மூளையின் செயல்பாடு

மூளையின் இடது டெம்பரல் கார்டெக்ஸ் பகுதியில் இந்த மாற்றங்கள் நடைபெற்றன. மொழிகளை உள்வாங்கும் திறனோடு இப்பகுதி தொடர்புடையது.

suran



நாவல் படிப்பதால் மூளையின் செயல்பாடு உண்மையில் அதிகரிக்கும் என்றும் அதன் செயல்பாடு மாற்றத்தை கருவிகளால் அளக்க முடியும் என்றும் அந்த செயல்பாடு அதிகரிப்பு குறைந்தது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும்ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 அமெரிக்கா  நாட்டில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஒரு நல்ல புத்தகத்தை படிப்பதால் மூளையின் செல்களிடையே நல்ல உச்சமான தொடர்புகளும், நரம்பியல் மாற்றங்களும் உருவாகின்றன என்றும் தசைகளின் நினைவாற்றல் போன்று இவையும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுவதாக தி இண்டிபெண்டண்ட் இதழ் கூறுகிறது.

அதேபோன்ற மாற்றங்கள் முதன்மை உணரி இயங்கு பகுதியிலும் ஏற்பட்டன. இந்த ஆய்வுக்காக 21 மாணவர்கள் சோதிக்கப்பட்டனர்.
இவர்கள் 2003ம் ஆண்டில் ராபர்ட் ஹாரிஸ் எழுதிய பிரபலமான பாம்பி என்ற நாவலை இவர்கள் அனைவரும் படித்தனர். பத்தொன்பது நாட்களுக்கு இவர்கள் மாலை வேளைகளில் இந்நூலை படித்த பின் மறுநாள் காலையில் எம் ஆர் ஐ ஸ்கேனுக்கு சென்றனர். புத்தகத்தை படித்து முடித்த பின் ஐந்து நாட்கள் கழித்து இவர்கள் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது.
அவர்களுடைய நரம்பியல் மாற்றங்கள் மாற்றமின்றை காணப்பட்டன. இதன் மூலம் புத்தகங்கள் படிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக தோன்றி மறைவதல்ல என்றும் சில நாட்கள் நீடிக்கும் தன்மையுடையவை என்றும் நிரூபணமானது.
ஆனால் எந்தவிதமான நாவலை படிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்ல வில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

சமீபத்தில் ஐடிசி அமைப்பு எடுத்த ஆய்வின்படி, மென்பொருள் தயாரிப்பவர்களாக உலகில் இயங்குபவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 85 லட்சம் ஆகும்.
இவர்களில் 1 கோடியே 10 லட்சம் பேர், நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், மற்ற 75 லட்சம் பேர் பொழுதுபோக்கிறாக, சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.
கம்ப்யூட்டர்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை, சாப்ட்வேர் புரோகிராமர்களையும் சேர்த்து 2 கோடியே 90 லட்சம் என அறியப்பட்டுள்ளது.
மொத்தமாக அமெரிக்காவில் 19 சதவிகிதம் பேரும், சீனாவில் 10 சதவிகித பேரும், இந்தியாவில் 9.8 சதவிகித பேரும் உள்ளனர்.
700 கோடி பேர் வாழும் இந்த பூமியில், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவேயாகும் எனவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------
 
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கணனியை பயன்படுத்துகிறீர்களா?திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா?
இந்த சிஸ்டங்களில் இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம்.
உங்கள் கணனியை ஸ்விட்ச்-ஆன் செய்தவுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும்.
இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.
இதன் தலைப்பு "Choose an option” என இருக்கும்.
இதில் "Continue”, "Troubleshoot” மற்றும் "Turn off your PC.” என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும்.
இவற்றில் Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள், அல்லது கிளிக் செய்திடுங்கள்.
அதன் பின்னர் "Advanced options” என்பதில் கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.
இவற்றைப் பயன்படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.
ஏற்கனவே சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந்தால், அந்த நிலைக்குக் கணனியை கொண்டு செல்ல இதில் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும்.
மேலும் கணனியை Safe Mode-க்கு கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும்.
இவற்றின் மூலம் சிக்கலைத் தீர்த்து இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
[
2014ம் ஆண்டை இன்முகத்தோடு அடியெடுத்து வைக்கும் இந்திய மக்களுக்கு எங்களது புத்தாண்டு வாழ்த்துகள்.
புதிய ஆண்டை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும், தான் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்ப்பது அவனது வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடும் விடயமாகும்.
அந்த வகையில் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ள நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் இந்திய நாட்டில் நடந்த நிகழ்வுகளை சற்று நினைவுகூறலாம்.
உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த டெல்லி பலாத்கார சம்பவம்
டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட காமக்கொடூரர்களால் பலாத்கார கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவி . வழக்கில் செப்டம்பர் 13ம் திகதி குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

