இது நம்ம நாட்டு வைத்தியம்!

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வர, சருமம் தங்கம் போல் மின்னும். 
பாசிப்பயிறு மாவை  வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு பிரச்னை சரியாகும். 
suransukumaran

கிராம்பு, கற்பூரம், ஓமம் ஆகியவற்றை ஒரு சிட்டிகை வீதம் எடுத்து  பொடி செய்து வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து வாய் கொப்பளிக்க, ஈறு வீக்கம் குறையும். 
அருகம்புல்லையும் மஞ்சளையும் சேர்த்து  அரைத்து படர்தாமரையில் பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். 
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் பன்னீரையும் சந்தனத்தையும் அரைத்து முகத்தில் தடவ, சருமம் பொலிவு பெறும். கிராம்பை வெற்றிலையுடன்  சேர்த்துப் போட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.  

வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்னியாக  சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். 
வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண், இருமல் குணமாகும். 
suransukumaran
 வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து, தினமும் சிறிதளவு வெறும் வயிற்றில்  சாப்பிட உடல் எடை குறையும்.

மஞ்சள் தூளை நெய்யுடன் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் இருமல் நிற்கும். கிராம்பு பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள்  பலமாகும். 

பேரிக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். 
எலுமிச்சை பழச்சாறு, தேன் கலந்து குடிக்க வறட்டு  இருமல் குணமாகும்.

ஊறவைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தயிரில் கலந்து 3வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். 
வயிற்று கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல்  அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயும் கலந்து குடித்தால் சிறிது நேரத்தில் குணமாகிவிடும். 
suran-maathuLai
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம்  செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். 

வெற்றிலை சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். 

வெண்டைக்காயை அடிக்கடி சேர்த்து  வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தை செம்மைப்படுத்தும். 
ஞாபகசக்தி அதிகரிக்கும். 
மாதுளம் பழச் சாறுடன், தேன் கலந்து  சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். ரத்தம் சுத்தமடையும். 
முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டை யில்  தடவிக்கொண்டால் இருமல் நிற்கும். 
வில்வப் பூக்களை உலர்த்தி, பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும். 

வேறு என்ன வேணும்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
தெலுங்கானா தனி மாநிலம் 
  உறுதியாகி விட்டது.
இப்போது ஆந்திராவின் புதிய தலைநகர் எது? என்ற பிரச்னை எழுந்து உள்ளது. 'தெலுங்கானா மாநிலம் உருவான, 45 நாட்களுக்குள், புதிய தலைநகர் எது என, அடையாளம் காணப்படும்' என, ஏற்கனவே அறிவித்துள்ளது. 
'தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும், ஹைதராபாத், பொதுத் தலைநகராக, 10 ஆண்டு இருக்கும். அதன் பின்  ஹைதராபாத் , தெலுங்கானாவின் தலைநகராகி விடும். ஆந்திராவுக்கான புதிய தலைநகர், அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
விசாகப்பட்டினம், விஜயவாடா, கர்னூல், திருப்பதி ஆகிய நகரங்களில், ஏதாவது ஒரு நகரம், ஆந்திராவின் புதிய தலைநகராக தேர்வாகும் வாய்ப்பு உள்ளது. இந்த நகரங்கள் அனைத்துக்குமே, தலைநகராவதற்கான தகுதியுள்ளதுடன், ஒவ்வொரு நகரத்துக்கும் தனிச் சிறப்பும் உள்ளது.இன்னும் சில நாட்களில், ஆந்திராவின் புதிய தலைநகர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை  மத்திய அரசு  வெளியிடும்.

suransukumaran

suran
------------------------------------------------------------------------------------------------------------
கின்னஸ்’ புத்தகம் 

