முடி உதிர்தல் -முடி நரைத்தல்

---------------------------------------------------

அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி உதிர்தல் ,நரைத்தல் பிரச்னைஉண்டாகி ன்றது.
இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
Mani Karaikal's photo.உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது.
உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முடி உதிர்வு பிரச்னை ஏற்படுகிறது.

அதே போல் முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்பின்மை, அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுக்கும் பிரச்னை, நினைவுத் திறன் தடைப்படுதல், புரிந்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல் ஆகியவை உடலுக்கு வயதானதின் அறிகுறிகள்.


 அதிகாலையில் விழித்தல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தலை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
முகம் மிருதுத்தன்மை பெறுவதற்கும், எண்ணெய் வடிதல் மற்றும் அழுக்கு சேர்தலை தவிர்க்கவும், எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். தலை, காது மற்றும் பாதங்களில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம், குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தலை தடுக்கிறது.
உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் நடுநிலையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கோதுமை, கறுப்பு கொள்ளு, தேங்காய், வேர்க் கடலை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது, சருமத்தில் ஈரத் தன்மையை தக்க வைத்து, சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது. பசு நெய், தசை மற்றும் சருமத்திற்கு நல்லது.
Photo: News from south of the equator: Amid America's big chill, Brazilians have been wilting under temperatures as high as 120 F. It's so hot that animals at the Rio de Janeiro zoo were treated ice pops made from tropical fruits, chunks of meat and frozen yogurt. They said "thank you" by posing for these amazing photos. http://yhoo.it/1krgEW3
இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின், தூங்கச் செல்ல வேண்டும்.
நள்ளிரவுக்கு பின் தூங்கச் செல்வதால், கண்களுக்கு கீழே கரு வளையம், வீக்கம் உண்டாகிறது. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
சருமம் ஈரத் தன்மையுடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், எண்ணெய் மிகுந்த, காரமான, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி ஒன்றரை மணி நேரம், வேகமாக நடப்பது அவசியம்; இதனால், வியர்வை வெளியேறி நச்சுப் பொருள் நீக்கப்படுகின்றன.
நெல்லிக்காய், எலும்பு, தசை மற்றும் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, மூன்று வகையான தோஷ காரணிகளை நடுநிலையுடன் வைத்து, உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக் கிறது.
 பழங்கள் சாப்பிடுவதும் பலன் அளிக்கும்.
காய்ச்சாத பசும் பாலுடன், ஜாதிக்காய் பவுடர் சேர்த்து, களிம்பு போல செய்து, கண்களுக்கு கீழே தடவி, காய்ந்தவுடன் கழுவினால், கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் நீங்குவதுடன், முகம் வறண்டு போவதையும் தடுக்கலாம்.
தயிருடன், சுத்தமான மா இலை சேர்த்து, களிம்பாக செய்து முகத்தில் பூசுவதால், கறுப்பு கோடு, முகப்பரு தழும்பு நீங்குகிறது.
மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால், அவை முகத்திலுள்ள நுண் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------
ஆஸ்கார் விருதுகளுக்கான  தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு விருதுகளுக்காக, மோசடிக் கலைஞர்களை மையமாகக் கொண்ட "அமெரிக்கன் ஹஸ்ல்" என்ற படமும், விண்வெளி சாகசப் படமான " கிராவிட்டி"யும் சிறந்த படம் என்ற பிரிவு உட்பட, தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
suran blogspot

ஸ்டீவ் மக்வீன் இயக்கிய அமெரிக்க கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக வைக்கபப்ட்டிருந்ததை மையமாகக் கொண்ட " ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்" என்ற படம் ஒன்பது பிரிவுகளில் பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது..


மார்ச் -2 ம்  தேதி லாஸ் ஏஞ்சலசில்  ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடக்கும்.
Photo: We see our U.S. House representatives like Sisyphus rolling his boulder up a hill: a heroic but tragic figure fighting a gridlocked force. In other words, most voters blame anyone but their own representative. We asked voters, including many here on Facebook, to share their perspectives. Here's what you told us: http://yhoo.it/1gMCDB1 ("The Myth of Sisyphus" illustration by Flickr user Andrew Allingham)
-------------------------------------------------------------------------------------------------------------------------
சீர்காழி  கோவிந்தராஜன்

இன்று சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த நாள் .அவரைப் பற்றிய சில தகவல்கள்.

தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.

பெயர் : சி. கோவிந்தராசன்

பிறப்பு: 19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.

பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்


 ஆரம்ப கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி

இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:

தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்

வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்

செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
 கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்

இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்: தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி

இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி

இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்

பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம் சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் பயின்றார்.

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953-ல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

திரைப்படத்திற்காக பாடிய பிரபல பாடல்கள்

பட்டணந்தான் போகலாமடி- படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை: எம்.வேணு

அமுதும் தேனும் எதற்கு - படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை: கே.வி.மகாதேவன்

மாட்டுக்கார வேலா - படம்: வண்ணக்கிளி, இசை : கே.வி.மகாதேவன்

வில் எங்கே கணை இங்கே - படம்: மாலையிட்ட மங்கை, இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்,

இராமமூர்த்தி வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே - படம்: கோமதியின் காதலன், இசை: ஜி.இராமநாதன்

கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்: கோமதியின் காதலன், இசை :ஜி. இராமநாதன்

மலையே என் நிலையே - வணங்காமுடி, இசை: ஜி. இராமநாதன்

ஜக்கம்மா - வீரபாண்டிய கட்டபொம்மன், இசை: ஜி.இராமநாதன்

பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை: எம்.வேணு

ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)

எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960) பாரதியார் பாடல், இசை: கே. வி. மகாதேவன்

ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்) கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து) நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966) பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969) கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962) கண்ணன் வந்தான் (ராமு)
-------------------------------------------------------------------------------------------------------------------------

 
இந்த சாவு சிக்கலில் இருந்து மீண்டால் போதும் .
இனி பொம்பளைங்களை 
டாவடிக்க மாட்டேன் .சாமி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தேவயானி நிர்வாணமாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார் என ஒரு அமெரிக்கப் பெண்ணின் காணொளியை வைத்து பொய் வதந்தி பரப்பி பெண்ணுக்காக நீதி கேட்கிறோம் என்ற பெயரில் ஏமாற்றி குதியோ குதியென்று குதிக்கின்ற இந்திய ஊடகங்கள் இசைப்பிரியா போன்ற பல்லாயிரம் ஈழத்து தமிழ் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை எழுதவோ பேசவோ குரல் கொடுக்கவோ மறந்தது அல்லது வஞ்சனையோடு மறுத்தது ஏன்? உலக மானிடத்தில் ஈழத்து தமிழர்கள் மனிதர்களாக பார்க்கப்படாத கொடுமைக்கு உலகம் முதலில் பதில் சொன்ன பின்பு தான் இது போன்ற பொய்மை வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அரங்கேறி உள்ளது. அதை பேச முடியாத இந்திய ஊடகங்கள் ஊடக தர்மம் இன்றி எந்த செய்தியையுமே பேசவோ எழுதவோ அருகதை இல்லாதவர்களே!!!!! நேர்மை இல்லாத எந்த எழுத்துக்களும் பேச்சுக்களும் மக்களை சென்றடைவதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?