டுவிட் டரிவால்?
டுவிட்டரில் #YoKejriwalSoHonest இந்த பக்கம் போயிருக்கிறீர்களா?
"கேஜ்ரிவால் மிகவும் நேர்மையானவர்" எனும் ஹாஷ்டேகுடன் இந்த நகைச்சுவை குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு குறும்பதிவுகளும் ஒரு விதத்தில் கேஜ்ரிவாலின் நேர்மையை பற்றை கலாய்க்கும் வகையில் அமைந்துள்ளன.
படிக்க சில குறும்பதிவுகள்:
'கேஜ்ரிவால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி விருந்துக்குக்கூட கட்டணம் வசூலித்தார்.'
'அவர் பள்ளி படிவத்தில் தன் தந்தை பெயரை எழுதுவதற்கு முன்னர் மரபணு பரிசோதனை செய்து கொண்டார்'.
'மனைவி நான் குண்டாக இருக்கிறேனா என்று கேட்டால் அவர் ஆம் என்றே பதில் சொல்வார்'.
'ட்ரு லைஸ் படத்தின் முதல் பாதியை மட்டுமே அவர் பார்த்தார்'.
இவை எல்லாம் மாதிரிகள் மட்டுமே. இதே போல விதவிதமான முறையில் கேஜ்ரிவாலின் நேர்மையை கிண்டலடிக்கும் நகைச்சுவை குறும்பதிவுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன.
இதன் பயனாக #YoKejriwalSoHonest ஹாஷ்டேக் ட்விட்டரில் சமீபத்தில் முன்னிலை இடத்தை பிடித்தது. பலரும் இந்த குறும்பதிவுகளை பார்த்து ரசித்து தங்கள் பங்கிற்கு புதிய கேஜ்ரிவால் நகைச்சுவை குறும்பதிவுகளை உருவாக்கி பகிர்ந்து கொள்கின்றனர்.
பலர் ஏற்கெனவே வெளியான குறும்பதிவுகளைகெஜ்ரிவால் பெயராக மாற்றி போட்டு பகிர்ந்து கொள்கின்றனர்.
கேஜ்ரிவால் நகைச்சுவை குறும்பதிவுகளில் மிகச் சிறந்தவை என்று எடுத்து தனியே பட்டியலிப்படும் அளவுக்கு இந்த குறும்பதிவுகள் ட்விட்டர் வெளியில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
ட்விட்டரில் இப்படி சிலர் திடீர் புகழுக்கு ஆளாவது அவ்வப்போது நடந்துவருவதுதான்.
. பொதுவாக சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது கூறி, சிக்கிக்கொண்டால் அதை வைத்துக்கொண்டு ட்விட்டரில் குறும்பதிவுகளில் வறுத்தெடுத்து விடுவார்கள். சில நேரங்களில் குறும்பதிவுகளில் கொண்டாடவும் செய்வார்கள்.
சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றபோது, தேங்க்யூசச்சின் எனும் ஹாஷ்டேக் மூலம் அந்த சாதனை நாயகனுக்கு குறும்பதிவுகளில் நன்றிக் கனைகளை தொடுத்தனர். சில நேரங்களில் ஏதாவது ஒரு அம்சத்தை வைத்துக்கொண்டு குறும்பதிவுகளில் நையாண்டி செய்து தீர்த்துவிடுவார்கள்.
இந்த வகை குறும்பதிவுகளை யார் துவக்குகிறார்கள், எதற்காக துவக்குகிறார்கள் என்று தெரியாது, ஆனால் திடீரென் பார்த்தால் ட்விட்டரில் குறும்பதிவுகள் ஆறாக பெருகத் துவங்கி, புதிய போக்காக உருவாகிவிடும்.
ஹாலிவுட் பிரபலங்களில் துவங்கி நம் நாட்டு அரசியல்வாதி வரை பலர் இப்படி டுவீட்டரில் கலாய்க்கப் பட்டிருக்கிறார்கள்.