தமிழ் நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு கின்னஸ் கூத்து நடந்தது.அதுதான் 54000 பேர்கள் ரத்ததானம்.
இது முதல்வரின் 66 ஆவது பிறந்த நாளுக்கு சாதனை நடத்த நடந்தது.
வண்டி ஓட்ட உரிமம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நேரில் வந்து உடனே உரிமத்தை வாங்கி செல்லலாம் என்று கடிதம் வர சென்றவர்களிடம் ரத்தம் [கட்டாய ]தானம் பெறப்பட்டது.
போக்குவரத்து கழக ஊழியர்கள் கட்டாயம் ரத்தத்தை தர வேண்டப்பட்டார்கள் .அப்போதுதான் ஊதியம் ,இல்லையெனில் எதற்காகவோ மெமோ என்று அன்பாக அறிவுறுத்தப்பட்டார்கள்.
இப்படி சிறுக,சிறுக உறிஞ்சப் பட்ட ரத்தப்பைகள் எண்ணிக்கை 54000க்கும் அதிகமாக முதல்வரிடம் [?]கின்னஸ் சான்று வழங்கப்பட்டது.அவரும் ரத்தம் சிந்தாமல் புன்னகை சிந்த வாங்கிக்கொண்டார்.
இதில் பெரிய கூத்து இவ்வளவு ரத்தப்பைகள் பாதுகாப்பாக வைக்க இடம் இல்லை.ரத்தம் எந்த வகை என்ற ஆய்வோ,அதில் அபாயமான கிருமிகள் ஏதாவது உண்டா என்றும் பார்க்கப்படவில்லை.ரத்தம் கொடுத்தவர்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் ஊக்க உணவு ஏதும் கொடுக்கப்படவில்லை.பலர் தானம் தந்த இடத்திலேயே மயங்கி கிடந்தது வேதனையான விசயம் .
அதைவிட வேதனை.ரத்தப் பைகள் தூக்கி கடாசப் பட்டதுதான்.பின்னே எந்த ஆய்வும்-பிரிவும் தெரியாத ரத்தத்தை எந்த நோயாளிக்கு ஏற்ற முடியும்?இதில் பலர் ஊக்கமாக ரத்தம் தர தமிழக உற்சாகப் பானக்கடைகளுக்கு சென்று வந்துள்ளனர்.
சரி.எதற்காக இந்த கின்னஸ் சா [வே]தனை செய்யப்பட்டதோ ?
அது என்ன ?
கின்னஸ் என்றால் என்ன?

சிறு  வரலாறு:

அயர்லாந்து நாட்டை சேர்ந்த சர்க்யூபீவர் என்பவர் 1951-ம் ஆண்டு வேட்டையாடுவதற்காக ஒரு நதிக்கரையோரம் சென்றார். அப்போது ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்றன. அவர் உடனே அவைகளை சுட நினைத்து துப்பாக்கியை எடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த பறவைக்கூட்டம் கண்ணுக்கு தெரியாத தூரத்திற்கு சென்றுவிட்டன.
இதனால் அவர் வியப்பில் உறைந்தார். பறவைகளின் வேகம் குறித்து ஆச்சரியப்பட்டார். அவரை மலைக்க வைத்த பறவை இனம் கோல்டன் பிளவர். இதுபற்றி சர்க்யூபீவருக்கு ஒரு சிந்தனை தோன்றியது. உலகிலேயே இந்த வகை பறவைகள் தான் வேகமாக பறக்கக் கூடியதா? என்று ஆய்வு செய்தார். இதுபற்றி பலரிடம் கேட்டும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. அப்போதுதான் நாமே ஒரு புத்தகம் தயாரித்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது.
உடனே அவர் லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்கு புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டை சகோதரர்களை சந்தித்தார். அவர்களிடம் தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்பு தந்தனர். இந்த மூவரின் உழைப்பில் தான் தற்போதைய ‘கின்னஸ்’ புத்தகம்.


suran
1955-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி சுமார் 198 பக்கங்களுடன் முதல் கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டனர். அதில் உலகிலேயே மிகப் பெரியது, மிகச் சிறியது பற்றிய விவரங்ககள் இருந்தன. இந்த புத்தகம் அந்த ஆண்டு அதிக அளவில் விற்பனையாகி சாதனைப் படைத்தது. 

அப்போது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனைகள், அவற்றை செய்தவர்கள் பற்ரிய தகவல்களுடன் புத்தகம் வெளிவருகிறது. 

1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டும் கின்னஸ் புத்தகம் வரவில்லை.

நாம் ஒரு சாதனையாளராக இருந்தால் அதையும் கின்னசுக்கு அனுப்பலாம். 


அதற்கு நாம் செய்ய வேண்டியது, சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிக்கை செய்திகள். பார்வையற்றவர்களாக இருந்தால் அவர்களின் கையெழுத்து தொகுப்பு. 

