பணம் மட்டுமே குறி





இந்திய கடற்படைக்கு, புதிதாக நீர்மூழ்கி குண்டுகள் வாங்க,ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
 இந்த நீர்மூழ்கி குண்டுகளை,இத்தாலிய  'பின்மெக்கானிகா' நிறுவனத்தின் கிளை  நிறுவனமான 'ஒயிட்ஹெட் அலெனியா சிஸ்டெமி'யிடம் வாங்க முடிவு ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?இந்த பின் மெக்கனிக்காவின் இன்னொரு கிளை நிறுவனம்தான்.
அகஸ்டா வெஸ்ட் லாண்ட் '

வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த, 'பின்மெக்கானிக்கா' நிறுவனத்தின் கிளை  நிறுவனமான 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனத்திடம்தான்  மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்தது .
 இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.இதனால் அந்த ஒப்பந்தமே  ரத்து செய்யப்பட்டது.

அந்த ஊழலில் அசிங்கப்பட்டு போன காங்கிரசு ஆட்சியும் ராணுவ அமைச்சகமும் மீண்டும் அதே பின் மெக்கனிக்கா நிறுவனத்திடமே ஒப்பந்தம் போடுவதை பார்த்தால் இவர்களுக்கு வெட்கம்,மானம் கிடையாது.பணம் மட்டுமே குறி என்பது தான் தெரிகிறது.
1800 கோடிகளில் எவ்வளவு இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ ?இந்திய பாதுகாப்பை இவர்கள் எண்ணிப் பார்ப்பதே இல்லையோ?
---------------------------------------------------------------------------------------------------------------------------

 
 
சின்னக் கண்ணை வாங்கிய முகனூல்.
 
அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பேஸ்புக் சமூக இணைய தள நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது. மொபைல் தொழில் நுட்பத்துறையில் இயங்கும், பெங்களூருவினைச் சேர்ந்த Little Eye Labs என்னும் நிறுவனத்தை அண்மையில் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் திறனை அதிகப்படுத்தும் தொழில் நுட்பத்தினை வடிவமைத்து வருகிறது.
இந்த தொழில் நுட்பத்திற்கு பேஸ்புக் முன்னுரிமை கொடுத்து வந்தது. தன் வர்த்தகத்திற்கு இதன் கட்டமைப்பு தேவையாய் இருந்தது. எனவே, தற்போது இந்த நிறுவனத்தையே வாங்கி உள்ளது. முதல் முறையாக, ஓர் இந்திய நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன விலை இதற்கெனக் கொடுக்கப்பட்டது என இரண்டு பக்கம் இருந்தும் தகவல் இல்லை. லிட்டில் ஐ நிறுவன வல்லுநர்கள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 10 பேர்கள் தான்.
Photo: 14 inspirational quotes that will change your life in 2014: http://ti.me/19zeizs

(Photo: Getty Images)
இருப்பினும், இந்த நிறுவனம் 1.5 கோடி டாலர் விலை போயிருக்கலாம் என சாப்ட்வேர் நிறுவனங்கள் பேசிக் கொள்கின்றன.
பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தியே அணுகுகின்றனர் என்பதாலேயே, பேஸ்புக்கிற்கு இந்த தொழில் நுட்பம் தேவையாய் உள்ளது. பயனுள்ள மொபைல் அப்ளிகேஷன்களை பேஸ்புக் தன் பயனாளர்களுக்குத் தரத் திட்டமிடுகிறது. அந்த வகையில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் பக்க பலமாக இருக்கும் என பேஸ்புக் நிறுவன பொறியியல் மேலாளர் சுப்பு சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பிரிவுகளைத் தொடங்கி தங்களுக்கு வேண்டிய தொழில் நுட்பத்தினைத் தயாரித்து வரும் வேளையில், பேஸ்புக் இந்திய தகவல் தொழில் நுட்ப திறமையின் மதிப்புணர்ந்து, நிறுவனத்தையே வாங்கியுள்ளது, நம் திறமைக்குச் சான்றாகும்.

நூறு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தும் பேஸ்புக் இணைய தளப் பயனாளர்களுக்கு இந்த தொழில் நுட்பம் மூலம் பல புதிய வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். லிட்டில் ஐ லேப்ஸ் என்ற இந்த தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கி ஓராண்டு தான் ஆகியுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இந்நிறுவனத் தின் அனைத்து பொறியியல் வல்லுநர்களும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடமான மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்குச் செல்ல இருக்கின்றனர். அங்கு கிடைக்கும் உலகத் தரத்திலான தொழில் நுட்பக் கட்டமைப்பு, இன்னும் சிறப்பாகச் செயல்பட வழி வகுக்கும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Click Here



போதைப்பொருள் உற்பத்தி சாதனை

உலகில் தமிழ்நாட்டில் மட்டும் [டாஸ்மாக்]போதை பொருள் விற்பனைக்கு குறியீடு வைத்து சாதனை செய்யப்படவில்லை.
ஆப்கானிஸ்தானமும்தான்
2013 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் உற்பத்தி சாதனை படைத்துள்ளது.2012 ஆம் ஆண்டிடுடன் ஒப்பிடும் போது போதைப் பொருள் பயிர்ச்செய்கை 50 வீதம் அதிகரித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு அமரிக்க இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு முன்னர் ஹெரோயின் போதைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொப்பி பயிர்ச்செய்கை முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. Pittsburgh Post-Gazette என்ற நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் பொப்பி பயிர்ச் செய்கை புறக்கணிக்கத் தக்கதாகவே இருந்தது. தலிபான்கள் பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தனர். ஒரு பகுதி தலிபான்கள் சி.ஐ.ஏ இன் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்கிவந்தனர்.
உள்ளூர் தலிபான்கள் பொப்பி பயிர்ச் செய்கையை முற்றாக தடை செய்திருந்தனர்; இதனால் போதைப் பொருள் வர்த்தகம் தடைப்பட்டுப் போயிருந்தது.
ஓபியம் உற்பத்தியைப் பாதுகாக்கும் அமரிக்க இராணுவம்

பொப்பி பயிர்ச்செய்கையின் மறு பிறப்பிற்கு அமரிக்க இராணுவம் வசதியேற்படுத்திப் பாதுகாப்பு வழங்கியது. 2001 ஆம் ஆண்டில் அமரிக்க ஆக்கிரமிப்பு நடைபெற்று ஒருவருடங்களுக்கு உள்ளாகவே பொப்பி பயிர்ச்செய்கை 657 வீதத்தால் அதிகரித்து.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் அமரிக்கா விளக்குப் பிடித்துத் தேடிக்கொண்டிருந்த தலிபான்கள் பொப்பி பயிர்ச்செய்கையைத் தேடித்தேடி அழித்துக்கொண்டிருக்க அவற்றிற்கு அமரிக்க இராணுவம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தது.

இன்றையை ஆப்கானின் ஜனாதிபதி ஹமிட் கார்சாயின் சகோதரர் அகமட் வலி கார்சாய் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல உலகின் மிகப்பெரும் போதைப்பொருள் தரகராகக் கருதப்படுபவர்.
ஆப்கானிஸ்தானில் ஒபியம் போதைப் பொருளின் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்பவர்.
மாற்றுத் தொழில் ஒன்று கிடைக்கும் வரை ஓபியம் உற்பத்தியை நிறுத்த முடியாது .  

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?