அழைப்பு மணி? வேதனை!
கருணாநிதிக்கு பதிலளித்துள்ளார் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொது செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.அதை படிக்கையில் பல எண்ணங்கள் அவை இங்கு .முதலாக அவற்றின் அறிக்கையை படித்து விடுதல் நல்லது.
பரமக்குடி தொடர்பான சம்பத் அறிக்கைக்கு வெறும் கண்டன தீர்மானம் மட்டும் .அதன்பின் என்ன செய்துள்ளார் ஜி.ராமகிருஷ்ணன்.?இதற்கும் கருணாநிதி இலங்கைத் தமிழர்,மீனவர் பிரச்னைக்களுக்கும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதற்கும் ஒரு வித்தியாசம் இல்லையே.சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஜெயா அரசு எடு த்துள்ள துரோக முடிவுக்கு மானிலங்கள வை உறுப்பினர் பதவி,மக்களவை இட ஒதுக்கிடு போல் முனைப்புடன் எதிர்ப்பை ஏன் காட்டவில்லை.
இன்று தலித் களுக்கு நன்மை என்று செய்வதாக கூறி சாதி மோதல்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியே தன்னை அறியாமல் தூண்டு கோலாக உள்ளது தெரியுமா?அதை உணர்ந்துள்ளீர்களா?சாதி-மதம் வேண்டாம் என்று கூறும் கட்சியில் குறிப்பிட்ட ஒரு சாதி க்கு மட்டும் துணை போவதா?அதனால் மற்றவர்கள் நிலை என்ன என்று உணர முடியாதவர்களா?அப்படி துணை போனாலும் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் அணி திரண்டிருப்பது.திருமா வளவன்,கிருஷ்ணசாமி,ஜான்பாண்டியன் .பக்கம்தானே.
மதம் ஒரு அபின் என்று சொல்ல வேண்டிய கட்சியினர் பிற சாதி யினர் கட்டிய-வழிபடும் கோவில்களில் தலித்துகள் சாமி கும்பிட சம உரிமை தர வே ண்டும்,அவர்களும் மண்டகப்படி செய்ய அனுமதி வேண்டும் என்று போராட போவது கொள்கை முரண் பாடல்லவா?எத்தனை இடங்களில் இன்னமும் இரட்டை தம்ளர் உள்ளது.அங்கு சென்று போராடியதாக இதுவரை தகவல் இல்லையே.
தாழ்த்தப்பட்டவர்கள்-ஒதுக்கப்பட்டவர்க்கள் நலனுக்குத்தான் மார்க்சிஸ்ட்டுகள் போராட வேண்டும் .ஆனால் அது சாத்திய ரீதியில் அல்ல.பொருளாதார அடிப்படையில்தான் என்பதை கூட உணராமல் ஒதுக்கீடுகளால் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் வேலை வாய்ப்புகள் போன்றவற்றிலும் உதவித் தொ கைகள் போன்றவற்றை பெறுவதிலும் உயர்ந்து போக மற்றவர்களுக்கு இது எட்டாக் கனியாக உள்ளாகி வரும் நிலை மார்க்சிஸ்டுகளுக்கு புரியவில்லையா.வேலை விண்ணப்பம் கூட மற்றையோருக்கு 500 ரூபாய் என்றால் தலித்துகளுக்கு பாதி அல்லது இலவசம்.இதனால் மற்ற சாதி வாலிபர்கள் எரிச்சல் அடைவது .பணியிட ஒதுக்கீடு அதிகம் என்பதினால் பிறர் கோபமடைந்து சாதிய உணர்வுகளுக்கு தங்களை அறியாமலேயே ஆளாகி வருகின்றனர்.
இது போன்றவைகள்தான் இன்று மற்ற சாதியினரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக கலவரங்கள் நடத்த தூண்டுகோ லாகி வ்ருகிறது.அதுதான் இன்றைய எதார்த்த நிலை இதை சமுக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டிவருகின்றனர்.ஆனால் ஒட்டு பொறுக்கும் கட்சிகள் இதை உணர்வது இல்லை.
எதையோ சொல்ல வந்து தலித்துகளுக்கு ஜி.ரா செயல்படுவதாக தோழர் கூறியதால் தேவையற்ற விளக்கங்களை கொடுக்க வேண்டிய தாகி விட்டது.
கருணாநிதி ஆட்சி காலத்தில் அவருடன் கூட்டணி வைத்துக்கொண்டே அவர் ஆட்சிக்கு,கொள்கை முடிவுகளுக்கு எதிராக போராட முடிந்தது.இன்று ஜெயா ஆட்சியில் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் தானே மார்க்சிஸ்டுகள் உள்ளனர்.சம்பத் அறிக்கைக்கு,சேது சமுத்திரம் நிகழ்வுகளுக்கு எதிராக முனங்கள் அறிக்கை மட்டும் விட்டு,விட்டு தனது கடமை முடிந்ததாக முடங்கிதானே போயுள்ளார் -ஜிஆர் .
