அருகில் வரும் மரணம்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி யிலிருந்து ஜெயந்தி நடராஜன் விலகியபோது வரவிருக்கும் தேர்தலையொட்டி “கட்சிப் பணிகளைச் செய்வதற்காகவே” அவர் விடுவிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொண்டது. ஆனால், பல உள் நாட்டு - வெளி நாட்டுப் பெரு நிறுவனங்களின் தொழில் திட்டங்கள் சுற்றுச் சூழலுக்கு இடையூறு செய்வதாக இருப்பதால் அவற்றுக்கு அவர் அனுமதி வழங்காமல் இருந்ததால், அந்த நிறுவனங் கள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாகவே அவரிட மிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்று ஊடகங்களில் ஊகச் செய்திகள் வந்தன.
அது உண்மைதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது,
அவரைத் தொடர்ந்து பொறுப் பேற்றுக் கொண்ட எம். வீரப்ப மொய்லி தெரிவித் துள்ள தகவல்.அவர் இந்த அமைச்சகத்திற்குப் பொறுப் பேற்றபிறகு கடந்த ஒரு மாதத்திற்குள் ஒன் றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70க்குமேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறாராம்.
ஜெயந்தி நடராஜனும் தன்னிடம் வந்த கோப்புகளை தாமதப் படுத்தியதற்கு சில உள்நோக்கம் இருந்ததாகக் கூற ப்பட்டாலும் அவர் மாற்றம் பணமுதலைகளுக்கு கொண்டாட்டம்தான்.
சட்டப்படி முறையான நடை முறைகள் முடி வடைந்த திட்டங்களுக்கான அனுமதி ஒரு நாள் கூட கிடப்பில் இருக்கக்கூடாது என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.குறிப்பிட்ட வட்டாரத்தின் தொழில் வளர்ச்சிக் கும், மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவுகிற திட்டங்கள் முறைப்படி வேகமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நியாயமே. ஆனால், தற்போது இப்படி ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல்களின் நோக்கம் அதுதானா?
ஒடிசா மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சர்ச்சைக்குரிய தென் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ நிறுவனத்தின் ரூ.52,000 கோடி இரும்புத் தொழிற்சாலைத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார் அமைச்சர். தங்களுடைய நிலத்தைப் பறித்து, பாரம்பரிய வேலைவாய்ப்புகளை சீர்குலைத்து, சுற்றுச் சூழ லையும் கெடுப்பதாக அந்த வட்டார மக்கள் -
குறிப் பாகப் பழங்குடியினரும் தலித்துகளும் கடந்த ஏழுஆண்டுகளாகப் போராடி வந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய அச்சம்போக்கப்படவில்லை, நிலத்தை இழப்போரின் மறுவாழ்வு திட்டவட்டமாக உறு திப்படுத்தப்படவில்லை.
போஸ்கோ நிறுவனம் “சமுதாயப் பொறுப்பு” நடவடிக்கைகளுக்காகக் கூடுதலாக 60 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அது வெறும்கண்துடைப்பு ஏற்பாடாகவே முடியும் என்பது தான் கடந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கிடைத் திருக்கிற அனுபவப் பாடம்.அதே ஒடிசாவில், கிராமசபைகள் ஒப்புதல் அளிக்கும் வரையில் வேதாந்தா நிறுவனத்திற்குத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
அதைஏற்றுள்ள மத்திய அரசு போஸ்கோ உள்ளிட்ட இதர நிறுவனங்களுக்கு அதே விதியை ஏன் செயல்படுத்தவில்லை?
முன்பு ஆறாண்டு காலம் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமை யிலான பாஜக கூட்டணி அரசு இதே போல், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் புறக்கணித்து அமெரிக்காவின் என்ரான் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்ததுதான் நினைவுக்கு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நிலையிலும், இந்த ஒப்புதல்களை அளிக்க அமைச்சரும் அரசும் இப்படி அவசரப்படுவது, இவர்களை ஆட்டுவிப்பது யார் என்ற உண்மையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதே?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மரபணு மாற்ற சோளமும்
அருகில் வரும் மரணமும்.

மான்சாண்டோ நிறுவனம் ரவுண்ட் அப் என்ற களைகொல்லி மருந்தை பல காலமாக விற்பனை செய்கிறது. இந்த களைகொல்லி மிகவும் சக்தி வாய்ந்தது. பெரும்பாலான களைகளை இந்த களைகொல்லி அழித்துவிடும்.
முக்கியமாக பல புல் வகைகளை அழிப்பதால் விவசாயிகளிடமும் பிரபலமானது. ரேசன் கடைகளில் பெரிய கேன்களில் பிடித்து மண்ணெண்ணெயை விற்பனை செய்வது போல் இந்த களைகொல்லியை விற்பனை செய்யும் காலம் எல்லாம் இருந்தது. சில களைகளுக்கு எதிர்ப்பு தன்மை வந்து விட்டதாகவும், சில உடல் நல தீங்குகள் ஏற்படும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.