மறைமுகமாக மோதிக்கொள்ளும் இந்தியா - சீனா
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இந்தியாவிற்கு எழுந்தது.
இதனால் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்திய விமானப்படையின் புதிய விமான தளம் தஞ்சாவூரில் மே 27ம் திகதி திறக்கப்பட்டது.
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
இந்திய கடல் எல்லையை செயற்கைகோள் மூலம் கண்காணிக்கும் சீனா: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் இரு வேறு சாதிப்பிரிவைச் சேர்ந்த இளவரசன்- திவ்யா கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதி திருமணம் செய்து கொண்டதால் போராட்டம் வெடித்தது.
இந்த அவமானம் தாங்காமல் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்ததால், சாதிக் கலவரம் வெடித்து தமிழ்நாடே பற்றி எரிந்தது.
இதனை தொடர்ந்து மனமுடைந்த திவ்யா சில காலங்களுக்கு பிறகு, காதல் கணவனை தூக்கியெறிந்தார்.
திவ்யாவின் பிரிவால் தவித்த இளவரசன் யூலை 4ம் திகதி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இவரது மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதலன் மர்மமான முறையில் மரணம்: 144 தடை உத்தரவு
இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது: உடலை வாங்க தந்தை மறுப்பு
 
பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்ததால், இந்தியா என்றாலே காமுகர்கள் நிறைந்த நாடு என்ற எண்ணம் மேலை நாடுகளில் வேகமாகப் பரவியது.
இந்தியாவில் காய்கறி மார்கெட், பேருந்து நிலையம், ஷாப்பிங் மால் என்று எங்கே ஓடி ஒளிய முற்பட்டாலும் அங்கே ஆண்களின் காமப் பெருமூச்சுகள் பெண்களை சுட்டெறித்தன.
பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமை கவுன்சில் சிறப்பு தூதரை ஏப்ரல் 22ம் திகதி இந்தியா அனுப்பியது.
டெல்லி பல்கலைக்கழக மாணவி காரினுள் இருவரால் கற்பழிப்பு
ஓடும் காரில் மகளை கொலை செய்ய முயன்ற தந்தை: ஜதாராபாத்தில் நடந்தேறிய விபரீதம்
பள்ளி மாணவி மூங்கில் காட்டில் கொடூரமாக கற்பழித்து கொலை
உத்தரகாண்டை உலுக்கிய வெள்ளம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் யூன் 6ம் திகதி ஆரம்பித்த வெள்ளம் பேய் அவதாரம் எடுத்தது.
சுமார் 15 தினங்களாக ஏற்பட்ட தொடர் வெள்ளத்தாலும், நிலச்சரிவுகளாலும் 10,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மேலும் கேதர்நாத் நகரத்தில் மட்டும் 5 லட்சம் பேர் உணவு, இருப்பிடமின்றி தவிப்பிற்கு உள்ளாகினர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

தலைவிரித்தாடும் ஊழல்
இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது, அந்த ஊழலானது கடந்த 2013ம் ஆண்டில் விஸ்வரூபம் எடுத்தது.
கேரளாவை பரபரப்பில் ஆழ்த்திய சூரிய தகடு ஊழல் வழக்கில் ரூ.10 கோடி மோசடி அம்பலமானது.
இந்த வழக்கில் தொழிலதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், நடிகைகள் சரிதா நாயர், ஷாலு மேனன் ஆகஸ்ட் 13ம் திகதி கைது செய்யப்பட்டனர், இதில் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிக்கினர்.
பீகார் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ரூ.37.7 கோடி மாட்டுத்தீவன ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட லல்லு பிரசாத் யாதவ்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முதலீடு செய்வதில் இந்தியா தான் முதலிடம் என்பது அம்பலமானது.
சோலார் மோசடி வழக்கு: பிரபல நடிகை சாலு மேனன் சிக்குகிறார்
லல்லுவுக்கு 5 ஆண்டுகள் சிறை! பறிபோனது பதவி
குண்டுவெடிப்பு சம்பவங்கள்
புத்த கயாவில் உள்ள மகாபோதி கோவிலில் யூலை 7ம் திகதி 10 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரும், குஜராத் மாநில முதல்–மந்திரியுமான நரேந்திரமோடியின் பீகார் மாநிலம் பாட்னா பொதுக்கூட்டத்தை குறிவைத்து அக்டோபர் 27ம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் பலியாயினர்.
மோடி பங்கேற்கும் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: சதி செய்தது யார்?
மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு! இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு தொடர்பா?
தனித்தெலுங்கான உதயம்
ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த போராட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யூலை 31ம் திகதி தனித்தெலுங்கானா உதயமானது.
ஆனால் இந்த தனித்தெலுங்கானவை எதிர்த்து ராஷ்ட்டிரிய ஜனதாதளம் மற்றும் தெலுங்கானா அமைப்பினர் போராட்ட களத்தில் குதித்தனர்.
தனித்தெலுங்கான விவகாரம் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா
தெலுங்கானா பிரச்னை: ஆந்திராவில் வன்முறை வெடித்தது