. இப்போது கேஜ்ரிவால் முறை .
டு விட்டரில் நடிகர் ரஜினி காந்த் பற்றிய குறும்பதிவுகள் முன்பு பி ரபலமானவை.
அவரதுஆற்றலை -பஞ்ச் வசனத்தை மையப்படுத்தி நூற்றுக்கணக்கில் நக்கலடிக்கும் குறும்பதிவுகள்டுவிட்டரில் முன்பு வளம் வந்தன. இருக்கின்றன.
வட இந்திய நகைச்சுவை நடிகர் அலோக் நாத் பற்றிய நகைச்சுவை குறும்பதிவுகள் பிரபலமாகின.
புனியாத் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற அலோக் நாத் எல்லா தொடர்களிலும் வாழ்க்கையில் மதிப்பீடுகளை வலியுறுத்தி பேசுவதை மையமாக வைத்துக்கொண்டு பல்வேறு நையாண்டி குறும்பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரவிந்த் கேஜ்ரிவால் நேர்மையை கிண்டலடிக்கும் குறும்பதிவுகள் இதை எல்லாம் மிஞ்சி வருக்கிறது.
அவரின் ஆதரவாளர்களுக்கு இவை வருத்தம் தந்தாலும் நக்கலின் சுவை நன்றாகத்தான் உள்ளது.
'கேஜ்ரிவால் வைரஸ் பாதுகாப்பு சேவையை பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அவருக்கு பாதுகாப்பு பிடிக்காது',
'கேஜ்ரிவால் கம்ப்யூட்டரில் படத்தை டவுண்லோடு செய்து பார்த்தால்கூட டிக்கெட் எடுத்து விடுவார்'
'கேஜ்ரிவால் விசிட்டிங் கார்டில் யாருமில்லை (நோபடி) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது'. 'சுற்றி யாரும் இல்லாவிட்டாலும்கூட அவர் தும்மல் வந்தால் மன்னிப்பு கேட்பார்' என்பது போன்ற குறும்பதிவுகளும் மேலும் சில உதாரணங்கள்.
எப்படியோ .டுவிட்டரிலும்,முக நூலிலும் அவ்வப்போது சிலர் மாட்டிக்கொண்டு அழுது விடுவேன்.என்று சொல்லுவதுண்டு.இப்போது கேஜ்ரிவால் முறை.
மோடி போல் தன்னைப் புகழ்ந்து ஆள் வைத்து எழுதாமல் தானாகவே வரும் விளம்பரம் இது.கேஜ்ரிவால் இதை விட்டு விடுவாரா என்ன?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகில் மிகத் தூய்மையான -நேர்த்தியான ஆடையை உடுத்துபவராக வாடிகனில் உள்ள "போப் "பை ஒரு ஆங்கில இதழ் தேர்வு செய்துள்ளது.
வெள்ளையாடை அதுவும் ஒரு பெரிய மனிதர் அணிவது தூய்மை இல்லாமலா இருக்கும்.
அதுவும் ஒரு சீருடையை நேர்த்தியானது என்று எப்படித்தான் தேர்ந்தெடுத்தார்களோ தெரிய வில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்களே இளித்த வாயர்களா?
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், சமீபத்தில் தங்களது நிறுவனங்களின் எல்.பி.ஜி., மற்றும் பெட்ரோல் பங்க் முகவர்களுக்கு வழங்கும் கழிவு தொகையை உயர்த்தியுள்ளன.
