-ஜனவரி மாதம்
முக்கிய நிகழ்வுகள்
---------------------------------
1-1-1862 - மணியார்டர் (பணவிடை) அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.
1-1-1942 - ஐ.நா.சபை அமைக்கப்பட்டது.
1-1-1923 - சோவியத் குடியரசு தோன்றியது.
1-1-1901 - ஆஸ்திரேலியா சுதந்திரம் பெற்றது.
1-1-1985 - லண்டனில் மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
2-1-2012 - தமிழகத்தில் தானே புயலால் பாதிப்பு ஏற்பட்டது.
3-1-1968 - இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு
10-1-1610 - கலிலியோ, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை விஞ்ஞானப்பூர்வமாக வெளியிட்டார்.
14-1-1969 - தமிழ்நாடாக சென்னை மாநிலம் பெயர் மாற்றம் பெற்றது.
24-1-1966 - இந்திரா காந்தி பாரதப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
26-1-1929 - சுதந்திரம் பெற்றதும் குடியரசு தினமாகத் தேர்வு செய்தனர்.
26-1-1950 - இந்திய குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது.
30-1-1948 - காந்தி கொல்லப்பட்டார்.
முக்கிய
தினங்கள்
---------------------------------
1. ஆங்கிலப் புத்தாண்டு
4. டென்மார்க் சுதந்திர தினம்
12. தேசிய இளைஞர் தினம்
15. ராணுவ தினம்
16. திருவள்ளுவர் தினம்
25. தேசிய வாக்காளர் தினம்
26. இந்தியக் குடியரசு தினம்
26. ஆஸ்திரேலியா சுதந்திர தினம்
30 தியாகிகள் தினம்
30. காந்திஜி நினைவு நாள்
30. தொழுநோய் ஒழிப்பு தினம்
பிரபல பிறந்த
தினங்கள்
-----------------------------------------
1-1-1578 வில்லியம் ஹார்வி - இதய ஆராய்ச்சியாளர்
1-1-1894 சத்தியேந்தரநாத் போஸ் - இந்திய விஞ்ஞானி
4-1-1892 ஜே.சி.குமரப்பா - சுதந்திரப் போராட்ட வீரர்
10-1-1896 சலீம் அலி - பறவைகள் ஆராய்ச்சியாளர்
10-1-1931 ஆர்.சூடாமணி - பெண் எழுத்தாளர்
11-1-1973 ராகுல் திராவிட் - இந்தியக் கிரிக்கெட் வீரர்
12-1-1863 சுவாமி விவேகானந்தர், சமயத் துறவி
13-1-1949 ராகேஷ் சர்மா - இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்
15-1-1821 ஜான் பென்னி குவிக் - முல்லைப் பெரியாறு
அணை கட்டிய பொறியாளர்
16-1-1412 ஜோன் ஆஃப் ஆர்க் -
17-1-1917 எம்.ஜி.ராமச்சந்திரன் - தமிழக முன்னாள் முதல்வர்
18-11912 நெல்சன் மண்டேலா - தென் ஆப்ரிக்க சுதந்திரப் போராட்ட வீரர்
23-1-1897 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்
27-1-1926 வைத்யா - இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி
27-1-1935 கோமல் சுவாமிநாதன் - நாடக ஆசிரியர்
30-1-1910 சி.சுப்ரமணியம் - முன்னாள் மத்திய அமைச்சர்
30-1-1882 ரூஸ்வெல்ட் - அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர்
நினைவு
தினங்கள்
----------------------------------
6-1-1847 தியாகராஜர் - மும்மூர்த்திகளில் ஒருவர், இசையறிஞர்
8-1-1994 காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியார் - துறவி
8-1-1642 கலிலியோ - தொலைநோக்கி கண்டுபிடித்த விஞ்ஞானி
11-1-1932 திருப்பூர் குமரன் - கொடி காத்த சுதந்திரப் போராட்ட வீரர்
11-1-1966 லால் பகதூர் சாஸ்திரி - முன்னாள் பாரதப் பிரதமர்
16-1 1954 பாபுராவ் பெயிண்டர் - புதிய வகை கேமரா கண்டுபிடித்த வ ர்
17-1-2010 ஜோதிபாசு - மேற்கு வங்க முன்னாள் முதல்வர்
18-1- 1963 ப.ஜீவானந்தம் - கம்யூனிஸ்ட் தலைவர்
21-1-1924 லெனின் - ரஷ்ய குடியரசுத் தலைவர்
26-1-1823 எட்வர்ட் ஜென்னர் - பெரியம்மைக்கு மருந்து கண்டுபிடித்தவர்
27-1- 2009 ஆர்.வெங்கட்ராமன் - இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்
30-1-1874 ராமலிங்க அடிகளார் -
30-1-1948 காந்தி -
இப்படியும் மனிதர்கள் வாழ்கி[?]றார்கள்.
