தொடரும் மின் வெட்டு காரணம் ?


suran

தமிழகத்திற்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை.
 ஆனால்  உற்பத்தியாவதோ 8 ஆயிரம்  மெகாவாட் மின்சாரம்தான். 4 ஆயிரம் மெகாவாட்  மின்சாரத்தை சரிகட்ட தனியார், வெளிமாநிலங்களில்  இருந்து மின்சாரம் பெறப்பட்டு  வருகிறது. 
தமிழகத்தில் மொத்தம் 669 துணை மின்நிலையங்கள் உள் ளன. இதில் 400  கே.வி துணை மின்நிலையம் 14ம், 230 கே.வி துணை மின்நிலையம் 75ம், 110  கே.வி  துணை மின்நிலையம் 580ம் உள்ளன.  காற்றாலை, அனல்மின்நிலையம்,  நீர்மின்நிலையம், அணுமின்நிலையம் மூலம் தமிழகத்தில் மின்உற்பத்தி  செய்யப்பட்டு  வருகிறது. தமிழகத்தில் உள்ள வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி, நெய்வேலி   அனல்மின்நிலையங்கள் 5710 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.  கூடங்குளம், கல்பாக்கம்  அணுமின்நிலையம் மொத்தம் 1440 மெகாவாட் உற்பத்தி திறன்  கொண்டவை. 
மேட்டூர், அமராவதி,  நீலகிரி, காட்டேறி, குண்டா, மோயாறு, பாபநாசம்,  வைகை, முல்லைப்பெரியார், கோதையாறு ஆகிய  நீர்மின்நிலையங்கள் சுமார் 1693  மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை, குமரி, நெல்லை, தூத்துக்குடி,  கோவை,  திருப்பூர் மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மொத்தம் சுமார் 4 ஆயிரம் மெகாவாட்  மின்  உற்பத்தி திறன் கொண்டவை. 

கடந்த திமுக ஆட்சியில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு 2400 மெகாவாட்  மின்சாரம் கொண்டு  வரப்பட்டது. 

அதனால் அப்போது 2 மணிநேரம் மட்டும் மின்வெட்டு இருந்தது . 
மேலும் மின்தடையை மு ழுவதுமாக நீக்கும் வழியில் பொன்னேரி, வல்லூர்,  மேட்டூர் பகுதியில் புதிய அனல் மின்நிலையங்கள்  தொடங்கப்பட்டன. 
அந்த அனல்  மின்நிலையங்கள் தற்போது மின்உற்பத்தியை தொடங்கியுள்ளது. 
மேலும்  காற்றாலை  மூலமும் மின்சாரம் கிடைத்து வருகிறது. இருப்பினும் மின்தடை தொடர்கிறது
ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில்  எந்த  ஆக்கப்பூர்வமான திட்டமும் இல்லாததால் உற்பத்தி திறன்  குறைந்த அ ளவே ஆகிவருகிறது. மேலும் மக்களுக்காக அடுத்த மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதையும் நிறுத்தி விட்டது.

இதனால்தான் மின்வெட்டு 12 மணி நேரம் ஏற்படுகிறது .
 மேலும் வருடம்தோறும்  6 லட்சம் முதல் 8 லட்சம் வரை  மின்நுகர்வோர்கள் புதிதாக இணைப்பு பெறுகின்றனர். இதனால் வருட த்திற்கு கண்டிப்பாக  400 மெகாவாட் மின்உற்பத்தி அதிகமாக உற்பத்தி செய்து ஆகவேண்டிய கட்டாயத் தில்  தமிழகம் உள்ளது. கடந்த 31.3.2012வரை தமிழகம் முழுவதிலும் வீடு, தொழிற்சாலை,  விவசாய  இலவச மின்சாரம் என மொத்தம் 2 கோடியே 31 லட்சத்து 79 ஆயிரத்து 576  இணைப்புகள் தமிழக த்தில் இருந்தன. 
தற்போது சுமார் 2 கோடியே 45 லட்சம்  இணைப்புகள் உள்ளதாக மின்சார வாரிய  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில்  புதிய மின்நிலையங்களை தொடங்கும் தமிழக அரசு,  பழைய மின்நிலையங்களை  கண்டுகொள்வது இல்லை. 
suran
அந்த மின்நிலையத்திற்கு தேவையான  உதிரிபாகங்கள்,  உற்பத்தி செய்யப்படும் மூலதனங்களை தங்குதடையின்றி வழங்க வேண்டும் என   கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

அனல் மின்நிலையங்கள், நீர்மின்நிலையங்களில் போதிய உதிரிபாகங்கள், பராமரிப்பு  இல்லாததால்  அவைகள் தங்கள் திறனுக்கு ஏற்றவகையில் மின்உற்பத்தியை செய்வது  இல்லை. தூத்துக்குடி அனல்  மின்நிலையத்தை எடுத்துக்கொண்டால் 1050 மெகாவாட்  மின்உற்பத்தி கொண்ட 5 யூனிட்கள் உள்ளன.  ஆனால் அவ்வப்போது இந்த யூனிட்கள்  பழுதாகி கொண்டே இருக்கிறது. இதனால் 1050 மெகாவாட்  மின்உற்பத்தியை தொடுவது  அரிதாக உள்ளது. இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு நீர்மின்  நிலையத்தில் 2 யூனிட்கள் உள்ளன. இவை  மொத்தம் 100 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி திறன் கொண்டவை. ஆனால் உதிரிபாகங்கள், மற்றும் பராமரிப்பு இல்லாததால்  60 மெகாவாட்டே மின்உற்பத்தி செய்கிறது.  மேலும் இங்கு வருடத்தில் சில மாதங்களே  மின்உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரத்தில் ப ழுதாகி முடங்கி கிடக்கிறது.  
இது குறித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச்செயலாளர்  சுப்பிரமணியன்  கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை  மின்நுகர்வோர் அதிகரித்து வ ருகின்றனர். வருடம் தோறும் மின்நுகர்வோருக்கு  தேவையாக 400 மெகாவாட் மின் உற்பத்தி பெருக்கி  ஆகவேண்டும். 

