கேட்பது தவறு. பாலியல் தொல்லைகள் பற்றிப் புகார் அளிக்க அப்போது குழுக்களும் இல்லை. கிரிமினல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விதிகளும் இல்லை.
புகாரில் ஆதார உண்மை இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு கூறிய பின்னரும், மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அதனால், தேசிய மனித உரிமை ஆணையச் சட்டப் பிரிவு 23(1A)-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு ஆலோசனை நல்கி அவரது வேண்டுகோளின் பின்னர் உச்ச நீதிமன்றம் அவர் மீதுள்ள புகாரை விசாரித்து தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அறிவித்தாலொழிய, பதவியிலிருந்து கங்குலியை குடியரசுத் தலைவர் நீக்க சட்டத்தில் வழியில்லை.
மீண்டும் ஆரம்பத்திலிருந்தா?
                                                                                                                                                                                                                                                      -சந்துரு,                                                                                                                            
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, 
 
 
Indonesia's Komodo National Park in East Nusa Tenggara, home to the legendary Komodo dragon, is one of the Official New7Wonders of Nature. It's also included in Visit7Wonders, a new global tourism platform that brings together the New7Wonders of Nature: http://visit7wonders.com/