மூடர் கூடம்?


suran

  பேஸ்புக் காதல்?
 உலகின் முன்னணி சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளை பிப்ரவரி 4ல், கொண்டாடியது.
 ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அறையில் சிறு அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.

2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது.
அந்த எளிய முயற்சி இன்று  உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து- டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்குகிறது.இதை அம்மாணவரே எதிர்பார்க்கவில்லை.
இந் நிறுவனம், அன்று  ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது. 
பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை 
தொடங்கிய மா ர்க் ஸக்கர் பெர்க்"Thefacebook” என  பெயரிட்டார்.
 2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோ விட்ஸ் ஆகியோர் Facemash.com என்னும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி, அதனை யாவரும் அணுகி, இரண்டு மாணவர்களின் படத்தில் எது சிறந்தது என்று ஒப்பிடும் வசதியைத் தந்தனர்.
 இதனை விளம்பரப்படுத்தி பிரபலமாக்குவதற்காக, அப்போது ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கென நடத்தி வந்த இணைய தளங்களை ஸக்கர் பெர்க் முடக்கினார் என்று ஒரு செய்தி அப்போது வெளியானது. 
தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட பேஸ்புக் தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது.
 காப்புரிமை, பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக, பல்கலைக் கழக அதிகாரிகள் ஸக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். 
suran
இதன் பின்னரே, ஸக்கர்பெர்க் "thefacebook.” என்னும் புதிய தளத்தினை அமைத்தார். 

2004 பிப்ரவரி 4 ஆம் நாள், ஸக்கர்பெர்க் thefacebook.com என்னும் தன் தளத்தினை இயக்கத் தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1,500 பயனாளர்கள் இதில் இணைந்தனர். 
ஹார்வேர்ட் பல்கலையில் பட்ட வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் இதில் இணைந்தனர். பின்னர், இந்த தளத் தினை மற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டனர்.

முதலில்  பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள் அனுமதிக்கப்படவில்லை.படங்களை தரவேற்ற இயலாது.
அக்டோபர் 2005ல்தான் , ஒவ்வொரு பயனாளரும் எவ்வளவு போட்டோக்கள் மற்றும் படங்களை அப்லோட் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டது. 
இன்று பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள் தான்  முக்கிய அம்சங்களாக உள்ளன.
 2013 செப்டம்பரில், இத்தளத்தில் பதியப்பட்ட படங்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. 
suran
இப்போது நாள் தோறும் 35 கோடி படங்கள் ஏற்றம்  செய்யப்படுகின்றன.

 கல்லூரிகள், பள்ளிகள் என்ற எல்லை வரையறையைத் தாண்டி, பேஸ்புக் இணைய தளத்தில் பல பிரிவினரும் இணைய, இந்த தளம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. 2006, செப்டம்பர் 26ல், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து பதிந்து கொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது. 
இதனால், 2006 ஆண்டு இறுதியில், பயனாளர் எண்ணிக்கை55லட்சத்தில் இருந்து  ஒரு கோடியே 20 லட்சம் என்று அசுர வளர்ச்சியடைந்தது.

2006 செப்டம்பரில், யாஹூ நிறுவனம் நூறு கோடி டாலர் கொடுத்து, பேஸ்புக் இணைய தளத்தினை வாங்க முன்வந்தது.
 பேஸ்புக் இணைய தள நிறுவனத்தில் முதன் முதலில் முதலீடு செய்த பீட்டர் என்பவர், இதனை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார். ஆனால், இதற்கென கூட்டப்பட்ட கூட்டத்தில், 22 வயது இளைஞரான ஸக்கர்பெர்க், "இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடியப்போகிறது. நாங்கள் எங்கள் இணையதளத்தை விற்கப் போவதில்லை” என அறிவித்தார்.
 ஏனென் றால், பணம் சம்பாதிப்பதை தன் இலக்காக என்றைக்குமே ஸக்கர்பெர்க் கொண்டதில்லை.
 "இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால், இன்னொரு சமூக தளத்தைத் தொடங்கலாம். அதற்கு இதனையே வளப்படுத்துவேன்” என்றார்.