இல்லை என்றால் மின்பற்றாக்குறை ஏற்படும். கடந்த ஆண்டுகளில் மின் உற்பத்தி இல்  லாததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு சென்னை  பொன்னேரி, வல்லூர்,  மேட்டூர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட  அனல்மின்நிலையங்கள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை தற்போது  மின் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன் மூலம் தமிழகத்திற்கு சுமார் 570 மெகாவாட்  மின்சாரம் கிடைக்கிறது. தொடர்ந்து மற்ற பிளான்டு களிலும் மின்உற்பத்தியை  தொடங்கும் போது 2000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். பிற  மாநிலங்களில்  உள்ள உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில் தேசிய மின்  பாதையுடன், தென்னக மின்பாதையை இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரிசா,  மகாராஷ்டிரா  மாநிலங்களில் இருந்து உபரி மின்சாரத்தை தமிழக அரசு வாங்குகிறது. 

suran
தற்போது மின்உற்பத்தியை தொடங்கியுள்ள 3 அனல்மின் நிலையம் அனைத்து  பிளான்டுகளிலும் மின் உற்பத்தியை தொடங்கும் பட்சத்தில் அடுத்த 2 வருடத்திற்கு  மின்தட்டுப்பாடு ஏற்படாது. மின்தட்டுப்பாடு கு றைந்து விட்டது என அரசு மெத்தனமாக  இருந்தால் 2 ஆண்டுகள் கடந்து தமிழகத்தில் பெரும் மின் வெட்டு உருவாகும் சூழ்நிலை  ஏற்படும். மின்நுகர்வோர் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருவதால், மின் உற்பத்தியை அரசு  வேகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரியானா மாநில முன்னாள் மின்வாரிய தலைவர் தேவசகாயம் கூறும்போது:-

"தமிழகத்தில் நடைமுறையில் உள்ள  மின்விநியோக முறை  தவறானது. இப்படி வழங்கி வந்தால்  மின்உற்பத்தியை கூட்டினாலும் மின்தடை  ஏற்படத்தான் செய்யும். விநியோக  முறையால்தான் மின்திருட்டு ஏற்படுகிறது. 
மின்வாரியத்தை எடுத் துக்கொண்டால்  உற்பத்தி, விநியோகம், நுகர்வோருக்கு கொண்டு சேர்த்தல், பராமரித்தல் என 4  வகைகள்  உள்ளது. இதில் எந்த அரசு வந்தாலும் உற்பத்தியை தான் மையமாக வைத்து செயல்படுகி  ன்றனர். 
இதில் அவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கிறது. ஆனால் விநியோக  முறையை மாற்ற  வேண்டும். வீடுகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் 24 மணிநேரமும்  மின்சாரம் வழங்க வேண்டும்.  விவசாயத்தை எடுத்துக்கொண்டால், விவசாய  பயிர்களுக்கு ஏற்ற வகையில் மின்விநியோகம் வழங்க  வேண்டும். 

சிறுதொழில், தொழிற்சாலைகளுக்கு வேலை நேரத்தில் மட்டுமே மின்விநியோகம் செய்ய   வேண்டும். இப்படி தேவைக்கு ஏற்ற வகையில் மின்சாரம் வழங்கினாலே மின்பற்றாக்குறை  ஏற்படாது, தி ருட்டும் நடக்காது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 8 மண்டலங்கள்  உள்ளன. இந்த மண்டலத்தில் உள்ள தலைமை  பொறியாளர்கள் தனியாக செயல்பட  முழுஅதிகாரம் வழங்க வேண்டும்.

 அப்படி என்றால் விநியோக  முறைகள் மாற்றலாம்.  
எந்த அரசு வந்தாலும் மற்ற அரசை குறைகூறியே வருகின்றன. மக்களை  அவர்கள்  ஏமாற்றி வருகிறார்கள். 
மின்விநியோக முறையை மாற்றினால், மின் பற்றாக்குறையை   போக்கலாம் என்றார்.

suran
------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கிய உலகில் 'ஜே.கே' என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால் அவதியுற்று வந்தார். 

மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜெயகாந்தன்
1950களில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர்.

அரசியல், இலக்கியம், சினிமா என பல்வேறு தளங்களில் இயங்கிய ஜெயகாந்தன், 

'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' முதலான பல படைப்புகளால் கவனத்தை ஈர்த்தவர்.

தனது தைரியமான எழுத்துகளால் சமூகத்தைப் பிரதிபலித்த எழுத்தாளராகப் போற்றப்பட்ட இவர், 

இளம் எழுத்தாளர் பலருக்கும் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
                   வாக்கிங் போகக் கூட கூட்டனிக்கு வர மாட்டேங்கிறாங்களே?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?