இதில், வேடிக்கை என்னவென்றால், உயர்த்தப்பட்ட இந்த கமிஷன் தொகை, நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன என்பதுதான். சில ஆண்டுகளாகவே, சத்தமின்றி இந்த வேலையை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன; கடந்த 6 ஆண்டுகளில் எல்.பி.ஜி., முகவர்களுக்கான கமிஷன், 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எரிவாயு சிலிண்டருக்கான கமிஷன், 2007 டிசம்பரில் 16 ரூபாய் 71 காசாக இருந்தது;
2013 டிசம்பரில் 40 ரூபாய் 71 காசாக உயர்ந்துள்ளது. இதேபோல, கடந்த 6 ஆண்டுகளில், பெட்ரோலுக்கான கமிஷன் 76 சதவீதமும், டீசலுக்கான கமிஷன் 100 சதவீதமும் உயர்ந்துள்ளது. கமிஷன் தொகை உயர்த்தும்போதெல்லாம், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு, நுகர்வோரின் தலையில் சுமை அதிகப்படுத்தப்படுகிறது.
அது மட்டுமின்றி, கமிஷனுக்கான மதிப்பு கூடுதல் வரி மற்றும் விற்பனை வரித்தொகையும், நுகர்வோரிடமே வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலமாக, விற்பனையால் கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் எண்ணெய் நிறுவனங்கள், செலவு என்று வரும்போது, அதனை நுகர்வோரின் தலையில் சுமத்துகின்றன; இது நுகர்வோரை பகிரங்கமாக ஏமாற்றும் செயல் என்பதோடு, சட்டவிரோதமானது என்று "கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த எண்ணெய் நிறுவனங்களுக்குப் போட்டி என்று எதுவும் இல்லாததால், வேறு வழியின்றி மக்கள் இதனை ஏற்க வேண்டிய கட்டாயம் தொடர்வதையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
சமீபத்தில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி, ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்தனர்; உடனடியாக, கமிஷன் தொகையை உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன; ஆனால், உயர்த்தப்பட்ட கமிஷன் தொகைக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி, அப்பாவி நுகர்வோரின் தலையில் சுமையை ஏற்றி விட்டன. இதே கமிஷன் தொகையை, தங்கள் வருவாயில் தருவதாக இருந்திருந்தால், இவ்வளவு சீக்கிரமாக கமிஷன் தொகையை உயர்த்துவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருக்குமா என்பது சந்தேகமே. எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் வருவாய்க்காகவே டீலர்களை நியமித்து, பொருட்களை விற்பனை செய்கின்றன; அப்படியிருக்கும்போது, அவற்றுக்குக் கிடைக்கும் லாபத்தில்தான், டீலர்களுக்கு கமிஷன் தர வேண்டுமென்பதே நியாயமாகும். ஆனால், வரவை மட்டும் எடுத்துக் கொண்டு, செலவை மட்டும் நுகர்வோர் தலையில் சுமத்துவதை, எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. இந்த நடைமுறை, நுகர்வோரை ஏமாற்றுவது மட்டுமின்றி, பெரிய அளவில் ஊழலை உருவாக்குவதற்கான வழிமுறையாக இருக்குமென்றும் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் சுட்டிக்காட்டுகிறார்.
அவர் கூறுகையில், ""விலை உயர்த்துவதையோ, கமிஷன் தொகையை உயர்த்துவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை; அதனை நுகர்வோரிடம் வசூலிப்பதைக் கண்டிக்கிறோம். இப்படிச்செய்வதால், "நீங்கள் ஸ்டிரைக் செய்யுங்கள்; நாங்கள் விலையை உயர்த்துகிறோம்' என்று கூறி, மறைமுகமாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள், கோடிக்கணக்கான ரூபாயை மறைமுகமாக பெற்றுக்கொண்டு, ஊழல் செய்வதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. எதிர்காலத்தில், எண்ணெய் நிறுவன அலுவலர்களின் சம்பள உயர்வு, புதிய கட்டடம் எல்லாவற்றுக்குமான செலவையும் நுகர்வோரிடம் வசூலித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இந்த நடைமுறையை மாற்ற வேண்டுமென பிரதமரை வலியுறுத்தியுள்ளோம்; இல்லாவிட்டால், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல, நுகர்வோரிடம் பணம் வசூலித்து, அதை விநியோகஸ்தர்களுக்குத் தரும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த நடவடிக்கையை, விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------