 பேஸ்புக் இணையதளத்தின் முதல் 30 மாதங்கள், பயனாளர்களின் தகவல் பக்கங்களைப் பதிந்து இயக்குவதிலேயே இருந்தன. 
செப்டம்பர் 2006ல், முதல் முதலாக, பேஸ்புக் தளத்தில் செய்திகள் தரப்பட்டன.
 உங்கள் சமூக வளைவில் என்ன நடக்கின்றன என்று தகவல்களைத் தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனால், தொடர்ந்து ஒரு நிகழ்வு சார்ந்து கிடைக்கும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனுடன் பேஸ்புக் MiniFeed என்ற வசதியையும் கொடுத்தது. இதில் பயனாளர் ஒருவரின் சமூக செயல்பாடுகள் தொகுக்கப்பட்டன.

2007 ஆம் ஆண்டு மே 24 அன்று, பேஸ்புக் தன்னுடைய Facebook Platform என்னும் மேடையை மக்களுக்கு வழங்கியது.
 இது, பேஸ்புக் தளத்தில் இயங்கக் கூடிய புரோகிராம் களை மற்றவர்கள் தயாரித்து வழங்குவதற்கான மேடையாக அமைந்தது. தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களுக்கு உதவி புரிய Facebook Markup Language என்னும் வசதியையும் இதனோடு அளித்தது. 
suran
பல முக்கிய அப்ளி கேஷன்கள் பேஸ்புக் தள செயல்பாட்டில் இணைந்தன.

 ஐந்தாண்டுகள் கழித்து, பேஸ்புக் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது. 
2009ல், இந்நிறுவனம் பெற்ற வருமானம் 77.7 கோடி டாலர்.
 இது 2008ல் பெற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. (சென்ற வாரம், பேஸ்புக் தன் நான்காவது காலாண்டில் மட்டும் 206 கோடி டாலர் விற்பனை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 63% கூடுதலாகும்.)

 2012 ஆம் ஆண்டு மே மாதம்,
பேஸ்புக்  தன் பொதுப் பங்கு வெளியீட்டினை மேற்கொண்டது. 
இதன் மூலம் அது திரட்டிய தொகை 1,600 கோடி டாலர்கள் . அமெரிக்க பங்குச்சந்தை  வரலாற்றில்  இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக உள்ளது.

 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 4ல், பேஸ்புக் இணையதளத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, நூறு கோடி யைத் தாண்டிவிட்டது .
 இன்றைய நிலவரப்படி உலகில் உள்ளவர்களில்  ஏழு பேரில் ஒருவர், பேஸ்புக்கில் இணைந்துள்ளனர்.
பேஸ்புக் வடிவமைப்பின் மூலம் தன் 23 ஆவது வயதில் கோடீஸ் வரராக உயர்ந்த இளைஞர் என ஸக்கர்பெர்க் வரும் மே மாதம் தன் 30 ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாட இருக்கிறார்.
 ஸக்கர்பெர்க் வளர்க்கும் பீஸ்ட் (Beast) என்னும் நாய்க்கு பேஸ்புக்கில் ஒரு தளம் உள்ளது. இதனை17 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.
ஸக்கர்பெர்க், பேஸ்புக்கின் போட்டி தளமான ட்விட்டர் தளத்தில் தனக்கென ஒரு பக்கக் கணக்கு வைத்துள்ளார். இதற்கு 3 லட்சம் விசிறிகள் உள்ளனர். ஆனால், 2012 ஜனவரிக்குப் பிறகு, இதில் புதியதாக எதுவும் எழுதப்படவில்லை.
6,900 கோடி டாலர் சந்தை மதிப்புள்ள நிறுவனமாக உயர்வதற்கு, டாட்டா கன்சல்டன்ஸி (டி.சி.எஸ்) நிறுவனத் திற்கு 46 ஆண்டுகள் ஆனது. ரிலை யன்ஸ் 4,300 கோடி டாலர் மதிப்பினைப் பெற 43 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால், பேஸ்புக், பத்தே ஆண்டுகளில் 16,100 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.
தன் பயனாளர்களில், 60 லட்சம் பேர்களின் தனிப்பட்ட தகவல்கள், தவறுதலாக ஒரு நிறுவனத்திற்குச் சென்றது என பேஸ்புக் அறிவித்தது. இது தன் மென்பொருள் வடிவமைப்பில் இருந்த தவறினால் ஏற்பட்டது என ஒப்புக் கொண்ட பேஸ்புக், அவர்கள் அனைவருக்கும் மின் அஞ்சல் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்ட தாகவும், இவர்களின் நிதி நிலை குறித்த தகவல்கள் எதுவும் திருடு போகவில்லை எனவும் தெரிவித்தது. 
எவ்வளவு திறமையான மென்பொருள் வல்லுநர் களைக் கொண்ட நிறுவனமாக இருந்தாலும், 100 சதவிதம் பிழை இல்லாத மென்பொருள் வடிவமைப்புகளை  அமைக்க இயலாது என்று வேறு  பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது  குறிப்பிடத்தக்கது.
suran