இருந்தாலும் தற்போது உபயோகத்தில் உள்ள களைகொல்லிகளில் மிக பிரபலமானவற்றில் ஒன்று இது என்றால் அது மிகையாகாது.
இந்த களைகொல்லியை அடித்தால், வளர்ந்த நிலையில் உள்ள களை செடியுடன் பயிரையும் அழித்துவிடும் தன்மையுள்ளது. எனவே பயிரை விளைவிக்கும் முன் தண்ணீர் விட்டு களையை வளர செய்து இந்த களைகொல்லியை அடித்து களைகளை அழிக்க முடியும்.
ஆனால் வளர்ந்த நிலையில் உள்ள பயிர் இருக்கும்போது அதனுடன் வளர்ந்த களையை அழிக்க இதைப் பயன்படுத்த முடியாது. இதற்காக மாண்சான்டோ நிறுவனம் புதிய வகை ஜீன் மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்தியது. அந்த விதைகள் ரவுண்ட் அப் களைகொல்லிகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
எனவே பயிர் வளரும் போதும் இந்த களைகொல்லியை தெளித்தால் பயிர் உயிரோடு இருக்கும்; ஆனால் பயிரின் ஊடே வளரும் களை அழிந்து விடும்.
இதனால் உலகளவில் விவசாயிகளிடம் இந்த தொழில்நுட்பம் பிரபலமடைந்து இருந்தது. மான்சான்டோ மற்றுமல்லாது பிற விதை நிறுவனங்களும் தங்களது விதைகளில் ரவுண்ட் அப் எதிர்ப்பு ஜீனை இணைத்து விற்பனை செய்தார்கள்.
இதனால் மான்சான்டோவைப் பொருத்த வரையில் பிற விதை நிறுவனங்களிடமிருந்த ராயல்டியாக இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பணமும், இதனால் ரவுண்ட் அப் களைகொல்லியின் விற்பனை ஏற்றமும் கிடைத்தது. பிற விதை நிறுவனங்கள் அதிக விளைச்சலைத் தரும் தங்களது விதைகளை உபயோகபடுத்தும்போது களை கட்டுபாட்டுக்கான எளிய வழியாக கூறி தனது நிறுவன விதைகளை விற்றன. விவசாயிகளைப் பொருத்தவரை விளைச்சளும் களை கட்டுபாட்டிற்கான ஒரு தீர்வாகவும் இது இருந்தது.
உலகை அதிர வைத்த ஆராய்ச்சி
அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உற்பத்தியாகும் சோளத்தில் பெரும் பகுதி இந்த தொழில்நுட்பத்தில் வளர்ந்ததே. இந்த வகை சோளம் மற்றும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சில வருடங்களாக மக்கள் உண்டு வருகின்றனர்.
2012ம் ஆண்டு நவம்பர் மாதம் The Journal of Food and Chemical Toxicology என்ற ஆராய்ச்சிப் பத்திரிக்கையில் பிரான்சைச் சேர்ந்த செராலினி என்ற அறிஞரது ஆராய்ச்சிக் கட்டுரை அறிவியல் உலகத்தை அதிர வைத்தது. அவரது ஆராய்ச்சியின் படி ரவுண்ட் அப் ஜீன் மாற்றம் செய்யப்பட்ட சோளம் எலிகளுக்கு பல்வேறு சுகாதார கேட்டினை ஏற்படுத்துவதுடன் கேன்சர் கூட ஏற்படுத்தும் தன்மையுடையது.
இது 2007ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் Department of Environmental Health and Toxicology செய்த ஆராய்ச்சிக்கும் 2012ம் ஆண்டு University of Nottingham செய்த ஆராய்ச்சியின் முடிவுக்கும் எதிர்மறையாக இருந்தது.
இந்த ஆராய்ச்சி பற்றி கூறிய செரிலினி, ஜீன் மாற்றம் செய்யப்பட்ட சோளத்தை ஒரு வருடத்துக்கு மேலாக எலியை சாப்பிட வைத்தால் தான் இந்தத் தீங்கு ஏற்படும் என்றும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் குறைந்த கால அளவிலேயே செய்து முடிக்கப்படுவதாகவும், அதனால் இந்த தீய விளைவை கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறினார்.
இந்த ஆராய்ச்சி முடிவு உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரான்சு அதிபர் ஐரோப்பிய அளவிலான தடையை NK603 என்ற சோள வகைக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
ரஸ்யா இந்த வகைப் பயிரை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. கென்யா மரபணு மாற்றப் பயிர்களுக்கு தடை விதித்தது. பொதுவாக ஐரோப்பிய நிறுவனங்கள் அதிக அளவில் பூச்சு மருந்து வேதிப் பொருட்களையும், அமெரிக்க நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளையும் உற்பத்தி செய்வதால் ஐரோப்பிய நாடுகளிடம் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிர்ப்பு இருப்பதாக பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது.
