பிணை வாங்க நடிப்பு ?

மும்பை தொடர் குண்டுவெடிப்பு  நிகழ்வுகளில் தீவிரவாதிகளை தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்தது,ஆயுதங்களை பதுக்கி வைத்தது தொடர்பாக கையும் -களவுமாக ஆதாரத்துடன் பிடிபட்டவர்  நடிகர் சஞ்சய் தத் .
 இப்போது இவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறி 30 நாட்கள்  பரோலில் வெளியெ வந்துள்ளார். பரோலில் வர மனைவி நோயாளி என்று நடித்துள்ளதாகவும்
suran
அவர் கூறிய காரணங்கள்  பொய்யானவை எனவும்  குற்ற சாட்டு எழுந்துள்ளது.ஆனால் சஞ்சய் தத்தின்டாக்டர்கள் "அவரின் மனைவி மான்ய மதா க்கு  இருதயத்தில் பிரச்னை உள்ளது.
 கல்லீரலில் கட்டி உள்ளது ,மண்ணீரலில் மண்ணடைத்துள்ளது.அவர் நிலை மோசம் என்று சான்று  கூறியுள்ளனர்.
ஆனால் சஞ்சய் தத் மணைவி நோயாளி போல் நடிக்காததால் பிரச்னை எழுந்து விட்டது.
 சஞ்சய்தத் மனைவி மான்ய மதா , கடந்த வியாழன்று கூட இரவு நள்ளிரவு விருந்தில்  ஒன்றில் கலந்து கொண்ட காணொளி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
அத்துடன் அவர் நலமுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் காட்சிகளும் வெளியாகின.
என்ன காரணம் என்று தெரியாமல் பாட்டரி வாங்கிக் கொடுத்த வாலிபன் பேரறிவாளன் இப்போது வெளியுலகை பார்க்கவே இயலாத குற்றவாளி.அதுவும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவரின் வாக்கு மூலம் சரிவர ஆங்கிலத்தில் பதிய வில்லை.அவசரத்தில் அவரை குற்றவாளியாக்கி விட்டோம் என்று அவரை விசாரித்த காவல் அலுவலரே இப்போது வாக்குமூலம் கொடுத்துள்ளார்.ஆனால் அவரை இன்னமும் விடுவிக்க வில்லை.
ஆனால் இங்கோ கையும் களவுமாக பிடிப்பட்ட தீவிரவாத நடிகருக்கு பொய் காரணங்களுக்கு பரோல் .அதற்கு கூறப்பட்ட காரணம் பொய் என்று ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டும் அவரை மீண்டும் சிறையில் அடைக்க ஆர்ப்பாட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை.என்ன நாடு.என்ன நீதி பரிபாலனம்.
அவரின்கவ லைக்கிடமான நோயாளி  மனைவி மான்ய மதா ஊர்வலம் வந்த காட்சிகள் 'மிட் டே "வெளியிட்டுள்ளது.
அவை கீழே :
Maanayata



கீழே மனைவியுடன் சஞ்சய் [இப்படம் பழசு ]
Manyata and Sanjay Dutt

--------------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தல் இன்ப சுற்றுலா?

, தேர்தல் ஆணையம் அளித்த தகவல்:
 முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், எஸ்.ஒய்.குரேஷி, 2008 - 12 வரை பதவியில் இருந்த காலத்தில், 23 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவரையடுத்து, பனேல் அக்சாய், 18 முறை வெளிநாடு சென்றுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவரும், அதிகாரிகள் ஓய்வு பெற்றால் அரசியலில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்திவருபவருமான, என்.கோபால்சாமி, நான்கு முறை மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார்.
தலைமை தேர்தல்
ஆணையர்களில் ' அதிகம் சுற்றுலா போனவர் குரேஷி
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்களான நவீன் சாவ்லா, ஒன்பது முறையும், வி.எஸ்.சம்பத் 10 முறையும், எச்.எஸ்.பிரம்மா ஐந்து முறையும் வெளிநாடு சென்றுள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வெளிநாட்டு பயணத்திற்காக, 2008 - 09ம் ஆண்டு, 8.33 லட்சம் ரூபாய் தான் செலவிடப்பட்டது. இது, 2011-12ல், 74.86 லட்ச ரூபாயாக அதிகரித்தது.
ஆனால், 2012-13ல், 70 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இவ்வாறு, தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர்கள், அதிகாரிகள், வெளிநாடு பயணத்திற்கான செலவு, இரண்டாண்டில், 900 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, 23 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும், தலைமை தேர்தல் ஆணையர்கள், அதிகாரிகள், மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்கு, எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டது என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஆர்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதில் இது.
தேர்தல் ஆணையர்கள் உலக சுற்றுப்பயணம் செல்ல வேண்டுமா என்ன?
அப்படி இவர்கள் மக்கள் பணத்தில் உலகை சுற்றி வந்து மக்களுக்கு அல்லது நாட்டுக்கு என்ன பயன்?
எப்படியோ 70 லட்சம் இவர்களின் இன்ப சுற்றுலாவிற்கு மக்கள் வரிப்பணத்தில் செலவாகியுள்ளது.
தேர்தல் நடக்கும் இடங்களுக்கு சென்று பார்வையிடாத இவர்கள் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா செல்ல காரணம் என்னவாயிருக்கும்.?
-------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?