Click Here
  இந்தியாவைப் பொறுத்தவரை பேஸ்புக் வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக வேகத்துடனே காணப்படுகிறது. 
ஒவ்வொரு மாதமும், இதில் செயல்படும் பயனாளர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாகும். 
இதில் 7 கோடியே 30 லட்சம் பேர், தங்கள் மொபைல் சாதனங் களில், பேஸ்புக் தளத்தைப் பயன் படுத்துகின்றனர்.
 இதனாலேயே, தன் மொபைல் அப்ளிகேஷன்களுக்கு, இந்தியாவை ஒரு சோதனைத் தளமாக பேஸ்புக் கொண் டுள்ளது. 
2008 ஆம் ஆண்டு வாக்கில்தான், இந்தியாவில் பேஸ்புக் பயன்பாடு தொடங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பயனாளர் எண்ணிக்கை 10 கோடியை தற்போது நெருங்கிக் கொண்டி ருக்கிறது.

 தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
suran

 சொல்லப் போனால் இன்று இளையத் தலைமுறையினரிடம் பேஸ்புக் தான் மாஸ் மீடியாவாக இயங்குகிறது. 
அதனால் தான், ஐ.சி.ஐ.சி.ஐ., கோகோ கோலா இந்தியா, ஏர்டெல், நெஸ்லே மற்றும் காட்பரி இந்தியா போன்ற நிறுவனங்கள், தங்கள் விளம்பரத்தை பேஸ்புக் தளத்துக்கு அள்ளி விடுகின்றன.
இன்று இந்தியாவில் உள்ள 26 கோடியே 30 லட்சம் இணைய பயனாளர்களில், 9 கோடியே 30 லட்சம் பேர் பேஸ்புக் தளத்தில் இனைந்துள்ளனர் .

---------------------------------------------------------------------------------------------
மூடர் கூடம்?

இப்போது முடிந்து விட்ட கடைசி மக்களவை கூட்டத்தொடருடன் மன்மோகன்-சோனியா காங்கிரசு தலைமை மக்களவை நடவடிக்கைகள் 90 சதம் ஒத்திவைப்பு-கூச்சல்-குழப்பம் என்றுதான் நடந்துள்ளது.
காங்கிரசு அதைத்தான் விரும்பியது போல் தெரிகிறது.
suran
அவர்கள் கொண்டுவந்த மசோதாக்கள் -தீர்மானங்கள் அனைத்துமே நாட்டை அந்நிய நாடுகளிடம் விற்கும்  வகையில் இருந்தன.
அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளை வேறு தெலுங்கானா,தமிழக மீனவர் பிரச்னை,போன்ற பிரச்னைகளை எழுப்பி மக்களை திசை மாற்றி அந்த சந்தடியில் தங்களின் விவகாரமான மசோதாக்களை தங்கள் விருப்பப்படி நிறைவெற்றிக் கொண்டனர் .
இந்திய வரலாற்றில் இதுபோன்ற மோசமான பார்லி., வீணான கூட்டத்தொடர் எதுவும் இருக்க முடியாது என்ற அளவிற்கு நடந்து முடிந்த மக்களவை,மாநிலங்களவை  கூட்டத்தொடர் பேசப்படுகிறது. 
கூச்சல்,குழப்பம்,மேசை -மைக் உடைத்தல்,காகிதங்களை கிழித்து எறிதல் எல்லாவற்றுக்கும் மேலாக மிளகு சாரம் [ ஸ்பிரே செஷன்ஸ்]தூவல் என்று மக்களால் தங்கள் நலனுக்கு என்று வாக்களித்து அனுப்பப்பட்டவர்கள் கேவலமாக ரவுடிகள் போல் நடந்து கொண்டுள்ளனர்.
கடைசியாக நடந்த குளிர்கால் கூட்டத்தொடர் ( பிப்- 5 முதல் பிப் 21 வரை) 10 முறை அமர்வுகள் நடந்தது என்றும், இதில் லோக்சபாவில 88 சதவீதமும், ராஜ்யசபாவில் 85 சதவீதமும் கால விரையம் ஆகியிருக்கிறது.