-லெனின்
=========
1920 ஏப்ரல் மாதம் 22ல் மாஸ்கோ நகரத்தில் ஒரு தலைவர், தனக்கு பிறந்த நாள் கொண்டாடுவது கூடாது என்று உத்தரவிட்டார். அதையும் மீறி ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட்டம் நடத்தினர். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி அக்கூட்டத்தில் “சில மனிதர்களைப் பற்றி பேசுவது எளிதன்று. அவர்களுடைய சிறப்புகளையும் குறிப்பிடுவது இயலாது. நான் சொல்லோவியம் தீட்டுவதில் வல்லவன் என்றாலும் அவருடைய உருவத்தை உங்கள் முன் சித்தரிக்க சரியான சொற்கள் கிடைக்காமல் தவிக்கிறேன்” என்றார்.
ஒரு சமயம் தன்னை சந்திக்க வந்த மனைவி (குரூப்ஸ்கயா)யிடம் ரகசிய செய்தியை சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று சிந்தித்தார். மனைவியிடம் உரையாடினார் கீழ்க்கண்டவாறு ‘எனக்கு கொடுத்த நூல்களை கொடுத்துவிட்டேன். தங்கை மரியாவின் நூலையும், அறை எண் தெரியுமா?’ என கேட்டவுடன் குரூப்ஸ்கயா, 193 என்றார். ஆனாலும் சம்பந்தமில்லாமல் பேசுவது அப்போது புரியவில்லை.
ஏதோ மர்மம் இருக்கிறது என உணர்ந்த குரூப்ஸ்கயா, தங்கை மரியாவிடம் உள்ள நூல் பக்கம் 193ஐ புரட்டினார்.
அதில் தொழிலாளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரகசிய சுற்றறிக்கை செய்தி இருந்தது. இப்படியாக எதிரிவர்க்கத்தினை ஏமாற்றி, தனது வர்க்கத்தினை தன் தந்திரத்தால் வழி நடத்தியது என இது போன்ற பல உதாரணங்கள்.
புரட்சி வெற்றி பெற்ற நேரத்தில் லெனின் அறைக்கு இரு தொழிலாளர்கள் அவரை சந்திக்க வந்தனர். லெனினின் செயலாளர் அவர்களை அழைத்துச் சென்றார். அமைச்சரவை தலைவரான லெனினின் சாதாரண அறையை பார்த்து வியந்தனர். தன்னைப் பார்க்க வந்தவர்களை சந்திக்க வந்த லெனின், அவருடைய அதிகாரப்பூர்வ இருக்கையில் அமராமல் நேரடியாக தொழிலாளர்களின் பக்கத்தில் வந்தமர்ந்து, என்ன விசயம் என கேட்டார். சந்திக்க வந்தவர்கள் லெனினின் அடக்கத்தை பணிவை கண்டு வியந்தனர். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லத் தயங்கினர்.
இருந்த போதும் என்ன விசயம் என கேட்டார். தொழிலாளர்கள், நாங்கள் தொழிற் சாலைகளில் பணிபுரியவே அனுபவம் மிக்கவர்கள். எங்களால் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய முடியாது என மறுத்தனர். ஆனால் லெனின், தோழர்களே நமக்கு நம்பிக்கையான ஆள் அமைச்சரவை செயலகத்திற்கு தேவை.
நாம் பழைய அமைச்சரவை அமைப்பை உடைத்துவிட்டோம். இப்போது இருப்பது புதிய அமைப்பு. இதற்காகத் தான் நாம் போராடினோம். இங்கே நாம்தான் பணியாற்ற வேண்டும். நாம் கற்றுக் கொள்ளலாம். பணியாற்ற சிரமம்தான். தவறு செய்தால் திருத்திக்கொள்வோம். இல்லையெனில் கற்றுக்கொள்வோம். அமைச்சரவை தலைவர் என்ற முறையில் கற்றுக்கொள்ளுங்கள் என கூறாமல், கற்றுக்கொள்வோம் என லெனின் தன்னடக்கத்துடன் கூறியது, சந்திக்க வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் அவர்கள் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டனர்.