அவை உண்மையானவைதான் என்பது குறித்து நம்பகத்தன்மைக்கு பொறுப்பான நிறுவன தலைவர் தரும் உறுதிமொழி கடிதம் ஆகியவற்றை சேகரித்து அனுப்ப வேண்டும்.

முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளி வந்த கின்னஸ் புத்தகம், தற்போது 35 மொழிகளில் வெளிவருகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

"நோ பயர் சோன்"  

இந்தியாவில் திரையிட தடை!

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நோ பயர் சோன்-(NO FIRE ZONE- The Killing Fields of Sri Lanka) ஆங்கிலத் திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளது.
இலங்கையுடனான நட்புறவை பாதிக்கும் என்ற காரணத்தினாலேயே இந்தப் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமக்கு காரணம் கூறப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் கலம் மெக்ரே பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் மிகவும் தவறான முடிவு என்றும் கலம் மெக்ரே கூறினார்.
'இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்ற காரணத்தை அவர்கள் சொல்லியிருப்பது, குறுகிய கால அரசியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது, உண்மை நிலவரம் ஒன்றை மக்கள் தெரிந்துகொள்ள முடியாதபடி மறைக்கின்ற நடவடிக்கை' என்றும் அவர் தெரிவித்தார்.
'இது நிச்சயமாக இந்தியாவுக்கு பிரச்சனைக்குரிய, அசௌகரியத்துக்குரிய நிலைமை தான். நீதி கிடைப்பதற்கு உண்மையை நிலைநாட்டுவது அவசியம். அந்த நீதி தான் அரசியல் தீர்வொன்றையும் அமைதியான சூழலையும் எட்டுவதற்கு அடிப்படை ஆதாரமாக அமையமுடியும். இப்படி இந்தப் படம் மக்களை சென்றடைவதைத் தடுப்பதன் மூலம் இந்தியா தவறிழைக்கிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது' என்றும் கூறினார் இயக்குநர் கலம் மெக்ரே.

'ஆனால், நோ பயர் சோன் படத்தில் வருகின்ற அனேகமான காட்சிகள் மனதை பெருமளவில் பாதிக்கக்கூடியவை என்று இந்திய திரைப்பட தணிக்கைச் சபை இன்னொரு காரணத்தையும் கூறியிருக்கிறதே' என்று தமிழோசை அவரிடம் சுட்டிக்காட்டியது.

இணையதளத்தில் படம் வெளியாகிறது

கலம் மெக்ரே
கலம் மெக்ரே 

'போர்க்குற்றங்கள் என்பது மனதைப் பாதிக்கக்கூடிய, விரும்பமுடியாத சம்பவங்கள் தான். அவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் அப்படியாகத் தான் இருக்கமுடியும். அந்தப் படம் பிரித்தானிய தொலைக்காட்சிகள் காட்டப்படுவது தடுக்கப்படவில்லை. இவை துயரகரமான உண்மைகள். அவற்றுக்கு முகம் கொடுத்துதான் ஆகவேண்டியிருக்கிறது' என்று பதிலளித்தார் கெலம் மெக்ரே.
மனதைப் பாதிக்கக்கூடிய காட்சிகள் என்பது ஒரு சாக்குபோக்கு காரணமே என்றும் இலங்கையுடனான உறவுகளை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பது தான் உண்மையான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் தீர்மானம் தொடர்பில் மேன்முறையீடு செய்யும் எண்ணம் இல்லை என்றும் இந்தியாவிலும் தடை ஏற்படக்கூடும் என்று கருதப்படும் மலேசியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் எல்லா மக்களும் இலகுவாக பார்க்கக்கூடிய விதத்தில் இணையத்தில் படம் வெளியிடப்படுவதாகவும் இயக்குநர் மேலும் கூறினார்.
மலேசியாவில் இந்தப் படத்தைக் காண்பித்தக் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை செல்லக்கூடிய வழக்கொன்றை உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் மெக்ரே தெரிவித்தார்.
தமது படம் திரையிடப்படுகின்றமை தடுக்கப்படுகின்ற சம்பவங்களின் பின்னணியில் இலங்கை அரசாங்கமே உள்ளதாகவும் நோ பயர் சோன் இயக்குநர் தெரிவித்தார்.

இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் கலம் மெக்ரே ஈடுபட்டுவருவதாகவும் அவரது படங்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பண உதவி அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது.
இப்படத்தை வெளியிட்டால் இந்திய அரசுக்கு என்ன கேடு விளையப்போகிறது.அண்டை நாடு இலங்கை என்பதைத் தவிர வேறு என்ன பிரச்னை?அண்டை நாடு இலங்கை என்றால் அழித்தொழிக்கப்பட்டது தமிழ் சொந்தங்கள் அல்லவா?அவர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் அல்லவா?
இலங்கை அண்டை நாடு என்பதைத் தவிர சொல்லமுடியாத பங்கு[?]ஏதோ ஆளும் காங்கிரசுக்கு இருக்கிறது.அதுதான் தடை மேல் தடையை உண்டாக்குகிறது.!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
காந்தியின் பேரன் இப்போது ஆம் ஆத்மி கட்சியில்
------------------------------------------------------------------------------------------------------------
suran
                           சூடாக தயாராகும் எலி வறுவல்-இக்காட்சி சைபிரியா தெருவில்
------------------------------------------------------------------------------------------------------------
கடந்த 1939–ம் ஆண்டு சூப்பர் மேன் ‘காமிக்ஸ்’ புத்தகம் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள ‘சூப்பர் மேன்’ கடலுக்குள் மூழ்கி கிடக்கும் நீர்மூழ்கி கப்பலை மீட்கும் காட்சி புத்தகத்தின் அட்டைப்படமாக வெளியாகி உள்ளது.

அந்த அட்டை படத்தை பிரட் கார்டினர் என்ற ஓவியர் வரைந்து இருந்தார். அதன் ஏலம் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.
இந்த நிலையில் அது ரூ.1ž கோடிக்கு ஏலம் போனது. ஆனால் அதை ஏலம் எடுத்தவர் யார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடல் அலை போல புற்றுநோய்! 

---------------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24 மில்லியனாக உயரும் என்று உலக சுகாதார  நிறுவனம் கூறுகிறது.
கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக  நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் மருத்துவத்திற்கான செலவு கட்டுப்பாட்டை மீறி அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
புற்றுநோய் பரவுவதால் ஏற்படும் மேலதிகச் செலவு வளர்ந்து வரும் நாடுகளினாலேயே சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும் அது கூறுகிறது.
suran
"
2014ம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம், தடுக்கப்படக்கூடிய புற்றுநோய்க் காரணிகளாக:
*புகை பிடித்தல்
*கிருமித்தொற்று
*மது அருந்துதல்
*உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல்
*சூரிய ஒளி மற்றும் மருத்துவ ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு
*காற்று மாசு, மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள்
*தாய்மைப் பேறு தாமதமாவது, குழந்தைகள் அதிகம் பெறாமல் தவிர்ப்பது, தாய்ப்பால் தராமலிருப்பது
ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது.
suran
பெரும்பாலான நாடுகளில் மார்பகப் புற்றுநோய்தான் பெண்கள் மத்தியில் புற்றுநோய் தோன்றுவதற்கு மிகப் பொதுவான காரணம். ஆனால், ஆப்ரிக்காவின் பல பகுதிகளில், பெண்களுக்கு அதிகம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயே அதிகம் காணப்படுகிறது.
புற்றுநோய்க்கும் மது அருந்துவதற்கும் இடையேயான தொடர்பைப் பற்றிக் கூறும், இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான, ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசியர் டாக்டர் பெர்னார்ட் ஸ்டூவர்ட், மனித நடத்தைதான் பல வகைப் புற்றுநோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்றார்.
மிக அதிகமாக உடலைப் பழுப்பாக்கிக்கொள்ள சூரியக் குளியலில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் புற்று நோய் தவிர்க்கப்பட முடியும் என்று அவர் கூறுகிறார்.
"மது தாராளமாகக் கிடைப்பதைக் கடினமாக்குவது, மது பாட்டில்களில் லேபல்கள் ஒட்டுவதில் கவனம் செலுத்துவது, மதுவை விற்பதில் உள்ள விளம்பர முறைகள் மற்றும் மதுவின் விலை போன்றவைகளைப் பற்றி நாம் விவாதிக்கவேண்டும்", என்றார் ஸ்டூவர்ட்.

அதேபோல விலைகளை உயர்த்துவது, விளம்பரங்களை கட்டுப்படுத்துவது போன்ற கடுமையான வழிகள் மூலம் மது மற்றும் சர்க்கரை உட்கொள்ளுதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?