செக்சன் 374 -ஏ யின் படி 17 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடந்த லோக்சபாவில் 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 
எம்.பி.,க்கள் வருகை பதிவு குறித்த எடுக்கப்பட்ட விவரத்தில் ராகுலும், தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களும் படுமோசம் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளளனர்.அதிலும் மிக அதிகமாக சபையை நடத்தவிடாமல் கூச்சலிட்டது அவைநாயகர் மேசையை மறித்து கோசம் எழுப்பியது,காகிதங்களை அதிகாமாக கிழித்து பறக்கவிட்டது,அவை நாயகர் ஒலிவாங்கியை உடைத்தது என்று சாதனையை படைத்துள்ளார்.அதிமுக அனுப்பிய மைத்ரேயன்.
suran
கடந்த பார்லி., கூட்டத்தொடரில் சிறந்த பேச்சாக எப்போதும் மவுனமாக இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங், எதிர்கட்சி தரப்பில் விளாசும் சுஷ்மா சுவராஜ், சீக்கிய கலவரம் குறித்து ஹரீஸ்மிராட் கவுர் பாதல், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் சிறந்தவர்களாக தேர்வாகியுள்ளனர். இந்த மேற்கூறியவர்கள் பேசிய விவாத பொருள் விவரம் வருமாறு: பிரதமர் மன்மோகன்சிங்- (விக்கலீக்ஸ் தொடர்பான சர்ச்சை ) - மார்ச் 2011, சுஷ்மாசுவராஜ்- லிபரான் கமிஷன் ரிப்போர்ட் , ஜெய்ராம் ரமேஷ் ( நில கையகப்படுத்தும் மசோதா ), கவுர் பாதல் - சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து . 

இதுவரை பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. இதில் ஊழல் தடுப்பு திருத்த மசோதாக்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நீதித்துறை மற்றும் நம்பிக்கை மசோதா, சரக்குக்கான சேவை வரி மசோதா, வெளிநாட்டு அலுவலக ஊழல் தடுப்பு மசோதா ஆகியன நிறைவேற்றப்பட முடியவில்லை. 

கடந்த 1962 முதல் நடந்த பார்லி., கூட்டத்தொடரில் இதுவரை பல கூட்டங்கள் பயனுள்ளதாகவே இருந்துள்ளது. இதில் பல கூட்டங்கள் 100 முதல் 120 சதம் வரை பயன் அடைந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் கடந்த 1999 முதல் இந்த பயன்பாடு குறைந்து வந்தது. கடந்த 2009 - 2014 வரையிலான பயன்பாடு பார்லி., வரலாற்றில் மிக குறைவாக 63 சதம் மட்டுமே பயன்பாடாக இருந்தது என்றும் தெரிய வருகிறது.
 மொத்தம் 545 எம்.பி.க்களில் மொத்தம் 4 எம்.பி.,க்கள் மட்டுமே 100 சதம் வருகை பதிவாகியுள்ளனர்.
 மொத்தம் 297 எம்.பி.,க்கள் மட்டுமே அவையில் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
 100 சதவீத வருகை புரிந்த எம்.பி.,க்கள் பெயர் விவரம் வருமாறு: பிரதீபா சிங் (மந்தி தொகுதி, அரியானா), டாக்டர் சுரேஷ் ( பெங்களூரூ, ரூரல் ) , ரமேஷ்குமார் ( தெற்கு மும்பை), கே.பி.தனபால் ( சாலக்குடி, கேரளா ).