இயற்கையின் சீற்றங்கள்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பசலனம் காரணமாக தாழ்வு மண்டலமாக மாறி ஹெலன் புயலாக மாறி ஆந்திரமாநிலத்தை கடந்தது.
ஹெலன் புயல் பாதிப்பால் 1 1/2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டனர், மேலும் 10 பேர் பலியாகினர்.
பைலின் புயலால் ஒடிசா மற்றும் ஆந்திரா பகுதிகளில் உயிர் பலி குறைவாக இருந்தாலும், சேதம் அதிகமாக இருந்தது.
ஆந்திராவை தாக்கியது ஹெலன்: 7 பேர் பலி
ஆருஷி கொலை வழக்கு
2008ம் ஆண்டு மே மாதம் இளம்பெண் ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஆகிய இருவரும் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், சிறுமியின் தவறான நடத்தையினால் அவரது பெற்றோர்களே ஆருஷியை கௌரவக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டனர்.
கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோர்களுக்கு நவம்பர் 26ம் திகதி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆருஷி கொலை வழக்கில் பெற்றோரே குற்றவாளிகள்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஆருஷி கொலை வழக்கு: பெற்றோருக்கு ஆயுள் தண்டனை
ஆட்சியை பிடிப்பது யார் காங்கிரசா? பாஜகாவா
5 மாநில சட்டசபை தேர்தல்களில் பரபரப்பான பிரச்சாரங்களுக்கு மத்தியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா மகத்தான வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு 31, ஆம் ஆத்மிக்கு 28, காங்கிரஸ் கட்சி 8 இடங்களை பிடித்து படு தோல்வியை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பாரதீய ஜனதா மெஜாரிட்டி பெற்றதால் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தானின் முதலைமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி
ராஜஸ்தானின் முதல்வரானார் வசுந்தரா ராஜே

இந்தியாவின் சாதனைகள்
ஒரு நாட்டின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதை பிற நாடுகள் அறிய வேண்டுமென்றால் அந்நாட்டின் சாதனைகள் முக்கியம், ஒவ்வொரு சாதனைகள் மூலமே உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்க முடியும்.
செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை நவம்பர் 5ம் திகதி அனுப்பி வரலாற்று சாதனை நிகழ்த்தியது.
இந்த திட்டம் வெற்றி அடைந்தால், செவ்வாய் கோளுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இணையும்.
செவ்வாய் கிரகம் நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் மங்கள்யான்
கடலின் தட்பவெப்பத்தை அறிய உதவும், 'சரல்' செயற்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 59 மணி நேர கவுண்ட் டவுன் பிப்ரவரி 23ம் திகதி ஆரம்பமானது.
கடலின் தட்பவெப்பத்தை அறிய உதவும், 'சரல்' செயற்கோளின் கவுண்ட் டவுன் ஆரம்பம்
கடல் நீர்மட்டம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தட்ப வெப்ப நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் பி.எஸ்.எல்.வி. சி- 20 ராக்கெட் வெற்றிகரமாக பிப்ரவரி 25ம் திகதி விண்ணில் பாய்ந்தது.
7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-20
கடந்து வந்த பாதையை மனதில் நிறுத்தி, 2014ஐ  வரவேற்போம்.


அன்பில் நனைந்த காலம் 
புதிய பூக்களோடு வந்திருக்கிறது
ஒவ்வொரு பூவும் 
ஒரு நற்செய்தியாக...

கால மகளின் விரல் பிடித்து நடப்போம்...
அவள் முத்தங்கள் 
எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கட்டும்...

- பழநிபாரதி






The last don.

Montreal godfather and drug trafficking mastermind Vito Rizzuto is given a final send off in a gold casket.

http://dailym.ai/1hclB2G


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?