எதிர்ப்புரட்சியாளர்கள் லெனினை குறிவைத்து தாக்க திட்டமிட்டனர். முதலில் 1918 ஜனவரி 1ல் காரில் வந்த போது லெனினை நோக்கிச் சுட்டனர். அருகில் இருந்த சுவிஸ் கம்யூனிஸ்ட் தலைவர் பிளாட்டன், லெனின் தலையை அமுக்கி காப்பாற்றினார். பிளாட்டன் கையை துப்பாக்கி ரவை பதம் பார்த்தது. லெனின் மயிரிழையில் உயிர்தப்பினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்பு கூட தன்னுடைய பணியில் எந்தவித தொய்வும் இன்றி பணியாற்றினார்.
1918 ஆகஸ்ட் 30 பெத்ரோ கிராத் நகர் கூட்டத்தில் லெனின் பேசவேண்டும். தோழர்கள், வரவேண்டாம்; இங்கே நம் தோழரை எதிர்ப்புரட்சியாளர்கள் கொன்று விட்டார்கள் என்ற எச்சரித்த பின்பும், சிரித்தபடியே ‘அலைகளுக்கு பயந்தால் மீனவர் மீன் பிடிக்க முடியாது எனவும், மிருகத்திற்கு பயந்தால் வேடன் வேட்டையாட முடியாது எனவும் கூறிவிட்டு, புரட்சியாளர்கள் சமூக மாற்றத்திற்காக போராடுபவர்கள்; உயிருக்கு பயந்தால் துணிச்சலாக செயல்பட முடியாது என கூறிவிட்டு கூட்டத்திற்கு செல்ல லெனின் தயாரானார். கூட்டத்தில் பேசவேண்டிய, அமைச்சரவை கூட்டத்தில் பேசவேண்டியது பற்றி சிந்தித்த படியே காரில் பயணித்தார். திட்டமிட்டபடி கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் லெனின் உரையாற்றினார். கூட்டம் முடிந்து தொழிலாளர்களுடன் திரும்பும்போது திடீரென்று துப்பாக்கி சத்தம், ஆம்; ஒரு குண்டு லெனின் இடது கையில், இரண்டாவது குண்டு கழுத்தில், மூன்றாவது குண்டு முதுகில்; லெனின் கீழே சாய்ந்தார்.
தொழிலாளர்கள் பதறினர். லெனின், வீட்டுக்கு வண்டியை ஓட்டச் சொன்னார். மூன்று குண்டுகள் பாய்ந்த போதும் தங்கள் இருப்பிடம் மூன்றாவது மாடியில் இருப்பதால் லெனினிடம் மூன்றாவது மாடிக்கு தொழிலாளர்கள் தூக்கிச் சொல்வோம் என்று கூறியபோது மறுத்த லெனின், நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று துணிச்சலாகக் கூறி தொழிலாளர்களின் தோள்களை பிடித்துக் கொண்டே மூன்றாவது மாடிக்குச் சென்றார்.
தங்கை கதறியபோது “நீ கதறாதே; சின்னக்காயம்தான் உன் அலறல் குருப்ஸ் கயாவை (மனைவியை) கலவரப்படுத்தும்” என்று கூறினார். மூன்று குண்டுகள் தாக்கியபோதும் பதறாமல் மக்கள் பணியில் தொடர்ச்சியாக முன்னேறினார். மீண்டுவந்தார்.
சோசலிச அரசுக்கு தலைமையேற்று நடத்தினார். விடாமுயற்சி, வைராக்கியம், ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி, தன்னடக்கம் போன்ற பல்வேறு நல்ல பண்புகளைக் கொண்டவர் லெனின்.
ஜார் மன்னனையும், முதலாளிகளையும், நிலப் பிரபுக்களின் கூட்டணியையும், போலிப் புரட்சிவாதிகளையும் வென்றவர் லெனின். 1924 ஜனவரி 21ல் உலகப்புரட்சியாளர் லெனின் மறைந்தார்.