இது போன்று மற்ற எம்.பி.,க்கள் வருகையில் அதிகம் சதம் பெற்ற எம்.பி.,க்ள் விவரம்; ஜோதி மிர்தா - காங் - நாக்பூர் ( 93 சதவீதம்), மீனாட்சி நடராஜன் - காங் மந்தசசோர் ம.பி., ( 84 சதவீதம் ), ஹம்துல்லா சயீத் ( 79 சதவீதம்),அகதா சங்மா (48 சதம்) , இவர் எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்கவில்லை, எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. இதில் இவர் பெற்ற மார்க் பூஜ்யம் தான். 
சசி தரூர் 12 விவாதங்களிலும், 88 கேள்விகளும் கேட்டுள்ளார்.
suran
 பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே., அத்வானி இந்த தொடரில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இவரது வருகை பதிவேடு 96 சதம், 39 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 
சுஷ்மா சுவராஜ்- வருகை பதிவேட்டில் 94 சதம், 108 விவாதங்களில் பங்கேற்பு, காங்., தலைவர் சோனியா 47 சதம் வருகைப்பதிவேடு, 2 விவாதங்களில் பங்கேற்பு, கேட்ட கேள்வி- 0.

வருண் காந்தி( பாஜ., ) வருகைபதிவேட்டில் 63 சதம், 2 விவாதங்களில பங்கேற்றுள்ளார், 635 கேள்விகள் கேட்டுள்ளார். 
சைலேந்திரகுமார்- (சமாஜ்வாடி கட்சி), வருகைபதிவேட்டில் 97 சதம் 168 கேள்வி 342 விவாதங்களில் பங்கேற்பு, புலன்பிகாரி பாஸ்கே, (சி.பி.எம்.,) வருகை பதிவேடு, 92 சதம், 42 விவாதங்களில் பங்கேற்பு, 84 கேள்விகள் எழுப்பியுள்ளார்.அணுராக்சிங் தாக்கூர் ( பா.ஜ., ) வருகை பதிவேட்டில் 84 சதம், 68 விவாதங்களில் பங்கேற்பு, 599 கேள்விகள் எழுப்பியுள்ளார். சுப்ரீயாசுலே ( சரத்பவாரின் மகள் , தேசியவாத காங்கிரஸ்), வருகைப்பதிவேட்டில் 86 சதம், 38 விவாதங்களில் பப்கேற்பு, 733 கேள்விகள் கேட்டுள்ளார்.

 ஆய்வு அறிக்கையில் கூறப்பட்ட விபரங்களின்படி காங்கிரசின் பிரத வேட்பாளராக அடையாளங்கானப்படும் பிப்ரவரி 17 வரை ராகுல் வெறும் 42 சதவீதம் அட்டென்டண்ஸ் மட்டுமே வைத்துள்ளார். இது சராசரி அளவான 76 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. 
 ராகுலின் சொந்த தொகுதி இருக்கும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதிகபட்சமாக 80 சதவீதம் அட்டென்டண்ஸ் வைத்துள்ளனர். மொத்த 17 நாட்கள் நடைபெற்ற லோக்சபாவின் கடைசி கூட்டத் தொடரில் தினமும் பல்வேறு விவாதங்கள் நடத்தபட்டது. இதில் 2 விவாதங்களின் போது மட்டுமே ராகுல் கலந்து கொண்டுள்ளார். 
அவைக்கு வந்த சமயத்திலும் கேள்வி ஏதும் கேட்கவும் இல்லை, தனிநபர் மசோதா எதையும் தாக்கல் செய்யவும் இல்லை. அவையில் கொண்டு வரப்பட்ட, விவாதிக்கப்பட்ட விவகாரங்களில், லோக்பால் மசோதாவில் மட்டுமே ராகுலின் தலையீடு இருந்துள்ளது. மோசமான வருகை பதிவேடு என்பதில் ராகுல் இடம் பிடித்துள்ளார்.
suran