தொழிலாளர் -மக்கள் பிரச்னையில் இதுவரை ஏதாவது ஆட்சியாளர்கள் மூலம் நல்லது செய்யப்பட்டுள்ளது என்றால் அது அனைத்தும்கருனாநிதியால்தான்.அவரது ஆட்சிக்காலத்தில்தான்.அதே தொழிலாள ர்களுக்கு பெரிய அளவில் கேடு வந்தது என்றால் அது நிச்சயமாக ஜெயா ஆட்சிகாலங்க்களிதான்.அதுவும் ஜெயலளிதாவினால்தான்.
இன்றும் கூட அவர் மாறவில்லை.மாறியது போல் திறமையாக நடித்துக்கொண்டுள்ளார்.மக்கள் நலப்பணியாளர் ,மாற்றுத்திறனாளிகள் நிகழ்வுகள் அதற்கு போதுமான எடுத்துக்காட்டு .
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆண்டுகள் கடந்தும் ஊதிய நிர்ணயம் செய்யாதது இன்றைய நிலை.அதற்கு தொமுச.போல் சிஐடியு இன்றுவரை முனைப்புடன் போராட விடாமல் தடுப்பது யார்?தொழிலாளர் பிரச்னையில் கர்ஜிக்கு சிங்கம் சிஐடியூ செயல்பாடுகள் பல் விழுந்த [அ]சிங்கமாக மாறிப்போனது ஜி.ரா.வின் ஜெயா ஆதரவு கண் மூடித்தனமான ஆதரவு போக்கி னால்தானே?
குறைந்தபட்ச பொது திட்டத்தினால் தான் காங்கிரசு அரசுக்கு முன்பு ஆட்சி போகும் ஆறுமாதங்களுக்கு முன்வரை பல்லக்கு தூக்கினோம் .அது நியாயம் என்றால் திமுகவும் ஆட்சி போகும் ஆறு மாதம் பல்லக்கு தூக்கியதும் எதோ ஒரு அதிகபட்ச ஆதரவு திட்டத்தினால்தான் தானே.
அது மட்டும் எப்படி தவறான நடவடிக்கை ஆகும்.பாஜகவுடன் கருணாநிதி கூட்டு வைத்திருந்தாலும் சிறுபான்மையினருக்கு சலுகைகள் அவர் ஆட்சியில்தான் தரப்பட்டுள்ளது.ஜெயா வழங்கிய ஒரு நன்மையை காட்டுங்கள்.புனித பயணம் போக பணம் கொடுப்பது அதிகரிப்பு என்றால் அதனால் அந்த சிறுபான்மையினர் சமுகத்துக்கு என்ன பயன்.குறிப்பிட்ட பணக்காரர்கள்தானே புனித பயணமே போகிறார்கள்.
ஜெயலலிதா இதுவரை அறிவித்த திட்டங்கள் அனைத்தும் 110ன் கீழ்.ஆனால் அவைகளுக்கு அவர் கூறிய நிதி ஒதுக்கீட்டில் ஒரு காசாவது ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளதா.எம்ஜிஆர் சமாதியை புதுப்பித்து இரட்டை இலை வைத்தது,மலிவு விலை அம்மா உணவகங்கள்,இரட்டை இலை போட்ட குடிநீர் ,சிற்றுந்துகள் இவைகள்தான் நடந்து முடிந்த வேலைகள்.இதனால் யாருக்கு என்ன பயன்?மக்களை ஏழைகளாக்கி ஒரு ரூபாயில் இட்லி கொடுத்தால் போதும் என்று ஜிஆர் நினைக்கிறாரா?
அந்த இட்லி கூட எல்லா இடங்களிலும் கிடையாது.
சரி.ஒரு மக்களவை,,ஒரு மாநிலங்கவை இடத்துக்கு பிச்சை போடும் அளவு ச.ம.உ.க்கள் எண்ணிக்கை இப்போது இருப்பதுன் ஜெயலலிதா கட்சியிடம்தான் அதானால் தான் ஆதரவு என்று பகிரங்கப்படுத்துங்கள்.அதை விட்டு கொள்கை,மார்க்சியம் என்று உளர வேண்டாம் .
காரணம் இன்றுவரை நான் இருப்பது அதே மார்க்சிஸ்ட் கட்சியில்தான்.நல்ல சிவன்,வரதராசன் வரை நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சி இப்போதைய நிலை எனக்கு மிக வருத்தம்தருவதால்தான் இவ்வளவு பேச வேண்டியதாகி விட்டது.தனது அடிப்படையான பாட்டாளி வர்க்க போராட்டங்களை ஜெயா ஆட்சியில் முடக்கி விட்டு போயஸ் தோட்டத்தின் அழைப்பு மணியில் கையை வைத்து காத்துக் கிடப்பது மிக வேதனையான நிகழ்வுகளாக உள்ளது.அதற்கு காரணமாக கருணாநிதி மீது மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வைக்கும் குற்றசாட்டுகள் எத்தனை வலுவற்றது என்பதை கட்சியினர் உணர வேண்டியது அவசியம்.