இந்த ஆராய்ச்சி முடிவு ஐரோப்பாவில் மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான எதிர்ப்பை அதிகப்படுத்தியது.
ஆராய்ச்சி முடிவை திரும்ப பெற்ற பத்திரிக்கை
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை The Journal of Food and Chemical Toxicology திரும்பப் பெற்றுக் கொண்டது
அனைவருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது
இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட எலிகளுக்கு கேன்சர் பெரும் தன்மை அதிகமாக இயல்பிலேயே இருப்பதாகவும், இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டதால் தான் கேன்சர் ஏற்பட்டது என்று மதிப்பிட சரியான புள்ளியியல் கோட்பாடுகளை பயன்படுத்தவில்லை என்றும் காரணம் கூறியது. அதே போல் ஆராய்ச்சியாளர் எவ்வாறு மரபணு மாற்றப் பயிர் கேன்சரை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிப் பூர்வமாக விளக்கவில்லை என்றும் கூறியது. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையைத் திரும்பப் பெற்றதனால் மரபணு மாற்றப் பயிருக்கு எதிரான உடல்நல கேட்டினை ஏற்படுத்தும் ஆராய்ச்சி முடிவுகள் மிகப் பெரிய ஆராய்ச்சிப் புத்தகங்களில் இல்லாமல் போனது.
இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவாக பல ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும், மரபணு மாற்றப் பயிருக்கு எதிரானவர்களும் உள்ளனர். இந்த ஆராய்ச்சி வெளிவந்த ஆறு மாதம் கழித்து, அந்த ஆராய்ச்சிப் பத்திரிக்கை Associate Editor for Biotechnology என்ற பதவியை ஏற்படுத்தி அந்தப் பதவிக்கு மான்சான்டோவின் முன்னாள் பணியாளரான Richard E. Goodman என்பவரை நியமித்தது அனைவரிடமும் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியது.
வளர்ந்து வரும் மக்கள் தொகையும், குறைந்து வரும் விவசாயத் தொழிலாளர்களும், குறைந்து வரும் விவசாய நிலப்பரப்பும் நவீன வேளாண் தொழில்நுட்பத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன.
மேலை நாடுகளில் சென்ற நூற்றண்டுகளில் இருந்தது போல் அடிமை முறை கொண்ட மலிவான தொழிலாளர்களோ, இந்தியாவில் இருந்தது போல் வர்ணாஸ்ரம முறைப்படி சொந்த மக்களையே அடிமையாக வைத்து மலிவான கூலித் தொழிலாளர்களாக உபயோகப்படுத்தி அதிக தொழிலாளர்களைக் கொண்ட விவசாயத்தை செய்வது தற்போது வாய்ப்பில்லை. அதே போல் குறைந்த நிலப் பரப்பில் தொழில்நுட்பம் கொண்டு உற்பத்தித் திறனை அதிகப்படுத்தினால் தான் அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
மேலை நாடுகளில் இருப்பது போல் இயற்கை விவசாயத்தில் இரு மடங்கு விலையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்தால் கூட கோடிகணக்கான ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு உற்பத்தியை தொழில் நுட்பம் மூலம் உற்பத்தி செய்யத்தான் வேண்டும்.
ஆனால் இது போன்ற சுகாதார ஆபத்து இருக்குமா அல்லது இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சிகளை ஒரு சில வருடங்கள் பல்வேறு நாடுகளில் கூட்டாக யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நடு நிலைமையுடன் செய்வது அவசியம். அப்போது தான் மக்களும் பயமின்றி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவர். நடு நிலைமையிலான பல்வேறு ஆராய்ச்சிகளால் இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டால் இந்த ஆராய்ச்சியின் பயன் அனைத்து பயிர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் சென்றடையும்.
அதே சமயம் மிகப் பெரிய சுகாதார ஆபத்து இருக்குமானால் ஆரம்பத்திலேயே அதற்கு ஒரு மாற்று முறை நோக்கி ஆராய்ச்சியை கவனம் செலுத்தலாம்.
1940களில் பூச்சுக்கொல்லியாக அறிமுகப்படுத்தப்பட்ட DDT, இயற்கை மற்றும் மனித சுகாதாரத்துக்கு ஏற்படுத்தும் சீர்கேட்டைப் பற்றி ராச்சல் கார்ல்சன் என்ற அறிஞர் 1962ல் மவுன வசந்தம் என்ற புத்தகம் மூலம் வெளிப்படுத்தினார். அவருக்கு எதிராகவும் பெரும் அவதூறுகள் வெளியிடப்பட்டன.
1972ல் அவரது கருத்தில் உண்மை இருப்பதை அறிந்து DDT விவசாய உபயோகத்துக்கு தடை செய்யப்பட்டது. அதே நிலை தற்போதைய மரபணு மாற்ற ஆராய்ச்சிக்கும் வந்துவிடக் கூடாது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------