 தமிழக மக்களவை உறுப்பினர்கள்  அ.ராஜா[இவர் 2ஜியில் மாட்டி திகாரில் அடைக்கப்பட்டதால் கலந்து கொள்ளவில்லை.], மு.க.அழகிரி, நெப்போலியன், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த டிம்பிள் யாதவ், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மோகன் ஜாதுயா, சிசிர் அதிகாரி மற்றும் கபிர் சுமவ், ஜார்கண்ட் முக்தி மோட்சாவைச் சேர்ந்த சிபு சோரன், பா.ஜ.,வைச் சேர்ந்த பலிராம் காஸ்யாப, சதானந்த கவுடா, வித்தல்பாய் ஹன்ஸ்ராஜ்பாய் உள்ளிட்ட பல எம்.பி.,க்கள் ராகுலை விடவும் மோசமான வருகை பதிவை தந்துள்ளனர். 

மொத்தத்தில் இந்தமக்களவை கூட்டங்க்கள் இதுவரை இல்லாத அளவு  படுமோசம் என்ற அவப் பெயரை பெற்றுள்ளது.

இது போன்ற சொந்த விவகாரங்களுக்காக குழப்படி செய்யும் கட்சிக்காரர்களை தங்கள் சார்பில் கட்சி,சாதி,மதம் பார்த்து தேர்ந்தெடுத்த மக்களைத்தான் அதற்கான பெருமை சாரும்.

இன்றைய அளவில் மக்களவை கட்டிடம் மூடர் கூடம் போல் தோன்றினாலும் இந்திய மக்களை மூடர்களாக ஆக்கும் கூடம் அதுதான் .காரணம் நம் பிரதிநிதிகள் காரணமின்றி கத்தவில்லை.உள்நோக்கத்துடன்தான் குழப்படி செய்கின்றனர்.அதில் அவர்களின் நோக்கங்களும்-தேவைகளும் நிறை வேறிகொள்கின்றன.
suran


suran

---------------------------------------------------------------------------------------------------------------

இந்திய பீடிக்கு அமெரிக்கா  தடை .!


இந்தியாவில்  தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பீடிகளுக்கு அந்நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது.இந்தியாவில் ஏழைகளின் சிகரெட் என்று செல்லமாக அழைக்கப்படும் பீடிகள் இங்கு கைகளால் தயாரிக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தியாவில் புகையிலையை கொண்டு தயாரிக்கப்படும் இவ்வகை பீடிகளுக்கு மேலை நாடுகளில் கடும் கிராக்கி காணப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பீடிகளின் ஏற்றுமதி பிரமாதமாக காணப்பட்டு வந்தது.
 கடந்த 2009ம் ஆண்டு புகையிலை பொருட்கள் விற்பனை மீதான பல்வேறு கட்டுபாடுகளை அமெரிக்க அரசு கொண்டுவந்தது. இதனையடுத்து பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் ஏராளமான கண்டிஷன்களை அமெரிக்க அரசு போட்டது. 
suran

இந்நிலையில் சிறிய சிகரெட்டுகள் என்று அமெரிக்கர்களால் அழைக்கப்படும் இந்திய தயாரிப்பு பீடிகளை இறக்குமதி செய்யவும், விற்கவும் அமெரிக்கா திடீர் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைச்சகம் முதன் முறையாக இல்லினாய்ஸ் நகரில் இருந்து செயல்படும் ஜாஸ் இன்டர்
நேஷனல் என்ற இந்திய பீடி நிறுவனத்தின் நான்கு வகை பீடிகளுக்கு தடை விதித்துள்ளது. தற்போதைய புதிய விதிகளின் படி இவ்வகை பொருட்களை நீண்ட காலத்திற்கு சந்தைகளில் விற்கவோ, இறக்குமதி செய்யவோ அனுமதியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து ஜாஸ் நிறுவனத்தின் தரப்பில் இதுவரை  பதில் தெரிவிக்கப்படவில்லை.2011ல் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் அமெரிக்க மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 2 சதவீத மாணவர்கள் இந்திய பீடி
களை புகைக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?